Tamil News | Online Tamil News |
- ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு உறுப்பினரை தேர்வு செய்ய முடியாமல் தவித்த அ.தி.மு.க.,
- தோப்பு இருக்கு: தேங்காய் இல்லை
- மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்
- சேவை வரியிலிருந்து விலக்குநிறுவனங்களுக்கு அரசு தாராளம்
- மீண்டும் டில்லியில் 15 நாட்களுக்கு வாகன கட்டுப்பாடு... :அரசுக்கு காங்., - பா.ஜ., கட்சிகள் கடும் எதிர்ப்பு
- கற்பனைக்கு எட்டாததை செய்து முடிப்பேன்: ஜெ., சூளுரை
- தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்... உஷார்:பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை
- 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., பட்டை நாமம்மதுரையில் ஸ்டாலின் ஆவேசம்
- கருணாநிதி வீடு முன் திடீர் முற்றுகை
- ஜப்பானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
| ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு உறுப்பினரை தேர்வு செய்ய முடியாமல் தவித்த அ.தி.மு.க., Posted: 15 Apr 2016 08:12 AM PDT முக்கிய மசோதாவை, பரிசீலனை செய்யும், ராஜ்யசபா தேர்வுக்குழுவுக்கு, கட்சியின் சார்பில், பெயர் தருவது குறித்து, தெளிவாக கையாளத்தெரியாமல் போனதால், ரெண்டுங் கெட்டான் நிலைக்கு, அ.தி.மு.க., ஆளாகியுள்ள பரிதாபம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டம், மார்ச் 16ல் நிறைவடைந்தபோது, பல்வேறு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில், எதிரிகள் சொத்து சீரமைப்பு மசோதாவும் ஒன்று. அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அப்படியே, ராஜ்யசபாவின் தேர்வுக்குழுவுக்கு ... |
| தோப்பு இருக்கு: தேங்காய் இல்லை Posted: 15 Apr 2016 08:46 AM PDT 'ஏன் தான் கட்சி துவங்கினோமோ...தேர்தல் அறிவித்ததும் போதும்... ஒரு நாள் கூட நிம்மதியான துாக்கம் இல்லை' என, த.மா.கா., தலைவர் வாசன், இரண்டு நாட்களுக்கு முன், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் உதிர்த்த வார்த்தைகள். சின்னம், கூட்டணி, குடும்ப அரசியல், மூத்த தலைவர்கள் ஓட்டம் என, ஏகப்பட்ட பிரச்னை களை சந்தித்து வரும் த.மா.கா.,விற்கு, இப்போது புது பிரச்னை முளைத்து உள்ளது. ம.ந.கூ.,யில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் இளித்தவாயாகி இருப்பது த.மா.கா.,தான். கூட்டணியில் இடம் பெற்ற மற்ற ஐந்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதி களை ... |
| Posted: 15 Apr 2016 09:22 AM PDT புதுடில்லி,:வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வின் பாஸ்போர்ட்டை முடக்கி, வெளியுறவு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு வங்கிகளில், தன், 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்துக்காக, 9,400 கோடி ரூபாய் கடன் பெற்ற, விஜய் மல்லையா, 60, அதை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், 900 கோடி ரூபாய் கடன் பெற்று, வெளிநாடுகளுக்கு அனுப்பியது தொடர்பாக, சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு ... |
| சேவை வரியிலிருந்து விலக்குநிறுவனங்களுக்கு அரசு தாராளம் Posted: 15 Apr 2016 09:24 AM PDT மும்பை,:மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் குறிப்பிட்ட சில சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதற்கான சேவை வரியைச் செலுத்த வேண்டியதில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி மசோதாவில், சேவை வரி விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், அரசின் சேவைகளைப் பெறும்போது, 15 சதவீதம் சேவை வரியைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல், 1ம் தேதி முதல், இது அமலுக்குவந்தது.இதற்கு, பல்வேறு தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, இந்த ... |
| Posted: 15 Apr 2016 09:26 AM PDT புதுடில்லி,:டில்லியில், வாகனங்களின் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க பதிவெண்கள் அடிப்படையில், வெவ்வேறு நாட்களில் இயக்கும் திட்டம், இரண்டாம் கட்டமாக, நேற்று முதல் மீண்டும் அமலுக்கு வந்தது. இத்திட்டத்துக்கு, காங்., மற்றும் பா.ஜ., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு நடக்கிறது. டில்லியில் வாகனங்கள் பெருக்கத்தால், காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, காற்று மாசை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், ஜனவரி, 1 முதல், 15 நாட்களுக்கு, ... |
