Tamil News | Online Tamil News |
- மாயாவதி மீது சொத்து வழக்கு பாயுமா?
- தேசிய வேளாண் சந்தை திட்டம் இன்று...ஆரம்பம் ! விவசாயிகள் வருவாயை பெருக்க முயற்சி
- 'நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி': பா.ஜ., தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு
- ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தி.மு.க., மீது ஜெ., குற்றச்சாட்டு
- கூட்டம் சேர்க்க கொடுக்கும் பணம்வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்
- அரசியல் சுதந்திர போர்: பிரேமலதா ஆவேசம்
- தி.மு.க., பட்டியலில் மீண்டும் ஏமாற்றம்! பழைய முகங்களுக்கே 'சீட்' இளைஞர்கள், பெண்களுக்கு குறைந்த அளவே வாய்ப்பு
- கருணாநிதிக்கு சீட் மறுத்த ஸ்டாலின்
- இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் ஜோதிடர் ஆலோசனைப்படி வெளியீடு
- 169 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி
- சிறையில் இந்தியர் மரணம் எதிரொலி; பாக்., அரசுடன் பேச நடவடிக்கை
| மாயாவதி மீது சொத்து வழக்கு பாயுமா? Posted: 13 Apr 2016 10:38 AM PDT புதுடில்லி,: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதிக்கு எதிராக, புதிய வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், 2003ல், முதல்வராக பதவி வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மீது, தாஜ் வணிக வளாகம் அமைக்க, அனுமதியின்றி, 17 கோடி ரூபாய் விடுவித்ததாக புகார் கூறப்பட்டது. இதுசம்பந்தமாக, மாயாவதிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரித்தது. இந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட ... |
| தேசிய வேளாண் சந்தை திட்டம் இன்று...ஆரம்பம் ! விவசாயிகள் வருவாயை பெருக்க முயற்சி Posted: 13 Apr 2016 08:44 AM PDT புதுடில்லி :விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்யக் கூடிய வகையில், தேசிய வேளாண் சந்தை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில், பல்வேறு திட்டங்களை, மத்திய அரசு அறிவித்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, 'நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களையும், இணையம் மூலமாக இணைத்து, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்படும்' என, பட்ஜெட்டில் ... |
| 'நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி': பா.ஜ., தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு Posted: 13 Apr 2016 09:27 AM PDT திருச்சி: ''நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி, தமிழகத்தில் தான் நடக்கிறது,'' என்று, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார். அவர், நேற்று அளித்த பேட்டி:அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் ஆகிய, மூன்றும் ஊழல் கட்சிகள். அதன் தலைவர்கள் மீது, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அவை அரசியல் வழக்குகள் அல்ல; ஊழல் வழக்குகள். இவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், ஊழல் செய்துள்ளனர்.'2ஜி' வழக்கு, மேக்சிஸ் ஏர்செல் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, சிதம்பரம் மகன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு என, பட்டியல் நீளும். ஊழல் காரணமாகவே, தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை.தமிழக ... |
| ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தி.மு.க., மீது ஜெ., குற்றச்சாட்டு Posted: 13 Apr 2016 09:53 AM PDT தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 11 அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: என் வாழ்வில், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என, தினமும் யோசித்து கொண்டேயிருக்கி றேன்.புதுப்புது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான், இந்த ஆட்சியின் நோக்கம்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை, தி.மு.க., செய்ததாக கூறி வருகிறது. அது, பற்றிய உண்மையை விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 1965ம் ஆண்டே, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்பின், எம்.ஜி.ஆர்., ... |
| கூட்டம் சேர்க்க கொடுக்கும் பணம்வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் Posted: 13 Apr 2016 09:53 AM PDT 'பொதுக் கூட்டத்திற்கு, கூட்டம் சேர்க்க, பணம் கொடுத்து, ஆட்களை கூட்டி வந்தால், அந்தச் செலவு முழுவதும், சம்பந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. கட்சி தலைவர்களின் பிரசார பொதுக் கூட்டங்களுக்கு, கூட்டத்தை சேர்க்க, பணம் கொடுத்து, ஆட்களை திரட்டுகின்றனர். இதற்கான செலவுக்கு, அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரைக்கும், பணம் கொடுக்கப்படுகிறது. ஆளுக்கு இருநுாறு, முந்நுாறு ரூபாயுடன் பிரியாணி, அழைத்து வர வாகனம் என, அந்த பணத்தை செலவு செய்கின்றனர். அதுவே, ஆண்கள் என்றால், மதுபானமும் ... |
| அரசியல் சுதந்திர போர்: பிரேமலதா ஆவேசம் Posted: 13 Apr 2016 10:06 AM PDT நாகர்கோவில்:''தமிழகத்தில் நடைபெறும் இந்த தேர்தல் அரசியல் சுதந்திர போர், இந்த போரில் தே.மு.தி.க.,- -மக்கள் நல கூட்டணி வெல்லும்,'' என பிரேமலதா கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் கூட்டணிக்கு ஆதரவு திரட்டி அவர் பேசியதாவது:தி.மு.க., மீது கோபம் வரும் போது அ.தி.மு.க., வுக்கு ஓட்டு போட்டீர்கள். அ.தி.மு.க., மீது கோபம் வந்த போது தி.மு.க., வுக்கு ஓட்டு போட்டீர்கள். இந்த தேர்தலில் தே.மு.தி.க., -- மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து புதிய சரித்திரம் ஏற்படுத்த வேண்டும். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக ... |
| Posted: 13 Apr 2016 10:57 AM PDT தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான, தி.மு.க., வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பழைய முகங்களாகவே உள்ளனர். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, குறைந்த அளவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், தி.மு.க.,வினர் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மே, 16ல், சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், வரும், 22ல் துவங்குகிறது. இதனால், ஒவ்வொரு கட்சியும், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. ஒரு வாரத்துக்கு முன், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, ... |
| கருணாநிதிக்கு சீட் மறுத்த ஸ்டாலின் Posted: 13 Apr 2016 11:57 AM PDT நீண்ட நாள் தயாரிப்பான, தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று காலை வெளியாக இருந்தது. பட்டியலை வெளியிட்டு, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் ஆர்வத்துடன், அறிவாலயம் கிளம்ப தயாராக இருந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். அந்த நேரத்தில் வந்த செய்தியை கேட்டதும், பரபரத்த அவர், நேராக கோபாலபுரம் பறந்தார். பட்டியலும் கையுமாக இருந்த கருணாநிதியை சந்தித்தார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடலும், அதனால் எழுந்த கோபமும், ஸ்டாலினை பழையபடி, வீட்டுக்கே ஓட வைத்து விட்டது.இடையில் நடந்தது களேபரம். கருணாநிதி கேட்ட தொகுதியை, ஸ்டாலின் தர மறுத்ததும், பட்டியலை வெளியிட ... |
| இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் ஜோதிடர் ஆலோசனைப்படி வெளியீடு Posted: 13 Apr 2016 12:30 PM PDT ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும், ஒரே நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அவசரமாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.அதேபோல், தி.மு.க., வேட்பாளர் பட்டியல், காலையில்வெளியிடப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், வேட்பாளர்களை முடிவு செய்வதில், இழுபறி நீடித்தது. எனினும், அதை சரி செய்து, ... |
| 169 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி Posted: 13 Apr 2016 12:50 PM PDT தமிழக சட்டசபை தேர்தலில், 169 தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., 227 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதில், 169 தொகுதிகளில், தி.மு.க.,வை சந்திக்கிறது.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, காங்கிரசுக்கு, 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், 40 தொகுதிகளில், அ.தி.மு.க.,வுடன் மோதுகிறது. ஒரு தொகுதியான காங்கேயத்தில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியான, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையுடன் மோதுகிறது.கடந்த, 2011சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் ... |
| சிறையில் இந்தியர் மரணம் எதிரொலி; பாக்., அரசுடன் பேச நடவடிக்கை Posted: 13 Apr 2016 01:44 PM PDT
புதுடில்லி : பாக்., சிறையில் மர்மமான முறையில், இந்தியர் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு அரசுடன் பேசும்படி, ஹைகமிஷனரை, இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில், 20 ஆண்டுக்கு முன் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, கிருபால் சிங் என்ற இந்தியர், 50, கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர், சில நாட்களுக்கு முன், மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுதொடர்பாக, டில்லியில் நேற்று, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், நிருபர்களிடம் கூறியதாவது: பாக்., சிறையில், இந்தியர் கிருபால் சிங் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 14,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |