Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ராஜதானி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 18 May 2016 12:39 PM PDT

ஆண்டிபட்டி அருகேயு ராஜதானியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்தனர். பள்ளி அளவில் மாணவி வினிதா 933 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், பவித்ரா 927 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், மாணவர் ஜெயகாசிராஜா 923 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றனர். இப்பள்ளி மாணவ,மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சியடைய பாடுபட்ட பள்ளி தலைமையாசிரியர் சிவராம பாண்டியன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பழனி

Posted: 18 May 2016 12:37 PM PDT

ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 18 May 2016 12:37 PM PDT

ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

"பாடங்களை விரும்பிப் படித்தால் பலன் உண்டு'

Posted: 18 May 2016 12:36 PM PDT

பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தேர்வுக்கான பாடங்களை விரும்பிப் படித்தால் நிச்சயம் பலன் உண்டு என்று பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேனி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி டி.தாரணி கூறினார்.

நியமனம்

Posted: 18 May 2016 12:36 PM PDT

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராக ஆழ்வார்திருநகரி வழக்குரைஞர் ஜி.டி.ஜி. கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு 2 விருதுகள் அறிவிப்பு

Posted: 18 May 2016 12:36 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் செயல்பாடுகளை பாராட்டி மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம் இரண்டு விருதுகளை அறிவித்துள்ளது.

சத்திரப்பட்டி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 18 May 2016 12:35 PM PDT

கோவில்பட்டியையடுத்த இ.சத்திரப்பட்டி ஸ்ரீகாளியம்மன் - காந்தாரி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

Posted: 18 May 2016 12:35 PM PDT

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை (மே 19) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது, பணியில் உள்ள அரசு அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

லிங்கம்பட்டி ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

Posted: 18 May 2016 12:34 PM PDT

லிங்கம்பட்டி புனித வளனார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலங்குடியிருப்பு கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 18 May 2016 12:34 PM PDT

காலங்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீசிவபார்வதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோயில் கொடை விழா

Posted: 18 May 2016 12:33 PM PDT

நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பம் வடக்கு தெரு அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

பார்வையற்றோர் பிரிவில் படுக்கப்பத்து பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

Posted: 18 May 2016 12:33 PM PDT

பிளஸ் 2 தேர்வில் பார்வையற்றோர் பிரிவில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி லூசியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதலூர் தூய மிகாவேல் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Posted: 18 May 2016 12:32 PM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இடைநின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்புப் பணி

Posted: 18 May 2016 12:32 PM PDT

சாத்தான்குளம் வட்டார வளமையம் சார்பில் இடைநின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்புப் பணி  நடைபெற்றது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி: இளைஞர் கைது

Posted: 18 May 2016 12:31 PM PDT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக, சென்னை இளைஞரை திருச்செந்தூர் போலீஸார் கைது செய்தனர்.

மது பாட்டில்களுடன் கார் பறிமுதல்

Posted: 18 May 2016 12:29 PM PDT

கோவில்பட்டி கடலையூர் சாலையில், மது பாட்டில்களுடன் சென்ற காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அரசு, தனியார் பள்ளிகள் தேர்ச்சி விவரம்

Posted: 18 May 2016 12:29 PM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் வருமாறு:

வட்ட அளவில் சாலைபுதூர் பள்ளி மாணவி முதலிடம்

Posted: 18 May 2016 12:28 PM PDT

சாத்தான்குளம் வட்ட அளவில் சாலைபுதூர் ஏக ரட்சகர் சபை மேல்நிலைப் பள்ளி மாணவி மெல்பா ஜாஸ்மின் முதலிடம் பிடித்துள்ளார்.

திருச்செந்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 18 May 2016 12:27 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வே. ராமலட்சுமி 1157 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இந்திய ஹாக்கி: கோவில்பட்டியில் இன்று தொடக்கம்

Posted: 18 May 2016 12:26 PM PDT

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை சார்பில் அகில இந்திய ஹாக்கி போட்டி வியாழக்கிழமை (மே 19) தொடங்குகிறது.

பலத்த சூறாவளி:பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

Posted: 18 May 2016 12:26 PM PDT

பலத்த சூறாவளி காற்று வீசியதால், பாம்பன் பாலத்தில் புதன்கிழமை இரவு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள 6 எம்எல்ஏக்கள் யார்? இன்று 11 மணிக்கு தெரிய வாய்ப்பு

Posted: 18 May 2016 12:25 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை (மே 19) நடைபெற உள்ளதால், வெற்றி பெறுவது யார் என்ற விவரம் முற்பகல் 11 மணியளவில் தெரிய வரும்.

