Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க., - தி.மு.க., போட்டிபோட்டு பணம் தந்ததால் வாக்காளர்கள்... உற்சாகம்:பெண்கள் மூலம் நூதன முறையில் வினியோகம் செய்த வேட்பாளர்கள்

Posted: 15 May 2016 10:55 AM PDT

கடைசி நேர கவனிப்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., போட்டிபோட்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்ததால், ஒட்டுமொத்த வாக்காளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதனால், இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு அமோகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தான், பெண்கள் மூலம் வீடு வீடாக பணம் வினியோகம் செய்யும் புதுமையை, வேட்பாளர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தது. 'ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது' என, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் செய்தது. 'பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுக்க ...

சரிந்து வரும் செல்வாக்கால் குஜராத் முதல்வருக்கு கல்தா?அடுத்த தேர்தலுக்கு தயாராகிறது பா.ஜ., மேலிடம்

Posted: 15 May 2016 09:16 AM PDT

புதுடில்லி:தன் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்து வருவதை தடுத்து, அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் படேலை நீக்க, ஆலோசனை நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநிலமான குஜராத்தில், தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவர். பல்வேறு எதிர்ப்புகள், குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், குஜராத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு மோடியின் பங்கு மிகப் பெரியது.
பிரதமராக பதவியேற்றதும், 2014ல் ஆனந்தி பென் படேலை, ...

ஏலம் போகாத மல்லையா விமானம்

Posted: 15 May 2016 09:22 AM PDT

மும்பை;தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, சொகுசு விமானத்தை ஏலம் எடுக்க, யாரும் வராததால், ஏலத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கியதுடன், இந்தியா அழைத்து வந்து விசாரிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிகபட்ச தொகை:மல்லையாவின், கடனை
வசூலிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வங்கிகள், மும்பையில் உள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை அலுவலகம், ...

'இந்தியா - இலங்கை நட்புறவு கொள்கையில் முக்கியத்துவம் இழந்த தமிழர் விவகாரம்'

Posted: 15 May 2016 09:23 AM PDT

புதுடில்லி;இந்தியாவிலும், இலங்கையிலும், 2014க்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகள் இடையில், நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, மூத்த பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர் மோகன் கே.டிக்கு என்பவர் எழுதிய, 'ஆப்டர் தி பால்: ஸ்ரீலங்கா இன் விக்டரி அண்டு வார்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1983ல், இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான கலவரங் கள் அதிகரித்தபோது, அப்போ தைய இந்திய அரசு தலையிட்டு, ...

ரூ.570 கோடி பணம் யாருடையது? சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி

Posted: 15 May 2016 12:00 PM PDT

சென்னை:'திருப்பூரில், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் பணத்துக்கு, 18 மணி நேரத்துக்கு பின், வங்கி அதிகாரிகள் உரிமை கோரியது ஏன்?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பிஉள்ளார்.

அவரது அறிக்கை:திருப்பூரில், 570 கோடி ரூபாயை, மூன்று கன்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை, எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா; 570 கோடி ரூபாய் பணத்தை எடுத்து சொல்ல, மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா; மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா?என்ன காரணம்?:ஒரு வங்கியில் ...

அ.தி.மு.க., 23; தி.மு.க., 21 பதவி ஏற்புக்கு தேதி குறிப்பு

Posted: 15 May 2016 01:38 PM PDT

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் வரும், 23ம் தேதியும், தி.மு.க., வெற்றி பெற்றால், 21ம் தேதியும், அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்று நடைபெறவுள்ளது. 19ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என, அ.தி.மு.க.,வும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, அக்கட்சியும் எதிர்பார்க்கின்றன. முதல்வர் பதவி ஏற்பு விழாநடைபெறுவது குறித்தும், இரு கட்சிகளின் வட்டாரத்திலும் ஆலோசனை நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், 23ம் தேதி, முதல் வர் பதவி பதவியேற்பை, சென்னை ...

தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு

Posted: 15 May 2016 12:29 PM PDT

திருச்சி:அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதால், ஆட்சி பறிபோகும் கடந்த கால, 'சென்டிமென்டை' நினைத்து, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, மது வினியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தேர்தலை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.கடந்த, 25 ஆண்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதெல்லாம் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி,
எதிர்க்கட்சியே ...

இலவச திட்டங்கள்: தி.மு.க., விளக்கம் என்ன?

Posted: 15 May 2016 12:48 PM PDT

'வேலைவாய்ப்பையும், வரி வருவாயையும் பெருக்கும் திட்டங்களுக்குத் தான், இலவசங்களை அறிவித்து உள்ளோம்' என, தேர்தல் கமிஷனுக்கு, தி.மு.க., விளக்கம் அளித்துள்ளது.

இன்று கேரள சட்டசபை தேர்தல் :காங்., - இடதுசாரி பலப்பரிட்சை

Posted: 15 May 2016 10:35 AM PDT

திருவனந்தபுரம்:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது.

இதில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமை யிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. சட்டசபைக்குள் நுழைந்தே தீருவது என்ற முனைப்புடன், பா.ஜ., மூன்றாவது அணியாக, களமிறங்கியுள்ளது.
உள்ளூர் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர்.காங்கிரஸ் அரசு மீதான ...

தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி

Posted: 15 May 2016 11:27 AM PDT

சென்னை: அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி, கேரள மாநிலங்களுடன், தமிழகத்திலும் இன்று (மே 16) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் மே-23க்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே-25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரினை ...

சோதனைக்காக தனிப்பாதை; ரயில்வே துறை திட்டம்

Posted: 15 May 2016 02:47 PM PDT

புதுடில்லி: பல்வேறு ரயில் இன்ஜின்கள், பெட்டிகளை சோதனை செய்து பார்ப்பதற்காக, 100 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் கூடிய தனி ரயில் பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்:
இது குறித்து ரயில்வே உயரதிகாரிகள் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய ரயில்வேக்களில், இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில், ரயில் திட்டங்கள் தொடர்பான சோதனை மேற்கொள்வதற்காக, தனி ரயில் பாதை உள்ளது.இந்தியாவில், தற்போது,ஏற்கனவே உள்ள ரயில் பாதையிலேயே இதுபோன்ற சோதனைகள் செய்யப்படுகின்றன. இதனால், அந்த ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™