Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் ! ஆர்வமாக திரண்டு வந்த மக்கள் யாருக்கு வாய்ப்பு என கட்சிகள் பீதி

Posted: 16 May 2016 09:58 AM PDT

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர்.

இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி அடைந்துள்ளன.தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகாரால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மீதமுள்ள 232 சட்டசபை ...

முதன்முறையாக மின்சாரம் மோடியால் உருமாறிய கிராமம்

Posted: 16 May 2016 10:00 AM PDT

ஆக்ரா,: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான அனந்த்பூரில், பிரதமரின் மின்னொளி திட்டத்தின் மூலம், முதன்முறையாக மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆயிரக்கணக்கான கிராமங்கள் இன்னமும் உள்ளன; குறிப்பாக, மின்சார வசதி இல்லாமல், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வாறு மின்சாரத்தை பார்த்து அறியாத, கிராமங்களில், உத்தர பிரதேச மாநிலம், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள ...

ஒட்டளித்த தலைவர்கள் என்ன சொல்றாங்க...!

Posted: 16 May 2016 10:02 AM PDT

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த தலைவர்கள் கருத்து வருமாறு:

2 நாளில் மக்கள் தீர்ப்பு தெரியும்
* முதல்வர் ஜெயலலிதா, தன் வீட்டுக்கு அருகே உள்ள, செயின்ட் மேரீஸ் கல்லுாரி ஓட்டுச்சாவடியில், காலை, 9:50 முதல், 10:00 மணிக்குள் ஓட்டளித்தார். அவரும், அவருடன் வந்திருந்த தோழி சசிகலாவும் பச்சை நிற புடவை அணிந்திருந்தனர்.ஓட்டளித்து விட்டு வெளியே வந்த போது, நிருபர்கள் சூழ்ந்தனர். அவர்களின் கேள்விக்கு ஜெ., ''இவ்வளவு நாள் பொறுத்து விட்டீர்கள்; இன்னும், இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்; மக்கள் ...

கேரள சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு. விறுவிறுப்பு டூஅசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக முடிந்தது

Posted: 16 May 2016 10:04 AM PDT

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தல், பெரிய வன்முறை சம்பவங்கள் இன்றி, அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம், 75 சதவீத ஓட்டுகள்பதிவாகியுள்ளன. காங்., மற்றும் இடதுசாரி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கேரள சட்டசபை தேர்தல், நேற்று நடந்தது. இதில், முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், இடது சாரி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. சட்டசபைக்குள் நுழைந்தே தீருவது என்ற முனைப்புடன், பா.ஜ., மூன்றாவது அணியாக களமிறங்கியது. இந்த தேர்தலில், பா.ஜ., பிரிக்கும் ஓட்டுகள், மற்ற இரு அணிகளின் வெற்றியை பாதிக்கும். இதனால், பா.ஜ.,வும் ...

சென்னையில் மின் தடை திட்டமிட்ட சதியா?பலன் தராத முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Posted: 16 May 2016 10:08 AM PDT

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட பல இடங்களில், மின் தடை ஏற்பட்டது, திட்டமிட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், தமிழ்நாடு மின் வாரியத்தின் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள, 230 கிலோவோல்ட் திறன் உடைய, துணைமின் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.அங்கிருந்து, மயிலாப்பூர், 230; சென்னை உயர் நீதிமன்றம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, 110 கிலோவோல்ட் துணைமின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றில் இருந்து, ...

ரூ.570 கோடி விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்காது

Posted: 16 May 2016 10:30 AM PDT

புதுடில்லி,: தமிழகத்தில், திருப்பூர் நகரில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம், 570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுமாறு, விடுக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நடந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன், திருப்பூரில், மூன்றுகன்டெய்னர்களில் ஏற்றிச் செல்லப்பட்ட, 570 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இப்பணத்துக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உரிமை கோரியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ...

எடுபடவில்லை! தேர்தல் கமிஷனின் முயற்சி...உயரவில்லை ஓட்டு சதவீதம்

Posted: 16 May 2016 10:33 AM PDT

தேர்தல் கமிஷன், இரண்டு மாதங்களாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தும், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், எந்த பெரிய அசம்பாவிதங்களும் இல்லாமல், சுமுகமாகவே ஓட்டுப்பதிவு நடந்தது.

சட்டசபை, லோக்சபா என எந்த தேர்தல்களாக இருந்தாலும், தமிழகத்திலேயே ஓட்டுப்பதிவு சதவீதத்தில் கடைசி இடத்தை பிடிப்பது தலைநகர், சென்னை தான். இந்நிலையை மாற்ற, தேர்தல் கமிஷன் ஒவ்வொரு தேர்தலிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இம்முறை தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டுப்பதிவுக்கும், 78 நாட்கள் அவகாசம் இருந்ததால், ...

தஞ்சையில் ரூ.6 கோடி பட்டுவாடா அம்பலம்

Posted: 16 May 2016 10:42 AM PDT

தஞ்சாவூர்,: தஞ்சை தொகுதியில், ரூ.6 கோடி வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தஞ்சை தொகுதியில், பண வினியோகம் தாராளமாக நடப்பதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. ஒரே நாளில் அதிகபட்சமாக, 185 புகார்கள் வந்தன.கடந்த, 13ம் தேதி தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க., கிளை செயலர் பாஸ்கரனுக்கு சொந்தமான முத்து லாட்ஜில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சரவணன், மனோகர் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது ...

தேர்தல் தள்ளிவைப்பு பலன் தருமா?

Posted: 16 May 2016 11:02 AM PDT

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, மே, 23க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை, பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, அரசியல் கட்சிகள், மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தன. அதற்கெல்லாம் உச்சமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, குற்றச்சாட்டுக்களை உறுதி செய்யும் வகையில் ...

வேண்டாம் பாட்டில் தண்ணீர்: மத்திய அரசு வேண்டுகோள்

Posted: 16 May 2016 11:53 AM PDT

புதுடில்லி: 'பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை தண்ணீர் வீணாகிறது; அதை தவிர்க்க வேண்டும்' என, மத்திய அரசு துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கடுமையான கோடை காரணமாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீரை சேமிப்பது பற்றியும், வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றியும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
மத்திய அரசின் சார்பிலான துறை சார்ந்த கூட்டங்கள், அமைச்சக அதிகாரிகள் கூட்டங்களில், தண்ணீரை சிக்கனமாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™