Tamil News | Online Tamil News |
- ஊத்தி மூடிய மதுபான அதிபர்கள்
- தொகுதி பங்கீடு பேச்சில் இன்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பு!
- ஜி.எஸ்.டி., வரும்: பிரதமர் மோடி உறுதி
- அதிருப்தி அ.தி.மு.க.,வினர் வலை விரிக்கிறது தி.மு.க.,
- வேலை உறுதி திட்ட கூலி உயர்வால் மாநிலங்களில் குழப்பம்: குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவு என புகார்
- மதுவிலக்கு பேசுவது தேசத்துரோகமா? கருணாநிதி கேள்வி
- மது ஒழிப்பா... கள் விற்பனையா...கொங்கு மக்களின் முடிவு மாறுமா?
- யார் யார் எங்கே? அலசும் தலைவர்கள்
- தொழிலை விட்டு வெளியேறும் கோவை பொற்கொல்லர்கள்
- உலகில் பெரிய உற்பத்தியாளர்கள்: இந்தியாவுக்கு 6வது இடம்
| Posted: 03 Apr 2016 08:39 AM PDT சில காரியங்கள் நினைத்த நேரத்தில் நடக்காமல் இருந்தால், பெரியவர்கள், 'காலம் சரியில்லை' என்று சொல்வார்கள். அதாவது, அந்த காரியங்கள் நடக்காமல் இருப்பதற்கு, தெரிந்ததும், தெரியாததுமாய் காரணிகள் ஒன்று சேருமாம். அது போன்று தான் தே.மு.தி.க., கூட்டணி என, தி.மு.க., நினைத்துக் கொண்டது. இருப்பினும், காரணங்களை அலசுவது இயல்பு தானே. அந்த அலசலில், தெரிந்த காரணமாக, ஸ்டாலினும், 'ஒன் மேன் குரூப்'பும் தென்பட்டனர். அ.தி.மு.க.,வின் பெயரும் அங்கு அடிபட்டது. இதுவரை தெரியாத காரணமாக இருந்து, தற்போது, தி.மு.க., தலைமைக்குதென்பட்டுள்ளது, மதுபான ஆலை அதிபர்கள்! அதுவும் தி.மு.க., ... |
| தொகுதி பங்கீடு பேச்சில் இன்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பு! Posted: 03 Apr 2016 10:20 AM PDT இரண்டு பெரிய கட்சிகளான, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், இழுபறியில் இருந்து வந்த தொகுதி பங்கீடு பேச்சு, இன்று நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை, இக்கட்சிகளின் வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் கிடைக்க போகும் தொகுதிகள் எண்ணிக்கையை அறிய காங்கிரசாரும், போயஸ் தோட்ட கதவு திறப்புக்காக, த.மா.கா.,வினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, இன்று காலை, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசுகிறார். ... |
| ஜி.எஸ்.டி., வரும்: பிரதமர் மோடி உறுதி Posted: 03 Apr 2016 11:55 AM PDT ரியாத்:இந்திய மற்றும் சவுதி அரேபிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் வரிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், வரிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமுறை குறித்து கவலைப்பட வேண்டாம். அது கண்டிப்பாக கொண்டு வரப்படும். இது எங்களுடைய தேர்தல் வாக்குறுதி.இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.அனைத்து பெண்கள் ... |
| அதிருப்தி அ.தி.மு.க.,வினர் வலை விரிக்கிறது தி.மு.க., Posted: 03 Apr 2016 11:58 AM PDT அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள, முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிலைய பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. தி.மு.க.,வின் மெகா கூட்டணி திட்டத்தை முறியடித்து, மக்கள் நலக் கூட்டணியை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உருவாக்கினார். அதனால், ஆத்திரம் அடைந்த தி.மு.க., தரப்பு, ம.தி.மு.க.,வில் இருந்து, முக்கிய பிரமுகர்களை, தங்கள் கட்சிக்கு இழுத்தது. தொடர்ந்து, தே.மு.தி.க.,வை உடைக்கும் வேலை நடந்து வருகிறது. இதுவரை, இரண்டு மாவட்ட செயலர்கள், தி.மு.க., வலையில் சிக்கி உள்ளனர்.அடுத்த கட்டமாக, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு ... |
| வேலை உறுதி திட்ட கூலி உயர்வால் மாநிலங்களில் குழப்பம்: குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவு என புகார் Posted: 03 Apr 2016 12:06 PM PDT புதுடில்லி: தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது; இருப்பினும், இது, மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள, குறைந்தபட்ச ஊதியத்தை விட, குறைவாக இருப்பது, மாநில அரசுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.காங்., தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக, ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கும், தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம், 2006ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ... |
| மதுவிலக்கு பேசுவது தேசத்துரோகமா? கருணாநிதி கேள்வி Posted: 03 Apr 2016 12:14 PM PDT சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: மது விலக்குக்காக போராடி வரும், 'மக்கள் அதிகாரம்' என்ற அமைப்பு, திருச்சியில் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்களில், ஆறு பேர் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு. மதுவால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அ.தி.மு.க., ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து, ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரசாரம்செய்த, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை, திருச்சியில் போலீசார் கைது செய்து, அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக, மது ஒழிப்பு ... |
| மது ஒழிப்பா... கள் விற்பனையா...கொங்கு மக்களின் முடிவு மாறுமா? Posted: 03 Apr 2016 12:17 PM PDT பூரண மதுவிலக்கு - கட்சிகள் கையில் எடுத்திருக்கும், தேர்தல் பிரம்மாஸ்திரம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். 'பூரண மதுவிலக்குக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது ஆட்சி அமைந்ததும், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணியும் விடாமல் கூறி வருகிறார். மக்கள் நல கூட்டணி, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், மதுவிலக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ., - தே.மு.தி.க., - காங்., கட்சிகளும், இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், 'கள், ... |
| யார் யார் எங்கே? அலசும் தலைவர்கள் Posted: 03 Apr 2016 12:20 PM PDT வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ., - பா.ம.க., என, ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வரும், 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில், கட்சிகளின் கூட்டணி பெரும்பாலும் முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனிடையே, கட்சி தலைவர்கள் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.ஜெயலலிதா:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடந்த முறை, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். சொத்து குவிப்பு வழக்கால் பதவி இழந்த அவர், ... |
| தொழிலை விட்டு வெளியேறும் கோவை பொற்கொல்லர்கள் Posted: 03 Apr 2016 12:28 PM PDT ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில், 60 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. இதில், 40 சதவீதம், தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாநிலங்களின் தங்க நகை தயாரிப்பு மையங்களிலேயே பெரியது, கோவை.இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்த்தால், கோவையின் பொற்கொல்லர்கள் மிக செழுமையான தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற, தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய நகை பட்டறை தொழிலாளர்களின் நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது.இது பற்றி, கோவை நகை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம், ''கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ... |
| உலகில் பெரிய உற்பத்தியாளர்கள்: இந்தியாவுக்கு 6வது இடம் Posted: 03 Apr 2016 01:02 PM PDT புதுடில்லி: ஐ.நா.,வின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு, உலகின் பெரிய உற்பத்தியாளர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்தியா 9வது இடத்தில் இருந்தது.இந்த அமைப்பு, கடந்த 2015ம் வருடம், இந்தியாவின் எம்.வி.ஏ., எனப்படும் உற்பத்தி மதிப்பு 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஐ.ஐ.பி., கடந்த 2015ம் ஆண்டில் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் சர்வதேச உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக குறைந்துவிட்டது. வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |