Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தல் கமிஷன் வேட்டையில் சிக்கியது ரூ.100 கோடி சதமடிப்பு! எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகம் 'சாதனை!'

Posted: 11 May 2016 09:47 AM PDT

தேர்தல் கமிஷன் வேட்டையில், இதுவரை சிக்கிய பணம், 100 கோடி ரூபாயை தொட்டுள்ளது. சிக்காத பணம், சில ஆயிரம் கோடிகளை தாண்டும் என கணக்கிடப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தேர்தல் பணப் பட்டுவாடாவில், தமிழகம் சாதனை படைத்துள்ளதையே இது காட்டுகிறது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பணம் வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷன், 144 தடையுத்தரவு பிறப்பித்தது. அது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது.இம்முறை தவறு நடந்து விடக்கூடாது எனக் கருதிய தேர்தல் கமிஷன், நடத்தை விதி அமலுக்கு வந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் ...

வறட்சியை சமாளிக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்...உத்தரவு! பேரிடர் தடுப்பு நிதியம் ஏற்படுத்தவும் யோசனை

Posted: 11 May 2016 09:53 AM PDT

புதுடில்லி,:நாடு முழுவதும், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், கடுமையான வறட்சி நிலவுகிறது. இதை சமாளிக்க, பேரிடர் தடுப்பு நிதியம் ஏற்படுத்தும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வறட்சியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்கும்படியும் வலியுறுத்தி உள்ளது.

'ஸ்வராஜ் அபியான்' என்ற, அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'ஊரக வேலைவாய்ப்புறுதித் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை, மத்திய அரசு பின்பற்ற வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளில், வேலைவாய்ப்பை உருவாக்க, ...

முடிவுக்கு வந்தது உத்தரகண்ட் சர்ச்சை: மீண்டும் முதல்வராகிறார் ஹரிஷ் ராவத்

Posted: 11 May 2016 09:58 AM PDT

டேராடூன்:உத்தரகண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், ஹரிஷ் ராவத் அரசு வெற்றி பெற்றதால், அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கு வசதியாக, அங்கு ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக்கொள்ள, மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அரசுக்கு எதிராக, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமலானது.
தகுதியிழப்பு
இது தொடர்பான வழக்கில், ஹரிஷ் ராவத் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு ...

விஜய் மல்லையாவை ஒப்படைக்க இயலாதென பிரிட்டன் கைவிரிப்பு

Posted: 11 May 2016 09:59 AM PDT

புதுடில்லி,:''பிரிட்டனுக்கு தப்பியோடிய, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங் பிஷர்' விமான சேவை நிறுவனத்துக்காக, வங்கிகளிடம், 9,400 கோடி ரூபாய் கடன் பெற்றார். அதை திருப்பிச் செலுத்தாமல், சமீபத்தில், பிரிட்டன் தலைநகர்லண்டனுக்கு அவர் தப்பியோடினார். அவரைஇந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை வங்கிகளும், ...

தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவோம் பிரசாரத்தில் மோடி பேச்சு

Posted: 11 May 2016 10:01 AM PDT

நாகப்பட்டினம்,:''ஊழல் இருக்கும் வரை, தமிழகம் வளராது; எங்கு ஊழல் உள்ளதோ, அப்பகுதி வளர்ச்சி காண முடியாது; ஊழல் இல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்,'' என, வேதாரண்யம் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், நேற்று மாலை நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தமிழக மக்கள், இந்த பக்கம் அ.தி.மு.க.; அந்த பக்கம் தி.மு.க., என்று மாறி மாறி ஓட்டுப் போட்டு, மாட்டிக் கொண்டுள்ளீர்கள். தமிழக மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதற்காக,நான் வந்துள்ளேன். பாரதம்முழுவதும் பா.ஜ., பரவியுள்ளது. பா.ஜ.,வின் ஒரே ...

மேடை விவாதத்துக்கு தயாரா? ஜெ.,க்கு ஸ்டாலின் சவால்

Posted: 11 May 2016 10:03 AM PDT

வேலுார்: ''சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவித்த வாக்குறுதிகளில், எதையாவது ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறாரா? இதுதொடர்பாக, அவர் என்னோடு மேடையில் விவாதிக்க தயாரா?'' என்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., அமைச்சர்களும்; தலைவர்களும், ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டருக்கு, பூமிக்கு, டயருக்கு வணக்கம் வைக்கின்றனர்.கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், சட்டசபையில், 110வது விதியின்கீழ் அறிவித்த வாக்குறுதிகளில், எதையாவது நிறைவேற்றி ...

சென்னையில் சூறாவளி ஏன்?

Posted: 11 May 2016 10:18 AM PDT

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க., தரப்பில், ஜெயலலிதா முதல், குண்டு கல்யாணம் வரையில், அ.தி.மு.க.,வுக்காக தீவிர பிரசாரத்தில் இருந்தாலும், கட்சியின் ஒரே பிரதான பிரசாரகர் என்றால், அது முதல்வர் ஜெயலலிதாதான். அடுத்த நிலைகளில் பிரசாரம் செய்வதற்கு யாருமே இல்லாததால், துவக்கம் தொட்டு, அ.தி.மு.க., தேர்தல் பிரசார களத்தில், தடுமாறித்தான் வருகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தரப்பிலோ, கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் ...

ஐ.டி., நிறுவனங்கள் 'டிமிக்கி' தேர்தல் கமிஷன் விசாரணை

Posted: 11 May 2016 10:21 AM PDT

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல், தேர்தல் கமிஷனை ஏமாற்ற முயற்சிப்பது குறித்து விசாரணை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

'வரும், 16ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, அன்றைய தினம், அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடும் நடவடிக்கைவிடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, ...

சென்னையில் விடிய விடிய மின்தடை: வீடுதோறும் பணம் பட்டுவாடா?

Posted: 11 May 2016 10:40 AM PDT

சென்னையில் விடிய விடிய ஏற்பட்ட மின் தடையால், பொது மக்கள், கடும் அவதிக்குள்ளான நிலையில், பணம் பட்டுவாடாவிற்கு, மின் வாரியம் துணை போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, சென்னை, கோயம்பேட்டில், 230 கிலோவோல்ட் திறன் உடைய, துணை மின் நிலையம் உள்ளது. இங்கு, மூன்று, 'ஆட்டோ டிரான்ஸ்பார்மர்'கள் உள்ளன. தலா, ஒன்றில், 100 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் கொண்டு செல்ல முடியும். கோயம்பேடு மின் நிலையத்திற்கு, திருவள்ளூர் மாவட்டம், அலமாதி; காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, 400 கி.வோ., துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் ...

'மருத்துவ நுழைவு தேர்வுக்கு தடை விதிக்கும் சட்டம் தேவை'

Posted: 11 May 2016 01:37 PM PDT

'மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு உடனடியாக, தனிச் சட்டம் இயற்ற வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும், பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு மட்டம் போட்டுள்ளனர். இதனால், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, ஆளே இல்லாத பரிதாப நிலை காணப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில், நேற்று, முதன்முறையாக தமிழகத்தின் குரல், பார்லி.,யில் ஒலித்தது. நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™