Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'சீன அதிகாரிகள் நடத்தை மோசம்': பிரிட்டன் ராணி புகாரால் பரபரப்பு

Posted: 11 May 2016 06:53 PM PDT

லண்டன்: சீன அரசு அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக, குற்றம் சாட்டும் தொனியில், பிரிட்டன் ராணி எலிசபெத் கூறிய, வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்தாண்டு, தன் மனைவியுடன், பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு, பிரிட்டனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக, இரு நாடுகளும் கூறியிருந்தன.இந்நிலையில், அந்த பயணத்தின்போது, சீன அதிபருடன் வந்திருந்த சீன அரசு அதிகாரிகள் குறித்து, பிரிட்டன் ராணி எலிசபெத், 90, கூறிய வாசகங்கள், வீடியோவாக வெளியாகி ...

ஜனதா தளம் பாதையை நோக்கி ம.ந.கூ.!

Posted: 12 May 2016 08:20 AM PDT

கடந்த சில நாட்களாக, வரிசையாக வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகள், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை வெலவெலக்க வைத்திருக்கின்றன.

அ.தி.மு.க., -- தி.மு.க., ஆகிய பெரும் கட்சிகளின் மீது அதிருப்தியோடு இருக்கும் ஜனக்கூட்டத்தின் மத்தியில், ஒரு மாற்று வேண்டும் என்கிற எண்ணம் பரவலாக எழுந்தது. மக்கள் நலக் கூட்டணி என்கிற பேச்சு அடிபட்டதும், அதுவே ஒரு பெரிய எதிர்பார்ப்பாக எழுந்தது. ம.ந.கூ., ஒரு ஹீரோ அளவுக்குச் சித்திரிக்கப்பட்டது.
அப்போது இருந்த சூழ்நிலையில் குறைந்த பட்சம் இருபது சதவீத ஓட்டுகள் இந்த அணிக்குக் கிடைக்கும் ...

முதன்மை மாநிலமாக தமிழகம் : ராஜ்நாத்சிங் உறுதி

Posted: 12 May 2016 08:37 AM PDT

ராமநாதபுரம்,: ''சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு ஓட்டளித்தால் தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அவர் பேசியதாவது:கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை தி.மு.க.,- அ.தி.மு.க., மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளும் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. இவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தி.மு.க.,- அ.தி.மு.க.,விற்கு மாற்றாக மூன்றாவது கட்சி இல்லை என்ற நிலையை பா.ஜ., மாற்றும்.பா.ஜ., ஆட்சி செய்ய மக்கள் ...

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: நெல்லையில் ஜெ., வாக்குறுதி

Posted: 12 May 2016 09:23 AM PDT

திருநெல்வேலி:''அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்,'' என, திருநெல்வேலியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்பது, தமிழக மீனவர் பிரச்னை யில் நம் உரிமையை நிலைநாட்ட நாங்கள் பாடுபட்டோம். ஆனால், மீனவர்களை 'பேராசைக்காரர்கள்' என்றார் கருணாநிதி.சில்லரை வர்த்தகம், மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழகத்தை விட்டு விரட்டியது எனது அரசு. ...

'வீட்டுக்கு சோனியா; அரசியலுக்கு மேனகா'

Posted: 12 May 2016 09:46 AM PDT

புதுடில்லி:'வீட்டுக்கு சோனியா, அரசியலுக்கு மேனகா என்பதே, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் விருப்பமாக இருந்தது' என, சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திராவின் டாக்டராக பணியாற்றியவர், கே.பி.மாத்துார். தொடர்ந்து, 20 ஆண்டுகள், இந்திராவின் தனிப்பட்ட டாக்டராக இருந்த மாத்துார், அவருடன் இருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில், அவர் எழுதியுள்ளதாவது:இந்திராவுக்கு, தன் முதல் மருமகள் சோனியா மீது தொடக்கம் முதலே அன்பு உண்டு. அதனால், திருமணமாகி வந்தது ...

