Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க !

Posted: 14 May 2016 01:30 PM PDT

தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க ! துபாய்-ல் நடைபெற்ற கார் கண்காட்சியில் தங்க கார் இடம் பெற்றது பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சி அடையவைத்துள்ளது. துபாய்-ல் 2016 ஆண்டு கார் கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. இதில், தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கார் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து, இன்ப அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது, அந்த தங்க கார் குறித்த வீடியோ   சமூக வலைதளங்களில் பரவி, வைரலாக  வெளியாகி கலக்கி வருகிறது. தற்போது இந்தியாவில், விண்ணை முட்டும் ...

இனிய பிறந்த நாட்கள் வாழ்த்துகள் ,விமந்தனி.

Posted: 14 May 2016 12:11 PM PDT

இனிய பிறந்த நாட்கள் வாழ்த்துகள் ,விமந்தனி.   ரமணியன்

ஆசீர்வாதம்

Posted: 14 May 2016 11:54 AM PDT

ஆசீர்வாதம் அன்று ராகவனின் முதலாம் கல்யாண நாள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மனைவி ராதிகாவுடன் காலையில் கோவில் சென்றுவிட்டு, மாலையில் தன் மாமனார் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்திருந்தான். மாமனார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகாவின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவரும் மிக மகிழ்ச்சியோடு இவர்களின் வரவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாலை சுமார் ஐந்து மணி அளவில் ராகவனும் ராதிகாவும் வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வரவேற்றனர். "வாங்க, வாங்க ஏன் ...

அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Posted: 14 May 2016 11:06 AM PDT

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெற உள்ள வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள், தீவிரமடைந்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில், நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அந்தந்த மாநிலங்களில், தீவிர பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை, இன்று மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றுள்ளன. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் என பல்வேறு கூறுகளாக தரம்பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு ...

உத்தர பிரதேசத்தில் ஏ.சி. வெடித்து 5 பேர் பலி:3 பேர் படுகாயம்

Posted: 14 May 2016 10:13 AM PDT

காசியாபாத், உத்தர பிரதேசம் காசியாபாத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் அலுவலக கட்டிடத்தில் ஏசி வெடித்து 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். உத்திர பிரதேசம் காசியாபாத்தில் ராஜ்நகரில் அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் கட்டிடத்தில் இந்தியா மார்ட் என்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அப்போது 2 மாடியில் உள்ள ஏசி பெட்டி திடீரென வெடித்து தீ பற்றியது. இந்த தீ வேகமாக அனைத்து அலுவலகங்களுக்கும் பரவியது. இதனால் கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் உள்ளே ...

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பெண் குழந்தைக்கு தந்தையானார்

Posted: 14 May 2016 09:22 AM PDT

-- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான   வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்டநாள் தோழியான பிரியங்கா சவுத்திரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தி ருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் ரெய்னாவின் மனைவி பிரியங்காவுக்கு கர்ப்பமாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக நெதர்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்ட்டு இருந்தார். இதற்காக ரெய்னா ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு மனைவியை கவனித்து கொள்வதற்காக நெதர்லாந்து சென்றிருக்கிறார். அங்கு ரெய்னாவின் மனைவி பிரியங்கா பணிபுரிந்து வருகிறார். இந்த ...

தேர்தலையொட்டி சினிமா காட்சிகள் ரத்து

Posted: 14 May 2016 09:19 AM PDT

சென்னை, - நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, திரையுலகை சேர்ந்தவர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. - இதேபோல் தியேட்டர்களில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர். - இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள ...

விராட் கோலி 3-வது சதம்: புது சாதனை...

Posted: 14 May 2016 08:27 AM PDT

- ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், குஜராத் லயன்ஸ்க்-கு எதிராக விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 55 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து தனது மூன்றாவது சதத்தை இன்று விளாசினார். பெங்களூர் அணியின் மற்றோரு வீரரான டி வில்லியர்ஸ்யும் 52 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். - உலகில் தற்போது மிக சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறப்படும் விராட் கோலியும் டி வில்லியர்ஸ்-யும் இன்று ஒன்றாக விளையாடி சதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இருவரும் சேர்ந்து பெங்களூர் அணிக்காக 20 ஓவரில் ...

