Tamil News | Online Tamil News |
- தே.மு.தி.க.,வில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆப்பரேஷன் வி
- கிரிக்கெட் முக்கியமா; மக்கள் முக்கியமா? மும்பை ஐகோர்ட் விளாசல்
- 'சிறு தொழில்களின் கழுத்தை நெரிக்கிறது மத்திய அரசு'
- 'ஜெ., - ஸ்டாலினை திட்டி தீருங்க': விஜயகாந்தை சந்திக்க நிபந்தனை
- அர்ச்சனை மட்டும் எனக்கா? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி
- அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் பீதி: மனு தாக்கல் முடியும் வரை படபடப்பு நீடிக்கும்
- பா.ஜ., நிறுவன நாள் விழாவில் அமித் ஷா சபதம் : நாடு முழுவதும் 'தாமரை' மயமாகும் என்கிறார்
- அ.தி.மு.க., வேட்பாளர்கள் மீது குவியுது புகார்: கட்சி தலைமை திணறல்
- தி.மு.க., - காங்கிரஸ் தொகுதிகளுக்கு அடிதடி
- டில்லி, மும்பையை தகர்க்க சதி: பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல்?
| தே.மு.தி.க.,வில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆப்பரேஷன் வி Posted: 06 Apr 2016 08:01 AM PDT தே.மு.தி.க., இரண்டு கட்சிகளாக உடையுமா; கட்சி கரைந்து, தி.மு.க.,வில் ஐக்கியமாகி விடுமா; கட்சியினரின் அழுத்தத்திற்கு பணிந்து, தி.மு.க., கூட்டணியில் கமுக்கமாக சரணடையுமா என்ற கேள்விகள் எல்லாம் இன்று எழுந்துள்ளதற்கு காரணம், ஆப்பரேஷன் 'வி!''காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதான்னு எல்லார்கிட்டயும் எதிர்ப்பு அரசியல் ண்ணியிருக்கேன். நேத்து வந்த பொடிப்பய, நம்ம வார்த்தைக்கு மதிப்பில்லாம ஆக்கிட்டானே...' என்று, கட்சியில் யாரும் கலாய்க்காவிட்டாலும், கருணாநிதியின் ஈகோ இடித்துக் கொண்டே இருந்ததன் விளைவு தான் ஆப்பரேஷன், 'வி!' ' ஏ' பார் ஆப்பிள், 'பி' பார் பால், 'சீ' பார் ... |
| கிரிக்கெட் முக்கியமா; மக்கள் முக்கியமா? மும்பை ஐகோர்ட் விளாசல் Posted: 06 Apr 2016 09:29 AM PDT மும்பை: ''மஹாராஷ்டிர மாநிலத்தில், தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்காக, மைதானங்களை தயார் செய்ய தண்ணீரை வீணடிக்கலாமா,'' என, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி, மஹாராஷ்டிராவில் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல்வேறு அணைகள் வறண்டுள்ளதால், குறிப்பாக, மராத்தா பிராந்தியத்தில், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், 9வது ஐ.பி.எல்., கிரிக்கெட் ... |
| 'சிறு தொழில்களின் கழுத்தை நெரிக்கிறது மத்திய அரசு' Posted: 06 Apr 2016 09:35 AM PDT புதுடில்லி: கலால் வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள, காங்., துணை தலைவர் ராகுல், ''சிறு தொழில்களின் கழுத்தை, மத்திய அரசு நெரித்து வருகிறது,'' எனக் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டில், தங்க நகைகள் மீது, கலால் வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும், நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்., துணைதலைவர் ராகுல் பங்கேற்றார்.அப்போது, அவர் ... |
| 'ஜெ., - ஸ்டாலினை திட்டி தீருங்க': விஜயகாந்தை சந்திக்க நிபந்தனை Posted: 06 Apr 2016 09:53 AM PDT ஜெயலலிதா மற்றும் ஸ்டாலினை திட்டி தீர்த்து பேட்டி அளித்த பிறகே, விஜயகாந்தை சந்திக்க, தே.மு.தி.க., நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்ட தகவல் அம்பலமாகிஉள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் யாரும் பத்திரிகை மற்றும், 'டிவி'க்களுக்கு பேட்டி அளிக்க கூடாது; 'டிவி' விவாதங்களில் பங்கேற்க கூடாது என, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு எதிராக, புதிய அணியை சந்திரகுமார் உருவாக்கி உள்ளார். அவரை தொடர்பு கொண்டு, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்க, தலைமை அழைப்பின்படி, மாநில ... |
| அர்ச்சனை மட்டும் எனக்கா? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி Posted: 06 Apr 2016 10:37 AM PDT சென்னை: 'தமிழக அரசு மீது குற்றம் சாட்டியது மத்திய அமைச்சர்கள்; ஆனால், எனக்கு அர்ச்சனை செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:என் அறிக்கையின் முதல் பத்தியில், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்களே, அதற்கு முதல்வர் ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை என, கேட்டிருக்கிறேன். அதுபற்றி, இரண்டு அமைச்சர்களும் பதில் அளிக்கவில்லை.என் அறிக்கையின், இரண்டாவது பத்தியில், மத்திய அமைச்சர் ஜாவடேகர், 'மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே, தமிழக ... |
| அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் பீதி: மனு தாக்கல் முடியும் வரை படபடப்பு நீடிக்கும் Posted: 06 Apr 2016 10:50 AM PDT அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பற்றிய புகார்கள், போயஸ் தோட்டத்தில் குவிந்து வருவதால், மனு தாக்கல் முடியும் வரை, இந்த மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாதம், 4ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு ... |
| பா.ஜ., நிறுவன நாள் விழாவில் அமித் ஷா சபதம் : நாடு முழுவதும் 'தாமரை' மயமாகும் என்கிறார் Posted: 06 Apr 2016 10:59 AM PDT புதுடில்லி: ''தற்போது, மத்தியிலும், 14 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பா.ஜ., அடுத்த, 25 ஆண்டுகளில், பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, நாடு முழுவதும் அனைத்து இடங்களையும் பிடிக்கும்,'' என, கட்சியின் நிறுவன நாள் விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா சபதம் எடுத்தார்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி உள்ளது.குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஜம்மு - ... |
| அ.தி.மு.க., வேட்பாளர்கள் மீது குவியுது புகார்: கட்சி தலைமை திணறல் Posted: 06 Apr 2016 11:03 AM PDT அ.தி.மு.க.,வில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், அதில் பல்வேறு புகாருக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்ததும், கட்சியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மாற்றக் கோரி, கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். கட்சியினரிடம் இருந்து வேட்பாளர்கள் மீது குவியும் புகார் மனுக்கள், கட்சி தலைமையையும், கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, சில வேட்பாளர்களை, கட்சி தலைமை மாற்றி உள்ளது. அதே பாணியில், புகாருக்குள்ளானவர்கள் அனைவரும் மாற்றப்படுவர் என்ற நம்பிக்கையில், புகார் ... |
| தி.மு.க., - காங்கிரஸ் தொகுதிகளுக்கு அடிதடி Posted: 06 Apr 2016 11:05 AM PDT தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், இரண்டு கட்சிகளும் போட்டியிடக் கூடிய தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுக்க மறுப்பதால், தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில் பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கொண்ட குழு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள்மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, தனுஷ்கோடி ... |
| டில்லி, மும்பையை தகர்க்க சதி: பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல்? Posted: 06 Apr 2016 01:19 PM PDT புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து மூன்று பயங்கரவாதிகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் ஊடுருவியுள்ளதாக, பஞ்சாப் மாநில போலீசார் எச்சரித்து உள்ளனர்.கடந்த மாதம், சிவராத்திரியன்று தாக்குதல் நடத்தும் நோக்கில், 10 பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக, பாக்., தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் கான் ஜஞ்சு எச்சரித்திருந்தார்.அவர்களில் சிலரை கண்டுபிடித்து கொன்று விட்டதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறின. இருப்பினும், எங்கு, எப்போது, அந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், டில்லி போலீசார் அளித்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 07,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |