Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


20000 பதிவுகள் --ayyasami ram அவர்களை வாழ்த்துவோம்

Posted: 20 May 2016 11:40 AM PDT

20000 பதிவுகள் --ayyasami ram அவர்களை வாழ்த்துவோம் சூபர்சொனிக் ஸ்பீட் பதிவாளர் ayyasami ram அவர்களை அவரது 20000 கடந்த பதிவிற்கு வாழ்த்துவோம் வாழ்த்துகள் ram ரமணியன்

தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா

Posted: 20 May 2016 11:34 AM PDT

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2015ம் ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி ...

ரோணு புயல்: நாகையில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு!

Posted: 20 May 2016 11:32 AM PDT

நாகப்பட்டினம்: ரோனு புயல் ஒடிசாவை நெருங்கியுள்ளதை அடுத்து நாகபட்டினத்தில் 2-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கிழக்கே 140 கி.மீ. தூரத்தை மையமாக கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசாவை நெருங்கியுள்ளது. இந்த புயலுக்கு ரோனு என்று பெயரிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், வேளாங்கன்னி, கீழ்வேளூரில் நல்ல மழை பெய்துள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் 2-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே ...

மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி)

Posted: 20 May 2016 11:31 AM PDT



நன்றி முகநூல்

This posting includes an audio/video/photo media file: Download Now

சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Posted: 20 May 2016 11:19 AM PDT

ஸ்டார்ட்...கேமிரா...ஆக்சன்...சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்! - - தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெபாசிட் கூட வாங்காமல் படுதோல்வியை சந்தித்த போதிலும் , சோர்ந்து விடாமல் மீண்டும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார். - நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். - அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,"நமது வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது... ...

நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…!

Posted: 20 May 2016 11:16 AM PDT

கணவன்: வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி சோறு கேட்குறான். போட்டுட்டு வா!! மனைவி: அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதை வச்சு சொல்றீங்க கணவன்: உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்..! – ———————————- – அமைச்சர்: மன்னா நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…! மன்னன்: எதனால் அப்படி? அமைச்சர்: ஆம் மன்னா, இனி கடவுள் தான் தங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்…! – ———————————— – ஆபரேஷன் செய்ய பேஷன்ட் யாரும் டாக்டர் கிட்ட வந்திருக்காங்களா?? ஆமா!! ...

வைகாசி விசாக வழிபாடு

Posted: 20 May 2016 11:12 AM PDT

21-05-2016 - வைகாசி விசாகம் - - - விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். - துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். - இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். - வைகாசி ...

துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்

Posted: 20 May 2016 11:11 AM PDT

- சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். - அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது. - 'உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது' என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது. - சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். ...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து

Posted: 20 May 2016 11:09 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தருணத்தில் ஜெயலலிதாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் தீர்ப்பை மதித்து பொறுப்பான எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம். என்னை மீண்டும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்த மக்களுக்கு மிகப் பெரிய நன்றி. கொளத்தூரை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக ஆக்க தொடர்ந்து ...

திருவாரூரில் தேர் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

Posted: 20 May 2016 09:51 AM PDT

திருவாரூர் அருகே திருக்கரவாசலில் கோவில் தேர் கவிழ்ந்ததில் 2 பக்தர்கள் பலியாயினர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கரவாசல் தியாகராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக தேர் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருக்கரவாசல் தியாகராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடந்து வருகிறது. அணித்து வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தும் இந்த விபத்து ...

உதவி தேவை

Posted: 20 May 2016 07:29 AM PDT

தோழர்களே ,
என்னிடம் குஜராத்தி எழுத்து கோப்புகள் உள்ளன . அவற்றை ஆங்கில கோப்புகளாக மாற்ற உதவி புரியுங்கள்.

உயர் ரத்த அழுத்த தினம்

Posted: 20 May 2016 07:26 AM PDT

மே 17ம் தேதி ---------------- இன்று உலக உயர் ரத்த அழுத்த தினமாக,அனுசரிக்கப்பட்டது. ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதை விட 140/90 அல்லது அதற்கும் மேலாக அளவு தொடர்ந்து இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என, அழைக்கப்படுகிறது. இத்தகைய உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, உயர் ரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகம் முழுவதும் ...

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்

Posted: 20 May 2016 07:25 AM PDT

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011) வைகோவே நல்லகன்னுவே வாசனே (2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே! கூட்டணி அமைப்பு ஆட்டம் பாட்டம், இதைத் தவிர வேறெதைக் கண்டோம், பதவியோ பையிலே நாற்காலியோ கனவிலே, சட்டசபையை பார்த்ததும் ஒதுங்குவோம் இனிமையிலே, நித்தமும் நாடகம், நித்தமும் நாடகம், நினைவெல்லாம் காவியம், தோற்றவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம், சட்டசபை (2016) கலைந்ததும் பாதைகள் மாறினோம், தேர்தலும் வந்தது ...

இவர்கள் பாடினால் (catching the mind song) ... ;-)

Posted: 20 May 2016 07:18 AM PDT

இவர்கள் பாடினால் (catching the mind song) ... ;-) ஜெயலலிதா: "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை... வெற்றிக்குதான் என எண்ண வேண்டும்" கருணாநிதி: "கடவுள் ஏன் கல்லானான்... மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே" ஸ்டாலின்: "சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்" விஜயகாந்த்: "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" வைகோ: "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" வாசன்: "வாசமில்லா மலரிது, வசந்தத்தைத் தேடுது" கம்யூனிஸ்டு ...

