Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வரலாறு வட கிழக்கு மாநிலத்தில் கால்பதித்தது 15 ஆண்டு காங்., அரசு மண்ணை கவ்வியது

Posted: 19 May 2016 10:06 AM PDT

திஸ்பூர்: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், தொடர்ச்சியாக அசைக்க முடியாத வெற்றிகளை பெற்று ஆட்சியை பிடித்து வந்த காங்., தற்போதைய தேர்தலில், பா.ஜ.,விடம் படுதோல்வி அடைந்துள்ளது.

காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட இம்மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, அதிக தொகுதிகளில் வென்று, காங்கிரசை துவம்சம் செய்துள்ளது. அசாம் மாநில சட்டசபை, 126 உறுப்பினர் பலம் உடையது. இம்மாநிலத்தில், இரு கட்டங்களாக, ஏப்ரல், 4 மற்றும் 11 தேதிகளில், சட்டசபை தேர்தல் நடந்தது; பா.ஜ., 84 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான, அசாம் கனபரிஷத், 24; பி.பி.எப்., 16; ரபா ஜதியா ஐக்கிய ...

மே.வங்கத்தில் விஸ்வரூப வெற்றி மீண்டும் மம்தா ஆட்சி

Posted: 19 May 2016 10:07 AM PDT

கோல்கட்டா,:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் விஸ்வரூப வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

கடந்த, 2011 தேர்தலில், 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையி லான இடது கூட்டணியை வென்று, முதல் முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி. கடந்த தேர்தலில், மொத்தம் உள்ள, 294 தொகுதிகளில், 184 இடங்களில் வென்ற திரிணமுல் காங்கிரஸ், இந்த தேர்தலில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து, 90க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வென்றன.மேற்கு வங்கத்தில், ஏப்ரல், 4ல் துவங்கி, ஆறு ...

கம்யூ.,க்கள் இல்லாத தமிழக சட்டசபை 66 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

Posted: 19 May 2016 10:21 AM PDT

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத முதல் சட்டசபையாக, 15வது சட்டசபை அமைகிறது.

தமிழகத்தில், 1952ல் நடந்த பொதுத் தேர்தலில், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு கம்யூனிஸ்டு கள் வலுப்பெற்றாலும், தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட கூட்டணி பிளவுகளால், எதிர்க்கட்சியாக அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 62 எம்.எல்.ஏ.,க்களை கொண்டிருந்தது. இதன்பின், 1957, 1962 தேர்தல் களில் முறையே, நான்கு மற்றும் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கொண்டிருந்தனர்.1962ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து, மார்க்சிஸ்ட் உதயமானது.இதன்பின், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிரும், புதிருமாக செயல்படத் துவங்கின. ...

மாற்று கூட்டணியை விரும்பாத மக்கள்அ.தி.மு.க.,- - தி.மு.க.,வுக்கே 'மவுசு'

Posted: 19 May 2016 10:22 AM PDT

அ.தி.மு.க.,- - தி.மு.க.,வுக்கு மாற்றாக எந்த கூட்டணியையும், மக்கள் ஏற்கவில்லை என்பது இந்த தேர்தல் மூலம் நிரூபணமாகிஉள்ளது.

கடந்த, 1967ம் ஆண்டு காங்., கட்சியை வீழ்த்தி, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. அதன்பின் தமிழகத்தை, தி.மு.க.,- - அ.தி.மு.க., மட்டுமே ஆட்சி செய்கின்றன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - -தி.மு.க., கட்சிகளுக்கு மாற்றாக, -ம.ந.கூ., - தே.மு.தி.க., - -த.மா.கா., இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின.ம.ந.கூ.,வில் ம.தி.மு.க., - -வி.சி.,- - இ.கம்யூ., - -மா.கம்யூ., கட்சிகள் இடம் பெற்றன. இக்கூட்டணி உருவாவதற்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ முக்கிய காரணமாக அமைந்தார். இந்த ...

பலமான எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம்: ஸ்டாலின்

Posted: 19 May 2016 10:28 AM PDT

சென்னை: ''தி.மு.க., பலமான எதிர்க்கட்சியாக பணியாற்றும்,'' என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, கொளத்துார் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற, லயோலா கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு, ஸ்டாலின், தன் மகன் உதயநிதியுடன் வந்தார். அப்போது ஸ்டாலின் அளித்த பேட்டி:கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபைதேர்தலில், தி.மு.க., மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தற்போதைய தேர்தலில், இதுவரை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பெறாத வெற்றியை, தி.மு.க., பெற்றுள்ளது. இதனால், பலமான எதிர்க்கட்சியாகபணியாற்றுவோம். சென்னையில், அதிக ...

