Tamil News | Online Tamil News |
- 'விசுவாசத்தை நிரூபிக்க 'பாண்டு' தேவையில்லை'
- எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- பணம் தருகிறேன்; விஜயகாந்த் உத்தரவாதம்
- நரிக்குறவர்களுக்கான சலுகை: மத்திய அரசுக்கு கருணாநிதி பாராட்டு
- மை அழிவதற்குள் மறுபடியும் தேர்தல்!: திருப்பரங்குன்றத்தில் 'திருமங்கலம் பார்முலா'
- துவங்கியது மோடி அரசின் இரண்டாண்டு ஆட்சி குறித்து விவாதம் கொண்டாட்டத்தில் பா.ஜ., வறுத்தெடுக்கும் காங்.,
- சட்டசபை தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள்...கணக்கெடுப்பு!: டூகளையெடுப்பு நடத்த ஆயத்தமாகி விட்டது அ.தி.மு.க., மேலிடம்
- எஸ்.ஆர்.பி.,க்கு வாழ்த்து த.மா.கா.,வில் சலசலப்பு
- இலவச 'லேப் - டாப்' வினியோகம் எப்போது?
- ரூ.1,000 கோடியில் விளம்பரம்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் புகார்
| 'விசுவாசத்தை நிரூபிக்க 'பாண்டு' தேவையில்லை' Posted: 26 May 2016 08:46 AM PDT அமேதி,: ''எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள், கட்சிக்குவிசுவாசமாக இருப்பதாக, 'பாண்டு' எனப்படும் பத்திரம் எழுதி தரும் நிலையில், பா.ஜ., இல்லை,'' என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ராகுலை எதிர்த்து...மேற்கு வங்க மாநிலத்தில், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 'வேறு கட்சிக்கு மாற மாட்டோம்' என, பத்திரம் எழுதித் தந்துள்ளனர்.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி பயணம் செய்தார். கடந்த லோக்சபா ... |
| எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: 26 May 2016 09:34 AM PDT எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு, ஜூன், 3ம் தேதி வெளியாகிறது. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, 89 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை, தி.மு.க., பெற்றுள்ளது. தி.மு.க., சட்டசபை தலைவராக, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான கடிதம், சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்ட தற்கான அறிவிப்பு, ஜூன், 3ம் தேதி, முறைப்படி ... |
| பணம் தருகிறேன்; விஜயகாந்த் உத்தரவாதம் Posted: 26 May 2016 09:38 AM PDT 'தோல்வியடைந்த தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு, ஜூன் 5ம் தேதிக்குள், கட்சி தலைமை பண உதவி செய்யும்' என, விஜயகாந்த் உறுதி அளித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ம.ந.கூ., - த.மா.கா.,வுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்த தே.மு.தி.க., 104 இடங்களில் போட்டி யிட்டது; அனைத்து இடங்களிலும், படுதோல்வி யை சந்தித்தது. இதனால், கட்சியே கலகலத்து போய் உள்ளது. இதை சரிசெய்ய, கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை, சென்னைக்கு வரவழைத்து, விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், 92 வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.மற்றவர்கள், பல காரணங்களை கூறி தவிர்த்து ... |
| நரிக்குறவர்களுக்கான சலுகை: மத்திய அரசுக்கு கருணாநிதி பாராட்டு Posted: 26 May 2016 09:58 AM PDT சென்னை,: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக வந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது.நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நீண்ட காலக் கோரிக்கை. நரிக்குறவர்களின் முன்னேற் றத்திற்காகவும், அவர்கள் பழங்குடியினர் பட்டிய லில் இடம் பெற்று, அதன் மூலம் பல்வேறு சலுகை களையும் பெற்றுமேம்பாடு அடைய ... |
| மை அழிவதற்குள் மறுபடியும் தேர்தல்!: திருப்பரங்குன்றத்தில் 'திருமங்கலம் பார்முலா' Posted: 26 May 2016 09:59 AM PDT சட்டசபை தேர்தல் முடிந்து, விரல் மை அழிவதற்குள்ளாக, திருப்பரங்குன்றத்தில், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவேல், பதவியேற்பதற்கு முன்னதாகவே மரணம் அடைந்தார். இங்கு, இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.ஒரே ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்துவது என்பது, சாதாரண விஷயம் அல்ல. அதற்கு, அறிவிக்கை வெளியிடுவதில் துவங்கி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படை, தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ... |
| Posted: 26 May 2016 10:25 AM PDT பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, பா.ஜ.,வின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன; அதே நேரத்தில், 'ஒன்றுமே நடக்கவில்லை' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. இதன் மூலம் இந்த இரண்டு ஆண்டுகளில், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விவாதம் துவங்கி உள்ளது.கடந்த, 2014 மே, 26ல், மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. பதவியேற்பு விழாவுக்கு, அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்தது; பார்லிமென்ட்டின் படிகளில் மண்டியிட்டு வணங்கியது என, மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக ... |
| Posted: 26 May 2016 10:39 AM PDT சட்டசபை தேர்தலில், உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட நிர்வாகிகள் பற்றிய கணக்கெடுப்பு, அ.தி.மு.க.,வில் துவங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன், அவர்களை களையெடுக்க, கட்சி மேலிடம் ஆயத்தமாகி வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தோல்வி அடைந்தனர். 'சீட்' கிடைக்காத மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள், ஒரு பக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக காட்டிக் கொண்டனர். மறுபக்கத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயித்தால், அதன் பின், தொகுதி தனக்கு கிடைக்காமல் ... |
| எஸ்.ஆர்.பி.,க்கு வாழ்த்து த.மா.கா.,வில் சலசலப்பு Posted: 26 May 2016 10:42 AM PDT அ.தி.மு.க.,வில் சேர்ந்த எஸ்.ஆர்.பி.,க்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது, த.மா.கா.,வில் உள்ள அவரது சகாக்களுக்கு ஆசையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், எஸ்.ஆர்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்துள்ள னர். அவர்களும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால், த.மா.கா.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., இடம்பெற வேண்டும் என,அக்கட்சியினர் விரும்பினர். ஆனால், அவர்களின் எண்ணத்திற்கு மாறாக, மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா., இடம்பெற்றது. இத னால், மூத்த துணைத் தலைவராக இருந்த எஸ்.ஆர். ... |
| இலவச 'லேப் - டாப்' வினியோகம் எப்போது? Posted: 26 May 2016 01:02 PM PDT கடந்த ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்', இந்த ஆண்டு தாமதமாக தான் கிடைக்கும் என, தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகளிடையே பல குழப்பம் நிலவி வருகிறது. கடந்த, 2011ல் ஆட்சியில் அமர்ந்த போது, மாணவர்களுக்கு இலவச, 'லேப் - டாப்' திட்டத்தை அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது. ஐந்து ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாயில், 32 லட்சம் லேப் - டாப்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கின. விரைவில் திறப்பு: தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க வெகு சில நாட்களே இருக்கும் ... |
| ரூ.1,000 கோடியில் விளம்பரம்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் புகார் Posted: 26 May 2016 01:15 PM PDT
புதுடில்லி : ''மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்று, இரண்டாண்டுகள் நிறைவடைந்து உள்ளதை ஒட்டி, விளம்பரத்திற்காக, 1,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, வரும், 28ல், டில்லியின் இந்தியா கேட் பகுதியில் பிரம்மாண்ட விழா நடக்கிறது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்கும் விழா, அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் விதமாக நடக்கிறது. இரண்டாண்டு நிறைவையொட்டி, விளம்பரங்களும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 27,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |