Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தலைமுறை இடைவெளி

Posted: 13 Apr 2016 02:50 PM PDT

தலைமுறை இடைவெளி கருக்கலிலே கண்விழித்து தெருவினிலே கோலமிட்டு   பருவமகள் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் -  அன்று கைப்பேசியில் கண்விழித்து முகநூலில் முத்தமிட்டு வாட்ஸ்ஹாப்பில் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் -  இன்று பருவமதன் பயன்பெறவே திருமணமும் செய்துகொண்டு இருவர்நாம் ஒருவராகி பெருமையுடன் வாழ்ந்திடுவோம் -  அன்று பிடித்திருந்தால் ப்ரெண்டாக பிரியாமல் இணைந்திடுவோம் முடிச்சின்றி தம்பதியாய் முழுமையாய் வாழ்ந்திடுவோம் -  இன்று புத்தாடைதனை உடுத்தி சிற்றாடைதனை திருத்தி ...

siddhar books

Posted: 13 Apr 2016 12:42 PM PDT

எனக்கு சிவ ரகசியம் அல்லது சித்தர் களின் கதைகள் அடங்கிய லிங்க் அனுப்ப முடியுமா

தமயந்தி

விடை சொல்லும் வேதங்கள்

Posted: 13 Apr 2016 11:37 AM PDT

விடை சொல்லும் வேதங்கள்

சக்தி விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

http://www.mediafire.com/download/y8k3kd8ioxh4wih/VidaiSollumVedhangal_SakthiVikatan.pdf

இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...!

Posted: 13 Apr 2016 08:18 AM PDT

மரங்கள் பலவிதம்

Posted: 13 Apr 2016 07:59 AM PDT


-

-

-

மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

Posted: 13 Apr 2016 07:33 AM PDT

- மழை வருவதை அரை மணி நேரத்துக்கு முன்பே சொல்லிவிடும் குடையை உருவாக்கியிருக்கிறது பிரான்ஸ் நிறுவனம் வெஸ்ஸூ. இதன் பெயர் 'ஊம்ப்ரெல்லா'. ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, ஊம்ப்ரெல்லாவை இயக்க வேண்டும். வானிலை மாற்றங்கள் மட்டுமின்றி, வீட்டிலோ, வெளியிலோ குடையை மறந்து வைத்துவிட்டு வருவதைக்கூட இந்த ஆப் காட்டிக் கொடுத்துவிடும். இரண்டு விதங்களில் இந்தக் குடைகள் கிடைக்கின்றன. 3.1 அடி உயரம் கொண்ட வளைந்த கைப்பிடி கொண்ட குடை க்ளாஸிக். 0.8 அடி உயரம் கொண்ட நேரான கைப்பிடி ...

கேவலமான உண்மைகள்,,,,,,,

Posted: 13 Apr 2016 07:29 AM PDT

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.} 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் ...

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Posted: 13 Apr 2016 06:54 AM PDT

- தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் (40.6 டிகிரி செல்சியஸ்) கொளுத்தியது. மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வெப்பத்தால் உடல் நிலை பாதிக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்கியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் நேற்று ...

காளமேகப் புலவரா? கம்பரா?.......

Posted: 13 Apr 2016 06:50 AM PDT

இன்று நெடில் ஏதோ தேடியபோது, இந்த இரு பதிவுகளைக் காண நேர்ந்தது, இதில் எதுசரி என்று , தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .... ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்: எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக் கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே யாரையடா சொன்னாய் அது. தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை ...

ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted: 13 Apr 2016 05:31 AM PDT

- திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சென்னை புற்றுநோய் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவுக்கு பத்ம விபூஷண், - சம்ஸ்கிருத மொழியியல் வல்லுநர் பேராசிரியர் என்.எஸ். ராமானுஜ தத்தாச்சார்யா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண், - நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். - 2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்குத் தேர்வான 112 பேரில் 56 பேருக்கு ...

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Posted: 13 Apr 2016 05:24 AM PDT


-
நீ சிரித்தால் மல்லிகை
தொடர்ந்து சிரித்தால்
அடுக்கு மல்லிகை
–
———————-

ஏப்ரல் 22-ல் வெளியாகிறது பென்சில்...

Posted: 13 Apr 2016 04:44 AM PDT

- - சென்னை: ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பென்சில்' வருகின்ற 22 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. - 2 வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட பென்சிலுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது. ஆமாம் இப்படம் வருகின்ற 22ம் தேதி வெளி யாகும் என்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். - -------------

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை

Posted: 13 Apr 2016 04:25 AM PDT

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ(வயது 72). இவர் சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நகைகளை தியாகராயநகர், பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டார். ...

அன்பு – சிறுவர் கதை

Posted: 13 Apr 2016 04:15 AM PDT

- பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். ...

இந்தியாவின் முன்னனி பெண் பைக் ரேஸர் வேணு பாலிவால் சாலை விபத்தில் மரணம்

Posted: 13 Apr 2016 04:09 AM PDT

- – April 12, 2016 – இந்தியாவின் முன்னனி மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை வேணு பாலிவால் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் வேணு பாலிவால் தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் கவிழ்ந்து விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வேணு, அருகே இருந்த கையாராஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிக்சைக்காக விதிஸா மாவட்ட ...

ரோஜாவை தாலாட்டும் தென்றல்

Posted: 13 Apr 2016 04:06 AM PDT

படம்: நினைவெல்லாம் நித்யா இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி வரிகள்: வைரமுத்து – ————————– ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் (ரோஜாவை..) – இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை (இலைகளில்,.) மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ (ரோஜாவை..) – வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர்காலம் ...

