Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி குறித்து விமர்சனம் வாங்கி கட்டிய காங்., தலைவர்

Posted: 17 May 2016 09:30 AM PDT

புதுடில்லி,:நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த, காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் ஆல்விக்கு, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார். மேலும், 'ஆல்வி மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பார்வையாளர்களும் கோஷமிட்டனர்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நிறுவனம், நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் ஆல்வி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ...

ரிசர்வ் வங்கி கவர்னரை நீக்க சுப்பிரமணியன் சாமி...போர்க்கொடி மனதளவில் முழு இந்தியர் அல்ல என விமர்சனம்

Posted: 17 May 2016 09:36 AM PDT

புதுடில்லி: ரகுராம் ராஜனை, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து நீக்கக்கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி போர்க்கொடி துாக்கியுள்ளார். 'ரகுராம் ராஜன், மனதளவில் முழு இந்தியர் அல்ல;அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு,அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம், பார்லி., கூட்டத்தொடரின் இறுதியில், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த, பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடிக்கு, நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார்; அதில், அவர்கூறியுள்ளதாவது:சர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ...

இந்திய, பாக்., உறவு: அமெரிக்கா விளக்கம்

Posted: 17 May 2016 09:37 AM PDT

வாஷிங்டன்,:'இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான, அமெரிக்காவின் உறவு, தனித்தனியானது' என அந்நாட்டின் ராணுவ தலைமையகமானபென்டகன் விளக்கம் அளித்து உள்ளது.

ராணுவ உதவி: சர்வதேச அளவில் பயங்கர வாதத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை யில், இந்தியாவுடன், அமெரிக்கா இணைந்து செயல்படுகிறது. அதேசமயம், பயங்கர வாதி களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ் தானுக்கும், அமெரிக்கா, ராணுவ உதவி அளித்து வருகிறது.இந்த விஷயத்தில், அமெரிக்கா, இரட்டை நிலைபாட்டை மேற்கொண்டு வருவதாக, நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை, அமெரிக்கராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர், ...

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுரத்து செய்ய கருணாநிதி வலியுறுத்தல்

Posted: 17 May 2016 09:51 AM PDT

சென்னை,: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும், என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தாண்டில் மட்டும், 5.56 லட்சம் பேர், தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக, தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள
இந்த நேரத்தில், மருத்துவ கல்லுாரிகளிலும், பொறியியல் கல்லுாரிகளிலும் தொடர்ந்து பயிலுவதற்கு, இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு உண்டா என்பது, இன்னமும்முடிவாகாததால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ...

மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்

Posted: 17 May 2016 10:28 AM PDT

பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில், ஐந்து பேர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளனர். இயற்பியல் வினாத்தாள் இந்த ஆண்டு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அனைத்து பாடங்களையும் விட, இந்த பாடத்தில், சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த பாடத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக, 1,703 பேர், ...

சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என பல கோடிக்கு 'பெட்டிங்' தங்கம், வெள்ளி, நிலத்தை வைத்து சூதாட்டம் கனஜோர்

Posted: 17 May 2016 10:32 AM PDT

தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்' கட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சில இடங்களில், தங்கம், வெள்ளி மற்றும் நிலம் போன்றவற்றை பந்தய பொருளாக வைத்து, தேர்தல் சூதாட்டம் கனஜோராக நடக்கிறது.
'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா; பிடிக்காதா? தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்குமா; அமைக்காதா? மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்திலாவது வெற்றி பெறுமா; பெறாதா? அன்புமணி ஜெயிப்பாரா, மாட்டாரா?' என, பல வகைகளில், இந்த
பெட்டிங்

பணம் பறிமுதல் தமிழகம் முதலிடம்

Posted: 17 May 2016 10:42 AM PDT

ஐந்து மாநில தேர்தலில், கணக்கில் வராத பணம், 178.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, தமிழகத்தில், 112.89 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம்
மற்றும் அசாம் மாநிலங்களில், சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது.
நேற்று முன்தினத்துடன், அனைத்து மாநிலங் களிலும் தேர்தல் நிறைவு பெற்றது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நாள் முதல், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து, வாகன சோதனைநடத்தப்பட்டது.
வருமானவரித் ...

பழ 'பார்சல்' போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி

Posted: 17 May 2016 11:07 AM PDT

கோவை:திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் ரொக்கம், மூன்று கன்டெய்னர் லாரிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவை வந்தன. ரூபாய் நோட்டுகள் வங்கியில் எண்ணி சரிபார்க்கப்பட்டன.

லாரிகளில் பணத்தை அனுப்பி வைத்த விவகாரத்தில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவையில் இருந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளை, திருப்பூர் தேர்தல் அதிகாரிகள், கடந்த 14ம் தேதி பறிமுதல் செய்தனர்.கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' பண பாதுகாப்பு மையத்தில் ...

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு

Posted: 17 May 2016 12:23 PM PDT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் பாடத்திட்டத்தின் படியே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ...

சென்னையில் தொடர் மழை: மீட்புபணியில் மாநகராட்சி தீவிரம்

Posted: 17 May 2016 12:58 PM PDT

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றெழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.சென்னை அருகே வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைடுத்து, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™