Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜெயிக்கப் போவது யாரு..? உச்சக்கட்ட உதறலில் தமிழகம்!

Posted: 18 May 2016 11:47 AM PDT

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை (19-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர்த்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றன. வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு ...

உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் !

Posted: 18 May 2016 11:26 AM PDT

கோடைகாலத்தில் அதிக வெயிலால் உடல் சோர்வு, சிறுநீர் தாரையில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மக்காசோளத்தை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மக்காசோளத்தை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம், சிறிது பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை வேளையில் சாப்பிட்டுவர கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சோர்வு போகும். மக்காசோளம் அற்புதமான ...

பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !

Posted: 18 May 2016 11:22 AM PDT

பாட்னா: பருப்பு வகைகளை மத்திய அரசு மானிய விலையில் சப்ளை செய்வதால், இவற்றை மாநிலங்கள் கிலோ ரூ.120க்கு மேல் விற்க வேண்டிய அவசியமில்லை; விற்கவும் கூடாது என ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். பருப்பு வகைகள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, பருப்பு வகைகளை பதுக்கி வைப்போர் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, நாடு முழுவதும் பதுக்கல் பருப்பு வகைகளை பறிமுதல் செய்தது. இதை பின்னர் மாநிலங்கள் மூலம் விநியோகம் செய்து விலைகை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ...

கதை சொன்னால் படிப்பு வரும் !

Posted: 18 May 2016 11:10 AM PDT

"குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பெரியவர்களையோ கதை கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளையோ வீடுகளில் பார்ப்பதே இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது. புத்தக மூட்டைகளைச் சுமந்து பள்ளி வேனுக்கும் வீட்டுக்கும் ஓடவே குழந்தைகளுக்கு நேரம் போதாதபோது கதை எங்கே கேட்பது?'' என்று ஆதங்கப்படுகிறார் விஜயராஜா. இவர் குழந்தைகள் நேசிக்கும் ஒரு கதை சொல்லி ஆசிரியர். 2008-லிருந்து தொடர்ந்து மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி செய்துவிட்டு அண்மையில், தேனி அருகே அய்யனார்புரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு மாறுதலாகி ...

இப்படியும் ஒரு தாவரம்! - பூச்சிகளை விழுங்கும் செடி!

Posted: 18 May 2016 11:08 AM PDT

பூச்சிகளை சிறு உயிரினங்கள் சாப்பிடுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பூச்சிகளை உண்ணும் தாவரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி ஒரு தாவரம் உள்ளது. அதன் பெயர் வீனஸ் ஃப்ளைட்ராப்! வட அமெரிக்காவில் இந்தத் தாவரம் உள்ளது. ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் இவை வளர்கின்றன. இவற்றின் இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும் மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும். ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும். ...

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம் !

Posted: 18 May 2016 11:02 AM PDT

ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய நமோடெல் அச்சே தின் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி. உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நீடிக்கும். நமோடெல் அச்சே தின் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், லாலிபாப் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ...

வில்லங்கமான பள்ளி

Posted: 18 May 2016 10:57 AM PDT

வில்லங்கமான பள்ளி ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்வந்தாரு. **************************************** ■ அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார். முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ... "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் ...

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம்

Posted: 18 May 2016 10:52 AM PDT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் ...

...ந்தா கிளம்பிட்டாங்கப்பா!

Posted: 18 May 2016 10:49 AM PDT

...ந்தா கிளம்பிட்டாங்கப்பா! சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிந்து நாளை முடிவுகள் வெளி வரப் போகின்றன. இந்த நிலையில் அதை வைத்து குசும்பு மீம்ஸ்கள் பேஸ்புக்கையும் டிவிட்டரிலும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளன. முடிவு எப்படி இருக்கும் என்பதை வைத்து ஆளாளுக்கு கலகலத்து வருகின்றனர். எந்த டிவியில் எந்த புரோகிராம் வருதோ அதை வைத்து முடிவைத் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு மக்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிலிருந்து ஒரு சாம்பிள் இதோ....! நன்றி தட்ஸ் தமிழ் ரமணியன்

வாழ்க்கை என்றும் சொர்க்கமே…!!

