Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மருத்துவ நுழைவு தேர்வால் இன்ஜி., கவுன்சிலிங் தாமதம்? பிளஸ் 2 ரிசல்ட்டுக்கு பின் மாணவர்களுக்கு சிக்கல்

Posted: 14 May 2016 07:31 AM PDT

மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு கட்டாயம் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இரண்டாம் கட்டமாக, ஜூலை, 24ல் தேர்வை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து, தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மருத்துவக் கவுன்சிலிங் தேதியையும் ...

ஐந்தாண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா அதிரடி தேசிய வளர்ச்சி செயல் திட்டத்தை அமல்படுத்த முடிவு

Posted: 14 May 2016 07:55 AM PDT

புதுடில்லி:சுதந்திரம் பெற்றது முதல், இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும், ஐந்தாண்டு திட்டங்களுக்கு,'மூடுவிழா' நடத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக, பல்வேறு துறைகளின் வேகமான வளர்ச்சியை முன்னிறுத்திய, நீண்டகால, 'தேசிய வளர்ச்சி செயல் திட்டம்' செயல்படுத்தப்பட வுள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, பல்வேறு துறைகளிலும், நீண்டகால வளர்ச்சியை இலக்காக கொண்டு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால், ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப் பட்டது. நிதி ஒதுக்கீடுவிவசாயம், தொழில், வர்த்தகம், கல்வி, கிராமப்புற மேம் பாடு என, பல துறைகளில், ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ...

இந்திய எல்லையோரத்தில் சீன படைகள்.. குவிப்பு ! அமெரிக்கா எச்சரிக்கையால் பரபரப்பு

Posted: 14 May 2016 08:39 AM PDT

வாஷிங்டன்:இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் படைகளை குவித்து வருவதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள் ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் சீன படைகள் குவிக்கப்படுகின்ற னவா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அண்டை நாடுகளான இந்தியாவும், சீனாவும், 4,000 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே, எல்லை பகுதியில் தகராறும் உள்ளது. இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்திற்கு, சீனா உரிமை கொண்டாடுவதுடன், அந்த பகுதிக்குள் தங்கள் ராணுவத்தை ஊடுருவ வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு ...

எல்லாருக்கும் நன்மை செய்வதே இந்திய கலாசார கோட்பாடு: மோடி

Posted: 14 May 2016 08:54 AM PDT

உஜ்ஜைன்: ம.பி.,யில், நேற்று நடந்த கும்பமேளாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, ''எல்லாருக்கும் நன்மை என்ற கோட்பாடு, இந்திய கலாசாரத்தில் வேரூன்றி உள்ளது,'' என்றார்.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், உஜ்ஜைன் நகரில், சிப்ரா நதிக்கரையில், சிம்மஹஸ்த கும்பமேளா, ஏப்., 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியின் போது, லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பமேளா வை யொட்டி நடந்த சர்வதேச 'கருத்தரங்கில், பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ...

கட்சிகள் தாராளம்... பட்டுவாடா ஏராளம்

Posted: 14 May 2016 09:34 AM PDT

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளை தாண்டி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், வாக்காளர் களுக்கு பணம் பட்டு வாடா தாராளமாக நடந்தது.

பணம் வினியோகத்தில் ஈடுபட்ட, 67 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும், 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த இரு நாட்களாக, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா சர்வ சாதாரணமாக நடந்தது. வாக்காளர்களும் எவ்வித கூச்சமுமின்றி, இரு தரப்பினரும் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டனர்.திருச்சி தொகுதியில், இரு கட்சிகளும் ஓட்டுக்கு, தலா, 500 ரூபாய் வழங்கின. ...

அம்மா நாடாகி விடும் கருணாநிதி எச்சரிக்கை

Posted: 14 May 2016 10:44 AM PDT

சென்னை:'தப்பித் தவறி, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி, அம்மா நாடு என, 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்து விடுவார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்' என்பதற்கு மாறாக, 'எனக்காக நான், எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்' என,முதல்வர் ஜெயலலிதா சொல்லிக் கொள்ளலாம். தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், இதை தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள் வார்.தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி, 'அம்மாநாடு' என, 110வது விதியின் கீழ் ...

வெற்றி பெற வையுங்கள் ஜெ., வேண்டுகோள்

Posted: 14 May 2016 10:47 AM PDT

சென்னை,:'அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள, வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து முடிக்க, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற வையுங்கள்' என, வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 2006 முதல், 2011 வரை, மாநில அரசிலும், பல ஆண்டுகள் மத்திய அரசிலும், அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு, தமிழக மக்களுக்கு விரோதமாகவும், தேசத்தை சீரழிக்கும் வகையிலும் நடந்த, '2ஜி' ஊழல், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக் கும் கட்டப் பஞ்சாயத்து, தமிழகம் முழுவதும் நடந்த நில அபகரிப்பு, வட்டார தாதாக்களாக தி.மு.க., வினர்நடத்திய ...

தேர்தல் கமிஷன் வேட்டையில் நேற்று சிக்கிய ரொக்கம்... ரூ.570 கோடி!: வங்கிக்கு சொந்தமான பணமா என விசாரணை

Posted: 14 May 2016 10:59 AM PDT

தேர்தல் கமிஷன், நேற்று நடத்திய வேட்டையில், திருப்பூர் மாவட்டத்தில், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட, 570 கோடி ரூபாய் சிக்கியது. இது, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான பணமா என, விசாரணை நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம் வழங்குவதை தடுக்க, மாநிலம் முழுவதும், பறக்கும் படையினர், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதி, கலால் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, பெருமாநல்லுார் - ...

அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு: பணம் பட்டுவாடா புகாரால் அதிரடி

Posted: 14 May 2016 12:27 PM PDT

சென்னை: பணப் பட்டுவாடா உட்பட, பல்வேறு புகார்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த ஓட்டுப்பதிவு, வரும், 23ம் தேதி நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய எம்.எல்.ஏ.,வான, தி.மு.க.,வைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமிக்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அரவக்குறிச்சி தொகுதியில் பணம் மற்றும் பரிசுப் ...

சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர்

Posted: 14 May 2016 12:43 PM PDT

லண்டன்: லண்டன் வரலாற்றில் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லீமான சாதிக் கான், அங்குள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்றது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்த பஸ் டிரைவரின் மகன் சாதிக் கான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரிட்டிஷ் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்டு லண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
45 வயதான சாதிக் பாட்சா வடக்கு லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்தி வந்தவர்.
மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™