Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குடிநீருக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,500 கோடி.வீண் .. வறட்சி பாதித்த மாநிலங்களின் அலட்சிய போக்கு

Posted: 14 Apr 2016 08:16 AM PDT

புதுடில்லி: மாநிலங்களில் குடிநீர் வசதி திட்டங்களை மேற்கொள்ள, மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 1,500 கோடி ரூபாயை, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள, 13 மாநிலங்கள் பயன்படுத்த வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், 'எல் - நினோ' எனப்படும் பருவநிலை மாறுபாடு தாக்கத்தாலும், நாட்டில் பல்வேறு மாநிலங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள், பல மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்துள்ளன.'மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை ...

கடல்சார் துறை பாரம்பரியம் மீட்க பிரதமர் வலியுறுத்தல்

Posted: 14 Apr 2016 08:18 AM PDT

மும்பை:நாட்டின், முதல் கடல் சார் உச்சி மாநாட்டை, மும்பையில் நேற்று துவக்கி வைத்த பிரதமர்நரேந்திர மோடி, ''கடல் சார் துறையில் சிறப்பான பாரம்பரியத்தை உடையவர்கள் இந்தியர்கள். அந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.

இந்திய கடல்சார் துறையில், கப்பல் கட்டுதல், பழுது நீக்குதல், துறைமுகங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மும்பையில் நேற்று, நாட்டின் முதல் கடல்சார் உச்சி மாநாடு துவக்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசிய ...

அரசியலில் குதிக்க தயக்கமில்லைசோனியா மருமகன் சூசகம்

Posted: 14 Apr 2016 08:23 AM PDT

புதுடில்லி:அரசியலில் குதிக்க தயக்கமில்லையென, காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, சூசகமாக தெரிவித்துள்ளார்.பொறுத்திருந்து...இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:மக்களுக்காக என்னால் பணியாற்ற முடியும் என, நான் எப்போது நினைக்கிறேனோ; எப்போது எனக்கு அழைப்பு வருகிறதோ, அப்போது, அரசியலில் இறங்குவேன். அரசியலில் குதிக்க மாட்டேன் என, கூறவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அரசியலாக இருந்தாலும் சரி, தனிப்பட்டவாழ்க்கையாக இருந்தாலும் சரி, என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். என் ...

கூட்டணிக்குள் கடாமுடா

Posted: 14 Apr 2016 09:35 AM PDT

'தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது' என, வாய்க்கு வாய் சொல்லி வருகின்றனர், பா.ஜ.,வின் தமிழிசை சவுந்தரராஜனும், எச்.ராஜாவும். அவர்கள் அரசியலுக்காக இதை சொன்னாலும், அந்த விஷயம் நடந்து விடுமோ என்ற பதற்றத்தில், அக்கூட்டணி கட்சியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது தான் பரிதாபம்.

சட்டசபை தேர்தலை சந்திக்க, தே.மு.தி.க.,-- ம.ந.கூ., - -த.மா.கா., இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கூட்டணியின் தலைவர்கள் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், 9ம் தேதி தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் செய்தனர்.
'தே.மு.தி.க., 104, ...

தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு: கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள்

Posted: 14 Apr 2016 09:50 AM PDT

'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.

எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'ஜாக்டோ, ஜாக்டா' என போராட்டம் நடத்திய ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப் படுத்த ...

தேர்தல் அறிக்கை எப்ப வரும்: அ.தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு

Posted: 14 Apr 2016 09:51 AM PDT

தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், அ.தி.மு.க.,வினர் உள்ளனர். தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றிக்கு, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகித்தது. இலவச கலர் 'டிவி' வழங்கப்படும். கிலோ ஒரு ரூபாய் விலையில், 20 கிலோ அரிசி வழங்கப்படும் என, பல்வேறு அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன.தயாரிப்பில் தீவிரம்அதைத் தொடர்ந்து, 2011சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம் பெற்றன. இத் தேர்தலில், ...

ஆவல் அ.தி.மு.க., போல் தி.மு.க.,விலும் வேட்பாளர் மாற்றம் வருமா?பல ஊர்களில் மோதல் வெடித்ததால் கட்சியினர் எதிர்பார்ப்பு

Posted: 14 Apr 2016 10:48 AM PDT

தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்புக்கு, பல ஊர்களில் எதிர்ப்பும், மோதலும் வெடித்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வைப் போல, தி.மு.க.,விலும், வேட்பாளர் மாற்றம் வருமா என்ற ஆவலும், எதிர்பார்ப்பும், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல், நேற்று முன்தினம் மாலை வெளியானது. பல தொகுதிகளில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உருவபொம்மையை எரித்து, தலைமையின் முடிவுக்கு எதிராக, சில தொகுதிகளில் தி.மு.க.,வினர் கொந்தளித்துள்ளனர். உச்சகட்டமாக, ஆற்காடு வேட்பாளரை அடித்து உதைத்துள்ளனர்.எனவே, பரவலாக ...

ஆதரவாளர்கள் 'அவுட்' - அழகிரிக்கு ராஜ்யசபா 'சீட்'

Posted: 14 Apr 2016 11:26 AM PDT

ஆதரவாளர்களுக்கு, 'சீட்' வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதியை, மார்ச், 24ல், அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது, கூட்டணி விவகாரம், கட்சி நிலவரம் குறித்தும், கருணாநிதியின் சுற்றுப் பயணம் குறித்தும், ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவ்வப்போது கருணாநிதியும், அழகிரியும் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.கடந்த, 8ம் தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த, தமிழரசு மணி விழாவில் அழகிரி ...

கவுரவ கொலைகளை ஒழிக்க தனி பிரிவு 3 மாதங்களில் ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு

Posted: 14 Apr 2016 11:44 AM PDT

சென்னை,: கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் புகார்களை பெற, மாவட்டங்களில் தனி குழுவை ஏற்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர், திலீப்குமார்; ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர். வேறு சமூகத்தை சேர்ந்த, விமலாதேவி என்ற பெண்ணை, கலப்பு திருமணம் செய்தார். பின், இருவரையும் பிரித்து விட்டனர்; விமலாதேவி கொலை செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™