Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தேவை

Posted: 12 May 2016 09:24 AM PDT

எனக்கு அடோபே போடோஷப் cc 2015, அடோபே அக்ரோபட் DC Pro crack தேவை

அவசரம் -ஒரு பக்க கதை

Posted: 12 May 2016 08:06 AM PDT

- என் அக்காவின் குட்டிப் பெண் ஷிகாவை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, ரவியைப் பார்த்தேன். – ஐந்து வருடங்களுக்கு முன், கல்லூரி வாசலில் ரவியைப் பிரிந்தபோது, எத்தனை காலமானாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். – இன்று தினமும் அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டு, நான்தான் காத்திருக்கிறேன். இதோ அவர் பிள்ளையுடன்… கை பிடித்து வருகிறார். அப்படியே அவர் ஜாடை. பெயரைக் கேட்டேன். ''சுரேஷ்'' என்றார் ரவி. எனக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை… அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது! ...

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Posted: 12 May 2016 08:04 AM PDT

- நல்ல கதை அமைந்தால் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிப் பேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். - இவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'மனிதன்'. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். - இந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய உதயநிதி, காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ஆர்வம் தனக்கு உண்டு என்று கூறி உள்ளார். "என்னுடைய முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் 'மனிதன்' என்பேன். - இந்தப் படத்தில்தான் ...

நேர்காணல்! -ஒரு பக்க கதை

Posted: 12 May 2016 05:58 AM PDT

- ''கட்சிக்காக என்ன பண்ணியிருக்கீங்க?'' – ''கட்சி போராட்டத்துல மூணு பஸ்ஸை கொளுத்தியிருக்கேன்… ரெண்டு பேரைத் தீர்த்திருக்கேன்!'' – ''கட்சிக் கொள்கைகளைத் தெரியுமா..?'' – ''உங்களைத் தவிர யாரையும் தெரியாது… தெரிய வேண்டியதும் இல்ல!'' – ''எப்படி ஜனங்ககிட்டே ஓட்டு கேப்பீங்க..?'' – ''உங்க கையை காலா பிடிச்சுக் கேட்கிறேன்… வாக்கு பிச்சை போடுங்கன்னு கெஞ்சுவேன்!'' – ''ஜெயிச்சதும் என்ன சொல்வீங்க..?'' – ''எம்.எல்.ஏ பதவி தலைவர் எனக்கிட்ட பிச்சைன்னு சொல்லுவேன்..!'' ...

அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை

Posted: 12 May 2016 05:41 AM PDT

- விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ரிது ராணி, ஆடவர் ஹாக்கி அணி வீரர் வி.ஆர்.ரகுநாத் ஆகியோரது பெயர்களை ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வி.ஆர்.ரகுநாத், தரம்வீர் சிங், ரிது ராணி ஆகியோர் அர்ஜுனா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காக முன்னாள் வீரர் சில்வானஸ் டங் டங் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர்களுக்கான ...

சூர்யாவின் 24 படத்தின் 2ஆம் பாகம் தாயாராகிறது.

Posted: 12 May 2016 05:38 AM PDT

- சூர்யா நடித்து, தயாரித்து வெளியாகிய 24 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 2வது பாகம் விரைவில் தயாராக உள்ளது - தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விகரம் குமார் சூர்யாவின் 24 படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 2வது பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. - படத்தை அடுத்த பாகம் எடுப்பதற்கு நல்ல கதைகளம் உள்ள காரணத்தினால், அடுத்த பாகத்தை எடுத்தால் கட்டாயம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையுடன் தயாராகியுள்ளார் ...

பயம்- ஒரு பக்க கதை

Posted: 12 May 2016 05:36 AM PDT

- இரவு பதினொரு மணி… இருண்ட, ஆளரவமற்ற அந்த மயானப் பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பிரபாகர், தன் பின்னால் ஏதோ உருவம் நெருங்கி வருவதை உணர்ந்தான். – அவன் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. 'திருடனோ, சைக்கோ கொலைகாரனோ, ஒருவேளை… பேயாகக் கூட இருக்குமோ!' விருட்டென்று அந்த உருவம் பிரபாகர் தோளைப் பற்றியது. ''அய்யோ!'' – அரண்டே போய்விட்டான் அவன். – ''என்ன தம்பி! ஏதோ அவசரச் செலவுக்கு எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினே. மூணு மாசமாச்சு. இப்பல்லாம் வேலை முடிஞ்சு ...

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

Posted: 12 May 2016 01:47 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

பாட்டி வைத்தியம் -குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  !

Posted: 12 May 2016 01:35 AM PDT

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும்.   இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது !

Posted: 12 May 2016 12:21 AM PDT

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன். எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் ...

மாலைநேர சிற்றுண்டிகள் ! - 'ஆமை வடை ' - கடலை பருப்பு வடை !

Posted: 12 May 2016 12:10 AM PDT

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

வத்தல் போடலாமா ? மோர் மிளகாய்

Posted: 11 May 2016 11:52 PM PDT

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா? உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா? வத்தல் வடாம் வகைகளுக்கான ...

ருசியான ஊறுகாய்கள் - கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு !

Posted: 11 May 2016 11:13 PM PDT

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம். இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் ஆவக்காய் இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது

“தேசிய அளவில் நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை

Posted: 11 May 2016 11:10 PM PDT

- மூத்த தலைவரும், கங்கை நதி புனரமைப்புக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார். – கங்கை நதியை புனரமைப்பது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பித்த அவர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: வனப் பகுதிகளைப் பெருக்குவதன் மூலமாகவும், மழை நீர் சேகரிப்பின் மூலமாகவும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். மாநிலங்களுக்கு இடையே சிறிய அளவிலான நதி நீர் இணைப்புத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதேவேளையில், நாடு ...

விடைபெற்றது “சீ ஹாரியர்ஸ்’ போர் விமானம்

Posted: 11 May 2016 10:26 PM PDT

- இந்திய கடற்படையில் "மிக்-29கே' ரக நவீன போர் விமானங்களை பயன்படுத்த ஏதுவாக, இதுவரை பயன்பாட்டில் இருந்த "சீ ஹாரியர்ஸ்' (Sea Harriers) போர் விமானங்கள் புதன்கிழமை விடைபெற்றன. பிரிட்டன் தயாரிப்பான சீ ஹாரியர்ஸ் போர் விமானங்கள், கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப் பட்டன. தற்போது, மிக்-29கே ரக நவீன போர் விமானங்களை பயன்படுத்த இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 33 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த சீ ஹாரியர்ஸ் விமானங்கள் புதன்கிழமையுடன் விடை பெற்றன. இதையொட்டி, ...

பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது

Posted: 11 May 2016 10:22 PM PDT

- பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரூ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கோலி 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சரியாக விளையாடாத நிலையில், மீண்டும் வாய்ப்பு பெற்ற கெயில் இன்றும் சோபிக்கவில்லை. ...

நவராத்திரி - அப்பம் !

Posted: 11 May 2016 09:57 PM PDT

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு  வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல ...

சேவை செய்யுங்கள்

Posted: 11 May 2016 09:21 PM PDT

- தேன் என்று சொன்னால் மட்டும் இனித்து விடாது. அது போல சேவை என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். - * மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மந்திரச் சொல். இதை மதித்து நடந்தால் மகாதேவனே மகிழ்ந்து அருள்புரிவான். - * தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்குச் சமமானது. - * தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே. - ----------------------- - சாய்பாபா .

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?’’

Posted: 11 May 2016 09:16 PM PDT

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?'' ''எங்களுக்குக் கூட்டணி அமையறதுக்குள்ள தேர்தல் தேதி அறிவிச்சது நியாயமா யுவர் ஆனர்?'' அம்பை தேவா - -------------------------------------- ஸ்பீக்கரு... கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்த தலைவரை வெளியே நிற்க வைத்து, 'உள்ளே ஹவுஸ்ஃபுல்' என்று சொல்லி, 2021 தேர்தல் கூட்டணிக்கு டோக்கன் தந்து அனுப்பி வைத்த துரோகிகளை...'' - - அம்பை தேவா, - ------------------------------------------- - இந்தத் தொகுதியை தக்க வச்சுக்கணும்னு சொல்றீங்களே... போன ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™