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் வந்தது

Posted: 14 May 2016 07:53 AM PDT

- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது. - ஷம்ஷாபாத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அந்த விமானத்தை ஏராளமான பயணிகள் பார்த்து ரசித்தனர். - ரஷ்ய விமானமான இதில் 640 டன் எடை வரை சரக்குகளைக் கொண்டு செல்ல முடியும். உலகிலேயே மிக நீண்ட இறக்கைகளைக் கொண்ட விமானமும் இதுதான் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. -

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Posted: 14 May 2016 07:32 AM PDT

திருப்பூர்: கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு உரிய ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, செங்கப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கண்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. - ---------- தினமலர்

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 13 May 2016 11:25 PM PDT


-

-
-

தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)

Posted: 13 May 2016 10:58 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

Posted: 13 May 2016 10:30 PM PDT

- ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவையில் பிரியா விடை உரையாற்றிய போது...| படம்: பிடிஐ. ==== மாநிலங்களவையில் அருண் ஜேட்லியும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷும் கிரிக்கெட் வார்த்தைகளைக் கொண்டு ஒருவரையொருவர் நட்பு முறை கலாய்ப்பில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் பிரியாவிடை உரையாற்றிய காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "ஜேட்லி உண்மைகளை ஸ்பின் செய்வதில் மாஸ்டர். மகாத்மா காந்தி கதராடையை பின்னுவதை பற்றி மக்களுக்கு கூறினார் ஆனால் இவர் உண்மைகளை ஸ்பின் செய்பவர். இவரிடத்தில் (ஜேட்லியிடம்) பெய்லியின் ...

வெறுமையில் புல்வெளி

Posted: 13 May 2016 10:15 PM PDT

- – பொய்யான உலகில் உண்மைகளாகக் கனவுகள் – சூரியக்கரங்கள் பனிமுத்துகளைப் பொறுக்கி விடுகின்றன வெறுமையில் புல்வெளி – தோட்டத்தில் காய்கறிச்செடி நெருங்க நெருங்க விஷ மருந்தின் நெடி – தொட்டிலில் தூங்க வேண்டிய குழந்தை குப்பைத் தொட்டியில் – வீசி எறியும் பிணங்கள் வேதனையுடன் நெளியும் கங்கை – ——————— பழனி இளங்கம்பன்

மனைவியின் கை பக்குவம் அருமை..!!

Posted: 13 May 2016 10:15 PM PDT

பங்களா வாழ்க்கை அலுத்துப் போனது..!

Posted: 13 May 2016 10:12 PM PDT

- – வறண்ட ஆறு தாகம் எடுத்தது மணல் திருடனுக்கு – பங்களா வாழ்க்கை அலுத்துப் போனது சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்க்கு – பசித்தவன் கண்களை உறுத்தியது சாமிக்குப் படையல் – மண்தேடும் முயற்சியில் கனைத்துப் போகிறது தொட்டிக்குள் வேர் – வளர்ந்து என்ன பயன்? நுழைய முடி வில்லை மழலையின் உலகிற்குள் – ================== ஆசுரா

ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்

Posted: 13 May 2016 10:10 PM PDT

- விசாகப்பட்டினம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பழிதீர்த்தது. பார்த்தீவ் பட்டேல் நீக்கம் 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(426

Posted: 13 May 2016 10:06 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது: அமெரிக்கா தகவல்

Posted: 13 May 2016 10:02 PM PDT

அணு சக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராவதை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த குழுவில் உறுப்பினராக இந்தியா தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. - அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா 2015 ஆம் ஆண்டில் தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, என்ன கூறினார் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். - ஏவுகனை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ...

ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்; உறுப்பினரானார் டிராவிட்

Posted: 13 May 2016 09:21 PM PDT

- ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தப் பொறுப்பில் மூன்று வருடங்கள் நீடிப்பார். இந்த குழுவின் உறுப்பினர்களாக டிராவிட், ஜெயவர்தனே, டிம் மே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சங்கக்கரா, எல். சிவராமகிருஷ்ணன், மார்க் டெய்லர் ஆகியோருக்குப் பதிலாக இந்த மூவரும் தேர்வாகியுள்ளார்கள். இந்த குழுவில் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோவும் இடம் பெற்றுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை கிரிக்கெட் குழு மேற்கொள்ளும். ...

ஒலி ஒளி ஊடகங்களில் டமிழ்

Posted: 13 May 2016 09:05 PM PDT

- பினாங்கில் சைனா டவுன் கோலாலம்பூரில் சைனா டவுன் ஈப்போவில் சைனா டவுன் அமெரிக்காவில் சைனா டவுன் ஆனால் அவன் மொழி சீனம்தான் – பினாங்கில் லிட்டில் இண்டியா கோலாலம்பூரில் லிட்டில் இண்டியா ஈப்போவில் லிட்டில் இண்டியா சிங்கப்பூரில் லிட்டில் இண்டியா ஆனால் உன் மொழி 'டமில்…?' ஒலி ஒளி ஊடகங்களில் உலா வரும் உயர்ந்த 'டமிழ்' – ======================= >ஆவுடையார், சிரம்பான் நன்றி: கேளுங்கள் (மாத இதழ் – மே 2011)

பேய் வீட்டில் பயமில்லாமல்…

Posted: 13 May 2016 08:55 PM PDT

- மரத்தில் சிக்கிய காற்றாடி எப்போதாவது காற்றில் பறக்கிறது – கவர்ச்சியான வாழ்க்கை கண்ணாடித் தொட்டிக்குள் தங்க மீன்கள் – வயல் வேலைக்கு ஆட்கள் தேவை முதலில் வந்த கொக்குகள் – வாழ வழியில்லாதவன் வீதியில் விற்கிறான் திருஷ்டிப் பொம்மை – பேய் வீடாம் மனித பயமில்லாமல் குடியிருந்தன சிலந்திகள் – ——————– ஆசுரா

குழந்தையின் அன்னதானம்…

Posted: 13 May 2016 08:36 PM PDT

- தாய் பசியுடன் வீட்டில் குழந்தையின் அன்னதானம் குருவிகளுக்கு – வாழ்வருளும் ஆறுகளுக்கு பூச்சொரிந்து மகிழும் மரங்கள் – குளிர் கொட்டும் பனி இன்பச்சிரிப்புடன் மரங்கள் – மவுனத்தை நேசிக்கிறேன் நான் பேசுவதற்காக – விண்ணை முட்டும் உயரத்தில் பயன்பாடில்லாப் பனிமலை – ==================== பழனி இளங்கம்பன்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு

Posted: 13 May 2016 08:12 PM PDT

மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ், டி.ஓய்.சந்திரசூட், அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் ஆகிய நால்வரும் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டனர். – அவர்கள் நால்வருக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த 3-ம் தேதி பரிந்துரை ...

ஒரே நாளில் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறிய அதிசயம்

Posted: 13 May 2016 07:35 PM PDT

புதுடில்லி : ஒரே நாளில், ஒரு மசோதாவுக்கு பார்லிமென்டின் இரு சபைகளும் ஒப்புதல் அளித்த அபூர்வ நிகழ்ச்சி நடந்துள்ளது. = பீஹார் மாநிலம் பூசாவில் உள்ள ராஜேந்திர பிரசாத் வேளாண் பல்கலையை, மத்திய பல்கலையாக உயர்த்தும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை இந்த மசோதாவுக்கு ராஜ்ய சபா ஒப்புதல் அளித்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால், உடனடியாக லோக்சபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™