Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!

Posted: 15 May 2016 12:08 PM PDT

தேர்தல் நேர அரசியல் பரபரப்புக்கு நடுவில், ஒரு முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மக்களின் பரவலான கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது. சுப்பிரமணியம் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரின் அவதூறு வழக்கின் மீதான குற்றவியல் (கிரிமினல்) தண்டனை அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டிருக்கிறது

குறைந்தபட்ச மக்களாட்சியில்...

Posted: 15 May 2016 12:08 PM PDT

உலகத்தில் மாற்றங்களுக்கான நிகழ்வுகள் பெரிதும் சிறிதுமாய் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் நடந்த மாற்றங்களுக்கான நிகழ்வுகளில் மிகவும் புரட்சிகரமாக பார்க்கப்படும்

யாருக்கு வாக்கு?

Posted: 15 May 2016 12:06 PM PDT

கடந்த இரண்டு மாத காலமாகத் தமிழ்நாட்டைச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்கு வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. இன்று தேர்தல்.

கேரளத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்:140 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

Posted: 15 May 2016 12:04 PM PDT

கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னிய முதலீட்டாளர்கள் மூலதன வரி செலுத்த வேண்டும்

Posted: 15 May 2016 12:04 PM PDT

""அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். மோரீஷஸ் தீவுகள் வழியாக இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு மூலதன வரி விதிக்கப்படுவதால், அன்னிய நேரடி முதலீடுகள் குறைவதற்கு வாய்ப்பில்லை'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

திமுகவில் இணைந்தார் வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர்

Posted: 15 May 2016 12:03 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் கா.காசிப்பாண்டியன், திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி விடுவிக்கப்படுவது எப்போது?

Posted: 15 May 2016 12:02 PM PDT

திருப்பூர் அருகே ஆந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அந்தப் பணத்தை விடுவிப்பதில்

உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மாலேகான் வழக்கு விசாரணை:காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 15 May 2016 12:00 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு குறித்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பி.இ. கலந்தாய்வு எப்போது? தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவு

Posted: 15 May 2016 12:00 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு காரணமாக பொறியியல் கலந்தாய்வை எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகே அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted: 15 May 2016 11:59 AM PDT

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை 6 நாள்கள் தாமதமாகும்:இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 15 May 2016 11:59 AM PDT

நிகழாண்டில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை 6 தினங்கள் தாமதமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அரசுக் கருவூலத்தை காலியாக விட்டுச் சென்ற காங்கிரஸ் அரசு:அமித் ஷா தாக்கு

Posted: 15 May 2016 11:56 AM PDT

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியாளர்கள், அரசுக் கருவூலத்தை காலியாக விட்டுச் சென்றனர் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

ரயில்வேயில் முதலீடுகள் அதிகரிப்பு

Posted: 15 May 2016 11:55 AM PDT

ரயில்வேதுறையின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன என்று அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார்.

மேற்கு வங்கம்: படகு விபத்தில் ஒருவர் பலி

Posted: 15 May 2016 11:55 AM PDT

மேற்கு வங்கத்தில் ஓடும் பாகீரதி நதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 12 பேர் மாயமாகி விட்டனர்.

அஸ்ஸாம்: பயிற்சியின்போது ராணுவ வீரர் சாவு: உயரதிகாரி மீது தாக்குதல்

Posted: 15 May 2016 11:54 AM PDT

அஸ்ஸாம் மாநில பாதுகாப்புப் படை முகாமினுள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு உயரதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சக வீரர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கைது:ஆதார் அட்டை பறிமுதல்

Posted: 15 May 2016 11:53 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா விவகாரம்:மேலும் சில வங்கிகளின் கடன் விவரங்களை கோருகிறது அமலாக்கத் துறை

Posted: 15 May 2016 11:53 AM PDT

வங்கிகளில் தாம் பெற்ற கடனைக் கொண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டரா என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளும் நோக்கில், அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான விவரங்களை மேலும் 6 வங்கிகளிடம் அமலாக்கத் துறை கோரியுள்ளது.

மாவோயிஸ்ட் அமைப்பு மீதான தடையை நீட்டித்தது சத்தீஸ்கர் அரசு

Posted: 15 May 2016 11:52 AM PDT

மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பின் மீதும் அதன் கீழ் செயல்படும் 6 துணை அமைப்புகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடையை சத்தீஸ்கர் மாநில அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

பஞ்சாப்: ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்

Posted: 15 May 2016 11:52 AM PDT

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முலாயம் சிங் யாதவுடன் யோகா குரு ராம்தேவ் சந்திப்பு

Posted: 15 May 2016 11:52 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை யோகா குரு ராம்தேவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

தெலங்கானா: சாலை விபத்தில் 15 பேர் பலி

Posted: 15 May 2016 11:51 AM PDT

தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட்: கொல்லப்பட்ட செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Posted: 15 May 2016 11:51 AM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ரகுவர் தாஸ் அறிவித்துள்ளார்.

எதிரிநாட்டின் ஏவுகணையை நடுவானில் தாக்கி அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை:இந்தியா வெற்றிகர சோதனை

Posted: 15 May 2016 11:50 AM PDT

எதிரி நாட்டின் ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சுஷ்மா

Posted: 15 May 2016 11:49 AM PDT

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

2 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்

Posted: 15 May 2016 11:49 AM PDT

தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் 18 பயங்கரவாதிகள் ஊடுருவல்:பாதுகாப்புப் படை தகவல்

Posted: 15 May 2016 11:48 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 18 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

காகிதத்தை தவிர்த்தால் விருது:அமைச்சகங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Posted: 15 May 2016 11:48 AM PDT

"காகிதங்களின் பயன்பாடு இல்லாத அலுவலகங்களை உருவாக்க வேண்டும்; அவ்வாறு இயங்கும் அமைச்சகங்களுக்கும், அரசின் மற்ற துறைகளுக்கும் பிரதமர் விருது வழங்கப்படும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய-சீன எல்லைப் பகுதியினருக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள்

Posted: 15 May 2016 11:48 AM PDT

இந்திய - சீன எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தினர் குறித்த தகவல்களைக் கேட்டு, அங்குள்ள கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3 கோடி டாலரை நிராகரித்த அமெரிக்க சிறுவன்!

Posted: 15 May 2016 11:46 AM PDT

மூன்று கோடி டாலர் (சுமார் ரூ. 200 கோடி) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

பயங்கரவாதிகள் தாக்குதல்:இராக்கில் 12 பேர் சாவு

Posted: 15 May 2016 11:45 AM PDT

இராக்கில் அரசுக்கு சொந்தமான எரிவாயு ஆலையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் பலத்த மழை:மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

Posted: 15 May 2016 11:45 AM PDT

வங்கதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்தது.

யேமனில் ஐ.எஸ். தாக்குதல்: 37 போலீஸார் பலி

Posted: 15 May 2016 11:44 AM PDT

யேமனில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 37 போலீஸார் உயிரிழந்தனர்.

பௌத்தத் துறவி கொலை:வங்கதேசத்தில் 3 பேர் கைது

Posted: 15 May 2016 11:44 AM PDT

வங்கதேசத்தில் பௌத்த மதத் துறவி கொலை வழக்கில் தொடர்புடைய மியான்மரைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வரப்பெற்றோம்

Posted: 15 May 2016 11:44 AM PDT

நூல் அரங்கம்

Posted: 15 May 2016 11:43 AM PDT

அறிவியல்பூர்வமான இந்து சமயம் - என்.பி.ஏ.ரவி; பக்.278; ரூ.240; சம்யுக்தா பதிப்பகம், 1/51, பெருமாள் கோவில் தெரு, ஸ்வர்ணபுரி,

இலக்கியச் சங்கமம்

Posted: 15 May 2016 11:42 AM PDT

❒ கவிதை உறவு 44 ஆம் ஆண்டு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: கோ.விஸ்வநாதன், நல்லிகுப்புசாமி செட்டி, நடிகர் ராஜேஷ், ஜெ.சதக்கத்துல்லா, மா.கவிதா, உலகநாயகி பழனி, இலக்கியவீதி இனியவன், மாம்பலம் ஆ.சந்திரசேகர்,

விரைவில் ஏவப்படுகிறதுஇந்தியாவின் முதல் விண்வெளி ஓடம்:சாதனை படைக்கிறது இஸ்ரோ

Posted: 15 May 2016 11:41 AM PDT

இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக விண்வெளி ஓடத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது.

பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம்:அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

Posted: 15 May 2016 11:40 AM PDT

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படவுள்ள தேசிய தகுதிகாண் தேர்வை (பொது நுழைவுத் தேர்வு) ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

பகுதி - 242

Posted: 15 May 2016 11:30 AM PDT

இது சிதம்பரத் திருத்தலத்துக்கான திருப்புகழ்.  'உன்னுடைய தரிசனத்தைத் தந்தருள வேண்டும்' என்று வேண்டுகிறார்.  'அப்பா, அப்பா என்று நான் கதறுவது உன் காதில்

தேர்தல் நாள்: லட்சுமிபாலா

Posted: 15 May 2016 11:30 AM PDT

24. கருநட்ட கண்டனை - பாடல் 10

Posted: 15 May 2016 11:30 AM PDT

சிவபிரானின் நடனத்து அழகினை விவரிக்கும் இந்த பதிகத்தின் கடைசிப் பாடலில் நம்மை ஆட்கொண்ட பாதம் என்று சிவபிரானது

தேர்தல் நாள்:  வ. மாரிசுப்பிரமணியன் 

Posted: 15 May 2016 11:30 AM PDT

நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 33

Posted: 15 May 2016 11:30 AM PDT

அருள்நிறைந்த திருச்சக்கரத்தாலே இந்த அகன்ற வானிலும் நிலத்திலும் இருள் போன்ற வினைகள் கெடும்படி செங்கோல் நடத்துகிறவரே, ஆதிசேஷனாகிய பாம்பிலே

16.05.1983 - கூவம் ஆற்றில் புதையலைப் போல திருட்டு சைக்கிள் பாகங்கள்

Posted: 15 May 2016 11:30 AM PDT

சென்னை எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் புதையல் எடுப்பது போல சைக்கிள் பாகங்களை போலீசார் எடுத்து வருகின்றனர்.

9. எவ்வளவு கொழுப்பு? - 3

Posted: 15 May 2016 11:30 AM PDT

மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, நோயாளிகளில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்ட ஆரம்பித்தது! அதுமட்டுமல்ல. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய், பெண்களைப்போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்தன! ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தத்துவத்தை அம்மாத்திரைகள் நிரூபித்தன!

தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு

Posted: 15 May 2016 10:51 AM PDT

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு நாளை மே16 நடக்கவிருந்த வாக்குப்பதிவை மே 23 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது ஹைதராபாத்; பஞ்சாப் வெளியேற்றம்

Posted: 15 May 2016 09:25 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

என் அழகு மகளே வருக! - சுரேஷ் ரெய்னா

Posted: 15 May 2016 08:41 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவின் மனைவி பிரியங்காவுக்கு நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில், அந்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு குழந்தை பிறந்தது.

தமிழகத்தில் நாளை பலத்த, மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted: 15 May 2016 08:30 AM PDT

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வாக்களித்துவிட்டு டுவிட் செய்தால் அஸ்வின், தினேஷ் கார்த்திக் 'ஆட்டோகிராப்'

Posted: 15 May 2016 08:04 AM PDT

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு செய்துவிட்டு அதுகுறித்து டுவிட் செய்தால், கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் கையெழுத்திட்ட படம் அனுப்பிவைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: தமிழிசை

Posted: 15 May 2016 07:16 AM PDT

தமிழக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்காமல் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

அரவக்குறிச்சிக்கு மே 18-ல் தேர்தல் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

Posted: 15 May 2016 06:39 AM PDT

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலை மே 18-ம் தேதி நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்: ஜெயலலிதா

Posted: 15 May 2016 06:29 AM PDT

தமிழக மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ரூ. 570 கோடி பணம்: பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வருமான வரித் துறை கோரிக்கை

Posted: 15 May 2016 06:15 AM PDT

திருப்பூரில் நேற்று பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என வருமான வரித் துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சர்வதேச கால்ந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவில் நீதிபதி முகுல் முத்கல்

Posted: 15 May 2016 06:05 AM PDT

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

போடி மலை கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்கு பதிவு இயந்திரங்கள்

Posted: 15 May 2016 05:28 AM PDT

போடி அருகே மலை கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு பதவியை கொடுத்து விடலாம்: அன்புமணி ஆதங்கம்

Posted: 15 May 2016 05:15 AM PDT

தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக, திமுகவினர் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 234 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

வாக்களிக்க வர இயலவில்லை: மன்னிப்புக் கோரிய நடிகர் சூர்யா

Posted: 15 May 2016 04:19 AM PDT

அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நடிகர் சூர்யா, தன்னால் வாக்களிக்க வர இயலவில்லை என்றும், அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

ஆந்திரத்தில் கட்டுமானப் பணியின்போது மண் சரிவு: 7 பேர் பலி

Posted: 15 May 2016 03:53 AM PDT

ஆந்திர மாநிலம், லட்சுமிபுரத்தில் வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ரூ. 570 கோடிக்கு 18 மணி நேரத்துக்குப் பின் அதிகாரிகள் உரிமை கோரியது ஏன்? கருணாநிதி கேள்வி

Posted: 15 May 2016 03:07 AM PDT

திருப்பூரில் நேற்று 3 கன்டெய்னர் லாரிகளில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்துக்கு 18 மணி நேரத்துக்குப் பின் வங்கி அதிகாரிகள் உரிமை கோரியது ஏன் என கருணாநிதி கேள்வி..