Posted: 18 May 2016 10:41 AM PDT


-

"நான் போறன் போ"
எனும் போது
"நான் உன்னை போக விடமாட்டேன்"
என்று சொல்லும் உறவு கிடைத்தால்
வாழ்க்கை என்றும் சொர்க்கமே

————————-

அழகான மூட நம்பிக்கை

Posted: 18 May 2016 10:38 AM PDT

- நான் போறேன்னு சொன்னா அம்மா என் தலையில் வலிக்காமல் அடித்து போயிட்டு வரேன்-னு சொல்லு என்பார்கள் அழகான மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்று..! – ————————- – ஆண் பெண் எனும் வித்தியாஞம் தெரியாமல் பழகிய பள்ளிக்கால நட்புகள் அழகு..! – ————————— – குழந்தைகளிடம் கேட்காமல் கிடைக்கும் முத்தமும் பெண்களிடப் கெஞ்சி கேட்டு கிடைக்கும் முத்தமும் அழகு..! – ——————- – அப்பாவும் அம்மாவும் சிரிச்சிகிட்டே சண்டை போடுறத பாக்குறது கூட ஒரு சுகம்தான்..!! – —————————- – பொய் சொல்லியபின் குழந்தையின் ...

கைவிலங்கு - ஜெயகாந்தன்

Posted: 18 May 2016 10:32 AM PDT



பதிவிறக்கசுட்டி




என்றும் அன்புடன்
செல்லா

தமிழ் விக்கிமூலம் தளத்தில் நான்கு இலட்சம் பக்கங்கள், உலகில் ஆறாவது இடம்.

Posted: 18 May 2016 10:29 AM PDT

தமிழ் விக்கிமூலம் என்பது ஒரு கட்டற்ற இணைய நூலகம் ஆகும். இத்தளத்தில் 2000க்கும் மேற்பட்ட நாட்டுடைமையான நூல்களை ஏற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நூல்களின் PDF கோப்புகளை இங்கு காணலாம். https://commons.m.wikimedia.org/wiki/Category:PDF_files_in_Tamil_with_OCR_conversion கூகுளின் ஒளிவழி எழுத்துணரி கருவியைக் கொண்டு இந்நூல்களின் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் பதிவேற்றப்பட்டு, உலக மொழி விக்கிமூலங்களில் தமிழ் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 18 May 2016 08:47 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

நாளைய தீர்ப்பு!!!!

Posted: 18 May 2016 07:04 AM PDT

நாளைய தீர்ப்பு!!!! கவுண்டமணி: டேய் செம்பட்டித் தலையா செந்தில்: என்னன்னே சொல்லுங்கண்ணே கவுண்டமணி: உங்கிட்ட என்ன சொன்னேன் செந்தில்: ஓட்டு போட சொன்னீங்கன்னே கவுண்டமணி: போட்டியா செந்தில்: ரெண்டு வாட்டி போட்டுட்டேன்னே கவுண்டமணி: கூமுட்ட தலையா ஏண்டா அப்படி செஞ்ச செந்தில்: அண்ணே ரெண்டு பேர்டயும் காசு வாங்கிட்டன்னே கவுண்டமணி: உன்ன யாருக்குடா போட சொன்னேன்? இப்ப யார்டா ஜெயிச்சா? செந்தில்: யார் ஜெயிச்சா என்னன்னே - ரெண்டுமே ஒன்னுதான்னே கவுண்டமணி: நீங்க திருந்த மாட்டீங்கடா ...

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம்

Posted: 18 May 2016 06:40 AM PDT

உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நீடிக்கும். - நமோடெல் அச்சே தின் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், லாலிபாப் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் ...

சாதிக் பாஷா கொலை

Posted: 18 May 2016 06:27 AM PDT

[color:4c4e= #000000]சாதிக் பாஷா கொலை இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்திய சென்னை பதிப்பில் வந்த செய்தி . திருச்சி : 2G ஊழல்   ,A ராஜாவின் நெருங்கிய நண்பரும் கிரீன் ஹவுஸ் புரோமொடர்ஸ் நடத்துனர் ஆன பாஷா தற்கொலை என கூறப்பட்ட செய்தியில் , அய்யுரை சேர்ந்த K பிரபாகரன் என்பவர் ,தானும் ,ஜாபர் செட் ,பரமேஷ்குமார் என்ற ராஜா உறவினரும் , பாஷாவை கொலை செய்ததாக கூறியுள்ளார் . பாஷாவின் ஆபீசில் , பாஷாவை ,ஜாபர் துண்டால்  நெரிக்க ,பரமேஷ்குமார் தனது முழங்காலால் கழுத்தை நசுக்க , பிரபாகரன் பாஷாவின் கால்களை பிடித்துக் ...

இலங்கையில் பெரும் வெள்ளம், நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு; 150 பேரை காணவில்லை

Posted: 18 May 2016 05:35 AM PDT

- இலங்கையில் கனமழை காரணமாக தலைநகர் கொழும்புவில் தத்தளிக்கும் மக்கள். | படம்: பிடிஐ. -------------------- இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150 பேரைக் காணவில்லை. இதனிடையே, நிலச்சரிவு காரணமாக 200 குடும்பத்தினர் புதையுண்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவு ...

ஹெல்மெட்டைப் பறக்க விட்ட பவுன்சர்: புனே வீரர் ஜார்ஜ் பெய்லி அதிர்ச்சி

Posted: 18 May 2016 05:32 AM PDT

- பவுன்சரில் பெய்லியின் ஹெல்மெட் பறந்து ஸ்டம்ப் அருகே விழுந்த காட்சி. | படம்: கே.ஆர்.தீபக். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுன்சர் ஹெல்மெட்டை தாக்கியது லாரி மோதியதை போன்று இருந்ததாக புனே வீரர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சக ஆஸ்திரேலியா வீரர் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்தை பெய்லி அடிக்க முயன்றார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. உடனே ஹெல்மெட் ஸ்டெம்பு அருகே கீழே விழுந்தது. ...

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Posted: 18 May 2016 05:06 AM PDT

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா? ஓட்டுக்கு ரூபா வாங்கி குடிச்சிட்டு, போதையில ஓட்டை மாத்திப் போட்டுறக் கூடாதுன்னுதான்! - - சீத்தார்குளம் சோமு - ----------------------------------------- மழைக்காலத்தில் நீர் தேங்க விடமாட்டோம்: ஜெ. ‪#‎ ஆமா‬... நாங்களே ஏரியில தேக்கி வச்சு நடுராத்திரியில தொறந்து விடுவோம்! - - ராஜண்ணா வெங்கட்ராமன் - ------------------------------------------- @FandomNishvetha வானத்துல என்ன இருக்கும்னு கேட்டா எல்லாரும் நிலா, நட்சத்திரம்னு ...

மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக ‘சொல்’ இருக்கும்,”

Posted: 18 May 2016 04:54 AM PDT

- –'சொல்' படத்தின் படப்பிடிப்பில் பாவண்ணன், அஞ்சனாராஜ். — "உலகிலேயே எந்த மொழிக்கும் இல்லாத பெருமைகள் செம்மொழியாம் தமிழுக்கு உண்டு. வார்த்தை உச்சரிப்பு, இலக்கணக் கட்டு என்று தமிழுக்குரிய தனித்தன்மைகளை வேறெந்த மொழியோடும் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. அத்தகைய மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக 'சொல்' இருக்கும்," என்கிறார் நடிகரும் இயக்குநருமான பாவண்ணன். தலைப்பே கதையைச் சொல்லி விடுகிறதே? "உண்மைதான். ஆனால், இதை விட பொருத்தமான தலைப்பு வேறு கிடைக்கவில்லை. கதைக் கருவை ஒரு தலைப்பு ...

