Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கதைப்பாடல்: காலைப் பொழுது!

Posted: 16 May 2016 12:57 PM PDT

- – காலைக் கதிரவன் முகம்பார்க்க தாமரைப் பூக்கள் காத்திருக்கும்! சோலைப் பூக்களில் வந்தமர்ந்து சுகமாய் வண்டுகள் தேன்குடிக்கும்! – சாலை யோர மரங்களிலே சேர்ந்திடும் பறவைக் கூட்டங்கள் ஆலோலம் இசைப்பதைக் கேட்பதற்கு ஆயிரம் காதுகள் போதாது! – கடலின் அலைகள் தாலாட்டும் களிப்புடன் நண்டுகள் விளையாடும்! படகுகள் எல்லாம் மீன்பிடிக்க படை வீரர்கள்போல அணிவகுக்கும்! – பாலைக் குடிக்கக் கன்றுகளைப் பாசமாய் அழைத்திடும் தாய்ப்பசுக்கள்! வாலை ஆட்டியே கன்றுகளும் வந்திடும் துள்ளிக் குதித்தோடி! – தயிரைக் ...

கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?

Posted: 16 May 2016 12:57 PM PDT

- அரண்மனை தன்னில் நாள்தோறும் அயரா திருந்து பணிசெய்யும் பணிப்பெண் ஒருநாள் அரசனது படுக்கையில் படுத்தாள் சோர்வாலே! – கண்கள் இருண்டு வந்ததனால் கட்டிலில் அவளும் சாய்ந்து விட்டாள்! எண்ணவும் அவளுக்கு நேரமில்லை ஏழைப்பெண் அவள் தெம்பில்லை! – பூங்கா உலவல் முடிந்தவுடன் புவியை ஆள்பவன் அங்கு வந்தான்! கண்டான் அந்தக் காட்சியினை காட்டுக்கோபம்' அவன் கொண்டான்! – இவளுக்கு எத்தனை திமிர் இருந்தால் இந்தப் படுக்கையில் படுத்திருப்பாள்? எதிரே இருக்கும் தூணினிலே இவளைக் கயிற்றால் கட்டுங்கள்!' – கயிற்றால் ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .......... நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் !

Posted: 16 May 2016 12:50 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

சிறுகதை : பிடிவாதம் !

Posted: 16 May 2016 12:25 PM PDT

பொங்கி வந்த பாலை அணைத்து, அளவான சர்க்கரை டிக்காஷனுடன் சேர்த்து, கிளம்பிய மணத்தை நாசிக்குள் இழுத்தவாறே கோப்பையுடன் டிவி முன் அமர்ந்தான் ரகு. இன்று காலை பத்து மணிக்கு ஞாயிறு மகளிர்மலர் நிகழ்ச்சியில் இளம் மருத்துவர் சக்தி ரகுநாதன் நம்முடன் கலந்துரையாடுகிறார். காணத் தவறாதீர்கள். உறிஞ்சத் தொடங்குகையில் தேவாமிர்தமாய் இருந்த காஃபி ஒரே கணத்தில் வெறுத்தது. கடனே என குடித்து முடித்தான் மிச்சத்தை. ஆனால் மீத வாழ்க்கையை அப்படி சலிப்புடன் கழிக்கத் தான் தயாராக இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான். இந்த ...

மிதிவண்டி

Posted: 16 May 2016 11:55 AM PDT

மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன. இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான். நாளைக்கு முதன்முதலாய் சைக்கிளில் பள்ளிக்கு போகப் போகின்ற ...

வரலாற்றில் இன்று - பாகம் 2 - முடிவுற்றது.

Posted: 16 May 2016 11:08 AM PDT

வரலாற்றில் இன்று   [size=13]பாகம் இரண்டு [/size] நம் ஈகரையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த 'வரலாற்றில் இன்று' இரண்டாம் பாகம் நாளையுடன் வெற்றிகரமாக நிறைவடைகிறது. இத்தொடரின் வெற்றிக்கு காரணமாய் இருந்த நமது அனைத்து உறவுகளுக்கும், நிர்வாக குழுவினருக்கும், தலைமை வழிநடத்துனர்களுக்கும், நிறுவனருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். விரைவிலேயே இதன் தொகுப்பு மின்னூலாக வெளி வரும். இனி, நாளையிலிருந்து 'வரலாற்றில் இன்று' வேறு வடிவத்தில் தொடரும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - ...

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Posted: 16 May 2016 11:06 AM PDT

வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் ! அன்புடன், கிருஷ்ணாம்மா தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் ! தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் ...

முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Posted: 16 May 2016 10:33 AM PDT

புதுடெல்லி, - - காந்தியடிகளின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தியின், 3 மகன்களில் மூத்த மகன் கனுபாய் காந்தி. 87 வயதாகும் இவர், தற்போது தனது மனைவி ஷிவ லக்ஷ்மி காந்தியுடன், டெல்லியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ளார். - 17 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்ற கனுபாய் காந்தி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் நாசாவில் பணியாற்றிய இவர், அமெரிக்காவில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பினார். - சொந்த வீடு இல்லாததால், கன்பாய் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)

Posted: 16 May 2016 10:29 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நாளை கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - கனமழைக்கு வாய்ப்பு!

Posted: 16 May 2016 10:22 AM PDT

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (17-ம் தேதி) கரையை கடக்க இருப்பதாகவும், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி பாம்பன் - நாகப்பட்டினம் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும். அப்போது 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல ...

நமக்கு வேணா தனியா காய்ச்சிக்கலாம்..!

Posted: 16 May 2016 10:21 AM PDT

தலைவரே! கடைசியிலே நீங்க கூட மது விலக்கை அமல்படுத்தறதா சொல்லிட்டீங்களே..? - கவலைப்படாதேய்யா, நமக்கு வேணா தனியா காய்ச்சிக்கலாம்..! - ------------------------------ - அந்த வேட்பாளரைப் பார்த்தா ஆப்ரிக்காவுல இருந்து வந்தவர் மாதிரி தெரியுதே...! - நம்ம ஊர்க்காரர்தான், கொளுத்தற வெயிலில் பிரச்சாரம் பண்ணி இப்படியாயிட்டாரு..! - --------------------------------- - அந்த பத்திரிகையில அரசியல் அடி'னு ஒரு பகுதி வருதாமே..? - ஆமாம்...அந்தக் கட்சித்தலைவர்கிட்டே தினமும் அடி வாங்கினவங்களைப்பத்தி ...

அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!

Posted: 16 May 2016 09:48 AM PDT

- நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்: வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே. - நம்பிக்கையின் மீது மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு. - நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். - ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் ...

காற்று தூரிகை பிடித்து எழுதிய கவிதையோ?

Posted: 16 May 2016 09:12 AM PDT

காற்று தூரிகை பிடித்து எழுதிய கவிதையோ?

நான் ஒரு மரத்தைப் படம் எடுத்தேன்; அப்போது வீசிய காற்று ஒரு புதிய சித்திரத்தைத் தந்துள்ளது !

சுவாமி விவேகானந்தர்

Posted: 16 May 2016 06:49 AM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

இன்று "உலக கணக்கு தினம்"...

Posted: 16 May 2016 06:45 AM PDT

இன்று "உலக கணக்கு தினம்" அன்றாட வாழ்வில் அவசியம் பயன்படுவது கணக்கு, அதை சார்ந்துதான் அனைத்துமே உள்ளன!! - Today is National Mathematics Day (Birth Day of Ramanujam), See this Absolutely amazing Mathematics ! 1 x 8 + 1 = 9 12 x 8 + 2 = 98 123 x 8 + 3 = 987 1234 x 8 + 4 = 9876 12345 x 8 + 5 = 98765 123456 x 8 + 6 = 987654 1234567 x 8 + 7 = 9876543 12345678 x 8 + 8 = 98765432 123456789 x 8 + 9 = 987654321 1 x 9 + 2 = 11 12 x 9 + 3 = 111 123 x 9 + 4 = 1111 1234 x 9 + 5 = ...

முகங்களும் பாவனைகளும்

Posted: 16 May 2016 05:05 AM PDT



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

கைம்மண் அளவு - நாஞ்சில் நாடன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 16 May 2016 04:30 AM PDT

நாஞ்சில் நாடன் - கைம்மண் அளவு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7hs38mvng1nlmr5/AA2988.pdf

இளைய ராணி - சாண்டில்யன் (தெளிவான pdf)

Posted: 16 May 2016 03:40 AM PDT

இளைய ராணி மின்னூலை தரவிறக்கம் செய்ய

https://db.tt/xoTjHmdX

வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 16 May 2016 02:11 AM PDT

டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் - வானில் விரியும் சிறகுகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நூலை பற்றி , நாம் அறிந்திராத ஆபுர்வ பறவைகளின் அற்புத வாழ்க்கை ரகசியங்கள் அறிவிப்பு : இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் , நண்பர்கள் அனைவரும் இத்தனை நாள் எனக்கு கொடுத்த ஆதரவை போல இனி வரும் காலத்திலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் . பதிப்பக துறை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் கொடுக்கபடுகிறது ...