காற்று மாசு கட்டுப்பாட்டில் இந்திய நகரங்கள். மோசம் தலைநகர் டில்லி இப்போது பரவாயில்லையாம்

Posted: 12 May 2016 09:56 AM PDT

புதுடில்லி:காற்றில் உள்ள மாசு குறித்து உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், மிகவும் மோசமான 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், ஒரே ஆறுதல், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டில்லி, 11வது இடத்துக்கு முன்னேறியது.உலகின் அதிக மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலை, உலக சுகாதார அமைப்பு, நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த டில்லி, தற்போது, 11வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில், மோசமான, 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம் பெற்று உள்ளன.உலகம் முழுவதும், 103 நாடுகளில் உள்ள, 3,000 நகரங்கள், காற்றில் உள்ள மாசுவின் ...

தேர்தலுக்கு முன் வராது ஜெ., வழக்கில் தீர்ப்பு

Posted: 12 May 2016 09:58 AM PDT

புதுடில்லி, : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் வாதம், சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை காலமான, ஜூன், ௧க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த வழக்கில் தீர்ப்பு வராது என்பது உறுதியாகிஉள்ளது.வருமானத்துக்கு அதிகமாக, ௬௬.௬௫ கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.விசாரணையில்...இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு ...

இந்தியில் தி.மு.க., பிரசாரம்

Posted: 12 May 2016 10:24 AM PDT

துறைமுகம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் சேகர்பாபு, இந்தியில் அச்சடிக் கப்பட்ட துண்டு பிரசுரங்கள் கொடுத்து, ஓட்டு சேகரித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், வேட்பாளர்கள் பலரும் விதவித மான, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபு, துவக்கத்தில் சில நாட்கள் நடந்து சென்றே ஓட்டு சேகரித்தார். பின், டூ - வீலரில் சென்றுஓட்டு கேட்டார். கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை, தொகுதியின் பல பகுதிகளுக்கும் நடந்தே ...

கடுப்பு: அதிரடி நடவடிக்கைகளையும் மீறி பண பட்டுவாடா தொடர்வதா? சில தொகுதிகளில் தனியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் யோசனை

Posted: 12 May 2016 10:29 AM PDT

அதிரடி நடவடிக்கைகளையும் மீறி, தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்ந்து நடப்பதால், தேர்தல் கமிஷன் கடுப்படைந்து உள்ளது.

இதனால், பெரிய அளவில் பட்டுவாடா நடந்த, சில தொகுதிகளில், தனியாக தேர்தல் நடத்தலாமா என, தேர்தல் கமிஷன் யோசித்து வரும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், பண நடமாட்டத்தை கண்காணிக்க, தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒவ்வொரு தொகுதியிலும், தலா நான்கு பறக்கும் படை, நான்கு நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை ...

பாரபட்ச அதிகாரிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Posted: 12 May 2016 11:06 AM PDT

சென்னை,:''தி.மு.க., ஆட்சி அமைந்தால், பாரபட்சமாக நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்,'' என்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னையில், எழும்பூர், துறைமுகம், பெரம்பூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட தொகுதிகளில், வீதி வீதியாக நடந்து சென்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் செய்தார். துறைமுகம் தொகுதி வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, மண்ணடியில் பிரசாரம் செய்த ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை, தி.மு.க., அளிக்கும். பா.ஜ., உள்ளிட்ட மாற்று அணிகள், திராவிட கட்சிகள் மீது, குற்றச்சாட்டு களை கூறி ...

பணிகளை துவங்கினார் உத்தரகண்ட் முதல்வர் ராவத்

Posted: 12 May 2016 02:41 PM PDT

டேராடூன்,:உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்ற, ஹரிஷ் ராவத், வழக்கமான தன் பணிகளை நேற்று துவங்கினார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அரசுக்கு எதிராக, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் திடீரென போர்க் கொடி துாக்கியதால், அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமலானது. பின்னர் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில், ராவத் அரசு, வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஹரிஷ் ராவத், வழக்கமான பணிகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™