Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Posted: 17 May 2016 01:13 PM PDT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தலைநகர் சென்னையில் மிகக்குறைந்த அளவு வாக்குப்பதிவு பதிவாகியிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் 74 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதி 26 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. ...

மருத்துவ குணங்கள் அடங்கிய இயற்கை பொருட்கள்1

Posted: 17 May 2016 01:10 PM PDT

மருத்துவ குணங்கள் அடங்கிய இயற்கை பொருட்கள்! 1. கொத்தமல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும். மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும். 2. சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் ...

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

Posted: 17 May 2016 01:08 PM PDT

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள். குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது. குழந்தைகளை கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ இந்த பழக்கத்தை மட்டும் அல்லாமல் எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற முடியாது என்பதை நினைவில் ...

சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்? (வீடியோ)

Posted: 17 May 2016 01:03 PM PDT

சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் எரிக் கற்கள் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்ற வீடியோவை டிஸ்கவரி வெளியிட்டுள்ளது. விண்வெளியில் சூரியனை சுற்றிக் எரிக் கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருவதும் பூமியை கடந்து செல்வதும் வழக்கம். அதுபோல ஒரு பெரிய எரிக்கல் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்றும், அந்த எரிக்கல் பூமியை மோதுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாசா தெரிவித்தது. இதையடுத்து பூமி, அந்த எரிக்கல்லிடம் இருந்து ...

சென்னை அருகே இன்று (18)காலை புயல் கரையை கடக்கிறது

Posted: 17 May 2016 12:56 PM PDT

சென்னை அருகே இன்று காலை 5 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதனால், இது புயலாக மாறியதாலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ...

சிறுகதை : அம்மா !

Posted: 17 May 2016 12:25 PM PDT

சிறுகதை : அம்மா ! பிள்ளையின் வாயிலிருந்து நீர் ஒழுகியபடி இருந்தது. சட்டை நனைந்துவிடாமல் இருக்க ஒரு துண்டை எடுத்துப் போர்த்திவிட்டான் குமார். தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது. வாய் ஏதோ புலம்பிக் கொண்டே இருந்தது. அதட்டவும் முடியவில்லை. அதட்டினால் சிரித்தாலும், சிரிப்பான். கோபம் வந்து, கத்தி அமர்க்களம் செய்தாலும் செய்வான். வந்த இடத்தில் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று நினைத்தான் குமார். பிறந்த ஒரே பிள்ளை இப்படி இருப்பது துக்கத்தைக் கொடுத்தது. சுயபச்சாதாபம் மிகுந்து, கண்களில் நீர் ...

அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை!

Posted: 17 May 2016 12:22 PM PDT

நம்  அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானப் பூர்வமாக அவற்றிற்குரிய காரணங்களையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். கால ஓட்டத்தில் அந்த நெறிமுறைகள் படிப்படியாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை. விரத நாட்களில் எண்ணெய்க் குளியல் கூடாது விரதம் என்பது உண்பதை, தூங்குவதை முறைப்படுத்துவதாகும். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நன்கு பசி ஏற்படும். பகலில் உறக்கம் வரும். இதனைத் தவிர்க்கும் பொருட்டே விரதத்திற்கு ...

தெரிஞ்சுக்கோங்க!.......'பூவிலே பெரிய பூ - ரஃப்லேஸியா!

Posted: 17 May 2016 12:10 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்? - 'எட்வர்டு ஜென்னர்

Posted: 17 May 2016 12:07 PM PDT

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Posted: 17 May 2016 11:37 AM PDT

மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். வந்தவர் வரிசையில் நின்னார். தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான் இருந்தது. பெரியவா அவரைப் பார்த்து, "என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு. திட்டியும் பிரயோஜனமும் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார். வந்தவருக்கு அதிர்ச்சி 'நாம எதுவுமே சொல்லல, ஆனா, எல்லாத்தையும் ...