அரிய புத்தங்கள்

Posted: 16 May 2016 01:41 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

நாளை பத்மாவதி திருக்கல்யாண உற்சவம்

Posted: 15 May 2016 10:20 PM PDT

திருமலை திருப்பதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை வெகுவிமரிசையாக நடக்கவுள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாராயணகிரியில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகின்றன. இதைக் காண திரளான பக்தர்கள் ...

இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Posted: 15 May 2016 09:46 PM PDT

தமிழகத்தில் அரவக்குறிச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் இன்று நடக்கவிருந்த தேர்தல் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கடந்த சனிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. - இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, மே 23-ஆம் தேதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ...

தேர்தல் நாள்: லட்சுமி பாலா

Posted: 15 May 2016 09:38 PM PDT

- தங்கத்தின் தரம் உரைகல்லில் தெரியும். மக்களின் தரம் வாக்குச்சீட்டில் தெரியும். – மாண்புமிக்க மந்திரிகளுக்கு எழுதாமலே ஓரு தேர்வு. முதலமைச்சரை தேர்ந்தெடுக்க மக்கள் எழுதும் தேர்வு. – கனவானும் குடிசை வாசியும் சரிசமமாய் நிற்கும் நாள். முற்பகல் வினைகளிள் விடைகள் எழுதப்படும் நாள். – ஐந்து வருடத்திற்கு மக்களின் விதியை தீர்மானிக்கும் நாள். நாமே நம் விதியை எழுதும் நாள் – .ஒரு தடவை எழுதியதை திருத்தி எழுத வாய்ப்பு இல்லை. தெளிவாய் சிந்தித்தபின் முத்திரையை வைக்க வேண்டும் – ———————— -கவிதைமணி

தேர்தல் நாள்: வ. மாரிசுப்பிரமணியன்

Posted: 15 May 2016 09:37 PM PDT

- - – தேர்தல் நாள் அறிவிப்பு வந்ததும் நம்மைத் தேடி வராதவர் பலர் வருவர் நரம்பில்லா நாக்கினால் வரம்பில்லா வாக்கினைத் தேர்தல் நாளில் தொடுப்பர். தனது செல்வாக்கினைப் பெருக்கிட, தனது, சொல்வாக்கினை, நம் மனம் உருகிட, தேர்தல் நாளில் அள்ளி வைத்து, வாக்கினைப் பெற்றபின், நம்மைத் தள்ளிவைப்பர்… தேர்தல் நாள், நம்மைநாமே, சரிப்பார்க்கின்ற நாள் தேர்தல் நாள், நல்லவர்களை அடையாளம்கண்டு, தேர்ந்தெடுக்கின்ற நாள்… தேர்தல் நாள்: சிந்திக்கின்ற நாள். மக்களை, மக்கள்படும்பாட்டை, மறந்தோரெல்லாம், ...

பாராட்டு விழா..!

Posted: 15 May 2016 09:35 PM PDT

எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் - சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் - அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை - பிறர் பெயரில் நாமேகூட ...

எதிலும் நம்பிக்கையோடு இரு..!

Posted: 15 May 2016 09:34 PM PDT

- - படிப்பில் நம்பிக்கையை இழந்தால் பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும் காதலில் நம்பிக்கையை இழந்தால் கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும் நட்பில் நம்பிக்கை இழந்தால் பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும் கடமையில் நம்பிக்கை இழந்தால் கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும் கட்டுப்பாடுகளில் நம்பிக்கை இழந்தால் கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும் நிகழ்காலத்தில் நம்பிக்கை இழந்தால் எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும் எதிலும் நம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் எல்லாமே சிறக்கும். – படித்ததில் ...

உலகம் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்(வீடியோ)

Posted: 15 May 2016 09:28 PM PDT

மனிதர்கள் வாழும் பகுதியான பூமி 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்ற வீடியோ காட்சி! எரி கற்கள் பெரிதாகி பிளவு ஏற்பட்டதில் ஒரு துகள் தான் பூமி! பூமியில் உள்ள தற்போது நிலப்பரப்பு ஆரம்பத்தில் கிடையாது. உலகம் வாழ்வதற்கான நிலையையும் தகுதியையும் பெற்ற நாள் முதல் தான் பூமியில் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது. பின்னர் அடி தட்டுகள் இடம் பெயர்ந்தது மூலம் கண்டங்கள் என்று நம்மால் அழைக்கப்படும் நிலப்பரப்பு உருவானது. வெப்துனியா

ஒவ்வொரு புல்லையும்….

Posted: 15 May 2016 07:20 PM PDT

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்… – நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்… – கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்… ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™