Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தாமதமாகும் ஜி.எஸ்.டி., மசோதா: ராஜ்யசபாவில் மோடி வருத்தம்

Posted: 13 May 2016 08:56 AM PDT

புதுடில்லி,: ''மாநிலங்களுக்கு மிகப் பெரிய பலனை அளிக்கக் கூடிய ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்யசபா நிறைவேற்றாதது வருத்த மளிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஓய்வுபெறும் ராஜ்யசபாவின், 53 எம்.பி.,க் களுக்கு பிரிவு உபசாரம் அளித்து, ராஜ்ய சபாவில் பிரதமர் நரேந்திர மோடி, பேசிய தாவது:ராஜ்யசபா உறுப்பினர்கள், மாநிலங் களின் பிரதிநிதிகளாக உள்ளனர். மாநிலங்களின் நலனே அவர்களுடைய முன்னுரிமையாக இருக்கும். இந்த கூட்டத் தொடரில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றினோம். அதே நேரத்தில் முக்கிய இரண்டு மசோதாக்கள் நிறைவேறவில்லை. ...

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவுபொறுப்பை தட்டிக்கழிப்பதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Posted: 13 May 2016 09:49 AM PDT

புதுடில்லி,:'மக்கள் கடும் வறட்சியால் தவிக்கையில், மாநிலங்களின் பிரச்னை என, மத்திய அரசு கைகழுவக் கூடாது; தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுடன் சேர்த்து, உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

12 மாநிலங்கள்:உத்தர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், பீஹார், ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய, 12 மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி ...

பேச்சுரிமையை பறிப்பதாக கூறுவதை ஏற்க சுப்ரீம் கோர்ட்...மறுப்பு! :அவதூறு சட்டத்தை ரத்து செய்ய முடியாதென தீர்ப்பு

Posted: 13 May 2016 09:51 AM PDT

புதுடில்லி: 'அரசியல் சட்டம் அளித்துள்ள பேச்சுரிமையை, கிரிமினல் அவதுாறு வழக்கு பறிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அந்த சட்டப்பிரிவு நடைமுறைகள் தொடர்வது சரியே; அவற்றை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

அரசியல் தலைவர்கள் பலர், மற்றொருவரை விமர்சித்து பேசியதற்காக, பல மாநிலங்களில் அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி போன்ற பல மாநிலங்களில் இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆங்கிலேயர் காலத்தில்...:இதையடுத்து, அவதுாறு வழக்கு தொடர வகை செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி, ...

ஒரு மாதமாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன்... ஓய்கிறது! * தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

Posted: 13 May 2016 10:36 AM PDT

ஒரு மாதமாக அனல் பறக்க நடந்த, சட்டசபை தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்கிறது. தமிழகம், புதுச்சேரியில், நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி, மார்ச், 4ல் அறிவிக்கப்பட்டது. அன்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கின.எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், தமிழகத்தில் பல முனை போட்டி உருவானது. வேட்பு மனு தாக்கல், ஏப்., 22ல் துவங்கி, 29ல் நிறைவு பெற்றது. மொத்தம், 795 பெண்கள் உட்பட, 7,151 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில், 3,024 பேர் மனுக்கள் தள்ளுபடி ...

குடும்ப அரசியல் வேர் விட்டால் பேராபத்து: முதல்வர் ஜெயலலிதா ஆவேசம்

Posted: 13 May 2016 10:46 AM PDT

சென்னை,: ''குடும்ப அரசியல் என்ற நச்சு மரம், தன் வேர்களையும், விழுதுகளையும் வலுப்படுத்தி கொள்ளுமேயானால், அது, தமிழகத்தில் தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்தானதாக அமைந்து விடும்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:இலங்கை தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்த, ஒரு அரசியல் கூட்டணி, 'கூடா நட்பு' என்று கூறி பிரிந்தது. இன்று, 'ஒட்டிப் பிறந்தவர்கள்' என்று கூறி, மக்கள் முன் கைகோர்த்து நிற்கிறது.இலங்கையில், தன் உரிமைகளை மீட்டெடுக்க, போராடிக் கொண்டிருக்கும், ...

அவசர சட்டத்தை தடுத்தது யார் ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

Posted: 13 May 2016 10:49 AM PDT

சென்னை, :'நுழைவு தேர்வு பிரச்னைக்கு தீர்வுகாண, அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:'அ.தி.மு.க., அரசு மீண்டும் அமைந்தவுடன், மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல், மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.இதற்காக, இப்போதே, ஒரு அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது; மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எல்லாரை யும்ஏமாற்றுகிற ஜெயலலிதா, இதுவரை நடவடிக்கை ...

இன்று முதல் 3 நாள்'சரக்கு' கிடைக்காது

Posted: 13 May 2016 11:22 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, 'டாஸ்மாக்' கடைகள் இயங்காது.

தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு, இரண்டு மாதங்களாக, தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில், மது விற்பனை அமோகமாக இருந்தது. தேர்தல் பிரசாரம், இன்று மாலை யுடன் முடிவடைகிறது. ஓட்டுப்பதிவு, வரும், 16ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, 19ம் தேதியும் நடக்கின்றன.இதையடுத்து, மே, 14, 15, 16 மற்றும், 19ல், டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவும், மது ஆலைகளில், மதுபான உற்பத்திக்கு தடை விதித்தும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, இன்று முதல்அமலுக்கு வருவதால், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு, ...

மின் வாரியத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு! : அடித்து கூறுகிறார் நாகல்சாமி

Posted: 13 May 2016 11:25 AM PDT

''தனியாரிடம், 3,330 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின் வாரியம் செய்து உள்ள ஒப்பந்தத்தால், 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி தெரிவித்தார்.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், நேற்று அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு மின் வாரியம், மின்சாரம் கொள்முதல் செய்யவும், அதற்கான விலையை நிர்ணயிக்கவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், ஆணையத்தின் அனுமதி இல்லாமல், தனியாரிடம் ...

தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்: மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு

Posted: 13 May 2016 11:32 AM PDT

'சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., 120 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்' என, லயோலா கல்லுாரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் ஆய்வு அமைப்பின் தலைவர் சட்டசபை தொகுதிகளில், ஏப்., 24 முதல் மே, 10 வரை, 8,064 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பு, சென்னையில் வெளியிடப்பட்டது. பிரசாரங்கள் சூடுபிடித்த நிலையில், மக்களிடையே பரவலாக பேசப்படுவதன் அடிப்படையில், எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில், அ.தி.மு.க., கூட்டணியை விட, தி.மு.க.,கூட்டணிக்கு, 6 சதவீதம் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. ...

தமிழக வேட்பாளர்களில் 32% பேர் மீது கிரிமினல் வழக்கு

Posted: 13 May 2016 12:42 PM PDT

சென்னை: 2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 சதவீதம் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.myneta.info என்னும் வலைதளம், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறி்த்த தகவல்கள், அரசியல் கட்சிகளின் வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட பல விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வலைதளம் 2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழக வேட்பாளர்கள் குறித்து வெளியிடபட்டுள்ள தகவல்கள்:
* தமிழக வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் மீது கிரிமினில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™