புத்தகங்கள் தேவை !

Posted: 20 May 2016 06:34 AM PDT

மதன் எழுதிய கிமுகிபி மின் நூல் வடிவில் இருந்தால் பகிரவும்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 20 May 2016 06:25 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

வசந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ வாசவி தேவி!

Posted: 20 May 2016 05:59 AM PDT

- ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக விளங்குகிறாள் வாசவி என்ற திருநாமம் கொண்ட ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி. – இந்த அம்மனின் அவதார நன்னாள் இவ்வருடம், மே மாதம் 16 ஆம் தேதி, வைகாசி தசமியன்று ஆரிய வைசியர்களால் தேவி குடி கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. – வாணிபத்துடன் தர்மசிந்தனை மேலோங்க பண்பும் கலாசாரமும் வழுவாமல் நன்னெறியுடன் வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு எல்லாமே இந்த வாசவி என்ற கன்னிகாபரமேஸ்வரி தான். – ஒருசமயம் சிவபெருமான் வைசியர் அனைவரையும் பூவுலகம் சென்று ...

இலங்கை வெள்ளம்: மீட்புக் கப்பல் அனுப்பியது இந்தியா

Posted: 20 May 2016 03:52 AM PDT

புதுடில்லி : இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு உதவ இந்தியா மீட்புக் கப்பல்களை இலங்கை அனுப்பியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர். மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளில் இலங்கை அரசுக்கு உதவ, இந்தியா கப்பல் படை கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. - கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்திலிருந்து நிவாரண பொருட்களுடன் ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சட்லஜ் ...

பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

Posted: 20 May 2016 03:46 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ். இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற குஜராத், புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது. - குஜராத் அணியின் டுவைன் ஸ்மித் 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து கொல்கத்தாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான மணீஷ் பாண்டே, உத்தப்பா உள்ளிட்ட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் ...

ஐபிஎல்: நெஹ்ரா விலகல்! எதிர்காலம் என்னவாகும்?

Posted: 20 May 2016 03:41 AM PDT

- ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவின் காலில் தசை நார் முறிவு ஏற்பட்டுள்ளது. - இதனால் அவர் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். - இது தொடர்பாக ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது நெஹ்ராவின் காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அவர் இப்போது எலும்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. - ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் ...

# வியர்வை இல்லாமல் இனிமை இல்லை.

Posted: 20 May 2016 02:19 AM PDT

- -# உன்னுடைய அரிவாள் தீட்டப்பட்டால் உன் வேலை தாமதமாகாது. – # அதிர்ஷ்டம் நிலையில்லா மனத்தினள். அவளால் கொடுக்கப்பட்டதை திரும்பவும் வேகமாக்க் கேட்கிறாள். – # உண்மை வெறுப்பை வளர்க்கிறது. செல்வச் செழிப்பு செருக்கை வளர்க்கிறது. பாதுகாப்பு அபாயத்தை வளர்க்கிறது. – # ஒரு மனிதனை மிகவும் அதிகமாக அதிர்ஷ்டம் சீராட்டும்போது அது அவனை முட்டாளாக்குகிறது. – # அதிர்ஷ்டம் ஒரு கண்ணாடி. அது ஒளிவீசும் தருணத்தில் உடைந்துபோகிறது. – # யார் மற்றவர்களை அச்சுறுத்துகிறாரோ, அவரே மிகவும் அச்சத்திலிருக்கிறார். – # ...

அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது: நமீதா

Posted: 20 May 2016 02:18 AM PDT

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. என்று நமீதா கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை ...

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

Posted: 20 May 2016 02:05 AM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்றுள்ளதையடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி ...

சட்டப்பேரவைத் தேர்தல் 2016: வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 20 May 2016 02:04 AM PDT

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 320 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 14 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் 2016 இல் வெற்றி பெற்றவர்கள்: ஆர்.கே.நகர் தொகுதி: ஜெயலலிதா - அதிமுக கிருஷ்ணராயபுரம் தொகுதி: கீதா - அதிமுக மணச்சநல்லூர் தொகுதி: பரமேஸ்வரி அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி: வளர்மதி - அதிமுக ராசிபுரம் தொகுதி: சரோஜா - அதிமுக திருச்செங்கோடு தொகுதி: சரஸ்வதி - அதிமுக வால்பாறை தொகுதி: கஸ்தூரி வாசு - அதிமுக ஊத்தங்கரை தொகுதி: மனோரஞ்சிதம் - அதிமுக பண்ருட்டி தொகுதி: ...

இயற்கை இறையானது!

Posted: 20 May 2016 02:01 AM PDT

- இயற்கை! இறைவன் மறைந்து கொடுத்த கொடை!! இயற்கை! தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை!! – விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா? வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது!! – தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்… கடல்தேவியானது!! பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை! பூமித் தாயானது!! – காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது!! பணத்தின் ஆளுமையால் மரம் கூட பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது!! – படிக்கும் படிப்பு! அறிவு! பகிர்தல்! கற்பித்தல் கலை கூட கலைவாணி ...

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

Posted: 20 May 2016 01:59 AM PDT

ஆணி புடுங்கிற கதைதான்.....
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--

கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!

-
----------------------



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™