மியான்மரில் தண்ணீர் திருவிழா விமரிசையாக தொடங்கியது.

Posted: 13 Apr 2016 02:47 AM PDT

- மியான்மர்: மியான்மரில் பாரம்பரியமாக நடத்தப்படும் தண்ணீர் திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தண்ணீர் திருவிழா மியான்மரில் உற்சாகமாக தொடங்கியது. நடன கலைஞர்கள் நடனமாடியபடி தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறு, சிறு தண்ணீர் குழாய்கள் மூலம் சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மீதும் தண்ணீரை பீ்ய்ச்சியடித்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கைக்குழந்தைகளுக்கும் விதிவிலக்கல்ல. இந்த திருவிழா ...

பழமொழிகளின் தொகுப்பு

Posted: 13 Apr 2016 02:01 AM PDT

பழமொழி சொன்னார்கள் அன்று , அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று என்ற திரியில் இடம்பெறும் பழமொழிகளின் தொகுப்பு இங்கே ... 1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் . விளக்கம் : ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும். 2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் 3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு. 4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு ...

நீள்நெறி நாதர் கோவில் - தண்டலைச் சேரி

Posted: 13 Apr 2016 01:22 AM PDT

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம், தண்டலைச் சேரி. அங்கே நீள்நெறி என்னும் சிவாலயத்தில் இருக்கும் இறைவன் நீள்நெறி நாதர். ராஜகோபுரம் இல்லா முகப்பு வாசலில் நுழையும் போது கொடிமரமில்லா பலிபீடம் அதிகார நந்தி உள்ளது. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி, தெற்கு நோக்கிய அம்பாள் ஞானம்பிகை, பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்களின் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறையின் பின்புறம் தல  விருட்சமான குருந்த மரமும், அதனடியில் சிவலிங்கமும் உள்ளது. கோவில் ...

400 இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை

Posted: 12 Apr 2016 11:23 PM PDT

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 400 கலைஞர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலாச்சார வளம் மற்றும் பயிற்சி மையம் சார்பில் இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த கலைஞர்கள் 400 பேருக்கு இந்த உதவித்தொகை ...

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

Posted: 12 Apr 2016 10:44 PM PDT

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள், வரும் 19-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய ...

நம் சமையலறையில் - குறுக்கெழுத்துப் போட்டி

Posted: 12 Apr 2016 10:33 PM PDT


-

-

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சித்திரை திருவிழா மதுரை - 2016

Posted: 12 Apr 2016 09:43 PM PDT

சித்திரை முதல் நாள் சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும். கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார். - முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை) சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

Posted: 12 Apr 2016 09:41 PM PDT

- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் - இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி - கவுதம் கம்பீர் கேப்டன் ரோகித் சர்மா - நட்சத்திர வீரர்கள் - உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ரஸ்செல், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், பியுஷ் சாவ்லா *** கோரி ஆண்டர்சன், ஜோஸ் பட்லர், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், சிமோன்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேருக்கு நேர் 16 5 வெற்றி 11 வெற்றி (நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ்) - நடப்பு சாம்பியன் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் ...

அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு பத்திரங்கள் விற்பனை நிறுத்தம்

Posted: 12 Apr 2016 08:46 PM PDT

தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கிசான் விகாஸ் பத்திரங்கள் அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. – அஞ்சல் நிலையங்களில் என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேமிப்பு பத்திரங்கள் மின்னணு சேவை (இ-சேவா) மூலம் விற்பனை செய்வதற்கான புதிய திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. – இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து இனிமேல் இப்பத்திரங்கள் ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 12 Apr 2016 08:32 PM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

Posted: 12 Apr 2016 08:13 PM PDT

- ஐபிஎல் போட்டியின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. - இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. - பெங்களூர் இன்னிங்ஸ் - கோலி 75 (51) டி வில்லியர்ஸ் 82 (42) சர்ஃப்ராஸ் கான் 35*(10) மொத்தம் (20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு) 227 - ஹைதராபாத் இன்னிங்ஸ் - டேவிட் வார்னர் 58 (25) ஆஷிஷ் ரெட்டி 32 (18) கரன் சர்மா 26*(17) மொத்தம் (20 ஓவர் முடிவில் 6 ...

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

Posted: 12 Apr 2016 07:59 PM PDT

தமிழகம், மேற்கு வங்கம் உள்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த பறக்கும்படை அதிகாரிகளும், கண்காணிப்புக் குழுவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 12 Apr 2016 07:30 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 12 Apr 2016 07:29 PM PDT

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

ரசித்த ஹைக்கூக்கள் -தொடர்

Posted: 12 Apr 2016 07:28 PM PDT

குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல் –ரசித்தவை 1: குடையின் கீழ் வானம் தேங்கிய நீரில் மழை பொழிந்த சாலை – கன்னிக்கோவில் இராஜா வயிறு இல்லை வருத்தமின்றி பயணம் ஈசல் – இரா. இரவி சலிப்படைந்தன சலூன் கண்ணாடிகள் எத்தனை முகங்கள் – பொன்குமார் எல்லோர் வீட்டிலும் இரவல் குழம்பு கேட்டாள் காணாமல் போனது கோழி – ஆலா நெய்த பின்னும் சேலையில் கிழிசல் நெசவாளியின் வறுமை – ஆசுரா கடவுள் இல்லை சத்தியம் செய்தான் கற்பூரம் அணைத்து – தென்றல் நிலவன் பூ கேட்டு அழும் சிறுமி தாய் சூட்டுகிறாள் சமாதானப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™