Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்திற்கு கருணாநிதி...தயார்! 93 வயதிலும் வேன் மூலம் 23ம் தேதி முதல் சுற்றுப்பயணம்

Posted: 12 Apr 2016 09:22 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட தி.மு.க., தலைவர் கருணாநிதி தயாராகி உள்ளார்.

93 வயதிலும் அசராமல் வேன் மூலம் பிரசாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்து இருப்பது, கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 23ல் சைதாப்பேட்டையில் துவங்கும் அவரது பிரசார பயணம் மே 14ல் சென்னையிலேயே நிறைவுஅடைகிறது. மொத்தம் 15 நாட்கள் பிரசாரத்தில் 38 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.அ.தி.மு.க., பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா இம்மாதம் 9ல் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். 15 இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யும் ...

பணக்காரர்கள் ஏய்த்த தொகை எவ்வளவு?பகிரங்கப்படுத்த சொல்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 12 Apr 2016 09:28 AM PDT

புதுடில்லி:'வங்கிகளில், பணக்காரர்கள், கடனாகப் பெற்ற மொத்த தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, ஏய்த்தவர்களின் பெயர்கள் மற்றும் கடன் தொகைகளின் விவரங்களை வெளியிடக் கோரி, பொதுநல வழக்கு மையம் என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.பட்டியல்இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், நீதிபதி, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு, 'ரூபாய், 500 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் ...

வேட்பு மனு தாக்கலுக்கு, 8 நாட்கள்: காத்திருக்கும் கட்சிகள்

Posted: 12 Apr 2016 09:30 AM PDT

வேட்பு மனு தாக்கலுக்கு, இன்னும் எட்டே நாட்கள் தான் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க.,வின் மாற்றத்திற்கு உட்பட்ட வேட்பாளர் பட்டியலை தவிர்த்து, வேறு எந்த பெரிய கட்சியின் முழு பட்டியலும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு பிரதான காரணமாக, அனைத்து கட்சிகளிலும் கூறப்படுவது, 'கருணாநிதி பட்டியல் வெளியிடட்டும், அதை முதலில் பார்க்கலாம்' என்பது தான். தி.மு.க., வேட்பாளர்களின் தகுதி, ஜாதி பலத்தின் அடிப்படையில் தங்கள் கட்சி வேட்பாளர்களை முடிவு செய்ய மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் காத்திருக்கின்றன. அ.தி.மு.க., பட்டியலில் கூட, தி.மு.க., பட்டியல் ...

தி.மு.க., தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஹீரோ': சொல்கிறார் ஸ்டாலின்

Posted: 12 Apr 2016 09:32 AM PDT

''தி.மு.க., தேர்தல் அறிக்கையை, 'சூப்பர் ஹீரோ'வாக மக்கள் பார்க்கின்றனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.அவரது பேட்டி:-

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விக் கடன்கள், எந்த வகையில் ரத்து செய்யப்படும்?கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆட்சிக்கு வந்த பின் கருணாநிதி, தேர்தல் நேரத்தில் சொன்னதைத் தான் செய்வார், செய்வதைத் தான் சொல்வார் என்பதை, கடந்த கால வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. வரக்கூடிய காலங்களிலும் அதை நிரூபிப்பார்.தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல என்னென்ன விஷயங்கள் கையாளப்படுகின்றன?இளைஞர்கள், மாணவர், ...

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு

Posted: 12 Apr 2016 09:36 AM PDT

புதுடில்லி:விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன் இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது: தொலைத்தொடர்பு துறை, ஒவ்வொரு மாதமும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளது. விரைவில், மொபைல் போன்களுக்கான, 'இ - கே.ஒய்.சி.,' எனப்படும், மின்னணுவியல் முறையில், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. புதிய மொபைல் போன்இணைப்புக்கான விண்ணப்பம் அளிக்கும் வாடிக்கையாளரின் ஆதார் எண் மற்றும் தகவல்கள், ...

ஸ்டாலின் கெட்ட எண்ணம் அவரையே அழிக்கும்: விஜயகாந்த் பேச்சு

Posted: 12 Apr 2016 10:21 AM PDT

தாம்பரம்,: ''சக்கர நாற்காலியில் வந்து வழக்குகளை சந்திப்பேன்,'' என, தாம்பரம், அம்பத்துார் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க - மக்கள் நல கூட்டணி சார்பில், தாம்பரம், சண்முகம் சாலை மற்றும் அம்பத்துாரில் நடந்த பொதுக் கூட்டங்களில், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:அன்று வெள்ளையனை வெளியேற்ற நடந்தது சுதந்திர போர். இன்று இந்த கொள்ளையர்களை வெளியேற்ற நடக்கிறது. இந்த தேர்தல் போர். அ.தி.மு.க., - தி.மு.க., இருவருமே வீட்டிற்குள் புகுந்த கருநாகம் தான். நாடு சுடுகாடு ஆகாமல் இருக்க, நீங்கள் அளிக்கும் வாக்கு தான் ...

பருவமழை கூடுதலாக பெய்யுமென்ற கணிப்பால்...மகிழ்ச்சி ! விவசாயம், பொருளாதார துறைகளுக்கு புத்துணர்ச்சி

Posted: 12 Apr 2016 10:24 AM PDT

புதுடில்லி: 'இந்தாண்டு, இயல்பு நிலைக்கு அதிகமாக பருவமழை பெய்யும்' என, ஐ.எம்.டி., எனப்படும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, தொடர் வறட்சி காணப்பட்ட நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு, விவசாயம் மற்றும்பொருளாதாரத்துறைக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

நாட்டில், கடந்த இரு ஆண்டுகளாக, பெரும்பாலான மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்ட போதும், பிற மாநிலங்களில் வறட்சியே நிலவியது. இதன் தொடர்ச்சியாக, 'மூன்றாவது ஆண்டாக, நடப்பு ஆண்டி லும், ...

கோடை வெயிலால் சூரிய மின் உற்பத்தி அமோகம்

Posted: 12 Apr 2016 10:26 AM PDT

கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி நன்றாக உள்ளது. தமிழகத்தில், சூரிய சக்தி மின் நிலையங்களில் ஆண்டுக்கு, 300 நாட்கள் மின்சார உற்பத்தி நடக்கும். மத்திய அரசு, சூரிய மின் உற்பத்தியை ஊக்கவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் குறித்த காலத்தில் அனுமதி வழங்காதது ; சூரிய மின்சாரத்திற்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில் தாமதம்; நிலம் கிடைப்பதில் சிக்கல் போன்றகாரணங்களால், சூரிய சக்தி மின் நிலையங்களை அதிகளவில் அமைக்க முடியவில்லை. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் உற்பத்தி அட்டவணையில், ...

உயர்கல்விக்கு உதவும் நிறுவனங்கள் எவை?: பட்டியல் வெளியிட கோரிக்கை

Posted: 12 Apr 2016 11:14 AM PDT

பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், பாட புத்தகங்கள் வாங்குதல் ...

வீடு கிடைக்காமல் திணறும் மம்தா எதிர்ப்பு வேட்பாளர்!

Posted: 12 Apr 2016 01:04 PM PDT

கோல்கட்டா : சட்டசபைத் தேர்தல் நடக்கும் மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி யிடும், பா.ஜ., வேட்பாளர், அலுவலகம் அமைக்க இடம் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
மேற்கு வங்கத்தில், ஏப்., 4ல் துவங்கி, மே, 5 வரை, ஆறு கட்டங்களாக, சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி, பானிபோர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளராக, நேதாஜியின் உறவினர் சந்திர போஸ் களமிறங்கி உள்ளார். இதையடுத்து, கட்சி அலுவலகம் அமைக்க, தகுந்த வீட்டை பல நாட்களாக தேடியும் கிடைக்காமல், சந்திர ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™