Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.11 ஆயிரம் கோடியில் 10 லட்சம் நீர் குட்டைகள்

Posted: 18 May 2016 09:45 AM PDT

புதுடில்லி:வறட்சியை சமாளிக்கும் வகையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், நாடு முழுவதும், 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு குட்டைகளை, ஒரு மாதத்துக்குள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கடும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சமாளிப்பது குறித்தும், எதிர்கால திட்டம் குறித்தும், மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி, சமீபத்தில் நடத்தினார்.ஜூன் மாதத்துக்குள்...: அதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், 65 சதவீதத்தை, வறட்சி நிவாரணப் பணிகளுக்கு செலவிடுவது என ...

பெங்களூரில் ஆப்பிள் 'ஆப்' வடிவமைப்பு மையம்

Posted: 18 May 2016 09:50 AM PDT

மும்பை,: உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின், 'ஆப்' எனப்படும், செயலி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைய உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்நாளான நேற்று, மும்பை சென்ற அவர், முதலில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தார். முதலீடு செய்வது...அவருடைய இந்த பயணத்தின் போது, இந்தியாவில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூரில், ஆப்பிள் நிறுவனத் ...

ஸ்டேட் வங்கி இணைப்பு 'ஓகே' என்கிறார் ஜெட்லி

Posted: 18 May 2016 09:52 AM PDT

புதுடில்லி:''எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் துணை வங்கிகளை இணைக்கும் பரிந்துரை வந்தால், மத்திய அரசு, ஒப்புதல் அளிக்கும்,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

எஸ்.பி.ஐ.,யுடன், அதன் துணை வங்கிகளான, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரூ, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், உள்ளிட்ட, ஐந்து துணை வங்கிகளை இணைக்கும் திட்டம், நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரைவு திட்டத்தை மத்திய அரசுக்கு, எஸ்.பி.ஐ., அனுப்பியுள்ளது. இதில்,பாரதிய மகிளா வங்கியை இணைக்கவும் பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இணைத்தால், எஸ்.பி.ஐ.,யின் வர்த்தகம், 28 லட்சம் கோடி ...

அமர்சிங் மீண்டும் வந்தது எப்படி?முலாயம் போடும் அரசியல் கணக்கு

Posted: 18 May 2016 10:00 AM PDT

கட்சிக்குள் நிலவும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அமர்சிங்கிற்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை முலாயம் சிங் வழங்கியதன் பின்னணியில், பல்வேறு அரசியல் வியூகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உ.பி.,யில் ஆளும் கட்சியாக உள்ள, சமாஜ்வாதி கட்சியில், முலாயம் சிங்கின் நிழலாய் இருந்த வர் அமர்சிங். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் ஆட்சியே, கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, தனி ஆளாய் நின்று, திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மன்மோகன் சிங் அரசை, அமர்சிங் காப்பாற்றினார்.அனைத்து கட்சிகளிலும் ...

டில்லிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை அடுத்த மோதலுக்கு கெஜ்ரிவால் தயார்

Posted: 18 May 2016 10:02 AM PDT

புதுடில்லி, : மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லிக்கு, முழுமையான மாநில அந்தஸ்து கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. எனினும், மாநிலத்தின் போலீஸ் நிர்வாகம் மற்றும் அரசு பணியாளர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.பிரதமரின் கல்வி தகுதி உள்ளிட்ட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும், ஆம்ஆத்மி கட்சி, டில்லிக்கு மாநில அந்தஸ்து பிரச்னையை ...

மே.வங்கம், கேரளா, அசாமில் ஆட்சியை பிடிப்பது யார்? கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு இன்று விடை கிடைக்கும்

Posted: 18 May 2016 10:04 AM PDT

புதுடில்லி:கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது; மதியத்துக்குள், இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரியவரும்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைக் கான தேர்தல், ஏப்., 4ல் துவங்கியது. மேற்கு வங்கத்தில், ஆறு கட்டங்களாகவும்; அசாமில், இரண்டு கட்டங்களாகவும்; கேரளாவில் ஒரு கட்டமாகவும் ஓட்டுப் பதிவு நடந்தது.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. பகல், 10:00 ...

அரவக்குறிச்சியில் நடந்தது என்ன? விசாரணை குழு அமைப்பு

Posted: 18 May 2016 10:24 AM PDT

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடந்த, பணப் பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த, தேர்தல் கமிஷன் குழு அமைத்துள்ளது.

இதனால், தேர்தல் முடிந்த பின், தேர்தல் முடிவை ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ள தாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், வாக்காளர் களுக்கு பணம் வழங்கப் படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதையும் மீறி, வாக்காளர்களுக்கு தாராளமாக பணப் பட்டுவாடா செய்தனர்.அதிக அளவில் பட்டுவாடா நடந்ததால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைத்து, தேர்தல் ...

முதல்வராக கருணாநிதி பதவி ஏற்பார்: ஸ்டாலின்

Posted: 18 May 2016 10:39 AM PDT

கரூர்:''தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வராக பொறுப்பு ஏற்பார்,'' என, அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட, ஸ்டாலின் பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், பணப் பட்டுவாடா புகார் காரணமாக, 23ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று வேலாயுதம்பாளையம் பகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அக்கட்சி வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து பேசியதாவது: நாளை (இன்று) அனைவரும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்ற செய்தி வரும். ஆளுங்கட்சிக்கு, 234 ...

* தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள்... திக்... திக்... * அடுத்த ஆட்சி யாருடையது என பெரும் எதிர்பார்ப்பு * காலை 8:00 மணிக்கு துவங்குது ஓட்டு எண்ணிக்கை

Posted: 18 May 2016 10:47 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. அடுத்த ஆட்சி யாருடையது என்ற, பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், எப்போதும் இல்லாத அளவில், இம்முறை, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி - பா.ஜ., - பா.ம.க., என, பல முனைப் போட்டி நிலவியது. இருப்பினும், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,விற்கும், ஆண்ட கட்சியான, தி.மு.க.,விற்கும் இடையே தான், கடும் போட்டி நிலவியது.* முதலில் தபால் ஓட்டு:தஞ்சாவூர், அரவக்குறிச்சி ...

பெண்கள் மீதான இணைய தாக்குதலும் வன்முறையாகவே கருதப்படும்: மேனகா

Posted: 18 May 2016 12:09 PM PDT

புதுடில்லி :''பெண்கள் மீது, 'ஆன்லைன்' எனப்படும், இணையங்கள் வழியாக, நடத்தப்படும் தாக்குதலும், வன்முறையாகவே கருதப்படும். இதற்கு ஏற்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் நலத்துறை அமைச்சர் மேனகா கூறினார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சரான மேனகா, பெண்களுக்கு, எதிரான கொடுமைகள் குறித்து, நீண்டகாலமாக, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பெண் பத்திரிகையாளர்களுடன் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்; அப்போது அவர் பேசியதாவது:
இணையங்களின் வளர்ச்சி : பெண்களுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™