Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தீபத்தின் ஓளியில்:  லட்சுமிபாலா

Posted: 22 May 2016 11:04 PM PDT

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்ஆந்திர புலனாய்வு குழு அறிக்கையை ஏற்கத் தேவையில்லை:நீதிபதி முருகேசன் தகவல்

Posted: 22 May 2016 01:13 PM PDT

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த மாநில அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

என்னவாகும் காங்கிரஸ்?

Posted: 22 May 2016 01:12 PM PDT

தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் அ.தி.மு.க.வும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது.

அறத்தேவதை உறங்குவதில்லை பெரும் நிலநடுக்கத்திற்குப் பின் நில

Posted: 22 May 2016 01:11 PM PDT

அதிர்வுகள் ஏற்படுவதைப் போல தமிழக அரசியல் அடுத்தடுத்து அதிர்வலைகளை எழுப்பியபடியே இருக்கிறது.

எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்

Posted: 22 May 2016 01:09 PM PDT

மனிதர்களின் வாழ்க்கையே எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒளியும் இருளும், இன்பமும் துன்பமும், போராட்டமும், அமைதியும், வறுமையும், செல்வமும், வாழ்வும், தாழ்வும், அறிவும், அறியாமையும்,

முதியவரைத் தாக்கியதாக இளைஞர் கைது

Posted: 22 May 2016 01:05 PM PDT

கயத்தாறு அருகே முதியவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 22 May 2016 01:04 PM PDT

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் மீது வழக்கு

Posted: 22 May 2016 01:03 PM PDT

திருச்செந்தூர் கோயில் பணியாளரை அவதூறாகப் பேசியதாக அர்ச்சகர் மீது இணை ஆணையர் போலீஸில் புகார் அளித்தார்.

நாசரேத் அருகே இரு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

Posted: 22 May 2016 01:02 PM PDT

நாசரேத் அருகே இரு இடங்களில், பெண்களிடம் நகையைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாறமங்கலம் ஸ்ரீசந்திரசேகரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 22 May 2016 01:01 PM PDT

கொற்கை அருகேயுள்ள மாறமங்கலம், ஸ்ரீசந்திரசேகரி அம்மன் சமேத ஸ்ரீசந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருச்செந்தூர் முத்துமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

Posted: 22 May 2016 01:01 PM PDT

திருச்செந்தூர் குமாரபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்  நடைபெற்றது.

ஆறுமுகனேரி இலங்கத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Posted: 22 May 2016 01:00 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீ இலங்கத்தம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பனைக்குளம் கிறிஸ்துஅரசர் ஆலயத் திருவிழா

Posted: 22 May 2016 01:00 PM PDT

சாத்தான்குளம் அருகே பனைக்குளம் கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர் கூட்டம்

Posted: 22 May 2016 12:59 PM PDT

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 1999ஆம் ஆண்டு, 12ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சந்தித்து தங்களது பழைய நினைவுகள் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி சனிக்கிழமை  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசேகர் தலைமை வகித்தார்.

தேசிய ஹாக்கி: ஒடிஸா, பெங்களூரு, மகாராஷ்டிர அணிகள் வெற்றி

Posted: 22 May 2016 12:58 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஒடிஸா, பெங்களூரு,  மகாராஷ்டிர அணிகள் வெற்றி பெற்றன.

கன்னியாகுமரி

Posted: 22 May 2016 12:58 PM PDT

இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 22 May 2016 12:57 PM PDT

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்  திங்கள்கிழமை (மே 23) நடைபெறும்.

55 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted: 22 May 2016 12:57 PM PDT

குமரி அறிவியல் பேரவை சார்பில் 55 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.

ஜூன் 7இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 22 May 2016 12:56 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் ஜூன் 7இல் நடைபெறுகிறது.

