Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்ற... ஜரூர் மீண்டும் ஜெ., முதல்வராவதால் அதிகாரிகள் சுறுசுறுப்பு

Posted: 21 May 2016 07:31 AM PDT

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தொழில் நிறுவனங்களை, தொழில் துறை அதிகாரிகள், அவசர கதியில் மீண்டும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் தொடர்பான கோப்புகளை, முதல்வர் மற்றும் புதிய அமைச்சருக்கு காட்டுவதற்காக வேகமாக தயார் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக, முதல் முறையாக, 2015 செப்டம்பர், 9, 10 ஆகிய தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை, சென்னையில், மாநில அரசு பிரம்மாண்டமாக நடத்தியது. அப்போது, 98 ...

முதல்வராக ஆசைப்பட்டு... இருப்பதையும் இழந்த விஜயகாந்த்

Posted: 21 May 2016 07:40 AM PDT

இந்த முறை எப்படியும் கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆர்வமாக காய் நகர்த்திய கட்சி தி.மு.க.,

காரணம், 2006ல், 8.38 சதவீதம்; 2011ல் 7.88 சதவீதம் ஓட்டுகளை, அந்த கட்சி பெற்றிருந்ததே.பலமான அ.தி.மு.க.,வை வெல்ல, தே.மு.தி.க., வை கூட்டணிக்குள் கொண்டு வர ஆசைப் பட்டனர். இருப்பினும், முதல்வர் கனவில் இருந்தார் விஜயகாந்த். அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த அவர், தி.மு.க., பக்கம் செல்ல வேண்டும் என, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலி யுறுத்தியபோதும், இறங்கி வரவில்லை.இறுதியில், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் ...

இந்தியாவில் 2050ம் ஆண்டுக்குள் 4 கோடி பேருக்கு..ஆபத்து? ஐ.நா., பருவநிலை மாற்ற ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

Posted: 21 May 2016 08:21 AM PDT

நியூயார்க்,: பருவநிலை மாற்றத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்து, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என, ஐ.நா., ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இந்தியாவில், கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களில், 2050ம் ஆண்டிற்குள், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.காடுகள் அழிப்பு, நச்சுகளின் அளவு அதிகரிப்பது போன்ற காரணங்களால், பூமியின் வெப்பநிலை, இயல்புக்கு மாறாக அதிகரித்து வருகிறது. மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும், வேறு சில பகுதிகளில் ...

இடதுசாரிகளுடன் கைகோர்க்க தயக்கம் காட்டினாரா ராகுல்?

Posted: 21 May 2016 08:42 AM PDT

கோல்கட்டா,: மேற்கு வங்கத்தில், இடதுசாரி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், ஆரம்பத் தில் தயக்கம் காட்டியதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்ட சபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில்,இடதுசாரிகள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூட்டணி அமைத்த, காங்கிரசுக்கு, எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டதால், காங்கிரஸ்அதிகளவு பலனடைந்துள்ளதாக, அரசியல் ...

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர முடிவு

Posted: 21 May 2016 08:51 AM PDT

புதுடில்லி,:நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை, இந்த ஆண்டுக்குள் தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர், சவுத்ரி பீரேந்திர சிங் கூறியதாவது:தற்போது, நாடு முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான சட்டம், 1993ல் கொண்டு வரப்பட்டது.இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, அசாம், பீஹார், சத்தீஸ்கர், இமாச்சல ...

இலவச மின்சாரத்திற்கு ஜெ., போடும் முதல் கையெழுத்து... 100 யூனிட்!: தேர்தல் அறிக்கையை அமல்படுத்த மின் வாரியம் தயார்

Posted: 21 May 2016 10:58 AM PDT

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ளார்.வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட்டுக்கு மேல் என்ற பிரிவுகளில், கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 500 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்து வோருக்கு, 1 யூனிட்டுக்கு, மூன்று முதல், 4.60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நுகர்வோருக்கு, குறிப்பிட்ட ...

அமைச்சர்களுக்கு மோடியின் கட்டளை

Posted: 21 May 2016 11:11 AM PDT

கடந்த வாரம், டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

சில துறைகளின் நடவடிக்கை பற்றி விவாதித்தார் மோடி. 'பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவதால், அரசின் திட்டங்கள், எப்படி மக்களுக்கு சென்று சேர்கின்றன என்பதை, மீடியா மூலம் தெரியப்படுத்த வேண்டும்' என, அமைச்சர்களிடம் சொன்னார். கூட்டம் முடிந்து, அனைவரும் கிளம்ப தயாராயினர். 'ஒரு நிமிஷம்...' என்ற பிரதமர், 'உங்களிடம் முக்கிய விஷயம் ஒன்றைப் பேச வேண்டும்' என்றார். உடனே, அமைச்சர்களுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டதாம். 'முக்கிய விஷயம் என்கிறாரே... அமைச்சரவை விரிவாக்கம் ...

காஷ்மீரில் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 21 May 2016 11:38 AM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 3 பாதுகாப்புபடையினர் காயமடைந்தனர்.ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துர்க்முல்லா என்ற வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும்.இங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு கூடுதலாக வீரர்கள் விரைந்த சென்று தேடுதல் வேட்டை நடத்தி அப்பகுதியை சுற்றி வளைத்தனர். உஷரான பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று காலைதுவங்கி இரு ...

முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா: கருணாநிதி

Posted: 21 May 2016 12:28 PM PDT

சென்னை:'முதல்வர் காலில் விழுந்து வணங் குவது தான் பாரபட்சமற்ற நடவடிக் கையா?' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க, இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என, தேர்தல் கமிஷன் முதலில் அறிவித்தது.தற்போது அதையும் தாண்டி, ஏதோ, பா.ஜ., - பா.ம.க., கட்சிகள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் கமிஷன், மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு ...

தேசிய அளவில் 3வது அணி உருவெடுக்குமா?: ஜெயலலிதா, மம்தா வெற்றியால் உற்சாகம்

Posted: 21 May 2016 12:48 PM PDT

புதுடில்லி, : தமிழகத்தில், அ.தி.மு.க.,வும், மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசும், சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், மூன்றாவது மெகா கூட்டணி அமைப்பதற்கான பேச்சு, மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மாநிலக் கட்சிகள்தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங் களில், சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்தில், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலை மையிலான, திரிணமுல் காங்., அசுர பலத்து டன் ...

பல கட்சி ஜனநாயகத்திற்கு இனிமேல் இல்லையா எதிர்காலம்?

Posted: 21 May 2016 03:00 PM PDT

மதுரை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், சிறு கட்சிகளை கிட்டத்தட்ட குழி தோண்டி புதைத்து மூடி விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எந்த தேர்தலிலும் இல்லாத சில புதுமைகள் இந்த தேர்தலில் நடந்துள்ளன. அதில் ஒன்று தான், சிறு கட்சிகளின் வாக்கு வங்கி அதல பாதாளத்திற்கு சென்றதும். உதாரணமாக, 2011 தேர்தலில் 7.88 சதவீதம் பெற்ற தேமுதிகவின் ஓட்டு, இம்முறை 2.4 சதவீதமாக தேய்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டு, 2011ல் 1.51 சதவீதமாக இருந்தது. அது தற்போது 0.8 சதவீதமாக சரிந்துள்ளது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™