Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


20! ம.ந.கூ., ஓட்டு சதவீதம்... கிலியில் அ.தி.மு.க., - தி.மு.க.,

Posted: 09 Apr 2016 10:25 AM PDT

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, தே.மு.தி.க., - மக்கள் நல கூட்டணியில் நேற்று, த.மா.கா.,வும் இணைந்தது. இந்த புதிய அணி, 20 சதவீத ஓட்டுக்கள் வரை அள்ளக்கூடும் என்பதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'கிலி' ஏற்பட்டுள்ளது.

தமிழக தேர்தல்களில், எப்போதுமே, அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள் இடையே தான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அடைக்கலம் தேடிக் கொள்வது வழக்கம்.விஜயகாந்தின் தே.மு.தி.க., வந்த பிறகு, இந்த நிலைமை மாறியது. 2006 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், இக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதன் ...

ரூ.100 கோடி பார்களை மூடியதால் கேரளாவில் அரசுக்கு தினமும் இழப்பு... உண்மையை ஒப்புக்கொள்கிறார் முதல்வர் உம்மன் சாண்டி

Posted: 09 Apr 2016 10:47 AM PDT

திருவனந்தபுரம்:''மதுபான, 'பார்களை' தடை செய்ததால், தினமும், 100 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது,'' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: கேரளாவில் மக்கள் மாறி மாறி தான் எல்.டி.எப்., - இடது ஜனநாயக முன்னணி, யு.டி.எப்., - ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை தேர்வு செய்கின்றனர். அப்படி என்றால், இந்த முறை எல்.டி.எப்.,புக்கு தானே வாய்ப்பு? இல்லை. எங்கள் நல்லாட்சி தொடரும்.முதல்வர் பதவிக்கு போட்டி இருக்கிறதா? தேர்தல் முடிவுகள் வரட்டும். புகாரில் சிக்கிய நீங்கள், சட்டசபை தேர்தல் போட்டியில் இருந்து ...

காங். மியூசிக்கல் சேர்

Posted: 09 Apr 2016 10:53 AM PDT

'இந்த தடவை எந்த பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியலியே' என, காங்கிரசாரை பற்றி பெருமையாக, பொதுமக்கள் கூட பேசிக் கொள்கின்றனர்.

அறிவாலயத்தில் கூட்டணி பேசியதிலும், எதிர்பாராத அளவுக்கு, 41 தொகுதிகள் பெற்றதிலும் சிக்கலுக்கோ, இழுபறிக்கோ இடம் கொடுக்காமல், தமிழக காங்கிரசார் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம். அது நீடிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு காங்கிரசாரும், இப்போது வேண்டாத தெய்வம் இல்லை. காரணம், இதுவரை சிக்கல் இல்லாமல் சென்ற காங்கிரஸ் வண்டிக்குள், இனிமேல் தான், 'மியூசிக்கல் சேர்' நடக்க போகிறது.தி.மு.க., கொடுத்த, 41 தொகுதிகளில், 40 தொகுதிகளில், அ.தி.மு.க.,வுடன் ...

படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல் தேர்தல் பிரசாரத்தில் ஜெ., அறிவிப்பு

Posted: 09 Apr 2016 11:04 AM PDT

சென்னை,: சென்னையில் நேற்று மாலை, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்கிய முதல்வர் ஜெயலலிதா, ''அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு, படிப்படியாக அமல்படுத்தப்படும்,'' என, தெரிவித்தார்.சென்னை, தீவுத்திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது:

தமிழகம், வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்; குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என, 2011ல், என் தலைமையிலான அ.தி.மு.க.,விற்கு அமோக ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த நல்லாட்சி தொடர, ...

'பஞ்ச பாண்டவர்' அணியில் வாசன் 20 'சீட்' விட்டு கொடுத்த விஜயகாந்த்

Posted: 09 Apr 2016 11:11 AM PDT

அ.தி.மு.க.,வில் கதவடைக்கப்பட்ட த.மா.கா., நேற்று, ம.ந.கூ., - தே.மு.தி.க., கூட்டணியில் ஐக்கியமானது. அக்கட்சிக்கு, 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தனக்கான தொகுதிகளில் இருந்து, 20ஐ விஜயகாந்த் விட்டுக் கொடுத்தார்.சட்டசபை தேர்தலை, தே.மு.தி.க., - -ம.ந.கூ., இணைந்து சந்திக்க, கடந்த மார்ச் 23ம் தேதி முடிவானது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்நிலையில் அ.தி.மு.க.,வில் தவடைக்கப்பட்ட த.மா.கா., நேற்று தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. முன்னதாக, ம.ந.கூ., தலைவர்கள், நான்கு பேரும், வைகோ தலைமையில், த.மா.கா., அலுவலகம் சென்று, வாசனை ...

மொபைல் போன் டவர் விதிகளில் மாற்றம்?

Posted: 09 Apr 2016 11:19 AM PDT

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில், மொபைல் போன் டவர் அமைப்பதற்கான விதிகள் குறித்து ஆராய பல்வேறு துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிக்னல்களை தடை இன்றி வழங்க ஆங்காங்கே, டவர்களை வைக்கின்றன. மக்களின் பயன்பாடு காரணமாக, டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க துவங்கியது. இதை முறைப்படுத்தும் வகையில், அடிப்படை விதிகளை வகுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 2002ல் அரசாணை பிறப்பித்தது. மொபைல் போன் சேவையில் ...

மீண்டும் 'டிமிக்கி' கொடுத்த விஜய் மல்லையா

Posted: 09 Apr 2016 11:24 AM PDT

மும்பை: பிரிட்டன் தலைநகர் லண்டனில் தலைமறைவாக உள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐ.டி.பி.ஐ., வங்கியில், கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், அமலாக்கத்துறை முன், மூன்றாவது முறையாக, நேற்று ஆஜராக தவறினார்.

தப்பிச் சென்றார்கர்நாடகாவை சேர்ந்த, மதுபானத் தொழிலதிபரான, விஜய் மல்லையா, 'கிங்பிஷர்' விமான சேவை நிறுவனத்தை துவக்கினார். அதற்காக, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கி, அதை திருப்பச் செலுத்தத் தவறினார்.கடன் தொகை யை மீட்க, வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, மார்ச்சில், பிரிட்டன் தலைநகர் ...

தோல்வியே தராத தொகுதிகள் கருணாநிதி மனதில் புது திட்டம்

Posted: 09 Apr 2016 12:36 PM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல் முறையாக, குளித்தலை தொகுதியில், 1957ல் போட்டிட்டு, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 1962ல், தஞ்சை; 1967, 71ல் சைதை; 1977, 80ல் அண்ணா நகர்; 1989, 91ல், துறைமுகம்; 1996, 2001, 2006ல், சேப்பாக்கம்; 2011ல், திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வரும் தேர்தலில், கருணாநிதி, திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 'தற்போது நடக்க உள்ள தேர்தலில், இதுவரை தான் போட்டியிட்ட இந்த தொகுதிகள் எல்லாவற்றிலும், தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' என்று, மூத்த நிர்வாகிகளிடம், கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார். இது ...

'பனாமா பேப்பர்ஸ்' மோசடி விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க மோடி உத்தரவு

Posted: 09 Apr 2016 12:45 PM PDT

புதுடில்லி: வெளிநாடுகளில், இந்தியர்கள், போலி நிறுவனங்கள் துவக்கி சட்ட விரோதமாக, பணம் முதலீடு செய்ததாக வெளியான, 'பனாமா பேப்பர்ஸ்' பட்டியல் தொடர்பாக, 15 நாட்களில், முதல் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை சேர்ந்த, 'மொஸாக் பொன்ஸீகா' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, 'பண முதலைகள்' போலி பெயர்களில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கான சேவைகளை வழங்கி வந்தது. 500 இந்தியர்கள்இந்நிறுவனம் மூலம், வெளிநாடுகளில் உள்ள போலி ...

எழை, எளிய மக்கள் வீடு கட்ட இலவச மணல்: சந்திரபாபு நாயுடு திட்டம்

Posted: 09 Apr 2016 01:05 PM PDT

ஐதராபாத்: ஏழைகள் வீடு கட்ட மணல் இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சி நடக்கிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஏழைகள் வீடு கட்ட ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சித்தூருக்கு வந்த அவர் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையைதடுக்க அதிகாரிகள் முழு வீச்சில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™