Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மக்கள் அளித்த அங்கீகாரம் தான் தேர்தல் வெற்றி: முதல்வர் ஜெ., பெருமிதம்

Posted: 20 May 2016 07:51 AM PDT

சென்னை :'அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலனுக்காக, பல திட்டங்களை செயல் படுத்தியதற்கு, மக்கள் அளித்த அங்கீகாரம் தான் தேர்தல் வெற்றி' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு பின், அதே போன்ற, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை, தமிழக மக்கள், அ.தி.மு.க.,விற்கு வழங்கியுள்ளனர். 'நான் என்றும் மக்கள் பக்கம் தான்; மக்கள் என்றும் என் பக்கம் தான்' என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.மக்கள் நலன்: மக்கள் நலனுக்காக, அ.தி.மு.க., கடந்த, ஐந்து ஆண்டுகளில், பல திட்டங்களை ...

அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஸ்டாலின்

Posted: 20 May 2016 08:51 AM PDT

சென்னை: ''தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில், சட்டசபையில் சிறப்பாக செயல்படுவோம்,'' என, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின்தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:* சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. இதன் பாதிப்பு, தஞ்சை மற்றும்அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா?தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு செயல்பட்டால், முடிவுகள் பாதிக்கப்படாது.* சட்டசபையில் தி.மு.க.,வின் நிலைப்பாடு எப்படிஇருக்கும்?ஏற்கனவே, 23 பேர் ...

விஜயகாந்த் குடும்பம் வீட்டிலேயே முடக்கம்

Posted: 20 May 2016 08:52 AM PDT

தேர்தல் படுதோல்வியால், விஜயகாந்த் மட்டுமின்றி, அவரது ஒட்டுமொத்த குடும்பமும், விரக்தியில் மூழ்கியுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வீடு, சென்னை, விருகம்பாக்கம், கண்ணம்மாள் தெருவில் உள்ளது. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வீடு, சாலிகிராமம், வெங்கடேஷ்வரா காலனியில் உள்ளது. சென்னையில் இருக்கும் நாட்களில், கோயம் பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்வது விஜயகாந்தின்வழக்கம். அரும்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு செல்வது, சுதீஷ் வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக, இவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். உளுந்துார் ...

பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம் அதிரடி மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல்

Posted: 20 May 2016 09:51 AM PDT

புதுடில்லி,:'தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா? மாநில அளவிலான நுழைவுத் தேர்வா?' என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரி யில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.அதன்படி, மே, 1ல், முதற்கட்ட நுழைவுத் ...

தமிழக அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு... வாய்ப்பு!:தி.மு.க.,வை சமாளிக்க பலமான சபாநாயகர் யார்?

Posted: 20 May 2016 10:38 AM PDT

அ.தி.மு.க., அமைச்சர்களில் பலருக்கு தேர்தலில் 'சீட்' கொடுக்காததாலும், சிலர் தோல்வி அடைந்துள்ளதாலும் புதுமுகங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 89 எம்.எல்.ஏ.,க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க.,வை சட்டசபையில் சமாளிக்க பலமான சபாநாயகரை தேர்வு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அதையடுத்து யார் அந்த சபாநாயகர் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் 19 அமைச்சர்கள் ...

ஜூன் 13ல் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

Posted: 20 May 2016 10:52 AM PDT

சென்னை,:ஜூன் 13ல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும், ஜூன் 20க்குள் இந்த தொகுதிகளில் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடந்தது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, தேர்தல் முறைகேடு புகார்கள் தொடர்பாக, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை மட்டும், மே 23ம் தேதிக்கு, தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது.தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை, மேலும் தள்ளிவைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் ...

எதிர்க்கட்சி தலைவராகிறார் கருணாநிதி?

Posted: 20 May 2016 10:55 AM PDT

தி.மு.க., சட்டசபை தலைவராக, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், துணை தலைவராக பொருளாளர் ஸ்டாலினும், கொறடாவாக, முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன் மூலம், சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கருணாநிதிக்கும், துணைத் தலைவர் பதவி ஸ்டாலினுக்கும் கிடைக்கும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., க்கள், நேற்று சென்னை வந்தனர்; கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ' எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் செயல்பட வேண்டும்' என, ...

'டாஸ்மாக்' மூடல் படிப்படியாக எப்படி?

Posted: 20 May 2016 11:16 AM PDT

'டாஸ்மாக்' கடைகள் நேரம் குறைப்பு திட்டத்தை, வரும் காந்தி ஜெயந்தி நாள் முதல் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில், போலி சரக்கு; மதுவில் கலப்படம் செய்தல்; 'குடி 'மகன்கள் விரும்பும் மது வகைகளை விற்காதது; அரசு நிர்ணயித்துள்ளதை விட, அதிக விலைக்கு விற்பனை செய்தல் என, பல முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு அதிகாரி களும், அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளனர். அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகள் இருப்ப தால், சிறுவர்கள், பெண்கள் என, பலரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தி.மு.க., - ...

இரு கட்சி அரசியலை உறுதி செய்த ம.ந.கூ.,

Posted: 20 May 2016 12:55 PM PDT

'பணநாயகத்தால், அ.தி.மு.க.,வும் - தி.மு.க.,வும் தொகுதிகளை பங்கு போட்டுக் கொண்டன' என்ற, ஒற்றை வரியில், தேர்தல் தோல்விக்கான காரணத்தை, தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சொல்வதை ஏற்க முடியாமல், அக்கூட்டணியினரே முணுமுணுக்கத் துவங்கி விட்டனர்.

'மாற்று அரசியல் என்ற கோஷத்தை, ஊடகங்கள் மழுங்கடித்து விட்டன' என, தோல்விக்கு மற்றொரு சப்பைக் கட்டு கட்ட, கூட்டணிக் கட்சி தலைவர்கள் முயற்சிக்கின்றனர் என்ற பேச்சும், மக்கள் நலக் கூட்டணியில் அதிகமாக கேட்கிறது.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் டிபாசிட் இழந்து விட்டார். கூட்டணியின் வேட்பாளர்கள், பெரும்பாலான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™