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Posted: 17 May 2016 11:28 AM PDT

- பிரபல நடிகர் டில்லி கணேஷ், தனது மகன் மகாவை ஹீரோவாக்குவதற்காக தயாரித்துள்ள படம் தான் 'என்னுள் ஆயிரம்'. நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் மகாவுக்கும், நாயகி மரினா மிச்செல்லுக்கும் இடையே காதல் மலர்கிறது. அனாதையான மகா, மரினா மிச்செல்லை மனைவியாக கரம் பிடிக்க கனவு கண்டுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாரதவிதமாக கொலை சம்பவத்தில் சிக்குகிறார். இது யாருக்கும் தெரியாது என்றாலும், அதை எண்ணி வருந்தும் அவர், கிறிஸ்தவ தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க செல்லும் போது, சந்தர்ப்ப சூழ்நிலையால் ...

அசத்தல் 50 – மங்கையர் மலர்

Posted: 17 May 2016 11:23 AM PDT

வாக்களிக்காத திரையுலக பிரபலங்கள்

Posted: 17 May 2016 11:22 AM PDT

- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, விக்ரம், சமந்தா, இளையராஜா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், இயக்குநர் மணிரத்னம், விக்ரம் பிரபு ஆகிய முன்னணி திரையுலகினர் வாக்களிக்கவில்லை. * '24' படத்தின் ப்ரிமீயர் காட்சிக்கு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் சூர்யா. அவரால் திட்டமிட்டபடி சென்னை திரும்ப முடியவில்லை. இது குறித்து சூர்யா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் "மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் ...

அசத்தல் டிப்ஸ்..

Posted: 17 May 2016 11:22 AM PDT


-

பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்

Posted: 17 May 2016 11:19 AM PDT

ராமேஸ்வரம் : வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும் எனவும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்துவருகிறது. கடல் கொந்தளிப்புடன் உள்ளது. இதனால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 3ம் நம்பர் ...

நானும் விகடனும் மின்னூல்

Posted: 17 May 2016 11:09 AM PDT

நானும் விகடனும் மின்னூல்

தரவிறக்க

https://db.tt/uRbfsVex

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

Posted: 17 May 2016 11:09 AM PDT

ஆனந்த விகடனில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆண்டி வாரியாக தொகுத்துள்ளேன்

விகடன் சிறுகதைகள் 2011
https://db.tt/h089pRZ8

விகடன் சிறுகதைகள் 2012
https://db.tt/8IrnaiDd

கருப்பு பணத்தை வெள்ளையாக்க…!!

Posted: 17 May 2016 11:06 AM PDT


-

பண்பாட்டைக் காப்பதே மாண்பு

Posted: 17 May 2016 11:04 AM PDT


-
நன்றி- உரத்த சிந்தனை

வேண்டாம் பாட்டில் தண்ணீர் !

Posted: 17 May 2016 10:46 AM PDT

வேண்டாம் பாட்டில் தண்ணீர்: மத்திய அரசு வேண்டுகோள் ! புதுடில்லி: 'பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை தண்ணீர் வீணாகிறது; அதை தவிர்க்க வேண்டும்' என, மத்திய அரசு துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கடுமையான கோடை காரணமாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீரை சேமிப்பது பற்றியும், வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றியும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மத்திய அரசின் ...

தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை !

Posted: 17 May 2016 10:45 AM PDT

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இதனால் மழை 2 நாட்கள் மழை பெய்யும். இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: இலங்கை அருகே மையம் கொண்ட காற்றழுத்த தாழ்லு வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது. இன்று காலை சென்னைக்கு ...

யார் சந்தோஷமாக இருக்கிறார்கள்

Posted: 17 May 2016 10:09 AM PDT

- --- யார் உலகில் மிகவும் "சந்தோஷமா" இருக்கிறவங்க? - ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கைப் பார்க்கும் வரை. - அது கொக்கைப் பார்த்துச் சொல்லிச்சாம், "நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே! கருப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கலை என்றது . - கொக்கு சொன்னது, "நானும் அப்படித்தான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா?" என்றது . - காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன் அது சொன்னது, ...

போகும் பாதை தூரமில்லை

Posted: 17 May 2016 04:50 AM PDT

- படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன் வெளிவந்த வருடம் :2014 – ———————— -- போகும் பாதை தூரமில்லை வாழும் வாழ்க்கை பாரமில்லை சாய்ந்து தோள் கொடு இறைவன் உந்தன் காலடியில் இருள் விலகும் அகஒளியில் அன்னம் பகிர்ந்திடு அன்னம் பகிர்ந்திடு – நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே – கருணை மார்பில் சுனை கொண்டவர் யார் அன்னை ...

நகைப்பெட்டி – தனலட்சுமி பாஸ்கரன்

Posted: 16 May 2016 08:37 PM PDT


-
நன்றி- உரத்த சிந்தனை

3 கோடி டாலரை நிராகரித்த அமெரிக்க சிறுவன்!

Posted: 16 May 2016 08:12 PM PDT

- மூன்று கோடி டாலர் (சுமார் ரூ. 200 கோடி) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை டெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, ...

வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா

Posted: 16 May 2016 08:06 PM PDT

- ஹன்சிகா, உதயநிதி நடித்து அண்மையில் வெளி வந்த படம் 'மனிதன்'. அந்தப் படம் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றாலும் அதிக இடங்களில் பெட்டிக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தேர்தல் என்கின்றனர் ஒரு சிலர். இதனால் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகா. ஹன்சிகா 'மனிதன்' படத்தை மிகவும் நம்பியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். 'அரண்மனை=2' படத்திற்குப் பிறகு ஹன்சிகா நடித்த 'போக்கிரி ராஜா', ...

பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா

Posted: 16 May 2016 08:06 PM PDT

- கோலிவுட்டில் அண்மைக்காலமாக பேய் படங்கள்தான் வசூலைக் குவித்து வருகின்றன. அது மட்டுமல்ல. அனைத்துப் படங்களிலும் பெண்களே பேயாக வருவதால் கதாநாயகிக்குதான் படத்திலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் பேயாக நடிக்க நாயகிகள் போட்டா போட்டிப் போடுகிறார்கள். நயன்தாரா, ஹன்சிகா பேய் படங்களில் நடித்து படங்களும் வெற்றி பெற்றதையடுத்து திரிஷாவும் 'அரண்மனை 2' 'நாயகி' படங்களைத் தொடர்ந்து மீண்டும் பேயாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். "பேய் படத்தில் நடித்தால் எனக்கு அதிக முக்கியத்துவம் ...

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு -

Posted: 16 May 2016 07:19 PM PDT

- கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில் வருண் ஆரோனுக்குப் பதிலாக இக்பால் அப்துல்லா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் உத்தப்பா 2 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா பந்துவீச்சில் அவரிடமே ...

குஜராத் கவர்னராகிறார் ஆனந்திபென் படேல்?

Posted: 16 May 2016 07:10 PM PDT

புதுடில்லி: குஜராத் மாநிலத்தில் சரிந்து வரும் கட்சியின் செல்வாக்கை துாக்கி நிறுத்தும் வகையில், ஆனந்திபென் படேலை, முதல்வர் பதவியிலிருந்து மாற்றி விட்டு, அவருக்கு கவர்னர் பதவி அளிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. - இதன்படி, குஜராத் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள நிதின்பாய் படேல், புதிய முதல்வராக நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது முதல்வராக உள்ள ஆனந்திபென் படேல், குஜராத் அல்லது பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ...

உடைந்த டியூப் லைட்டால் அறுத்துகொண்டு சீர்திருத்தப் பள்ளி சிறுவர்கள் 3 பேர் தற்கொலை முயற்சி

Posted: 16 May 2016 07:01 PM PDT

உடைந்த டியூப் லைட்டால் உடலை அறுத்துக் கொண்டு சென்னை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கீழ்ப்பாக்கம் கெல்லீஸில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள 3 மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களது அறையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் லைட்டால் கையையும், தொடைப் பகுதியையும் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சீர்திருத்தப்பள்ளி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™