Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி? காணொளி விளக்கம்!

Posted: 26 May 2016 02:00 PM PDT

கோலாலம்பூர் – தட்டச்சுப் பொறிகளில் (டைப்ரைட்டர்) தமிழைப் பயன்படுத்தும் காலகட்டம் கடந்து போக, இப்போது கணினிகளில் தமிழைத் தட்டச்சு செய்யும் காலம் வந்துவிட்டது. இப்போது அதையும் தாண்டி, ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில், தமிழ் அரங்கேறி, இப்போது கைத்தொலைபேசிகளிலேயே தமிழைத் தட்டச்சு செய்து ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது. செல்லினம் குறுஞ்செயலி (மொபைல் எப்) மூலம் இத்தகைய தமிழ் மொழி தட்டச்சு பரிமாற்றங்கள் சாத்தியமாகியுள்ளது. சரி "தமிழில் ...

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

Posted: 26 May 2016 01:34 PM PDT

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக் கன்கள் வழங்கப்பட்டது. தற்போது, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் டோக்கன் பெற்றவர்கள் ...

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Posted: 26 May 2016 01:06 PM PDT

தமிழக அரசு இலவசமாக அறிவிக்கப்பட்ட 100 யூனிட்டுகளுக்கு மேல், நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் 80 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் மே 23 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே அந்த தேதிக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் அந்த சலுகை பொருந்தும். 100 யூனிட் வரை நீங்கள் பயன்படுத்தும் ...

அம்மாபுக், அம்மா மெயில்: எவன் பார்த்த வேலைடா இது????????

Posted: 26 May 2016 12:59 PM PDT

அம்மாபுக், அம்மா மெயில்: எவன் பார்த்த வேலைடா இது???????? சென்னை: அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் வரிசையில் பல தயாரிப்புகளை அம்மாவின் பெயரால் கற்பனை செய்துள்ளனர் நெட்டிசன்கள். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் என்று பல பொருட்களை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அம்மா பெயரில் புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளனர். அம்மாபக்ஸ் ...

தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் !

Posted: 26 May 2016 12:39 PM PDT

தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! சென்னை: பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ் தெரியாத பிற மாநில ...

. மழை வருமா என்பதை ரமணனைவிட சரியாக கணிக்கும் கோயில் கூரை!

Posted: 26 May 2016 12:27 PM PDT

அட உண்மைதானுங்க.. மழை வருமா என்பதை ரமணனைவிட சரியாக கணிக்கும் கோயில் கூரை! கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே கடம்பூர் எனும் பகுதியில் உள்ள ஜெகன்நாதர் என்ற விஷ்ணு கோயிலின் மேற்கூரையில் தெரியும் நீர் துளியை கொண்டு மழை பெய்யுமா இல்லையா என்பதை நூறாண்டுகளாக மக்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். அசோக மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் நாட்டின் பல்வேறு கட்டிட அம்சங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்த கோயில் 'மழைக் கோயில்' என அழைக்கப்படுகிறது. பருவமழை தொடங்கும் காலத்திற்கு முன்பு ...

புதுப்பிக்கப்பட்ட பாண்டுரங்கன் ஆலயம்!

Posted: 26 May 2016 12:06 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ளது கதிராமங்கலம் கிராமம். முற்காலத்தில் மிகவும் செழிப்புற்று விளங்கிய இப்பகுதியில் நெற்கதிரைக் கொண்டே வீட்டின் கூரையை அமைத்தார்களாம். இதனை கம்பர் தனது பாடல்களில் "கதிர்வேந்தமங்கலம்' என்று அழகு தமிழில் அழகுற குறிப்பிட்டுள்ளார். இங்குதான் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு மிருகண்டு முனிவர் பூஜித்த வனதுர்க்கை அம்மன் தனிக்கோயில் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம். இந்த வனதுர்க்கை பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து ...

மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!

Posted: 26 May 2016 12:03 PM PDT

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தும் காவலர்களின் கெடுபிடியால் முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். உலக தரத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...

நூற்றாண்டுகளில் வரலாறு

Posted: 26 May 2016 11:42 AM PDT

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 26 May 2016 11:41 AM PDT

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ...

உலகளவில் பேஸ்புக்கில் அதிகமாக லைக் செய்யப்படும் தலைவர்களில் 2-வது இடம் பிடித்த மோடிஜி !

Posted: 26 May 2016 11:38 AM PDT

2-வது ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி உலக அளவில் பேஸ்புக்கில் 'லைக்'குகளை அள்ளுவதிலும் 2-வது இடத்தில் இருக்கிறார். உலகிலேயே அதிகமாக லைக் செய்யப்படும் தலைவர்கள் யார்? என்ற பட்டியலை பேஸ்புக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தையும், பிரதமர் மோடி 2-வது இடத்தையும், துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் 3-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் தனது தாயாருடன் இருப்பது போன்ற போட்டோவை ...

சதுரகிரி பயணம்.....

Posted: 26 May 2016 11:35 AM PDT

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. சுந்தரலிங்கத்திற்கு அரோகரா! சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!! சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை

Posted: 26 May 2016 11:24 AM PDT

- நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கெனவே -பீப்- பாடல் சர்ச்சையில் சிக்கித் தவித்த நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்த -இது நம்ம ஆளு- படம் வெள்ளிக்கிழமை(மே 27) வெளியாகிறது.. இந்த நிலையில், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க கோரி, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி ...

'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Posted: 26 May 2016 11:24 AM PDT

- 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட ஆச்சி மனோரமாவின் 78 வது பிறந்தநாளில், அவர் குறித்த சில விவரங்களை நினைவு கூறலாம். *நாடக நடிகை, காமெடி நடிகை, பாடகி, வில்லி, தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர். *தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். *5 முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் மகிழ்வித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. *4 தலைமுறை நடிக, நடிகையருடன் சேர்ந்து ...

மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!!

Posted: 26 May 2016 11:04 AM PDT

- @kattathora மனைவி அமைவதெல்லாம் இறைவன் (கடுப்புல) கொடுத்த வரம்! - ------------------------------------- - ''சார், உங்க நாலு பசங்களும் என்ன பண்றாங்க?'' ''மூத்தவன் எம்.ஏ படிச்சிருக்கான். ரெண்டாவது பையன் எஞ்சினியரிங் முடிச்சிருக்கான். மூணாவது பையன் பி.காம் படிச்சிருக்கான். நாலாவது பையன் மட்டும் ஒண்ணும் படிக்காம பிக் பாக்கெட் அடிக்கிறான்!'' ''அய்யோ, அப்படிப்பட்ட பையனை ஏன் சார் வீட்ல வச்சிருக்கீங்க?'' ''என்ன பண்றது? அவன் ஒருத்தன்தான் சம்பாதிக்கிறான்!'' - ---------------------------------------- - கையேந்தும் ...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் ராஜ்

Posted: 26 May 2016 10:53 AM PDT

அனைவரும் நலமா ...

முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:

Posted: 26 May 2016 10:43 AM PDT

அஸ்ஸாம் அமைச்சரவையின் முதல் முடிவு - - முதல்வர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. - மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு முதல்வர் செல்லும்போது, அதனால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. - அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றது. சர்வானந்த சோனோவால் முதல்வராகப் ...

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெங்கய்ய நாயுடு: பாஜக முடிவுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு

Posted: 26 May 2016 10:43 AM PDT

- மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பதவி காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே மீண்டும் கர்நாடகா வில் இருந்து பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த முடிவுக்கு கர்நாடக ரக்ஷன வேதிகே, நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல பெங்களூரு ஐ.டி. கன்னட‌ நண்பர்கள் குழுவினரும் வெங்கய்ய நாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் போராட்டத்தை நடத்தி ...

காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

Posted: 26 May 2016 10:40 AM PDT

காய்கறி விலை கிடுகிடு உயர்வு: 3 மாநிலங்களில் விளைச்சல் சரிவு ! மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது. தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவை ...

மும்பை ரசாயன ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி; காயம் 50

Posted: 26 May 2016 10:39 AM PDT

- வெடிவிபத்து நடந்த பிறகு தீயில் கருகிய தொழிற்சாலைப் பகுதி. | படம்: லெவின் ராஜு. மும்பை டோம்பிவிலியில் உள்ள ரசாயன ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 3 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டோம்பிவிலியில் உள்ள ஆச்சாரிய ரசாயன ஆலையில் கொதிகலன் அறையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 3 பேர் பலியாகி, ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தானே போலீஸ் அசுதோஷ் தும்பாரே தெரிவிக்கும் போது, "இந்த வெடிவிபத்தில் ...

முதல்முறையா ஒரு பெண் என்னிடம் பேசினாள்...!!

Posted: 26 May 2016 10:38 AM PDT

- @pshiva475 முதல்முறையா ஒரு பெண் என்னிடம் பேசினாள். பஸ்ல அமர்ந்திருந்தேன். அவள் நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்து, ''இது லேடீஸ் சீட்டு, முதல்ல எந்திரி!'' என்றாள். - ------------------------------------- - ‪பணத்தை‬ ஏழைகளுக்குக் கடனாகவும், பணக்காரர்களுக்கு நன்கொடையாகவும் கொடுக்கும் இடத்திற்குப் பெயர்... ‪வங்கி‬! - - இளையராஜா அனந்தராமன் - ------------------------------------------- - @Kozhiyaar ஒண்ணு வியர்வைல நனைய வேண்டியதா இருக்கு; இல்ல, மழைல நனைய வேண்டியதா ...

நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம் அப்பவே இருந்திருக்கு...!!

Posted: 26 May 2016 10:36 AM PDT

- நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம் அப்பவே இருந்திருக்கு... நம்ம பிரதமரே பி.ஏ படிச்சிட்டு டீக்கடைதான் வெச்சிருந்திருக்கார்! - - திப்புசுல்தான் கே - ----------------------------------------- - @aruntwitz பிடித்தமானவற்றை மனதில் சேமித்த காலம் அழிந்து, 'போன் கேலரி'யில் மட்டுமே சேமிக்கும் காலமாகி விட்டது. - ------------------------------------ - மொழி கூட ஒரு தொற்று நோய் போலத்தான்.... பேசப் பேச ஒட்டிக்கும்! - - ப்ரீதா ராஜேஷ் - -----------------------------------

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Posted: 26 May 2016 10:23 AM PDT

எண்ணெய் விலை சரிவு: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் கட்டுமான தொழிலாளர்களாகவும், எலக்ட்ரீசியன்களாகவும் ஏராளமானோர் ...

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Posted: 26 May 2016 10:20 AM PDT

புதுடில்லி : இந்தியாவில் இருந்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி, 'மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு குறித்த அறிக்கையை, இந்திய நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும்' என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை, இம்மாதம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, 'ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், ...

மே 25, 2016 உலக தைராய்டு தினம்.

Posted: 26 May 2016 10:01 AM PDT

நேற்று மே 25, 2016 உலக தைராய்டு தினம்.



சினிமா நியூஸ்...

Posted: 26 May 2016 08:58 AM PDT

'அரண்மனை 2', 'நாயகி' எனப் பேய் படங்களையும் ஒரு கை பார்க்கத் தொடங்கிவிட்ட த்ரிஷா, தற்போது இன்னும் ஒரு பேய் படத்தில் மிரட்ட இருக்கிறாராம். 'மதுர', 'மிரட்டல்' படங்களை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் த்ரிஷாதான் பேய். அதுவும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம். 'சிங்கம் 2' படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. முழுக்க வெளிநாடுகளில் உருவாகிறது படம். ஒரு பேய்க்கே முடியல, இதுல ரெண்டு பேயா? 'சபாஷ் நாயுடு' என்று பெயரிலேயே கலவரத்தை ஆரம்பித்து வைத்த கமல்ஹாசன், ...

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Posted: 26 May 2016 04:34 AM PDT

- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். - இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ஹைதராபாத். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற கொல்கத்தா போட்டியிலிருந்து வெளியேறியது. - தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ஷகிப் அல்ஹசன், அங்கித் ராஜ்புட் ஆகியோருக்குப் பதிலாக மோர்ன் மோர்கல், ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். - ஹைதராபாத் ...

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Posted: 26 May 2016 12:40 AM PDT

'சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு - மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு! சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கேசொந்தமான கையிருப்பு!வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!'' என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.சுவைபட நகைத்தலே நகைச்சுவை. நல்ல கருத்து+சிரிப்பு= நகைச்சுவை என்றால் வரவேற்பிற்குரியது. எதிராளியின் மனதைப் புண்படுத்தாத வேடிக்கை, விளையாட்டு, தமாஷ், ஹாஸ்யம், கேலி என ...

இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்

Posted: 25 May 2016 09:39 PM PDT

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மொத்த மக்கள் ...

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு

Posted: 25 May 2016 09:37 PM PDT

- 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை விலங்கிடவோ அல்லது அவர்களை சிறைக்கு அனுப்பவோ கூடாது என்று 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகள், மூத்த நீதிபதி, வழக்குரைஞர்கள், சிறார் குற்றவாளிகள் நீதி வாரியம், குழந்தைகள் நலவாரிய குழு உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மனநல நிபுணர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது. ...

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 25 May 2016 09:32 PM PDT

தமிழக சட்டப்பேரவைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 3-ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து இன்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சபாநாயகர் வேட்பாளராக ப.தனபால், மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாட்சி ஜெயராமன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓ. பன்னீர்செல்வம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர், பேரவை முன்னவராகவும், ...

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Posted: 25 May 2016 07:45 PM PDT

- கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் நடிகையாக இருந்து பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவர் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெண் எம்.எல்.ஏ. நடந்து முடிந்த அசாம் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட 6 பெண் வேட்பாளர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் அங்குர்லதா தேகா என்ற பெண்ணும் ஒருவர். அவர் படாத்ரோபா தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் மந்திரி கவுதம் ...

ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம்: டிவில்லியர்ஸ்

Posted: 25 May 2016 06:51 PM PDT

- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். - பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். - இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்தபோது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™