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் வெள்ளம்

Posted: 22 May 2016 12:56 PM PDT

கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தஞ்சாவூர்

Posted: 22 May 2016 12:55 PM PDT

காஞ்சி மகாபெரியவர் ஜயந்தி: அன்னதானம்

Posted: 22 May 2016 12:55 PM PDT

காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 123-வது ஜயந்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை 75-க்கும் மேற்பட்ட இடங்களில் 46 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

Posted: 22 May 2016 12:55 PM PDT

விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் புதிதாகப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

குடந்தையில் இயற்கை நல்வாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்: 7 நாட்கள் நடைபெறுகிறது

Posted: 22 May 2016 12:54 PM PDT

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கத்தின் சார்பில் 31-வது இயற்கை நல்வாழ்வுப் பயிற்சி முகாம் கும்பகோணம் கீழக்கொட்டையூர் வள்ளலார் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.

கண்ணந்தங்குடி கோயிலில் வைகாசி திருவிழா

Posted: 22 May 2016 12:53 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி ஸ்ரீமலையேறியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் 7 இடங்களில் சோதனைச் சாவடி

Posted: 22 May 2016 12:53 PM PDT

தஞ்சாவூர் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், 7 இடங்களில் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுபுகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 22 May 2016 12:52 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை அதிகாலை வீடுபுகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

பூண்டி கல்லூரி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Posted: 22 May 2016 12:52 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் ஏப்ரல் 2016 பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 23) இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

முதல்வருக்கு தமிழ் அமைப்புகள் வாழ்த்து

Posted: 22 May 2016 12:51 PM PDT

ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழ்நாடு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

திருவோணம் அருகே கோயிலில் நகை, ரொக்கம் திருட்டு

Posted: 22 May 2016 12:51 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் பூட்டை உடைத்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆலய வழிபாட்டுமுறை: இலவச பயிற்சி முகாம்

Posted: 22 May 2016 12:50 PM PDT

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை வீரபிரம்ம ஆத்மானந்த குருபீடத்தில் அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், 14 நாள் ஆலய வழிபாட்டுமுறை இலவச பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார் தஞ்சை திமுக வேட்பாளர்

Posted: 22 May 2016 12:49 PM PDT

தஞ்சாவூர் தொகுதியில் ஜூன் 13-ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார்.

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் தெப்ப விழா

Posted: 22 May 2016 12:48 PM PDT

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

உண்டியல் திருட்டில் தொடர்புடைய வட மாநில இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு

Posted: 22 May 2016 12:47 PM PDT

கீழாநிலைகோட்டை அருகே கோயில் உண்டியல் திருட்டில் தொடர்புடைய வட மாநில இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

இன்று குறைகேட்பு முகாம்

Posted: 22 May 2016 12:46 PM PDT

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு   திங்கள் கிழமை தோறும்  ஆட்சியரகத்தில் நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

மதுக்கூடத்தில் தகராறு: இருவர் கைது

Posted: 22 May 2016 12:46 PM PDT

புதுக்கோட்டை அருகே அரசு மதுபானக் கூடத்தில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட 2 பேரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 22 May 2016 12:45 PM PDT

நிகழாண்டில் பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு திருவரங்குளம் ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பான மோதல்களை கட்டுப்படுத்தி சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தல்

Posted: 22 May 2016 12:44 PM PDT

கறம்பக்குடி பகுதியில் எழுந்துள்ள தேர்தல் தொடர்பான முன்விரோத மோதல்களை கட்டுப்படுத்தி சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

முள்புதர்கள் மண்டி கிடக்கும் கண்டிராதித்தம் பெரிய ஏரி

Posted: 22 May 2016 12:43 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே முள்புதர்கள் மண்டி கிடக்கும் கண்டிராதித்தம் பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

Posted: 22 May 2016 12:43 PM PDT

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சாலை விதிமீறல்: 40 பேர் மீது வழக்கு

Posted: 22 May 2016 12:42 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விதிமுறைகளை மீறியதாக 40 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

பராமரிப்பற்ற நிலையில் சிறுவர் பூங்கா

Posted: 22 May 2016 12:41 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் குளம் தூர்வாரப்படுமா?