குமரி மெட்ரிக் பள்ளி மாணவி சிறப்பிடம்

Posted: 18 May 2016 12:25 PM PDT

பிளஸ் 2 தேர்வில் குமரி மெட்ரிக் பள்ளி மாணவி கிருத்திகா 1142 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

பேச்சிப்பாறை அரசு  பழங்குடியினர் பள்ளி 90% தேர்ச்சி

Posted: 18 May 2016 12:24 PM PDT

பிளஸ் 2 தேர்வில் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டுறை மேல் நிலைப் பள்ளி 90% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவுக்குப் பின்னால்...

Posted: 18 May 2016 12:24 PM PDT

வேட்பாளர்களின் செலவுக் கணக்கைக் கேட்கும் தேர்தல் ஆணையத்திடம், வாக்காளர் விழிப்புணர்வுக்காக நீங்கள் செய்த செலவு எவ்வளவு என்று திருப்பிக் கேட்டால், அதன் அளவு நிச்சயமாக, வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுத்தொகையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருந்தும், பதிவான வாக்குகள் 74% மட்டும்தான். 2011 தேர்தலில் பதிவான 78%விடக் குறைவு.

குலசேகரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

Posted: 18 May 2016 12:24 PM PDT

குலசேகரம் புனித ஊர்சுலாள் மகளிர் மேல் நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளது.

உயிர் மூச்சே காற்றாகி...

Posted: 18 May 2016 12:23 PM PDT

சென்னை அடையாறு பக்கம் போனால் புற்று நோய் கொல்லாது என்றும் தக்க நேரத்தில் நோய் இனம் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணம் பெறலாம் என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். டாக்டர் சாந்தாவின் மகத்தான சேவையைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர் வார்த்தைகளிலேயே சொல்வதானால், புற்று நோய் சிகிச்சைக்கு பல கோணங்கள் இருக்கின்றன.

அலுவலக மேலாண்மை பாடப் பிரிவில் மணலிக்கரை பள்ளி சிறப்பிடம்

Posted: 18 May 2016 12:23 PM PDT

பிளஸ் 2 தேர்வில் மணலிக்கரை புனித மரியகொரற்றி மேல்நிலைப் பள்ளி மாணவி சுஹைனா ஹவுலத், மாணவர் அனிஷ் மோன் ஆகிய இருவரும் அலுவலக மேலாண்மை பாடப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர்.

தாவரவியல் பாடத்தில் திருவட்டாறு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடம்

Posted: 18 May 2016 12:23 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில், திருவட்டாறு எக்செல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.

குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளி 100 % தேர்ச்சி

Posted: 18 May 2016 12:22 PM PDT

பிளஸ் 2 தேர்வில் குலசேகரம் அரசு மேல் நிலைப் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 99 மாணவ, மாணவியரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவி ஆர். பிரியா 1016 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி கே. சிந்து 1013 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் வி.எஸ். ஆன்டோ பெர்மாக்ஸ்விஜய் 978 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர் என்.எஸ். ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 18 May 2016 12:22 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது.

தேவை: தூய்மை மின்சாரத் திட்டம்

Posted: 18 May 2016 12:22 PM PDT

வாழ்வாதாரமே இல்லாத ஏழை மக்களிடம் கடலையும் ஆறுகளையும் காற்றையும் தூய்மையாக வைத்திருங்கள் என்று எவ்வாறு கூற முடியும் என்று 1972-ஆம் ஆண்டு, சுவீடனில் நடந்த ஐ.நா. சபை மாநாட்டில் கூறினார் இந்திரா காந்தி.

முள்ளங்கனாவிளை பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 18 May 2016 12:21 PM PDT

முள்ளங்கனாவிளை லூர்த்து மவுன்ட் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

களியக்காவிளை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

Posted: 18 May 2016 12:21 PM PDT

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்குப் பதிந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் 425 காவல் அலுவலர்கள்: ஆட்சியர் தகவல்

Posted: 18 May 2016 12:21 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் மையத்தில் 425 காவல் அலுவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருத்தல் அவசியம்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 18 May 2016 12:20 PM PDT

நாட்டில் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், அதை எதிர்கொள்வதற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தியது.

மாநிலங்களவைத் தேர்தல்:வரும் 24 இல் மனு தாக்கல் தொடக்கம்

Posted: 18 May 2016 12:19 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் பார்வையாளரும், தலைமைத் தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-சீனா இணைந்தால் இரு நாடுகளும் பயனடையும்

Posted: 18 May 2016 12:19 PM PDT

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், சீனாவும் இணைந்து போரிட்டால் இரு நாடுகளுக்குமே பயன் கிடைக்கும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

சர்வதேசத் தரத்தில் இயங்குவதற்காகவே ஸ்டேட் வங்கிகளை இணைக்க திட்டம்

Posted: 18 May 2016 12:18 PM PDT

சர்வதேசத் தரத்தில் இயங்குவதற்காகவே ஸ்டேட் வங்கிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

6-ஆம் முறையாக முதல்வராகப் போவது யார்?

Posted: 18 May 2016 12:17 PM PDT

தமிழகத்தின் முதல்வராக 6-ஆம் முறையாக பதவியேற்கப் போவது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவா, திமுக தலைவர் கருணாநிதியா என்ற எதிர்பார்ப்புக்கு வியாழக்கிழமை விடை தெரிந்துவிடும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

Posted: 18 May 2016 12:16 PM PDT

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

"விமான விபத்தில்தான் நேதாஜி இறந்தார் என்று முடிவெடுத்தது காங்கிரஸ் கூட்டணி அரசு'

Posted: 18 May 2016 12:15 PM PDT

"விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு, விமான விபத்தில்தான் நேதாஜி உயிரிழந்தார் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவெடுத்தது' என்று நேதாஜி மரணம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வரும் பிரிட்டன் இணையதளம் கூறியுள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சிபெரிய அளவில் பணம்-பரிசுப் பொருள் விநியோகம்: காரணம் அறிய குழு அமைப்பு

Posted: 18 May 2016 12:15 PM PDT

வாக்குப் பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மிகப்பெரிய அளவுக்கு பணம்-பரிசுப் பொருள் விநியோகத்துக்கான காரணங்கள் குறித்து அறிய 7 பேர் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி:உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தவறு: மத்திய அரசு

Posted: 18 May 2016 12:13 PM PDT

காற்று மாசு அதிகம் நிறைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வெளியிட்ட அறிக்கை தவறானது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மும்பை சித்தி விநாயகர் கோயிலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் வழிபாடு

Posted: 18 May 2016 12:13 PM PDT

இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை வழிபாடு நடத்தினார்.

"சாலைகளின் பெயரை மாற்றுவது அரசின் திட்டம் அல்ல'

Posted: 18 May 2016 12:12 PM PDT

முக்கிய சாலைகளின் பெயர்களை மாற்றுவதும், புதிய பெயர்களைச் சூட்டுவதும் அரசின் செயல்திட்டம் அல்ல என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஊழல் வழக்கு: தேசியவாத காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கடி

Posted: 18 May 2016 12:12 PM PDT

ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பங்கஜ் புஜ்பலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ரகுராம் ராஜன் மீதான விமர்சனம்:மோடி மெளனம் ஏன்?: காங்கிரஸ் கேள்வி

Posted: 18 May 2016 12:12 PM PDT

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் ரகுராம் ராஜனை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துப் பேசிய விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் சாதிப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கருப்புப் பண விவகாரம்:இந்தியா புதிய முடிவு

Posted: 18 May 2016 12:12 PM PDT

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், குறிப்பிட்ட சில வழக்குகளைத் தவிர, பிற வழக்குகளில் ரகசியத்தைக் காக்குமாறு வலியுறுத்துவதில்லை என்று இந்தியா புதிய முடிவெடுத்துள்ளது.

எல்ஐசி: 2 லட்சம் புதிய முகவர்களை நியமிக்கத் திட்டம்

Posted: 18 May 2016 12:11 PM PDT

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யில் புதிதாக 2 லட்சம் முகவர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானிக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

Posted: 18 May 2016 12:11 PM PDT

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் புதிதாக செயலர் பதவி

Posted: 18 May 2016 12:10 PM PDT

பாதுகாப்புத் துறையின் நிதிக் கணக்குகளையும், அத்துறைக்கான சுமார் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பாக கையாள்வதற்காக, புதிய செயலர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 18 May 2016 12:09 PM PDT

அணு ஆயுதங்களுடன் 350 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து, இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, ஒடிஸா மாநிலம், சாந்திப்பூரிலுள்ள தளத்தில் இருந்து புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

அஸ்ஸாமில் நிலச்சரிவு: 11 பேர் பலி

Posted: 18 May 2016 12:09 PM PDT

அஸ்ஸாமில் புதன்கிழமை வெவ்வேறு பகுதிகளில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்:பொதுக் கணக்கு குழுக் கூட்டத்தில் பாஜக-காங்கிரஸ் கடும் வாக்குவாதம்

Posted: 18 May 2016 12:09 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டத்தில் பாஜக வலியுறுத்தியது. பதிலுக்கு பிரதமரின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வற்புறுத்தியது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேசிய அளவில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை: இந்திய கம்யூனிஸ்ட்

Posted: 18 May 2016 12:08 PM PDT

தேசிய அளவில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுராவரம் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

சாதிக் பாட்சா மரணம்: பிரபாகரனின் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ திட்டம்

Posted: 18 May 2016 12:08 PM PDT

சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக பிரபாகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்க தீவிரம்குஜராத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

Posted: 18 May 2016 12:07 PM PDT

கான்பூரில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

பெங்களூர்-பஞ்சாப் ஆட்டம் மழையால் பாதிப்பு

Posted: 18 May 2016 12:06 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.

ஹெல்மெட்டை பதம்பார்த்த பவுன்சர் :காயமின்றி தப்பிய பெய்லி

Posted: 18 May 2016 12:06 PM PDT

கோல்ட்டர் நீல் வீசிய அதிவேக பவுன்சர், ஜார்ஜ் பெய்லின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியபோதும், அவர் காயமின்றி தப்பினார்.

உலக குத்துச்சண்டை:சவாலான பிரிவில் இந்திய மகளிர்

Posted: 18 May 2016 12:05 PM PDT

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கடும் சவாலான பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து-இலங்கை முதல் டெஸ்ட்லீட்ஸில் இன்று தொடக்கம்

Posted: 18 May 2016 12:04 PM PDT

இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

பிசிசிஐ தேர்தலுக்கு தடை கோரிய மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 18 May 2016 12:01 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி பிகார் கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தொடர் ஓட்டம்:இந்திய மகளிர் தேசிய சாதனை

Posted: 18 May 2016 12:01 PM PDT

மகளிர் 4 ல100 மீ. தொடர் ஓட்டத்தில் தூத்தி சந்த், ஸ்ரபானி நந்தா, ஜோதி, மெர்லின் ஜோசப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 44.03 விநாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்துள்ளது.

தாமஸ் கோப்பை:காலிறுதியில் இந்திய மகளிர்

Posted: 18 May 2016 12:01 PM PDT

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: இணையதளத்தில் காண தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

Posted: 18 May 2016 12:00 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கதனியார் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Posted: 18 May 2016 12:00 PM PDT

ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில், தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு விடுத்தார்.

இன்று வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 18 May 2016 11:59 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர்  ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

பூண்டி, எல்லாபுரம் அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள்

Posted: 18 May 2016 11:59 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி, எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் விவரம் வருமாறு:

பிரதமருடன் நடிகை கஜோல் சந்திப்பு

Posted: 18 May 2016 11:59 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியை பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். கை கழுவும் அவசியம் தொடர்பாக தான் மேற்கொண்டு வரும் நாடு தழுவிய பரப்புரையின் வெற்றி குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தியதாக கஜோல் பின்னர் தெரிவித்தார்.

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு: 200 பேர் மாயம்:பலி எண்ணிக்கை 36-ஆக உயர்வு

Posted: 18 May 2016 11:58 AM PDT

இலங்கையில் பெருமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

தொடர்மழை, வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ் விலை அதிகரிப்பு

Posted: 18 May 2016 11:58 AM PDT

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

மின்னல் வேக விமானம்: ஆய்வில் முன்னேற்றம்

Posted: 18 May 2016 11:57 AM PDT

ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பறக்கக்கூடிய விமானத்தை உருவாக்க அமெரிக்க - ஆஸ்திரேலிய ராணுவ ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் காவலர் பலி

Posted: 18 May 2016 11:57 AM PDT

பாகிஸ்தானில் போலீஸார் மீது புதன்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஒரு காவலர் உயிரிழந்தார்.

ஓரெகான் மாகாண வாக்கெடுப்பில் ஹிலாரி தோல்வி

Posted: 18 May 2016 11:56 AM PDT

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓரெகான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார்.

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி 

Posted: 18 May 2016 11:56 AM PDT

திருவள்ளூரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆட்சியராவதே லட்சியம்: பள்ளியில் முதல் மாணவி யாமினிபிரியா

Posted: 18 May 2016 11:55 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற ஆர்.யாமினி பிரியா ஆட்சியராவதே தனது லட்சியம் என்றார்.

இரட்டை கோபுரத் தாக்குதல் சவூதிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்

Posted: 18 May 2016 11:55 AM PDT

நியூயார்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சவூதி அரேபியாவுக்கு எதிராக வழக்கு தொடர வகை செய்யும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சேவாலயா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Posted: 18 May 2016 11:55 AM PDT

பிளஸ் 2 தேர்வில் திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்திலுள்ள சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

தில்லி முழு மாநில அந்தஸ்து "வரைவு மசோதா' வெளியீடு

Posted: 18 May 2016 11:55 AM PDT

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் "வரைவு மசோதாவை' ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு புதன்கிழமை வெளியிட்டது.

மழை பாதிப்புகள் குறித்து அவசர எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்: ஆட்சியர்

Posted: 18 May 2016 11:54 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பாதிப்பு குறித்த தகவல்களை 044- 27661200, 044-27667272, 044-27662222 என்ற அவசர தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறினார்.

ஈக்வடார்:மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 18 May 2016 11:54 AM PDT

தெற்கு அமெரிக்க நாடான ஈக்வடாரில் புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது.

மாலத்தீவு:ஈரானுடன் தூதரக உறவு துண்டிப்பு

Posted: 18 May 2016 11:54 AM PDT

ஈரானுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக மாலத் தீவு அறிவித்துள்ளது.

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

Posted: 18 May 2016 11:54 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெறுகிறது

Posted: 18 May 2016 11:53 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 6 இடங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மலேசியா;நகைப் பறிப்பைத் தடுக்க நூதன கேமராக்கள்

Posted: 18 May 2016 11:53 AM PDT

மலேசியாவில் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுப்பதற்காக மனித முகங்களை அடையாளம் புரிந்து கொள்ளக் கூடிய கேமராக்களை முக்கிய இடங்களில் பொருத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஆதிபராசக்தி மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 18 May 2016 11:53 AM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: காஞ்சிபுரம் மாவட்டம் 20-ஆவது இடம்

Posted: 18 May 2016 11:52 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் 20-ஆவது இடத்தைப் பிடித்தது.

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 11 பேர் காயம்

Posted: 18 May 2016 11:52 AM PDT

ஒரகடம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் புதன்கிழமை 11 பேர் காயமடைந்தனர்.

கிணற்றில் மூழ்கிய 2 சிறுவர்கள் சாவு

Posted: 18 May 2016 11:51 AM PDT

மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பகுதியில் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் 2 பேர் அதில் மூழ்கி இறந்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வட மாநில இளைஞர் கைது

Posted: 18 May 2016 11:51 AM PDT

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஆந்திர வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வட மாநில இளைஞரை கும்மிடிப்பூண்டி போலீஸார் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: ஜி.விசுவநாதன் தகவல்

Posted: 18 May 2016 11:51 AM PDT

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர் கல்வி பயில "அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை' மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு அதிமுகவினர் பரிசு

Posted: 18 May 2016 11:50 AM PDT

காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு அதிமுக சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

பேரிடர் மீட்புப் படையினர் சென்னை விரைவு

Posted: 18 May 2016 11:49 AM PDT

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை தளத்தில் இருந்து தலா 30 பேர் கொண்ட நான்கு குழுவினர் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பலாத்கார வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 18 May 2016 11:49 AM PDT

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு வேலூர் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

பணி நிறைவு பெறும் தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

Posted: 18 May 2016 11:49 AM PDT

ஆற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் கே.சாம்பசிவத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தொடர் மழை: செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 18 May 2016 11:48 AM PDT

சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் காரணமாக செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

Posted: 18 May 2016 11:47 AM PDT

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை வளாகத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கூடுதல் கிடங்குகளைக் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சங்கர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக மழை நீடிப்பு

Posted: 18 May 2016 11:47 AM PDT

வேலூரில் புதன்கிழமை மிதமான மழை நீடித்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.

பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 18 May 2016 11:46 AM PDT

வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™