ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படித்ததில் பிடித்தது :) -....-டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
- இலக்கண, இலக்கிய வரலாறு
- தெறி விமர்சனம்
- சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை
- ஒரு நாள் தான் – ஒரு பக்க கதை
- பழமொழிகளின் தொகுப்பு
- இன்று ஸ்ரீ ராமநவமி
- பதிலடி - பட்டுக்கோட்டை பிரபாகர் ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய.
- திறமைகளை வளர்த்துக் கொண்டால்…
- அடிப்பதை' காட்டிலும் "நடிப்பது' கடினம்
- சித்தர்கள் வரலாறு
- கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
- திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- ரசித்த ஹைக்கூக்கள் -தொடர்
| படித்ததில் பிடித்தது :) -....-டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது! Posted: 15 Apr 2016 03:17 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 15 Apr 2016 02:57 PM PDT இலக்கணம் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் நன்னூல் நம்பி அகப்பொருள் விளக்கம் இறையனார் அகப்பொருள் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கம் தமிழ்நெறி விளக்கம் சிதம்பரப் பாட்டியல் நவநீதப் பாட்டியல் பன்னிரு பாட்டியல் வீரசோழியம் இலக்கணக் கொத்து தமிழ் நூல் முத்து வீரியம் சுவாமி நாதம் நேமிநாதம் அறுவகை இலக்கணம் மாறன் அலங்காரம் சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு எட்டுத்தொகை நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பத்துபாட்டு திருமுருகு ... |
| Posted: 15 Apr 2016 02:50 PM PDT விமர்சனத்துக்கு செல்வதற்கு முன்… இயக்குனரின் கதை விவாத அறைக்குள் எட்டிப் பார்த்தோம். இயக்குனர் – அசிஸ்டெண்ட்ஸ்… போலீஸ் ஸ்க்ரிப்டுக்கு ஸீன் ரெடி பண்ண பழைய படங்கள் பார்க்க சொன்னேனே…? என்னென்ன படங்கள் பார்த்தீங்க? அசிஸ்டெண்ட் நம்பர் 17 – சத்ரியன் இயக்குனர் – தம்பி… நல்ல செலக்ஷன். ஆனா அந்த படத்தை தான் மெயின் லைனுக்கு வெச்சிருக்கேன். நான் ஸீன்ஸ் கேட்டேன். அசிஸ்டெண்ட் நம்பர் 6 – ஹானஸ்ட்ராஜ், என்னை அறிந்தால் இயக்குனர் – ஓ…சூப்பர். ஹீரோ பில்டப் ஸீனுக்கு? அசிஸ்டெண்ட் நம்பர் ... |
| சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Posted: 15 Apr 2016 02:45 PM PDT - அலுவலகத்தில் அன்று சம்பள தினம். வழக்கம் போல பார்த்தசாரதியை சூழ்ந்து கொண்டார்கள் சக ஊழியர்கள். அவர் சிக்கனமாக செலவு செய்பவர். அதனாலேயே 'இந்த மாதம் அவசரச் செலவு… அத்தியாவசியச் செலவு…' என்று எதையாவது சொல்லி அவரிடம் கைமாற்று கேட்டு மொய்ப்பவர்கள் அதிகம். இவர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு மாசக் கடைசியில் பார்த்தசாரதி அல்லாட வேண்டியிருக்கும்! ''என்னோட ஏ.டி.எம் கார்டை என் மகனும் மகளும் மனைவியும் சேர்ந்து பிடுங்கி வச்சிக்கிட்டாங்கப்பா!'' என்றார் பார்த்தசாரதி. அனைவருக்கும் அதிர்ச்சி! ஒரு ... |
| Posted: 15 Apr 2016 02:43 PM PDT - சென்ட் பாட்டில், ஃபாரின் சோப், ஒரு ஃபுல் பாட்டில் எல்லாவற்றையும் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் ராகவன். - ''ஃபாரின்லருந்து வந்ததும் வராததுமா எங்கடா கெளம்பிட்டே?'' – வழிமறித்துக் கேட்டாள் அம்மா.''கார்த்தி வீட்டுக்கும்மா!'' – நிற்காமல் சொல்லிக்கொண்டே, வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான். மனசெல்லாம் கார்த்திக்கு நன்றி சொன்னது. 'அவன் உதவி செய்யலைன்னா நான் ஃபாரின் போயிருக்க முடியாது. கை நிறைய சம்பாதிச்சிருக்க முடியாது. வீடு, வாசல்னு நல்ல நிலைக்கு வந்திருக்க ... |
| Posted: 15 Apr 2016 02:40 PM PDT பழமொழி சொன்னார்கள் அன்று , அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று என்ற திரியில் இடம்பெறும் பழமொழிகளின் தொகுப்பு இங்கே ... 1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் . விளக்கம் : ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும். 2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் 3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு. 4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு ... |
| Posted: 15 Apr 2016 02:38 PM PDT இன்று ஸ்ரீ ராமநவமி ஸ்ரீ ராமன் பிறந்த தினம் . ஸ்ரீ ராமநவமி என்றால் எங்கள் ஊர் பஜனை மடம், ராம பஜனை , பானகம் ,வெள்ளிரி துண்டுகள் , மல்லிகை மாலை ,விசிறி தான் நினைவுக்கு வருகிறது , ரமணியன் |
| பதிலடி - பட்டுக்கோட்டை பிரபாகர் ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய. Posted: 15 Apr 2016 08:06 AM PDT பட்டுக்கோட்டை பிரபாகர் - பதிலடி ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் குமுதம் வார இதழில் ஆறுவார அதிரடி தொடராக வெளிவந்தது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7y6vfw72y8610of/AA1503.pdf |
| Posted: 15 Apr 2016 01:08 AM PDT - - - ![]() |
| அடிப்பதை' காட்டிலும் "நடிப்பது' கடினம் Posted: 15 Apr 2016 01:01 AM PDT - ஆடுகளத்தில் நின்று பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதைக் காட்டிலும், கேமரா முன்பாக நின்று நடிப்பது கடினமாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. அதில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். "சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை பிரபல பிரிட்டன் இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்குகிறார். இப்படத்துக்கான டீஸர் வியாழக்கிழமை வெளியாகி வைரலாகியுள்ளது. ... |
| Posted: 14 Apr 2016 08:33 PM PDT 1. திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் ... |
| கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம் Posted: 14 Apr 2016 08:25 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி, கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ,3,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனரா வங்கியின் மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டப்பட உள்ளது. அதன்படி, சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப கனரா வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு ... |
| திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு Posted: 14 Apr 2016 08:18 PM PDT - உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து வருபவராக அறியப்படுகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பற்றி வட மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை நடவடிக்கை ... |
| Posted: 14 Apr 2016 07:37 PM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 14 Apr 2016 07:35 PM PDT குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல் –ரசித்தவை 1: குடையின் கீழ் வானம் தேங்கிய நீரில் மழை பொழிந்த சாலை – கன்னிக்கோவில் இராஜா வயிறு இல்லை வருத்தமின்றி பயணம் ஈசல் – இரா. இரவி சலிப்படைந்தன சலூன் கண்ணாடிகள் எத்தனை முகங்கள் – பொன்குமார் எல்லோர் வீட்டிலும் இரவல் குழம்பு கேட்டாள் காணாமல் போனது கோழி – ஆலா நெய்த பின்னும் சேலையில் கிழிசல் நெசவாளியின் வறுமை – ஆசுரா கடவுள் இல்லை சத்தியம் செய்தான் கற்பூரம் அணைத்து – தென்றல் நிலவன் பூ கேட்டு அழும் சிறுமி தாய் சூட்டுகிறாள் சமாதானப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