Posted: 22 May 2016 12:41 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜயங்கொண்டம் அருகே புதுமணப்பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை

Posted: 22 May 2016 12:40 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் ஆன பெண் இறந்தது குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Posted: 22 May 2016 12:40 PM PDT

அரியலூர் - திருமானூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 22 May 2016 12:39 PM PDT

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

என்ஜின் கோளாறு: நாகர்கோவில் பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

Posted: 22 May 2016 12:39 PM PDT

கரூர் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 2 மணி நேர தாமத்துக்குப் பின்னர் கரூரிலிருந்து ரயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

செவிலியர்களுக்கு முதலுதவி பயிற்சி

Posted: 22 May 2016 12:38 PM PDT

கோவை மெடிக்கல் மருத்துவமனை சார்பில் கரூரில் செவிலியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருண் விஜய் உடல் நலம் பெற வேண்டி கரூரில் சர்வ சமய பிரார்த்தனை

Posted: 22 May 2016 12:37 PM PDT

மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் விரைவில் உடல்நலம் பெற வேண்டி கரூரில் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் சர்வ சமய பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருவிழாவில் இளைஞருக்கு கத்திக் குத்து: நீதிமன்றத்தில் இருவர் சரண்

Posted: 22 May 2016 12:37 PM PDT

திருச்சி அருகே கோயில் திருவிழாவில் இளைஞரை கத்தியால் குத்திய வழக்கு தொடர்பாக இருவர் திருச்சி நீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை சரணடைந்தனர்.

ரயில்வே ஊழியர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

Posted: 22 May 2016 12:37 PM PDT

திருச்சி அருகே காட்டூரில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சோனியா இல்லாவிட்டால் காங்கிரஸ் உடைந்திருக்கும்

Posted: 22 May 2016 12:35 PM PDT

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சக்தி சோனியா காந்தி தான்; அவர் இல்லையெனில் அக்கட்சி உடைந்து போயிருக்கும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமான நபர்தான் என்றும் அவர் கூறினார்.

பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு: பரணி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

Posted: 22 May 2016 12:34 PM PDT

பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

என்இஇடி அவசரச் சட்ட விவகாரம்:பிரணாப் முகர்ஜியிடம் ஜே.பி.நட்டா இன்று விளக்கம்

Posted: 22 May 2016 12:34 PM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை (என்இஇடி) நிகழ் கல்வியாண்டில் ஒத்தி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா திங்கள்கிழமை (மே 23) விளக்கம் அளிக்கவுள்ளதாக அவரது அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கரூர் மாரியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

Posted: 22 May 2016 12:34 PM PDT

கரூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே 23) நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு

Posted: 22 May 2016 12:33 PM PDT

அஸ்ஸாமில் ஆட்சி அமைக்குமாறு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான அஸ்ஸாம் கண பரிஷத், போடோ மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கு ஆளுநர் பி.பி.ஆச்சார்யா ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார்.

கரூரில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

Posted: 22 May 2016 12:33 PM PDT

கரூரில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

மகாராஷ்டிர பாஜக அமைச்சருடன் தாவூத் தொலைபேசியில் பேசவில்லை:மும்பை போலீஸார் விளக்கம்

Posted: 22 May 2016 12:32 PM PDT

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிர பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்சேவுடன் தொலைபேசியில் பேசவில்லை என்று மும்பை நகர போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

ரகசிய விடியோ விவகாரம்:ஹரீஷ் ராவத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

Posted: 22 May 2016 12:32 PM PDT

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது போன்ற ரகசிய விடியோ வெளியான விவகாரத்தில், உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும்

Posted: 22 May 2016 12:31 PM PDT

சட்டப் பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும் என அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பருவமழைக் காலத்தில் மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க வேண்டும்:நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

Posted: 22 May 2016 12:29 PM PDT

பருவ மழைக்காலத்தில் மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தேர்த் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 22 May 2016 12:28 PM PDT

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 22 May 2016 12:27 PM PDT

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, மீதமுள்ள வேட்பாளர்களைக் கொண்டு வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக ரயில் திட்டங்களில் தேக்கம் இல்லை:ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம்

Posted: 22 May 2016 12:27 PM PDT

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

உதகையில் மலர்க் காட்சி: தாவரவியல் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 22 May 2016 12:25 PM PDT

உதகையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறவுள்ள 120-ஆவது மலர்க் காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் நாளை தாயகம் வருகை

Posted: 22 May 2016 12:25 PM PDT

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேரும் செவ்வாய்க்கிழமை காரைக்கால் வரவுள்ளனர்.

ரமலான் நோன்பு காலத்தில் தேர்தல்:அரவக்குறிச்சி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

Posted: 22 May 2016 12:25 PM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலை ரமலான் நோன்பு காலத்தில் நடத்துவதற்கு அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் அருகேகுடும்பத் தகராறில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகன்

Posted: 22 May 2016 12:24 PM PDT

கரூர் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரையில் 5ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

Posted: 22 May 2016 12:23 PM PDT

மதுரையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 5-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி இறந்தார்.

ரயில்வே ஊழியர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

Posted: 22 May 2016 12:23 PM PDT

திருச்சி அருகே காட்டூரில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநில 13-ஆவது சட்டப்பேரவை கலைப்பு:பேரவைச் செயலர் அறிவிப்பு

Posted: 22 May 2016 12:22 PM PDT

புதுச்சேரி மாநிலத்தின் 13-ஆவது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக பேரவைச் செயலாளர் சு.மோகன்தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேனியில் ஆட்டோ, பைக், பேருந்து மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சாவு

Posted: 22 May 2016 12:22 PM PDT

தேனியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ, இரு சக்கர வாகனம், தனியார் பேருந்து ஆகியன கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்ட விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கேரள வன்முறை: குடியரசுத் தலைவரிடம் பாஜக புகார்

Posted: 22 May 2016 12:21 PM PDT

கேரளத்தில் பாஜக தொண்டர் ஒருவர் இடதுசாரிகளால் கொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.

தேர்தல் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாஜகவினர் வன்முறை

Posted: 22 May 2016 12:20 PM PDT

கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.

ராமானுஜரின் தத்துவங்களை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்

Posted: 22 May 2016 12:19 PM PDT

ராமானுஜரின் தத்துவங்களை பள்ளி, கல்லூரிப் பாடங்களில் சேர்க்க வேண்டும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.

மோடி தனிநபர் ஆட்சி நடத்தவில்லை

Posted: 22 May 2016 12:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தனிநபர் ஆட்சி நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தேர்தல் நடத்தை மீறல்:பாஜக எம்.பி., உ.பி. அமைச்சர்களுக்கு எதிராக வாரண்ட்

Posted: 22 May 2016 12:18 PM PDT

கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நடத்தை விதிகளை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, உத்தரப் பிரதேச அமைச்சர்கள் சிவபால் யாதவ், பாரஸ்நாத் யாதவ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராகவும் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

மம்தா பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமர் பங்கேற்கிறார்

Posted: 22 May 2016 12:18 PM PDT

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அந்த மாநில முதல்வராக வரும் 27ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். இந்த விழாவில், பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கே பங்கேற்க உள்ளார்.

சோனியாவை சுற்றியுள்ள தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்:காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் சந்திர தேவ்

Posted: 22 May 2016 12:18 PM PDT

""காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கட்சியில் உள்ள 20 தலைவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர்; அவர்களுக்கு கட்சிப் பணியில் இருந்து கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்'' என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான வி. கிஷோர் சந்திர தேவ் வலியுறுத்தியுள்ளார்.

ரோஹித் வேமூலா வழக்கு: ஆகஸ்ட் 1-இல் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்

Posted: 22 May 2016 12:17 PM PDT

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, தன் அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி சமர்ப்பிக்கவுள்ளது.

தருண் விஜய் மீது தாக்குதல்:3 பேர் கைது

Posted: 22 May 2016 12:17 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் எம்.பி. தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 3 பேரை அந்த மாநில போலீஸார் கைது செய்தனர்.

ராஜ்நாத் சிங்குடன் ஹரியாணா ஆளுநர் சந்திப்பு

Posted: 22 May 2016 12:16 PM PDT

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பஞ்சாப், ஹரியாணாவில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு குறித்தும்,

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

Posted: 22 May 2016 12:16 PM PDT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி கடந்ததாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார்.

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்

Posted: 22 May 2016 12:15 PM PDT

திருநங்கைகளைப் பாதுகாப்பதற்கான மசோதா, போதை மருந்து தடுப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களையும் தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று சோதனை முறையில் ஏவப்படுகிறது இந்தியாவின் முதல் விண்வெளி ஓடம்

Posted: 22 May 2016 12:14 PM PDT

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விண்வெளி ஓடம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கள்கிழமை விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இறுதி மூச்சு வரை தொடர்வேன்

Posted: 22 May 2016 12:13 PM PDT

தனது இறுதி மூச்சு வரை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வேன் என்று கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தெரிவித்தார்.

மருத்துவ, சட்டக் கல்லூரிகளை தரவரிசைப்படுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 22 May 2016 12:12 PM PDT

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு முதல் தரவரிசைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வீட்டுக் கடன் அளிக்க இபிஎஃப் அமைப்பு பரிசீலனை

Posted: 22 May 2016 12:12 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வீடு வாங்க கடனளிக்க அந்த அமைப்பு (இபிஎஃப்ஓ) திட்டமிட்டு வருகிறது.

நிறுவன வழக்குகளை விசாரிக்க 8 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு

Posted: 22 May 2016 12:12 PM PDT

நிறுவன சட்ட விதிமீறல் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக நாட்டின் 8 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.

"தபால் துறை பணப்பட்டுவாடா வங்கி 2017 மார்ச் முதல் செயல்பாட்டுக்கு வரும்'

Posted: 22 May 2016 12:11 PM PDT

நிதி தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவதற்காக தபால் துறையின் சார்பில் "அஞ்சல் வங்கி' என்ற பெயரில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த

"புதிய திவால் சட்டத்தின்படி நிறுவன சொத்துகளை ஊழியரே முடக்க முடியும்

Posted: 22 May 2016 12:11 PM PDT

புதிய திவால் சட்டத்தின்டி, நிதி நெருக்கடியில் உள்ள ஒரு நிறுவனத்தின் வெளிநாட்டு சொத்து உள்பட அனைத்து அசையா சொத்துகளையும் அந்த நிறுவனத்தின் ஊழியரே முடக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது அரசியல் ரீதியில் கடினம்

Posted: 22 May 2016 12:10 PM PDT

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது அரசியல் ரீதியாகக் கடினமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

சாலைப் பாதுகாப்பு மசோதா தாமதத்தால் வருத்தம்

Posted: 22 May 2016 12:09 PM PDT

ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் விபத்துகளில் உயிரிழக்கும் நிலையில், சாலைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் தாமதமாகி வருவது தம்மை வருத்தமடையச் செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சிவகாசி

Posted: 22 May 2016 12:08 PM PDT

5 மாநில தேர்தல்:3,500 சுயேச்சைகளில் 9 பேர் மட்டுமே வெற்றி

Posted: 22 May 2016 12:08 PM PDT

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 3,500 சுயேச்சை வேட்பாளர்களில் 9 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

முனீஸ்வரன் கோயிலில் பூந்தமல்லி எம்எல்ஏ சிறப்பு பூஜை

Posted: 22 May 2016 12:08 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்பதையொட்டி, பூந்தமல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.ஏ.ஏழுமலை முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது அரசியல் ரீதியில் கடினம்

Posted: 22 May 2016 12:07 PM PDT

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது அரசியல் ரீதியாகக் கடினமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

நீரில் மூழ்கிய இளைஞர் சாவு

Posted: 22 May 2016 12:07 PM PDT

கேளம்பாக்கம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர் சனிக்கிழமை இறந்தார்.

மணிப்பூர்: பயங்கரவாத தாக்குதலில் 6 வீரர்கள் பலி

Posted: 22 May 2016 12:07 PM PDT

மணிப்பூர் மாநிலத்தின் சந்தல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஓர் இளநிலை அதிகாரி உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர அரசு அலுவலகங்கள் ஜூன் 27-இல் அமராவதிக்கு மாற்றம்

Posted: 22 May 2016 12:07 PM PDT

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு, அரசு அலுவலகங்களை மாற்றும் பணிகள் வரும் ஜூன் மாத இறுதியில் முடிவுறும் என அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™