ஒரு பாட்டி விளம்பரத்தில நடிச்சு ஏமாத்திருச்சு...!!

Posted: 18 May 2016 04:52 AM PDT

@v2wit ஒரு பாட்டி விளம்பரத்தில நடிச்சு ஏமாத்திருச்சுனு பொங்கிட்டிருக்காங்க. அஞ்சு வருஷமா ஒரு பாட்டி நடிச்சு ஊரை ஏமாத்திட்டுருக்கேய்யா! - ------------------------------------------ - ''காரை மறிச்சு, நாங்க வச்சிருந்த பண மூட்டையை தேர்தல் ஆணைய அதிகாரிங்க கைப்பத்திட்டாங்க...'' ''அய்யய்யோ... அப்பறம்?'' ''ஊருக்குப் போறோம்... வரிசையா சுங்கச்சாவடிக்கு கட்டறதுக்காக வச்சிருக்கோம்னு உண்மையைச் சொன்னேன். விட்டுட்டாங்க!'' - - கவிதா பாரதி - ----------------------------------------- - @Piramachari ...

நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு ஏன் விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?

Posted: 18 May 2016 04:51 AM PDT

- மனைவி: என்னங்க, நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க? அதிமுககாரர்: அம்மா வராங்க பார். அதோ ஹெலிகாப்டர்... - மனைவி: மூதேவி! அது சீலிங் ஃபேன்... ஒழுங்கா படுத்து தூங்குங்க! - ------------------------------------- - இந்த டீக்கடைக்காரன் வேற எப்ப போனாலும் பழைய பாக்கிய கேட்டுட்டுருக்கான்... இவன் கடனை யாராச்சும் தள்ளுபடி பண்ணி விடுங்கய்யா! - - பூபதி முருகேஷ் - ------------------------------------ - தேர்தல் நேரத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மூடப்படுமாம், ...

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’

Posted: 18 May 2016 04:34 AM PDT

சுந்தர்.சி நடித்து தயாரித்துள்ள 'முத்தின கத்திரிக்கா' படம் இம் மாதம் வெளியாக இருப்பதாக அப்படக் குழுவினர் அறிவித்திருக் கின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளி யாகும் படங்கள் வசூல் ரீதியில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. கடைசியாக 'அரண்மனை 2' வெளியானது. பேய்ப் படம் என்பதால் மட்டுமல்லாமல், சுந்தரின் அபாரமான திரைக்கதையாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தை இயக்காமல், தன்னுடைய உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார் சுந்தர்.சி. 'முத்தின ...

மே 27ஆம் தேதி வெளியீடு காணும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’

Posted: 18 May 2016 04:28 AM PDT

- சிம்பு நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளி வந்தபாடில்லை. ஒருவழியாக இப்படத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. சிம்பு, -நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்த படம் இது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படமும் கூட. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ...

'108' ஆன அரசு பஸ்: சென்னையில் 'மனிதத்துக்கு' ஒருநாள்

Posted: 18 May 2016 04:25 AM PDT

- இளவரசன் சுகுமார் ( இடது) | பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரித கதியில் இயங்கிய அரசுப் பேருந்து (வலது) சென்னையில் மனிதம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உணர்த்துவது உண்டு. கடந்தாண்டு டிசம்பர் மழை மனிதம் மிக்க மனிதர்கள் எவ்வளவு பேர் கொண்டது சென்னை என்பதை உலகுக்கு உணர்த்தியது. 'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போல ஒரு பிரசவ வலியால் துடித்த பெண்ணை, அரசு பஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த ...

