Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காது குடையும் போது நீங்கள் செய்யும் தவறுகள் !

Posted: 19 May 2016 12:48 PM PDT

தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய ...

' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...?' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா!

Posted: 19 May 2016 12:15 PM PDT

சட்டசபைத் தேர்தலில் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. 'வழக்கமாக 6 மணிக்கு எழுந்திருக்கும் அம்மா, இன்றைக்கு 7.15 மணிக்குத்தான் எழுந்தார். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள். ' கார்டனில் என்ன மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா?' என்ற கேள்வியை கார்டன் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். " தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆங்கில சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா. மிகத் தாமதமாகத்தான் ...

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Posted: 19 May 2016 11:53 AM PDT

எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்". தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' ...

புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Posted: 19 May 2016 11:48 AM PDT

- சென்னை: போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ., நிருபர்களிடம் பேசுகையில்; தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வரவில்லை. அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை செலுத்த அகராதியில் வார்த்தை இல்லை. 1984 க்கு பின் இப்போது மீண்டும் தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறோம் . - 10 கட்சிகள் சேர்ந்து எதிர்த்தாலும், பலமான கூட்டணி இல்லாத நேரத்திலும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் குரல் மகேசன் குரல், ஆண்டவன் என்றால் ...

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Posted: 19 May 2016 11:42 AM PDT

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன் வெற்றியை இன்னொரு திருமாவளவன் தடுத்து இருக்கிறார். ஆம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோற்றிருப்பது 87 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் ...

பழனி மலை

Posted: 19 May 2016 11:39 AM PDT

இங்கு யாராவது  பழனிமலையில் வசிப்பவர்கள் இருக்கிறீர்களா?

புதுச்சேரியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் இடம்

Posted: 19 May 2016 11:38 AM PDT

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டுகளுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து பேரவைக்குள் எம்எல்ஏக்களாக பெண்கள் நுழைகின்றனர். - புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளாக பெண்கள் இல்லாத சூழலே நிலவியது. - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர்களுக்கு குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. புதுச்சேரியில் இதுவரை 11 பேர் எம்எல்ஏ-க்களாக இருந் துள்ளனர். ...

பரிதாப நிலையில் பாஜ தலைவர்கள்

Posted: 19 May 2016 11:37 AM PDT

- சென்னை: இந்த தேர்தலில் ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட பாஜ தலைவர்களின் நிலைமை தான் பரிதாபமாக போனது. ''மாற்றத்தைத் தாருங்கள்; திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கொடுங்கள்'' என்ற கோஷத்துடன் தமிழக பாஜ, தேர்தலை சந்தித்தது. பிரதமர் மோடியே மெனக்கெட்டு, தமிழகம் வந்து சில பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு சென்றார். இதனால் அவர்களது எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் இன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நிலைமையே தலைகீழ் ஆனது. சென்னை டி.நகரில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய ...

அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது,

Posted: 19 May 2016 11:31 AM PDT

புதுடெல்லி, அசாமில் பாரதீய ஜனதா கூட்டணி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி வெற்று உள்ளது. - அசாமில் 126 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றிஉள்ளது. - பாரதீய ஜனதா கூட்டணி 87 தொகுதிகளை வசப்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா தனிக்கட்சியாக 28 தொகுதிகளில் வெற்றி பெற்று 34 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. - காங்கிரஸ் 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் வரலாற்றில் தேசிய ...

வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Posted: 19 May 2016 11:31 AM PDT

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும். மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை. மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத் ...

உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்: வைகோ உறுதி

Posted: 19 May 2016 11:29 AM PDT

தமிழ்நாட்டில் மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி மிக்க உறுதியுடன், வலுவாக தமிழக அரசியல் களத்தில் இயங்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை 'வாங்கி' இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடர விடாமல், மக்கள் ஆட்சித் தத்துவம் காக்க ...

காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Posted: 19 May 2016 11:28 AM PDT

சென்னை: வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு திமுக - அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வந்த தேமுதிகவின் நிலை மிகப் பரிதாபமாக மாறியுள்ளது - இந்த சட்டசபைத் தேர்தலில். இதுவரை இல்லாத அளவு மிக மோசமான வாக்குகளை தேமுதிக வாங்கியுள்ளது. இது அக்கட்சிக்கு மிகப் பெரிய அடியாகும். - 2016 சட்டசபைத் தேர்தலில மக்கள் தேமுதிக-வை தூக்கிப் போட்டு விட்டார்கள். வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது தேமுதிக. இது மிகப் பெரிய சரிவாகும். - ----------- tamil.oneindia

கால நேர பாடல் கேப்டனுக்கு

Posted: 19 May 2016 11:23 AM PDT


This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு ஆளுக்கெல்லாம் பாதுகாப்பு தேவையில்லை…!!

Posted: 19 May 2016 11:19 AM PDT

- ''தலைவர் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாதுன்னு சொல்லிட்டாங்களாமே… ஏன்?'' ''ஒரு ஆளுக்கெல்லாம் பாதுகாப்பு தேவையில்லேன்னு நினைச்சிருப்பாங்க…'' – – அசோகன், – ————————————- ஸ்பீக்கரு… ''கூட்டணிக்காக கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து கொசுக்கடியால் டெங்கு வந்து கஷ்டப்படும் தலைவர் அவர்களே!'' – – வி.சகிதா முருகன், – —————————————- – ஸ்பீக்கரு… ''எங்கள் தலைவரை பேச விடாமல் செய்வதற்காக மேடைக்கு எதிரே அவருடைய மனைவியின் படத்தைக் காட்டச் சொல்லி இக்கூட்டத்தில் ஆட்களை ஏற்பாடு செய்திருக்கும் ...

துப்பு -ஒரு பக்க கதை

Posted: 19 May 2016 11:17 AM PDT

- 'மேடம்… போன வாரம் தற்கொலை செஞ்சுக்கிட்ட உங்க கணவர் பாஸ்கர், 'எனக்கு ஏதாவது நடந்தா என் இரண்டாவது மனைவி நித்யாதான் காரணம்'னு ஒரு லெட்டர்ல எழுதியிருக்காரு. அதை வச்சி நான் உங்களைக் கைது செய்யாம இருக்கணும்னா நீங்க எனக்கு இருபது லட்ச ரூபாய் தரணும். என்ன சொல்றீங்க..?'' – சுற்றி வளைக்காமல் நித்யாவிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர். ''அப்படி ஒரு லெட்டர் அவர் எழுத வாய்ப்பே இல்லை சார். அப்படி எழுதியிருந்தா நான் கைதாகவும் தயார்!'' – கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டாள் நித்யா.அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த ...

லீவ் – ஒரு பக்க கதை

Posted: 19 May 2016 11:16 AM PDT

- கல்யாணமான நாளில் இருந்து மனைவி மங்களாவை நெருங்க முடியவில்லை கோபியால். ஆபீஸில் அவ்வளவு வேலை. ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் அவன், நான்கு நாட்களாக இரவு வீட்டுக்குக் கூட வரவில்லை. வேலையை முடித்துவிட்டால் இரண்டு நாள் லீவ் எடுத்துக் கொண்டு ஜமாய்க்கலாம் என்றிருந்தான். ஆனால், ஒவ்வொரு வேலை முடியும்போதும், புதுப்புது அசைன்மென்ட்களை மேனேஜர் கொடுத்துக்கொண்டே இருந்தார். திட்டமிட்டுச் செய்வது புரிந்தது. பொறுமை இழந்திருந்த நேரத்தில், ''இன்னிக்காவது நைட் வீடு வருவீங்களா? ஆபீஸ்லேயே ஹால்ட்டா?'' என்று ...

தலைநகரை தனதாக்கியது திமுக!

Posted: 19 May 2016 11:12 AM PDT

- சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த அளவிற்கு திமுக சென்னையில் பரவலாக செல்வாக்கை கொண்ட கட்சி. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுக தனது கோட்டையான சென்னையில் பலத்த அடிவாங்கியது. இந்நிலையில் சென்னையை மீண்டும் திமுக தனது வசமாக்கியுள்ளது இந்த தேர்தலின் மூலம். சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அதிருப்தியை அதிமுக சென்னையில் அறுவடை செய்துள்ளது. இதன் மூலம் திமுக தனது செல்வாக்கை மீட்டெடுத்துள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் ...

வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Posted: 19 May 2016 11:10 AM PDT

காலை 8-55 மணி நிலவரம்
-

அ.தி.மு.க - முன்னிலை 68
-
தி.மு.க - முன்னிலை 64
-
------------------------

'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)

Posted: 19 May 2016 11:06 AM PDT

மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!

Posted: 19 May 2016 06:22 AM PDT

தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் ...

தேர்தல் தோல்வி : ரங்கசாமி ராஜினாமா

Posted: 19 May 2016 06:16 AM PDT

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி
தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி
தோல்வியடைந்தது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி
பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ரங்கசாமி தனது முதல்வர் பதவியை
ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை,
ரங்கசாமி, துணைநிலை ஆளுனரிடம் வழங்கினார்.
-
-------------------

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் -M M Senthil

Posted: 19 May 2016 05:34 AM PDT

ஈகரையின் இனிய உறவு M M S அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .



வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 19 May 2016 02:22 AM PDT

டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் - வானில் விரியும் சிறகுகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நூலை பற்றி , நாம் அறிந்திராத ஆபுர்வ பறவைகளின் அற்புத வாழ்க்கை ரகசியங்கள் அறிவிப்பு : இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் , நண்பர்கள் அனைவரும் இத்தனை நாள் எனக்கு கொடுத்த ஆதரவை போல இனி வரும் காலத்திலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் . பதிப்பக துறை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் கொடுக்கபடுகிறது ...

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது

Posted: 19 May 2016 01:21 AM PDT

- கொல்கத்தா, - மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. - இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி வைத்து மேற்கு வங்காளத்தில் போட்டியிட்டன. - இக்கூட்டணிக்கு பெருத்த பின்னடைவே ஏற்பட்டு உள்ளது. - மேற்கு வங்காளத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. - தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் திரிணாமுல் காங்கிரசே முன்னிலை பெற்று உள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 ...