| கற்பனைக்கு எட்டாததை செய்து முடிப்பேன்: ஜெ., சூளுரை Posted: 15 Apr 2016 09:37 AM PDT அருப்புக்கோட்டை:''நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத, உங்கள் கற்பனைக்கு எட்டாத திட்டங்களை செய்து முடிப்பேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா அருப்புக்கோட்டை பிரசாரத்தின் போது தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, தென் மாவட்டங்களில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது:தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும். கடந்த தேர்தலில் தெரிவிக்கப்பட்ட 53 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து ... |
| தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்... உஷார்:பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை Posted: 15 Apr 2016 10:32 AM PDT வெப்பத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், 'தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்; உஷாராக இருங்கள்; அவசியம் இன்றி வெளியில் தலை காட்ட வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகங்களே, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில், கோடைக்கு முன், மார்ச் மாதமே வெப்பத் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 'வெப்பத் தாக்கம் மேலும் அதிகரிக்கும்; முந்தைய ஆண்டுகளை விட, 3 டிகிரி வரை கூடும்' என, உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்தது. அதுபோலவே நாளுக்கு நாள் வெப்பத் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் ... |
| 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., பட்டை நாமம்மதுரையில் ஸ்டாலின் ஆவேசம் Posted: 15 Apr 2016 10:53 AM PDT மதுரை,:''தமிழக மக்களுக்கு 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு பட்டை நாமம் போட்டுள்ளது. எந்த வளர்ச்சித் திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கவில்லை,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார் மதுரை அருகே ஒத்தக்கடையில் பிரசாரத்தை துவக்கிய அவர் பல்வேறு இடங்களில் பேசிய தாவது:தமிழகத்தில் மே 16ல் ஒரு போர்க்களத்தை சந்திக்க உள்ளோம். அதற்கான பூமி பூஜை யாகதான் இந்த பிரசாரம் துவங்கி உள்ளது. ஜெயலலிதாவை நாட்டைவிட்டு விரட்டவும், கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்கவும் சபதம் ஏற்று இங்கு வந்துள்ளேன்.இந்த தேர்தலில் தி.மு.க.,.வின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சென்றடைந்து உள்ளது. ... |
| கருணாநிதி வீடு முன் திடீர் முற்றுகை Posted: 15 Apr 2016 10:54 AM PDT பாளையங்கோட்டை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மைதீன்கானை மாற்றக் கோரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில், 173 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்பாளராக மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வினர், வேட்பாளர் பட்டியல் வெளியானது முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நான்காவது முறையாக போட்டியிடும் மைதீன் கான், இதுவரை தொகுதிக்கு எதுவுமே செய்த தில்லை ... |
| ஜப்பானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை Posted: 15 Apr 2016 01:01 PM PDT டோக்கியோ: ஜப்பானில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.சுனாமி எச்சரிக்கையும்விடப்பட்டது.ஜப்பானின் தென்மேற்கே உள்ள கியூஷு தீவில், நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி தொடர்ந்து 20 வினாடிகளுக்கு நீடித்த இந்த நிலநடுக்கத் தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 9 பேர் இறந்தனர். அதிவேக ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் சாலைகளில்தங்கினர். கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர் பலி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 16,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |