ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)
- வெற்றி சுலபமானால்...
- இளநீர்!
- கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
- படித்ததில் பிடித்தது :) -....-வேண்டாமே குளிர்பானங்கள்!
- ஞானப் பறவை!-சிறுவர் கதை
- 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
- வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு
- காதலிக்காதீர்கள்!
- குமரி மாவட்டத்தின் அழகு காட்சி ..!
- செல்வச் செழிப்பு அதிகரிக்க...
- தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...
- தேடிவந்த சிதம்பரம் ! காணக்கிடைக்காத அபூர்வ படம் !!
- முகங்களும் பாவனைகளும்
- சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்ஸ்… ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்!
- சினி துளிகள்!
- பேய் வேடத்தில் ராதாரவி!
- தமிழுக்கு வந்த மராட்டிய நடிகை!
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- சிறைச்சாலை உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு...
- மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா,...
- ஏப்ரல் 3 உலக பத்திரிகை சுதந்திர நாள்!
- கம்பன் ஏமாந்தான்...
- கதைப்பாடல்: காலைப் பொழுது!
- கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?
- தயாரிப்பாளர்களை இழுக்கும் அஞ்சலி!
- அரசியல் சர்ச்சையில் விஜயசேதுபதி!
- ஏன்டி உன் கணவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பறே...?
- ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது
- இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்
- 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
| நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Posted: 03 Apr 2016 01:19 PM PDT ![]() |
| Posted: 03 Apr 2016 01:10 PM PDT ''அது ரொம்ப சுலபம்,'' என்றான் முரளி. பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்கு திரும்பியிருந்த முரளியை, ஆர்வத்தோடு நோக்கினர், அவன் நண்பர்கள். அவன் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் உள்ள வித்தியாசம். முரளி ஊரை விட்டுப் போகும் போது, உடுத்திக் கொள்ள நல்ல உடையோ, உடைமைகளை வைத்துக் கொள்ள நல்ல பெட்டியோ இல்லை. அவனுடைய பரட்டைத் தலைக்கு எண்ணெய் கூட, பக்கத்து வீட்டில் வாங்கித் தான் தடவி விட்டாள் அவன் அம்மா. 'பத்திரமா பாத்துக்கங்க...' என்று கூறி, செங்கல்பட்டுக்காரரிடம் ... |
| Posted: 03 Apr 2016 01:08 PM PDT * இளநீரில், எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், வயிற்று கடுப்பு நிற்பதுடன், உடல் சூடு குறையும். மேலும், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து சாப்பிட்டாலும், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு தீரும். * குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதிக்கு, இளநீர் சிறந்த மருந்து. * இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு, ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, அதிகாலையில் பருகி வர, உடல் உஷ்ணம் மற்றும் வயிற்று வலி தீரும். * இளநீருடன் நுங்கை கலந்து உடலில் தேய்த்தால், சொறி, சிரங்கு ... |
| கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி? Posted: 03 Apr 2016 01:06 PM PDT ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இப்போதே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது. வியர்க்குரு கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கை யிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் ... |
| படித்ததில் பிடித்தது :) -....-வேண்டாமே குளிர்பானங்கள்! Posted: 03 Apr 2016 01:04 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 03 Apr 2016 12:59 PM PDT - ஒரு கிராமத்தில் சோமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி! வேலைக்குச் செல்ல அவனுக்கு விருப்பமே கிடயாது! கிராமத்தில் உள்ளோர் அனைவரும் பரபரப்பாக வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக் கொண்டிருப்பான். உழைப்பின்றி சுகமாக வாழ்வதே குறியாக இருந்தான். ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைக் கண்டான்! மிகவும் அழகாக இருந்த அந்தப் பறவையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் ... |
| 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி ! Posted: 03 Apr 2016 12:54 PM PDT ரியாத்:இந்திய மற்றும் சவுதி அரேபிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் வரிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், வரிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமுறை குறித்து கவலைப்பட வேண்டாம். அது கண்டிப்பாக கொண்டு வரப்படும். இது எங்களுடைய தேர்தல் வாக்குறுதி.இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை ... |
| வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Posted: 03 Apr 2016 12:50 PM PDT - சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார். பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே ... |
| Posted: 03 Apr 2016 12:47 PM PDT - காதலிக்காதீர்கள்… நான் சொல்லவில்லை தினம் தினம் ரத்தக்கறையுடன் பயணிக்கும் ரயிலின் சக்கரங்கள் சொல்கின்றன! காதலிக்காதீர்கள்… நான் சொல்லவில்லை விஷ மருந்துகளால் நரம்புகளை அறுத்து துடித்து கதறும் இதயம் சொல்கிறது! காதலிக்காதீர்கள்… நான் சொல்லவில்லை அடுக்குமாடிகளில் நின்றபடி பூமி அதிர கீழே தள்ளும் உயர்ந்த கட்டடங்கள் சொல்கிறது! காதலிக்காதீர்கள்… நான் சொல்லவில்லை தகுதியில்லையென நிராகரித்து குடிகாரனாக்கும் மது சொல்கிறது! காதலிக்காதீர்கள்… நான் சொல்லவில்லை விழிகள் பிதுங்க கால்கள் ... |
| குமரி மாவட்டத்தின் அழகு காட்சி ..! Posted: 03 Apr 2016 12:46 PM PDT ![]() |
| Posted: 03 Apr 2016 11:56 AM PDT நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை - மகாலட்சுமியின்அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும். - வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். - இப்படி ... |
| தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்... Posted: 03 Apr 2016 09:12 AM PDT - ஒரு கிராமத்திற்கு துறவி ஒருவர் வருகை தந்தார். அங்கிருந்த கோயிலில் தங்கினார். அங்கு காலைக்கடன் முடித்து விட்டு, நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்; அலங்காரம் செய்து வழிபடுவார். பிறகு தியானத்தில் ஈடுபடுவார். - கிராம மக்களுக்குக் கவனிப்பாரற்று இருந்த கோயிலில் சாமியார் வந்து தங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஊர் ஜனங்கள் இறைவனை வணங்குவர், துறவியையும் வணங்கிச் செல்வர். - பக்தர்கள் அவருக்குத் தேவையானதை அளித்து ஆதரித்தனர். பக்தர்கள், அவ்வப்போது சாமியாரிடம் ... |
| தேடிவந்த சிதம்பரம் ! காணக்கிடைக்காத அபூர்வ படம் !! Posted: 03 Apr 2016 09:00 AM PDT தேடிவந்த சிதம்பரம் ! காணக்கிடைக்காத அபூர்வ படம் !! காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக உடல் தளர்ச்சி பெற்ற நிலையில் ஒருநாள் மாலையில் தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன் மோட்சம் கிடைக்கும். இதைக்கேட்ட ... |
| Posted: 03 Apr 2016 06:20 AM PDT அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்ஸ்… ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்! Posted: 03 Apr 2016 05:02 AM PDT - நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அணிகளின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள். போட்டியில் ... |
| Posted: 03 Apr 2016 05:01 AM PDT - * ஒரே நேரத்தில் எட்டு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். - ------------------ |
| Posted: 03 Apr 2016 04:54 AM PDT - ஒரு காலத்தில், படங்களில் வில்லனாக மிரட்டி வந்தவர், நடிகர் ராதாரவி. சமீபகாலமாக குணசித்திர நடிகராகி விட்டார். பிசாசு, அரண்மனை – 2 மற்றும் இறுதிச்சுற்று உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், தற்போது, தெறி பட இயக்குனர் அட்லி தயாரிப்பில், ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கும், சங்கிலி புங்கிலி கதவ திற என்ற படத்தில், முதன்முறையாக பேய் வேடத்தில் நடிக்கிறார். வில்லன் நடிகரே பேயாக நடிப்பதால், அவரை அதிரடி பேயாக காண்பிக்க இருக்கின்றனர். – — சினிமா பொன்னையா – ——————————- |
| தமிழுக்கு வந்த மராட்டிய நடிகை! Posted: 03 Apr 2016 04:53 AM PDT - - தில்லுக்கு துட்டு மற்றும் சர்வர் சுந்தரம் படங்களுக்காக தன் பாடி லாங்குவேஜை மாற்றியுள்ள சந்தானம், சில முன்னணி கதாநாயகிகளிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஆனால், வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை கதாநாயகர்கள் யாருமே கண்டு கொள்ளாமல் விட்டது போல், தங்கள் நிலையும் ஆகிவிடக்கூடாது என்று, முன்னணி நடிகைகள் சந்தானத்துக்கு செவி சாய்க்கவில்லை. அதனால், இப்போது, வைபவி ஷன்டிலியா என்ற மராட்டிய நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார். – — சி.பொ., –---------------------------------- |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 03 Apr 2016 04:22 AM PDT ![]() |
| சிறைச்சாலை உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு... Posted: 03 Apr 2016 02:46 AM PDT தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 104 சிறைச்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அறசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 6/2016 பணி: Assistant Jailor காலியிடங்கள்: 104 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் B.A.,B.Sc., B.Com. பட்டப்படிப்பை முடித்திருக்க ... |
| மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா,... Posted: 03 Apr 2016 02:43 AM PDT - ஹமாம் சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது - மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது - டெட்டால், லைஃப்பாய் சோப்பு போட்டா கிருமிகளால் ப்ராப்ளம் வரவே வராது. - ஆனால்... - . . மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா, வாழ்க்கைல எந்த ப்ராப்ளமும் வராது - ------------------- வாட்ஸ் அப் பகிர்வு |
| ஏப்ரல் 3 உலக பத்திரிகை சுதந்திர நாள்! Posted: 02 Apr 2016 11:50 PM PDT - உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் ... |
| Posted: 02 Apr 2016 11:21 PM PDT படம் – நிழல் நிஜமாகிறது பாடியவர்- எஸ்.பி.பாலசுபரமணி`ம் பாடல் வரிகள் – கண்ணதாசன் – ——————————– – கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான் கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன்) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் ... |
| Posted: 02 Apr 2016 10:31 PM PDT - – காலைக் கதிரவன் முகம்பார்க்க தாமரைப் பூக்கள் காத்திருக்கும்! சோலைப் பூக்களில் வந்தமர்ந்து சுகமாய் வண்டுகள் தேன்குடிக்கும்! – சாலை யோர மரங்களிலே சேர்ந்திடும் பறவைக் கூட்டங்கள் ஆலோலம் இசைப்பதைக் கேட்பதற்கு ஆயிரம் காதுகள் போதாது! – கடலின் அலைகள் தாலாட்டும் களிப்புடன் நண்டுகள் விளையாடும்! படகுகள் எல்லாம் மீன்பிடிக்க படை வீரர்கள்போல அணிவகுக்கும்! – பாலைக் குடிக்கக் கன்றுகளைப் பாசமாய் அழைத்திடும் தாய்ப்பசுக்கள்! வாலை ஆட்டியே கன்றுகளும் வந்திடும் துள்ளிக் குதித்தோடி! – தயிரைக் ... |
| கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Posted: 02 Apr 2016 10:29 PM PDT - அரண்மனை தன்னில் நாள்தோறும் அயரா திருந்து பணிசெய்யும் பணிப்பெண் ஒருநாள் அரசனது படுக்கையில் படுத்தாள் சோர்வாலே! – கண்கள் இருண்டு வந்ததனால் கட்டிலில் அவளும் சாய்ந்து விட்டாள்! எண்ணவும் அவளுக்கு நேரமில்லை ஏழைப்பெண் அவள் தெம்பில்லை! – பூங்கா உலவல் முடிந்தவுடன் புவியை ஆள்பவன் அங்கு வந்தான்! கண்டான் அந்தக் காட்சியினை காட்டுக்கோபம்' அவன் கொண்டான்! – இவளுக்கு எத்தனை திமிர் இருந்தால் இந்தப் படுக்கையில் படுத்திருப்பாள்? எதிரே இருக்கும் தூணினிலே இவளைக் கயிற்றால் கட்டுங்கள்!' – கயிற்றால் ... |
| தயாரிப்பாளர்களை இழுக்கும் அஞ்சலி! Posted: 02 Apr 2016 10:27 PM PDT - மாயா படத்தில் நயன்தாரா நடித்ததை அடுத்து, அதே பாணியில் ஒரு படத்தில் நடிக்க அவரை அணுகியபோது, மாயா படத்தின் வெற்றியை முன் வைத்து, இரு மடங்கு படக் கூலியை ஏற்றிய விவரத்தை சொன்னார். அதனால், காண்பது பொய் என்ற அந்த படவாய்ப்பு, தற்போது, அஞ்சலிக்கு போய் விட்டது. இப்படத்திற்காக, அவர், 50 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். அத்துடன், நயன்தாராவுக்கான படங்களை, தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதற்காக, நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு அலையும் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ... |
| அரசியல் சர்ச்சையில் விஜயசேதுபதி! Posted: 02 Apr 2016 10:26 PM PDT - விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைய தளங்களில் மோதிக் கொள்வதைப் பார்த்து, நடிகர் விஜயசேதுபதி, 'ரசிகர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை விட்டு, ஏதாவது அரசியல் கட்சியில் சேருங்கள்…' என்று, 'அட்வைஸ்' செய்திருந்தார். விளைவு, விஜயசேதுபதி ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக, ஒரு செய்தி, காட்டுத்தீயாய் பரவியது. இதனால், அதிர்ந்து போனவர், 'எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரவில்லை; அப்படியொரு எண்ணமும் எனக்கு இல்லை…' என்று, மறுப்பு செய்தி வெளியிட்டு, அரசியல் சர்ச்சையில் இருந்து ... |
| ஏன்டி உன் கணவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பறே...? Posted: 02 Apr 2016 10:03 PM PDT ![]() |
| ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது Posted: 02 Apr 2016 09:48 PM PDT ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அவரது தாய்மொழியான "ஒடியா'வை கற்றுத்தர முயன்ற, காங்கிரஸ் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த 5 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ஒடிஸா மாநில முதல்வராக உள்ள நவீன் பட்நாயக், வெளிநாட்டில் தங்கிப்படித்தவர் என்பதால், அவருக்கு ஒடியா மொழி சரியாகத் தெரியாது என்று கூறப் படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அவ்வப்போது அவர் ஆளாவது வழக்கமாகும். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான ... |
| இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும் Posted: 02 Apr 2016 07:36 PM PDT - இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2 நாள்கள் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவையொட்டி, அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளாக உள்ளன. இவ்விரு நாடுகளும், அணு ஆயுத குறைப்பை முன்னெடுக்க தயாராக வேண்டும். இல்லையெனில், உலகில் அணு ஆயுதக் குறைப்பு என்பது ... |
| 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை Posted: 02 Apr 2016 07:33 PM PDT - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன. - மைதானம் எப்படி? ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். எனினும் ஆடுகளத்தில் சிறு அளவில் புற்கள் காணப்படுவதால் ஓரளவு வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும். பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-ஆவது முறையாக... ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



