Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாமிற்கு ஜோடியான ஆத்மியா!

Posted:

இன்றைக்கு முன்னணி ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். மெரீனா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மனம் கொத்தி பறவை படத்தில் தனி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் எழில். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஆத்மியா நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இன்று பெரிய நடிகராக உயர்ந்துவிட்டார். ஆனால் இப்படத்தில் இவருடன் ...

40 நாட்களில் 250 கோடி - தி ஜங்கிள் புக் சாதனை

Posted:

வாரத்துக்கு குறைந்தபட்சம் மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவற்றில் வெற்றியடையும் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டியதாக இருக்கிறது. ஓடாத படத்தை ஓட வைக்க, திருட்டு விசிடி வந்துவிட்டதாக கமிஷ்னர்ஆபிசில் புகார் கொடுத்து ஓசி விளம்பரம் தேடிடுகிறார்கள். அப்படியும் படங்களுக்கு வசூல் ...

மீரா ஜாக்கிரதை தயாரிப்பாளரிடம் 50 லட்சம் கேட்டாரா பாபி சிம்ஹா?

Posted:

பாபி சிம்ஹா நடித்த மீரா ஜாக்கிரதை படம் மே 27 அன்று வெளிவர இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரம் நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் சம்பந்தமாக நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சங்க தலைவருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த ...

'விஜய் 60'- திருநெல்வேலி பின்னணியில் கிராமத்துப்படம்

Posted:

மருது படத்திற்காக தன்னுடைய ஹேர் டைலை மாற்றிக் கொண்டிருந்தார் விஷால். அவரது ஹேர்டைலைப்போலவே, 'தெறி' படத்திற்குப் பிறகு தற்போது நடித்துவரும் தனது 60 ஆவது படத்திற்காக ஹேர் ஸ்டைல் செய்து நடித்து வருகிறார் விஜய். 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன், இப்படத்தை இயக்கி வருகிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்துக்குப் பின் தற்போது 9 ...

சேலையே கட்ட விரும்பாத மலையாள நடிகை..!

Posted:

நடிகைகளை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சேலை கட்ட விரும்பாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வருவதை விரும்பினாலும், பாரின் பெண்ணான எமிஜாக்சன் கூட படத்தின் கேரக்டருக்கு தேவைப்பட்டால் சேலை கட்டித்தான் நடித்தாக வேண்டும். ஆனால் மலையாள சினிமாவில் ஒரே ஒரு நடிகை மட்டும் தான் நடிக்கும் படங்களில் ஒரே மாதிரியான ...

தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களில் 'கபாலி'?

Posted:

'கபாலி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. ரஜினிகாந்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் நடிக்க வைத்திருப்பார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதையும் ...

கலாபவன் மணியின் நினைவு விளக்கை அடித்து உடைத்த போலீஸார்..!

Posted:

மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தின் பின்னால் ஒளிந்துள்ள குற்றவாளிகள் யாரென்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.. இதனால் போலீஸார் சரியான கோணத்தில் விசாரிக்கவும் இல்லை, விசாரணையில் தீவிரம் காட்டவும் இல்லை என கலாபவன் மணியின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே கூறிவந்தனர்.. இந்தநிலையில் கலாபவன் மணியின் நினைவாக அவரது சொந்த ஊரில் ...

நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன்: ஆர்.கே.சுரேஷ்

Posted:

பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடாவிட்டாலும் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. தற்போது விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கி உள்ள மருது படத்தில், டெரர் வில்லனாக நடித்துள்ளார். அடுத்து முத்தையாவின் உதவியாளர் பிரேம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ...

டி.வி.,க்காக படம் இயக்குகிறார் சுரேஷ்கிருஷ்ணா

Posted:

பாட்சா, அண்ணாமலை படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசியாக பரத் நடிப்பில் ஆறுமுகம் படத்தை இயக்கினார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கினார். அதன் பிறகு சில மினி தொடர்களை இயக்கினார்.

தற்போது டி.வி.சேனல்களுக்கென்றே தனி திரைப்படங்களை இயக்குகிறார். ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் ...

ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்தைப் புகழ்ந்த மகேஷ் பாபு

Posted:

இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோற்சவம் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினர் வானொலி நிலையங்கள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்களில் ...

சினிமா புகழை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த வேண்டும்: பாண்டிராஜ் வேண்டுகோள்

Posted:

பிரபல குணசித்திர நடிகரும், மைம் கலைஞருமான மைம் கோபியின் மைம் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த நிதி, எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது:

மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழச்சி. தனக்கு ...

30 வயது துல்கருக்கு கதை எழுதிய 65 வயது கதாசிரியர்..!

Posted:

சினிமாவை பொறுத்தவரை வயதாக வயதாக அது இயக்குனரோ அல்லது கதாசிரியரோ பல படைப்பாளிகளுக்கு கற்பனை திறன் குறைந்துவிடுவது இயல்பு தான். அல்லது மாறிவரும் காலத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப கதை பண்ண தெரியாமல் சில 'ஹிட்'டுகளுடனேயே காணாமல் போய்விடுகிறார்கள்.. ஆனால் உடலுக்கு வயதானாலும் மனதுக்கு வயதாகாமல் பார்த்துக்கொள்ளும் ...

சல்மான் - லூலியா உறவு - ஜரின்கான் மகிழ்ச்சி

Posted:

பாலிவுட்டில், 50 வயதை எட்டி இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பவர் சல்மான்கான். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. இந்தச்சூழலில் சல்மான், வெளிநாட்டை சேர்ந்த லூலியா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் நீண்டநாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ...

விரைவில் திருமணம் நடக்க வேண்டி பரிகார பூஜை செய்யும் அனுஷ்கா?

Posted:

பாகுபலி 2, பாஹ்மதி என சரித்திர படங்களில் பிசியாகியிருக்கும் அனுஷ்கா, அண்மையில் தனது குடுமபத்தினருடன் சர்ப தோஷ நிவர்த்தி பூஜை செய்துள்ளார். பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 30 வயதைக் கடந்த அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமாக வேண்டி அனுஷ்காவின் குடும்பத்தார் இப்பூஜையை நடத்தியுள்ளனராம். இஞ்சி ...

ஜூனியர் என்.டி.ஆர்- பூரிஜெகன் நாத் இணையும் படத்தின் பஸ்ட் லுக்

Posted:

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஜாகுவார் எனும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்குகின்றார். மகேஷ் பாபு நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் "ஜன கண மன" படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட பூரி ஜெகன்நாத், ஜாகுவார் படத்திற்கு பின்னர் இயக்கவிருக்கும் படத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே ...

ரூ.35 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய ரன்பீர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் தற்போது 'ஜகா ஜசூஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரன்பீர், கத்ரீனாவை காதலித்த வரை இருவரும் தனியாக ஒரு வீட்டில் தங்கி வந்தனர். ஆனால், இப்போது அந்த காதல் முறிந்து விட்டதால் இருவரும் தனித்தனி பாதையில் சென்றுவிட்டனர். இதனிடையே ரன்பீர் கபூர், தனியாக ஒரு ...

2017, ஜன.,13-ல் 'ஓகே ஜானு' ரிலீஸ்

Posted:

ஆஷிக்-2 படத்திற்கு பிறகு ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் மீண்டும் இணைந்துள்ள படம் 'ஓகே ஜானு'. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்தின் ரீ-மேக் தான் இது. ஷாத் அலி இயக்குகிறார், கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ...

சேரி ராப் பாடகராக ரன்வீர் சிங்

Posted:

தில் தடக்கனே டு படத்திற்கு பிறகு ஜோயா அக்தர், மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'கல்லி பாய்' என்று பெயர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை சேரி பகுதியின் பின்னணியில் வாழும் பாடகரை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில் சேரி ராப் பாடகராக ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படம் இரண்டு ஹீரோக்களை ...

சல்மான் படத்தில் சைப்பிற்கு பதில் பவாத்

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சல்மான்கான் தயாரிப்பில் உருவாக 'ஜகல்பந்தி' படத்தில் சைப் அலிகான் நடிக்கப்போவதாக தகவல் வந்தது. இப்படத்தை சமீர் சர்மா இயக்குகிறார். இசையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தில் சைப் அலிகான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தில் சைப் அலிகான் நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக பவாத் கான் நடிக்க ...

கிருஷ்ணம் ராஜூ உடல் நலனில் முன்னேற்றம்

Posted:

முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகருமான கிருஷ்ணம் ராஜூ சுவாச கோளாறு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணம் ராஜூ உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™