சமூக நிலவரங்களை அலசும் புதிய படம் ‘அச்சமின்றி’

Posted: 17 May 2016 11:46 PM PDT

- 'என்னமோ நடக்குது' படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய் வசந்த், இயக்குநர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் 'அச்சமின்றி' படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். நாயகன் விஜய் வசந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் ...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 17 May 2016 11:43 PM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 17 May 2016 10:17 PM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

ரமணி ஹைக்கூ

Posted: 17 May 2016 10:09 PM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

அனுபவத் துளிகள்

Posted: 17 May 2016 10:02 PM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 17 May 2016 09:48 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

Posted: 17 May 2016 09:46 PM PDT

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. * நமக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். * சுத்தமான காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். * உணவு பொருட்களை மூடியே வைத்திருக்க வேண்டும். * வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளம் (roof) உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். * டார்ச் லைட், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தியை ...

ரமணியின் கவிதைகள்

Posted: 17 May 2016 09:43 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?

Posted: 17 May 2016 09:33 PM PDT

அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இரண்டு சிறுவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். – முதலாவது சிறுவன், தன் தந்தையோடு கடற்கரைக்குச் சென்று அங்கு விற்றுக் கொண்டிருந்த சில கூழாங்கற்களை வாங்கி வந்து விளையாடத் தொடங்கினான். – இதைப் பார்த்தவுடன் இரண்டாவது சிறுவனுக்கம் கூழாங்கற்களின் மேல் ஆசை வந்தது. அவனும் அவனது தந்தையை நச்சரித்து சற்று விலை உயர்ந்த கூழாங்கற்களை வாங்கினான். அதை அழகான ஒரு பையில் போட்டு முடிச்சிட்டு – நாள்தோறும் விளையாடுவதற்குக் கொண்டு வருவான். – முதல் நாள் அந்த ...

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்!

Posted: 17 May 2016 09:32 PM PDT

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், 'அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...' என்று மாணவர்களின் எதிர்காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள். குழந்தைகளும், தங்கள் பெற்றோர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்த திருப்தியுடன் பாவமாக நின்று கொண்டிருப்பார்கள். இது வழமையான நிகழ்வுதான். ஆனால், இதில் கொடுமையான நிகழ்வு என்னவென்றால், ...

பாமரர் தேவாரம்

Posted: 17 May 2016 09:21 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Posted: 17 May 2016 09:19 PM PDT

பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். - இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. - கடந்த ஆண்டில் 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் காஞ்சிபுரம் ...

காப்பிராயன் கவிதை

Posted: 17 May 2016 09:12 PM PDT

- ஸ்கூலு போல கலகலன்னு ஊரு இருந்துச்சி கோடை லீவு விட்டதுபோல் அமைதி ஆயிருச்சி! - வேட்பாளர்தான் மாணவர்கள் பரீட்சை முடிஞ்சிருச்சி விடைத்தாள்கள் உங்க கையைத் தேடி வந்துருச்சி! - பதினாறாம் தேதி அதை திருத்தப் போறீங்க மக்கள் நீங்க வாத்தியாரு மார்க்கு போடுங்க! - அவுட்ஸ்டேண்டிங் ஆளுக்கெல்லாம் நூறு போடுங்க மக்கான பார்ட்டிக்கெல்லாம் முட்டை போடுங்க! - உங்களோட மார்க்கால நாடு வளரணும் தமிழ்நாடே மதிப்போட தலை நிமிரணும்! - ----------------------

சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'

Posted: 17 May 2016 09:10 PM PDT

- தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்' கட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. - சில இடங்களில், தங்கம், வெள்ளி மற்றும் நிலம் போன்றவற்றை பந்தய பொருளாக வைத்து, தேர்தல் சூதாட்டம் கனஜோராக நடக்கிறது. - 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா; பிடிக்காதா? தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்குமா; அமைக்காதா? மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்திலாவது வெற்றி பெறுமா; பெறாதா? அன்புமணி ஜெயிப்பாரா, மாட்டாரா?' ...

" தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

Posted: 17 May 2016 09:09 PM PDT

மே 17 சென்னை: தேர்வில் மார்க்குகள் குறைவாக பெற்ற மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ் என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். - இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: - தோல்வி என்பது வெற்றியின் வழிகாட்டியே , மாணவர்கள் யாரும் மனம் தளரக்கூடாது. குறைந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™