நெல்லை அருகே தனியார் பேருந்து-கண்டெய்னர் மோதல்: 16 பேர் காயம்

Posted: 15 May 2016 02:48 AM PDT

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து மீது கண்டெய்னர் மோதியதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அரவக்குறிச்சி தேர்தலை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக நடத்த சிபிஐ கோரிக்கை

Posted: 15 May 2016 02:35 AM PDT

தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தேர்தலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 19 ஆம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பண விநியோகத்தை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் மூடல்: ராமதாஸ் கண்டனம்

Posted: 15 May 2016 01:59 AM PDT

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், பண விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புணேக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி கொல்கத்தா வெற்றி

Posted: 15 May 2016 01:47 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45 ஆவது லீக் ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

புதுவையில் மதுபானக்கடைகள் நேரத்தை குறைக்க வலியுறுத்தல்

Posted: 15 May 2016 01:26 AM PDT

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

கட்சி விரோத செயல்பாடு: விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்

Posted: 15 May 2016 01:25 AM PDT

புதுச்சேரியில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

காதோடுதான் - தேர்தல் கிசு கிசு: அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு?

Posted: 15 May 2016 12:38 AM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார்.

பண மழை: 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 15 May 2016 12:24 AM PDT

தமிழகத்தில் பண வினியோகம் நடைபெற்ற 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்க வேண்டும்.

பாமக வேட்பாளர் பாலு மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

Posted: 15 May 2016 12:17 AM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாமக வேட்பாளர் பாலு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் அளித்திருந்தார். 

ஓட்டுப்போடாமல் விடுவது சந்ததிப்பிழையாகி விடும் :நடிகர் பார்த்திபன்

Posted: 14 May 2016 11:19 PM PDT

தேர்தல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பித்து இருக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்பது எனது விருப்பம் என்று நடிகர் பார்த்திபன் கூறினார். மேலும் இதுகுறித்து  அவர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்

Posted: 14 May 2016 10:49 PM PDT

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.

தெலுங்கான மாநிலம் அடிலாபாத்தில் சாலை விபத்து: 15 பேர் பலி

Posted: 14 May 2016 10:37 PM PDT

தெலுங்கான மாநிலம் அடிலாபாத் மாவட்டம் அருகே ஆட்டோ ரிக்ஷா மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்.

நோடாவுக்கு ஓட்டு போட்டா என்ன நடக்கும் உங்களுக்கு: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

Posted: 14 May 2016 10:24 PM PDT

அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம்: ஹச்.ராஜா

Posted: 14 May 2016 10:12 PM PDT

அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹச்.ராஜா கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்த அனல் மின் நிலைய ஊழியர் கைது

Posted: 14 May 2016 10:06 PM PDT

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்த அனல் மின் நிலைய ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆச்சரியம் ஆனால் உண்மை: எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு

Posted: 14 May 2016 09:47 PM PDT

காரைக்காலில் 1 லட்சம் வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு

Posted: 14 May 2016 09:42 PM PDT

காரைக்காலில் 1 லட்சம் வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் வாக்குப் பதிவு விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்ப ஸ்வீப் அமைப்பு ஏற்பாடுகளை  செய்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமிராக்கள்

Posted: 14 May 2016 09:39 PM PDT

நாகை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணைய வழி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.

சி.சு. செல்லப்பா - பகுதி 9

Posted: 14 May 2016 09:30 PM PDT

1978 - 1990 ஆகிய பன்னிரண்டு ஆண்டுகளில் நான் தில்லியில் இருந்த காலத்தில் நா.பார்த்தசாரதி தில்லி வரும்போது சந்தித்திருக்கிறேன். அவர் எழுத்தைப் படித்ததில்லை.

பணத்தைக் கண்டு மக்கள் மயங்கக் கூடாது: அன்புமணி

Posted: 14 May 2016 09:27 PM PDT

அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தைக் கண்டு மக்கள் மயங்க வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வாக்களிக்க ஆதார் அட்டையை ஆவணமான பயன்படுத்தக்கூடாது

Posted: 14 May 2016 09:25 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடக்க உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உணவு இடைவேளையின்றி மாலை 6 மணி வரை, அதாவது 11 மணி நேரம் தங்குதடையின்றி வாக்குப்பதிவு நடத்த

தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள்: போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு

Posted: 14 May 2016 09:09 PM PDT

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்ததால் சென்னை கோயம்பேட்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தேர்தல் நாளில் படப்பிடிப்புகள் ரத்து

Posted: 14 May 2016 09:05 PM PDT

தேர்தலையொட்டி தமிழ்ப் படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகளில் இரு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

வாக்குப்பதிவு: பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு திரைக் காட்சிகள் ரத்து

Posted: 14 May 2016 09:03 PM PDT

வாக்குப்பதிவு நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ஜவஹர் தெரிவித்தார்.

பணம் பட்டுவாடா: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

Posted: 14 May 2016 09:00 PM PDT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரதான கட்சிகள் கொடுக்க முன்வந்த பல கோடிகளை மறுத்தவர் விஜயகாந்த்: சங்கரய்யா புகழாரம்

Posted: 14 May 2016 08:52 PM PDT

தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முகமாக, அ.தி.மு.க, தி.மு.க, பி.ஜே.பி உள்ளிட்ட பிரதான கட்சிகள் கொட்டிக் கொடுக்க முன் வந்த பல கோடிகளை மறுத்தவர் விஜயகாந்த் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

திருவாரூரில்  பணம் பட்டுவாடா: பாமக வேட்பாளர் பாலு தேர்தல் நடத்தும் அலுவலருடன் வாக்குவாதம்

Posted: 14 May 2016 08:29 PM PDT

திருவாரூரில்  மாற்று கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறி பொது மக்களுடன் வந்த பாமக வேட்பாளர் பாலு தேர்தல் நடத்தும் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஓட்டுக்குப் பணம்:  செய்வதறியாமல் திணறும் தேர்தல் ஆணையம்? மக்களின் கடைசிகட்ட மனநிலை?

Posted: 14 May 2016 08:21 PM PDT

ஊழலை எதிர்க்க வேண்டிய மக்களையே ஊழல்வாதிகளாக்குவது. இது தான் அரசியல்கட்சிகளின் அதிரடித் திட்டம்.

நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பாதுகாப்பு பணியில் 1.32 லட்சம் போலீஸார்

Posted: 14 May 2016 08:16 PM PDT

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,223 வாக்குச் சாவடிகள் தயார்

Posted: 14 May 2016 06:27 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், திங்கள் கிழமை தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் தயாராகி வருகிறது.

அரசியில் கட்சிகள், வேட்பாளர்கள் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெற்ற வேண்டும்

Posted: 14 May 2016 06:26 PM PDT

நாளிதழ்களில் ஞாயிறும மற்றும் திங்கள்கிழமை விளம்பரம் செய்ய வேட்பாளர்கள், அரசியில் கட்சியினர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் எம்.லட்சுமி தெரிவித்துள்ளார்.

பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு

Posted: 14 May 2016 06:26 PM PDT

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகன விபத்தில் விவசாயி சாவு

Posted: 14 May 2016 06:26 PM PDT

விக்கிரவாண்டி அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் விசவாயி உயிரிழந்தார்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீஸார்

Posted: 14 May 2016 06:25 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுபாப்புப் பணியில் போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஊர்காவல் படையினர் உள்பட 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட உள்ளனர்.

வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கினர்

Posted: 14 May 2016 06:25 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களைப் பிடித்து பறக்கும் படையினர் போலீஸில் ஒப்படைத்தனர்.

விஐபி தொகுதிகளில் பணமழை ?

Posted: 14 May 2016 06:24 PM PDT

தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி விஐபி தொகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர்களின் கடைசிகட்ட பிரசாரத்தால் திணறிய கடலூர்

Posted: 14 May 2016 06:08 PM PDT

வேட்பாளர்களின் கடைசிக்கட்ட பிரசாரத்தால் கடலூர் நகரம் சனிக்கிழமை மாலையில் திணறியது.

நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதி: சீமான்

Posted: 14 May 2016 06:08 PM PDT

நாம் தமிழர் கட்சியின் உறுதி தமிழகமெங்கும் உறுதியாகி விட்டதாக சீமான் பேசினார்.

பூத்சிலிப் வழங்கும் பணி மந்தம்: 100 சதவீத வாக்குப்பதிவு எட்டப்படுமா?

Posted: 14 May 2016 06:07 PM PDT

பூத் சிலிப் வழங்கும் பணி மந்தமாக இருப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவினை எட்ட முடியுமா என்ற நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™