கனவு – ஒரு பக்க கதை

Posted: 19 May 2016 01:12 AM PDT

- ''ஏங்க தினம் நடுராத்திரியில் என்னை எழுப்பி, நீங்க கண்ட கனவை திரும்பத் திரும்பச் சொல்லி என் கழுத்தை அறுக்கறீங்க?'' – அலமேலு தன் கணவர் பரமசிவத்திடம் அலுத்துக்கொண்டாள். ''நான் என்ன பண்றது அலமு… தினம் ஒரே கனவுதான் வருது. நான் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குப் போற கனவு. அதுக்கு அப்புறம் கவலையில தூக்கமே வர மாட்டேங்குது!'' ''விடிஞ்சதும் முதல் வேலையா டாக்டரைப் பாருங்க!'' – உத்தரவு போட்டாள் அலமேலு. காலையில் டாக்டரைச் சந்தித்து தன் கனவைப் பற்றிச் சொன்னார் பரமசிவம். பொறுமையாகக் கேட்ட டாக்டர், ''காசு ...

கணக்கு -ஒரு பக்க கதை

Posted: 19 May 2016 01:10 AM PDT

- மூர்த்தி, டீக்கடை எப்படிப் போகுதுப்பா?'' – மூர்த்தி போட்டுக் கொடுத்த டீயைக் குடித்தபடியே கேட்டார் மகாலிங்கம்.''வியாபாரத்துக்கு குறைச்சல் இல்லேங்க. காரணம், நம்ம கடைப் பையனுங்கதான். நாலு பேருமே கெட்டிக்காரங்க. டீயோடு இட்லி, வடைனு டிபன்… பகலில் சம்சா, மசால் வடை… சாயங்காலமா பஜ்ஜி, மெதுவடைனு ஜமாய்க்கிறாங்க!'' – பாராட்டுகளை அள்ளி விட்டார் மூர்த்தி. புறப்படும்போது புருவம் சுருக்கி மெதுவாகக் கேட்டார் மகாலிங்கம், ''ஆமாப்பா! வேலை செய்றவங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கறே?'' ''ஆளுக்கு ...

புத்தகம் தேவை

Posted: 19 May 2016 12:33 AM PDT

புத்தகம் தேவை

6174 மின்னூல் கிடைக்குமா ? எங்கு தேடியும் கிடைக்கவில்லை .

நன்றிகள் பல ...

திமுக தோல்விமுகம்: சன் டிவி பங்கு விலை சரிவு

Posted: 18 May 2016 09:59 PM PDT

சென்னை

தமிழக தேர்தலில் திமுக தோல்வி
முகத்தில் இருப்பதால், சன் டிவியின்
பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளன.
-
இரு நாள்களுக்கு முன்பு வெளியான
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பில்,
திமுக ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல்
வெளியானபோது, சன் டிவியின் பங்குகள்
விலை உயர்ந்தன.
-
தினமணி

கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்

Posted: 18 May 2016 09:35 PM PDT

கேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தவர் முருகேஷ் காக்கூர் (வயது 47). இவர் மலையாள திரைப்படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். - மேலும் ஏராளமான நாடகங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் முருகேஷ் காக்கூர் கல்லீரல் நோய் தாக்குதலால் பாதிக்கப் பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். - இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேஷ் காக்கூர் உயிர் இழந்தார். முருகேஷ் காக்கூர் 2012–ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். மேலும் ...

அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!

Posted: 18 May 2016 08:13 PM PDT

- ''நம்ம கட்சி முக்கிய நிர்வாகிகளை எல்லாம் தேர்தல்ல நிக்க வைச்சுட்டு நீங்க மட்டும் ஏன் தலைவரே ஒதுங்கிட்டீங்க?'' ''அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!'' – எஸ்.எஸ்.பூங்கதிர், – ———————————– – ''ரெண்டு தொகுதியில நின்னும் தோற்றுப் போயிட்டீங்களே..?'' ''தப்பு பண்ணிட்டேன்… ரெண்டு தொகுதியிலும் ஒரே கட்சியில நிக்காம, வேற வேற கட்சியில நின்னு இருக்கணும்! – எஸ்.எஸ்.பூங்கதிர், – ———————————- – ''தலைவர்தான் தேர்தல்ல நிற்கிறார்ல… அப்புறம் ஏன் 'இந்த முறையாவது நில்லுங்க'ன்னு ...

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 4-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி!

Posted: 18 May 2016 07:24 PM PDT

- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வென்றது. 1 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய கிருனால் ...

செந்தில் பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு

Posted: 18 May 2016 07:01 PM PDT

கரூர் : கரூர் அருகே நள்ளிரவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மே 21 ம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து, அ.தி.மு.க நேற்று காலை முதல் இரவு வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், ...

வாக்கு எண்ணிக்கை: இணையதளத்தில் காண சிறப்பு ஏற்பாடு

Posted: 18 May 2016 06:44 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திரேந்திர ஓஜா வெளியிட் டுள்ள தகவலில், "வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். www.eciresults.nic.in என்ற இணையதளம் மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்' என கூறியுள்ளார். - தினமணி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™