அழகிரி ஆதரவாளர்களின் உள்குத்து 20 தொகுதிகளில் தி.மு.க., 'அவுட்'

Posted: 19 May 2016 10:34 AM PDT

சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் அழகிரியை சேர்த்திருந்தால், தென் மாவட்டங்களில் தி.மு.க., வெற்றிக்கு பொறுப்பேற்று, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்.

'அவரை சேர்த்தால், கட்சியிலிருந்து நான் விலகி விடுவேன்' என, பொருளாளர் ஸ்டாலின் மிரட்டியதால், அழகிரியை சேர்க்கவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி, மதுரை சென்றி ருந்த போது அழகிரி வீட்டுக்கு சென்றிருந்தால், அழகிரியும் தன் முடிவை மாற்றி இருப்பார்; தன் ஆதரவாளர்களை, தி.மு.க.,வுக்கு தேர்தல் பணி யாற்ற உத்தரவிட்டிருப்பார். அழகிரியை கடைசி நேரத்தில், கருணாநிதியும் கண்டு கொள் ளாமல் ...

தி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர் வெற்றி திருவாரூரில் 2ம் முறையும் முதல்வராக முடியாத சோகம்

Posted: 19 May 2016 11:11 AM PDT

திருச்சி, : சொந்த ஊரில் போட்டியிட்டு, தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற போதும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் பதவியை அடைய முடியவில்லையே என்ற வருத்தம் தி.மு.க.,வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 1957ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைவர் கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டு வந்தார். கடந்த 2011ம் ஆண்டு, தனது வாழ்நாளில் சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் ...

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்களின் கருத்துகள்

Posted: 19 May 2016 11:31 AM PDT

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்.
தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் :
புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்: ஜெ.,
வெற்றிக்கு பின் போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ., நிருபர்களிடம் பேசுகையில்: அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை செலுத்த அகராதியில் வார்த்தை ...

அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 134ல் வெற்றி ஜெ.,க்கு ஜெயம்! :32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது:தி.மு.க.,விற்கு வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்து

Posted: 19 May 2016 11:39 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 134ல் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டு களுக்கு பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்த முதல்வர் என்ற பெருமையை, ஜெயலலிதா பெற்றுள்ளார். ஆட்சியை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.தமிழகத்தில், 1957ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; காமராஜர் முதல்வரானார். அடுத்து, 1962ல் நடந்த தேர்தலிலும், ...

மோடியின் கனவை நனவாக்கிய சர்பானந்தா சோனவால்

Posted: 19 May 2016 01:28 PM PDT

பா.ஜ.,வில் சேர்ந்து ஐந்தே ஆண்டுகளில், மாநில முதல்வராக உருவெடுத்த அரிய சாதனையை, சர்பானந்தா சோனவால், 54, படைத்துள்ளார்.

அசாமில், சட்ட விரோதமாக குடியேறியோர் தொடர்பான விவகாரம், 1992ல் பூதாகரமாக உருவெடுத்தது. அப்போது, அனைத்து அசாம் மாணவர் சங்கத்தில், சர்பானந்தா சேர்ந்தார். 1999 வரை, அதில் தீவிர பங்காற்றினார். கடந்த 2001ல், அசாம் கனபரிஷத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சர்பானந்தா வென்றார். 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளராக போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் பபன் சிங் கடோ வாரை வென்று, சர்பானந்தா ஆச்சரியப்பட வைத்தார். ...

25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துக்கு மேல் வென்றவர்கள்

Posted: 19 May 2016 01:40 PM PDT

சென்னை: தேர்தலில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்.......
தொகுதி -- வேட்பாளர் - கட்சி - வித்தியாசம்
1) ஆம்பூர் பாலசுப்ரமணி அ.தி.மு.க., 28006
2) ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க., 30196
3) ஆத்துார் ஐ.பெரியசாமி தி.மு.க., 27147
4) அவினாசி தனபால் அ.தி.மு.க., 30674
5) செங்கல்பட்டு வைரலட்சுமி தி.மு.க., 26292
6) குளச்சல் பிரின்ஸ் காங்., 26028
7) ஆர்.கே.,நகர் ஜெயலலிதா அ.தி.மு.க., 39545
8) எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க., 42022
9) ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™