Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விடாத மழையிலும் ஜனநாயக கடைமையாற்றிய வாக்காளர்கள் மூன்று தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு

Posted: 16 May 2016 01:24 PM PDT

விடாத மழையிலும் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் திங்கள்கிழமை வாக்களித்தனர். வாக்குப்பதிவு மூன்று தொகுதிகளிலும் அமைதியாக நடந்தது.

கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடைவீதி

Posted: 16 May 2016 01:24 PM PDT

தேர்தலை முன்னிட்டு கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் கரூர் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 83.09% வாக்குப்பதிவு

Posted: 16 May 2016 01:24 PM PDT

கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 83.09 சதவீத வாக்குகள் பதிவாயின.

அதிமுகவினர் கோஷ்டி மோதல்

Posted: 16 May 2016 01:23 PM PDT

கரூரில் திங்கள்கிழமை இரு பிரிவினராக அதிமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தோகைமலையில் 61 மி.மீ. மழை

Posted: 16 May 2016 01:23 PM PDT

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை வரை பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தோகைமலையில் 61. மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக மாயனூரில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Posted: 16 May 2016 01:23 PM PDT

தேர்தல் விதிமீறியதாக அரவக்குறிச்சி அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

வாக்காளர்களுக்குப் பணம்:திமுகவினர் 2 பேர் கைது

Posted: 16 May 2016 01:23 PM PDT

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக திமுகவினர் இருவரை போலீஸார் கைது செய்தனர்

அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது

Posted: 16 May 2016 01:22 PM PDT

கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற ஒரு மூதாட்டி உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

முசிறி அருகே வாக்களித்த 100 வயது முதியவர்

Posted: 16 May 2016 01:22 PM PDT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடமலைப்பட்டி கிராமத்தில் கருப்பையா என்ற 100 வயது முதியவர் திங்கள்கிழமை வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். 1917-ம் ஆண்டு தா.பேட்டை அருகில்

மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு

Posted: 16 May 2016 01:22 PM PDT

கரூர் மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு பக்தர்கள் திங்கள்கிழமை நீண்டவரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு 3 மணி நேரம் நீட்டிப்பு

Posted: 16 May 2016 01:21 PM PDT

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது துவரங்குறிச்சி அருகேயுள்ள மினிக்கியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அரியலூர் மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Posted: 16 May 2016 01:21 PM PDT

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட வாக்குப்பதிவு அரியலூர் 86%, ஜயங்கொண்டம் 81%

Posted: 16 May 2016 01:20 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 83.74% வாக்குப் பதிவாகியுள்ளது. இதில் அரியலூரில் 86.48 சதமும், ஜயங்கொண்டத்தில் 81.08 சதமும் வாக்குகள் பதிவாகின.

மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

Posted: 16 May 2016 01:20 PM PDT

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய 2 தொகுதிகளில் பதிவான வாக்குகளுடனான இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

பெரம்பலூர் மாவட்டத்தில் 79.54% வாக்குப்பதிவு

Posted: 16 May 2016 01:19 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 79.54% வாக்குகள் பதிவாகின. இதில் பெரம்பலூர் தொகுதியில் 79.40 சதமும், குன்னம் தொகுதியில் 79.69 சதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில்நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த மக்கள்

Posted: 16 May 2016 01:19 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த தொடர் மழையிலும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்குச்சாவடி மையங்களில் குடைகளை பிடித்தவாறு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திங்கள்கிழமை வாக்களித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிப்பு

Posted: 16 May 2016 01:19 PM PDT

பெரம்பலூர், குன்னம் தொகுதி மக்களவை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது பகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் திங்கள்கிழமை வாக்களித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 77.24% வாக்குகள் பதிவு:விராலிமலை தொகுதியில் அதிகபட்சமாக 84.01%

Posted: 16 May 2016 01:18 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 77.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் விராலிமலை தொகுதியில் அதிகபட்சமாக 84.01% வாக்குகள் பதிவாகியுள் ளன.

மூடப்பட்ட உணவகங்கள்: பயணிகள் அவதி

Posted: 16 May 2016 01:17 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் விடுமுறை என்பதால், வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அவதிப்பட நேர்ந்தது.

புதுகை, திருமயம் தொகுதிகளில்2 வாக்குச்சாவடிகளில் மின்தடை: இருளில் நடந்த வாக்குப்பதிவு

Posted: 16 May 2016 01:17 PM PDT

புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளில் மின்தடை காரணமாக தலா ஒரு வாக்குச்சாவடியில் போதிய வெளிச்சமின்றி சுமார் 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

விராலிமலையில் விடாத மழையிலும் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Posted: 16 May 2016 01:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாத மழையிலும் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

மழை: வாக்குப் பதிவு காலையில் மந்தம்; பிற்பகலில் விறுவிறுப்பு

Posted: 16 May 2016 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை முதல் பெய்த தொடர்மழையின் காரணமாக மந்தமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது.

புதுகை மாவட்டத்தில் வாக்களிக்காத திமுக, தமாகா வேட்பாளர்கள்

Posted: 16 May 2016 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக, தமாகா வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் தடையால் வாக்களிக்கவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தாலும் கூட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

பட்டுக்கோட்டை தொகுதியில் 72.52 சதவீதம் வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:15 PM PDT

பட்டுக்கோட்டை தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 72.52 சதவீதம் வாக்குப் பதிவானது.

தஞ்சை மாவட்டத்தில் 77.40% வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் சராசரியாக 77.40 சதவீதம் வாக்குப் பதிவானது.

பேராவூரணி தொகுதியில் 78.3% வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:15 PM PDT

பேராவூரணி தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் 78.3 சதவீதம் வாக்குகள் பதிவானது.

பாபநாசம் தொகுதியில் 75.40% வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:14 PM PDT

பாபநாசம் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 75.40 சதவீத வாக்குகள் பதிவானது. மின்தடையின் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மெழுகுவர்த்தி

கும்பகோணம் தொகுதியில் 76.2 சதவீதம் வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:14 PM PDT

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் 76.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருவிடைமருதூர் தொகுதியில் 78.52 சதவீதம் வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 01:14 PM PDT

திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 277 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 78.52 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

உத்தமதாணி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 May 2016 01:14 PM PDT

கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட உத்தமதாணி கிராம ஆதிதிராவிட தெரு மக்கள் காவல் துறையை கண்டித்து திங்கள்கிழமை தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாக்களிக்கச் சென்றனர்.

ரூ. 570 கோடி பண விவகாரத்தில் வருமான வரித் துறை நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தகவல்

Posted: 16 May 2016 01:04 PM PDT

திருப்பூர் அருகே ரூ. 570 கோடி ரொக்கத்தை கொண்டு சென்ற மூன்று கன்டெய்னர்கள் பிடிபட்ட விவகாரத்தில் மத்திய வருமான வரித் துறை அடுத்த

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 72% வாக்குப்பதிவு

Posted: 16 May 2016 01:03 PM PDT

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் மழை பெய்ததால் அங்கு வாக்குப்பதிவின் அளவு மந்தமாக இருந்தது.

குஜராத் மாநில முதல்வரை மாற்ற பாஜக திட்டம்?

Posted: 16 May 2016 01:01 PM PDT

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும்,

ராகுல் காந்திக்கு காய்ச்சல்: நலம் விசாரித்தார் மோடி

Posted: 16 May 2016 01:00 PM PDT

காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடையுமாறு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிகார் பத்திரிகையாளர் கொலை: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை

Posted: 16 May 2016 01:00 PM PDT

பிகார் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி அந்த மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவின் ஏவுகணை சோதனையால் வல்லமைச் சமநிலை பாதிக்கப்படும்: பாகிஸ்தான்

Posted: 16 May 2016 12:58 PM PDT

இந்தியாவின் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையால், தெற்காசியப் பிராந்தியத்தில் வல்லமைச் சமநிலை பாதிக்கப்படும் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம்: விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை; மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தகவல்

Posted: 16 May 2016 12:09 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு வகை செய்யும் "தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை' (என்இஇடி) நிகழ் கல்வியாண்டில் நடத்தாமல் இருக்க,

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு

Posted: 16 May 2016 12:08 PM PDT

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மே 17) காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

நல்ல மாற்றத்தை வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள்

Posted: 16 May 2016 12:06 PM PDT

தேர்தலில் மக்கள் நலன் பேணும் சிறந்த ஆட்சி அமையும் வகையில் வாக்காளர்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

அதிமுக வேட்பாளரின் கார் பறிமுதல்

Posted: 16 May 2016 12:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ., தொகுதியில் வாக்குப் பதிவு நிலவரத்தை

திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

Posted: 16 May 2016 12:05 PM PDT

தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

Posted: 16 May 2016 12:04 PM PDT

இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அன்புமணி ஆட்சி அமைப்பது உறுதி: ராமதாஸ்

Posted: 16 May 2016 12:03 PM PDT

தமிழகத்தில் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளதாக வாக்குப் பதிவுக்குப் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக-காங். கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்

Posted: 16 May 2016 12:02 PM PDT

திமுக - காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்

Posted: 16 May 2016 12:02 PM PDT

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் நாராயணசாமி தெரிவித்தார்.

தேர்தலில் மக்கள் வெற்றியை அளிப்பார்கள்

Posted: 16 May 2016 12:01 PM PDT

புதுவையில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸுக்கு மக்கள் வெற்றியை அளிப்பார்கள் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் உறுதி

Posted: 16 May 2016 12:00 PM PDT

தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் 76.3 சதவீதம் வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 11:56 AM PDT

வேலூர் மாவட்டத்தில் 76.3 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குச் சாவடிகளில் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை திங்கள்கிழமை பதிவு செய்தனர்.

மமக வேட்பாளருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

Posted: 16 May 2016 11:55 AM PDT

ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தடியடி நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மக்கள் மறியல்

Posted: 16 May 2016 11:54 AM PDT

வேலூர் ஓல்டுடவுன் வாக்குச் சாவடியில் தடியடி நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாக்குச்சாவடி முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் தகராறு: 4 பேர் காயம்

Posted: 16 May 2016 11:54 AM PDT

குடியாத்தம் அருகே ஏற்பட்ட தேர்தல் தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூரில் திமுக - பாமகவினர் மோதல் நாட்டறம்பள்ளியில் அதிமுக -திமுகவினர் மோதல்

Posted: 16 May 2016 11:54 AM PDT

திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.

பெயர் தெரியுமாறு கையெழுத்திட வலியுறுத்திய வாக்குச் சாவடி அலுவலர்கள்

Posted: 16 May 2016 11:53 AM PDT

பெயர் தெரியுமாறு கையெழுத்திடும்படி வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்காளர்களை வலியுறுத்தினர்.

நாகை மாவட்டத்தில் பலத்த மழை: 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted: 16 May 2016 11:52 AM PDT

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக வேதாரண்யத்தில் 10 செ.மீ மழைப் பதிவானது.

அதிமுக - பாமக மோதல் : ஊராட்சித் தலைவர் மகன் உள்பட இருவர் காயம்

Posted: 16 May 2016 11:52 AM PDT

சோளிங்கர் தொகுதிக்கு உள்பட்ட குளத்தேரி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது அதிமுக, பாமகவினர் மோதிக் கொண்டனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரின் மகன் உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.

மூத்த அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு

Posted: 16 May 2016 11:51 AM PDT

காஞ்சிபுரத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் ஆர்வமுடன் காலையிலேயே வந்து தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சியினர் மோதல்

Posted: 16 May 2016 11:51 AM PDT

புச்சிரெட்டிப்பள்ளி கிராம வாக்குச் சாவடியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

Posted: 16 May 2016 11:50 AM PDT

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 25 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு அந்த நாட்டு நீதிமன்றங்களுக்கு

அதிமுக வேட்பாளரை வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் தடுத்த பாமகவினர்

Posted: 16 May 2016 11:49 AM PDT

கும்மிடிப்பூண்டி தொகுதி தம்புரெட்டிபாளையம் வாக்குச் சாவடியை பார்வையிட வந்த அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் மற்றும் அக்கட்சியினரை

பார்வையற்றோருக்கு...

Posted: 16 May 2016 11:48 AM PDT

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பார்வையற்றோருக்கு பிரத்யேகமான வாக்குப்பதிவு மையம் சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள

பூச்சிகளால் அசுத்தமாகும் தாஜ்மஹால்:மத்திய, உ.பி. அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

Posted: 16 May 2016 11:47 AM PDT

யமுனையாற்றில் கொட்டப்படும் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் பூச்சிகளால், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கட்டடம் அசுத்தமாவது தொடர்பாக மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாரானது தில்லி மாநில அந்தஸ்து மசோதா?

Posted: 16 May 2016 11:47 AM PDT

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, தில்லி வளர்ச்சி ஆணையம், அதிகாரிகளின் பணிமாற்றம் உள்ளிட்டவற்றை தில்லி அரசுக்கு அளிக்க வகை செய்யும் தில்லி மாநில அந்தஸ்து வரைவு மசோதா இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதனால், மத்திய அரசுடனான ஆம் ஆத்மி அரசின் மோதல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செங்குன்றத்தில் வாக்களித்தோர்...

Posted: 16 May 2016 11:47 AM PDT

மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா உயர்நிலைப் பள்ளியில் வாக்கை பதிவு செய்தார்.

இ-ரிக்ஷாக்களுக்கான ரீசார்ஜ் மையங்கள்:தில்லி தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 May 2016 11:47 AM PDT

தில்லியில் இ-ரிக்ஷாக்களுக்கான ரீ-சார்ஜ் மையங்களுக்கு பற்றாக்குறை நிலவும் விவகாரத்தில், தில்லி தலைமைச் செயலர் அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் போலீஸாருடன் ஆஸாராம் ஆதரவாளர்கள் மோதல்: 20 பேர் காயம்

Posted: 16 May 2016 11:46 AM PDT

தில்லியிலுள்ள நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு வெளியே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாமியார் ஆஸாராம் பாபுவின் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 பேர் காயமடைந்தனர்.

மின்னணு இயந்திரங்கள் கோளாறு: திருத்தணி தொகுதியில் பல இடங்களில் தாமதமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 11:46 AM PDT

திருத்தணி தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பல இடங்களில் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 16 May 2016 11:46 AM PDT

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மின்இணைப்பு பெறுவதற்கான நடைமுறை:எளிமைப்படுத்தியது தில்லி அரசு

Posted: 16 May 2016 11:46 AM PDT

தில்லியில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறையை, தில்லி அரசு எளிமைபடுத்தியுள்ளது.

திருவள்ளூரில் வாக்களித்த வேட்பாளர்கள்

Posted: 16 May 2016 11:46 AM PDT

திருவள்ளூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட வேட்பாளர்கள் காலையிலேயே தங்களது வாக்கை அந்தந்தப் பகுதிகளில் பதிவு செய்தனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்டிஎம்சி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

Posted: 16 May 2016 11:46 AM PDT

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரி ஒருவருக்கு. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

உலக பொருளாதாரத்தில் முன்னேற விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும்:சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Posted: 16 May 2016 11:45 AM PDT

உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

தொழு நோயாளிகளுக்கு தனி வாக்குப்பதிவு மையம்

Posted: 16 May 2016 11:44 AM PDT

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப்பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில்

19ஆவது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை

Posted: 16 May 2016 11:44 AM PDT

தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் கட்டடத்தின் 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு "ஆம் ஆத்மி' அரசு ஆதரவு

Posted: 16 May 2016 11:43 AM PDT

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை நடத்தும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி "ஆம் ஆத்மி' அரசு வரவேற்றுள்ளது.

பத்திரிகை விளம்பரம்: 3 மாதங்களில் ரூ.15 கோடி செலவழித்த தில்லி அரசு

Posted: 16 May 2016 11:43 AM PDT

கடந்த 3 மாதங்களில் பத்திரிகை விளம்பரங்களுக்கு தில்லி அரசு சுமார் ரூ.15 கோடியை செலவழித்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக பெண் கைது

Posted: 16 May 2016 11:42 AM PDT

தில்லியின் வஸந்த் விஹார் பகுதியில் குடிபோதையில் போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக 35 வயதான நேபாள பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

Posted: 16 May 2016 11:42 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எ.சுந்தரவல்லி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை:தெற்கு தில்லி மேயர் ஷியாம் சர்மா

Posted: 16 May 2016 11:42 AM PDT

"தெற்கு தில்லி மாநகராட்சியில் ஊழல் புரியும் யாரும் தப்பிக்க முடியாது; ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெற்கு தில்லி மாநகராட்சியின் மேயர் ஷியாம் சர்மா தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான் பெண்ணை மிரட்டியதாக தில்லியைச் சேர்ந்த பெண் கைது

Posted: 16 May 2016 11:42 AM PDT

உஸ்பெகிஸ்தான் பெண்ணை மிரட்டியதாக தில்லியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:

அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சியினர் மோதல்

Posted: 16 May 2016 11:42 AM PDT

புச்சிரெட்டிப்பள்ளி கிராம வாக்குச் சாவடியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

மயூர் விஹாரில் தமிழ்வழித் தேர்வு:13 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 16 May 2016 11:41 AM PDT

மயூர் விஹார் பேஸ் 3-இல் எட்டாம் வகுப்புத் தமிழ்வழித் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 13 மாணவர்கள் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டியில் ஆர்வத்துடன் வாக்களித்த வெளி மாநிலத்தினர்

Posted: 16 May 2016 11:41 AM PDT

கும்மிடிப்பூண்டி தொகுதியை பொருத்தமட்டில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் சுமார் 20 சதவீதம். சுமார் 2 சதவீதம் வடமாநிலத்தவர்கள்.

2ஆம் கட்ட வாகனக் கட்டுப்பாட்டின்போது காற்றுமாசு அதிகரித்தது ஏன்?: தில்லி மாசு கட்டுப்பாடு மையம் அறிக்கை

Posted: 16 May 2016 11:41 AM PDT

தில்லியில் கடந்த மாதம் கடைப்பிடிக்கப்பட்ட 2ஆம் கட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டத்தின்போது காற்றுமாசுவின் அளவு அதிகமாக பதிவாகி உள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தில்லி மாசு கட்டுப்பாடு மையம் தெரிவித்தது.

கங்கை நதி தூய்மைத் திட்டம்:மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசிக்கிறது பசுமைத் தீர்ப்பாயம்

Posted: 16 May 2016 11:41 AM PDT

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆராய, மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு உயரதிகாரிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் வெள்ளிக்கிழமை (மே 20) தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அழைப்பு விடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 71.20% வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 11:40 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சராசரியாக 71.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.16 சதவீதம் வாக்குப் பதிவு

Posted: 16 May 2016 11:39 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைதியாக முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தலில் 71.16 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மூத்த அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு

Posted: 16 May 2016 11:38 AM PDT

காஞ்சிபுரத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் ஆர்வமுடன் காலையிலேயே வந்து தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

விபத்தில் இறந்த இளைஞர்: வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸார் அலைகழிப்பு

Posted: 16 May 2016 11:38 AM PDT

காஞ்சிபுரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சில நாள்கள் கழித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால் அப்பகுதி மக்கள் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

புதுதில்லி

Posted: 16 May 2016 11:37 AM PDT

சுய முன்னேற்றம் - 36: அவசரம் ஆற்றலைக் குறைக்கும்!

Posted: 16 May 2016 11:30 AM PDT

""சார் என்னைக்கு இந்த ப்ரொஜெக்டை முடிக்கணும்..'' கையில் பைலை வாங்கிக் கொண்டே வாசு கேட்டான்.

நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 34

Posted: 16 May 2016 11:30 AM PDT

என் தோழி கடற்கரையில் கூடல் இழைக்கிறாள் (அதாவது, மணலிலே ஒரு வட்டம் வரைந்து, அதற்குள் சுழிகளை வரைந்து,

தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உதவும் தொழில், வர்த்தகக் கண்காட்சிகள்!

Posted: 16 May 2016 11:30 AM PDT

பொதுவாக தொழில் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கு தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சிகள் மிகவும் உதவிகரமாக உள்ளன.

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 36

Posted: 16 May 2016 11:30 AM PDT

புரொபஸர் கணேஷிடம் ரிப்போர்ட்டட் ஸ்பீச் (Reported speech) பற்றி விளக்கிக் கொண்டு இருக்கிறார். She says I love you என்பதை கணேஷ் தன் நண்பர்களிடம் கூறுவதானால் அதை ரிப்போர்ட்டட் ஸ்பீச்சிலே சொல்லி ஆக வேண்டும். எப்படி சொல்வது பார்ப்போம்.

தமிழக அரசில் வேலை

Posted: 16 May 2016 11:30 AM PDT

பணி: Multi-tasking staff

பகுதி - 243

Posted: 16 May 2016 11:30 AM PDT

உன் தேவியரான வள்ளி தேவானையரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாயோ?

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 1

Posted: 16 May 2016 11:30 AM PDT

கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் சிவபிரான் தன்னை என்று வந்தாய் என்று கேட்பதாக உணர்ந்த அப்பர் பிரான் இந்தப் பதிகத்தில் அந்த

கவனம் திரும்பட்டும்... நிகழ்வு மேலாண்மைத்துறையில்...!

Posted: 16 May 2016 11:30 AM PDT

திருமணம் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளாகட்டும், மாநாடு, கருத்தரங்கம் போன்ற பொது நிகழ்ச்சிகளாகட்டும் அவற்றை நடத்திக் கொடுப்பதற்கு என்றே உள்ளனர் ஈவண்ட் மேனேஜ்மென்ட் (EVENT MANAGEMENT) நிறுவனத்தினர்.

ஐ.நா.சபை வழங்கும் அரசியல் கார்ட்டூன் விருது!

Posted: 16 May 2016 11:30 AM PDT

உலகின் அரசியல் நிலையினை வெளிப்படுத்தும் வகையிலான கேலிச்சித்திரங்களுக்கு ஐக்கியநாடுகள் அவை ராணன் லூரி அரசியல் கேலிச்சித்திர விருதுகளை (The United Nations  Ranan Lurie Political Cartoon Awards) வழங்கி வருகிறது.

17.05.1984 - கட்ச் வளைகுடா பகுதியில் எண்ணெய் கண்டுபிடிப்பு

Posted: 16 May 2016 11:30 AM PDT

இந்தியாவின் எண்ணெய் எரிவாயுக் கமிஷன் கட்ச் வளைகுடா பகுதியில் கடலுக்கு அடியில் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றைக் கண்டுபிடித்துள்ளது என நம்பகமாகத் தகவல் கிடைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™