Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சபாஷ்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராள சலுகை அறிவிப்புகள்:மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என உறுதி: 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவார்களாம்

Posted: 10 Apr 2016 11:14 AM PDT

சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்; 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகை அறிவிப்புகளை, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என, உறுதி அளித்ததோடு, இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடாததால், சபாஷ் பெற்றுள்ளது.
தமிழகத்தில், மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் ...

கேரள கோவிலில் கோர வெடி விபத்து தீயில் கருகி 105 பக்தர்கள் பலி

Posted: 10 Apr 2016 11:21 AM PDT

கொல்லம்:கேரள மாநிலம் கொல்லம் அருகே, பரவூர் புற்றிங்கல்தேவி கோவில் திருவிழாவில், போட்டி, 'வாணவேடிக்கை'யின் போது, பட்டாசு வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீப்பிடித்து மளமளவென பரவியதில், 105 பேர் தீயில் கருகி பலியாயினர்.

கொல்லம் அருகே உள்ள, பரவூர் புற்றிங்கல்தேவி கோவில் பிரசித்தி பெற்றது. தனியார் நிர்வகிக்கும் இக்கோவிலில், பங்குனி மாதத்தின் கடைசி, 10 தினங்கள், 'மீனபரணி' என்ற உற்சவம் நடக்கும். பத்தாம் நாள் இரவில், 'கம்பம் கட்டு' என்ற, 'வெடி வழிபாடு' நடக்கும்.
போட்டி 'வாண வேடிக்கை' இதற்காக கோவிலின் முகப்பில் உள்ள, திடலில் ...

திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக போர்:அசிங்கப்படுத்த களமிறங்கும் உ.பி., நிர்வாகம்

Posted: 10 Apr 2016 11:31 AM PDT

ஆக்ரா:திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக, பெரும் போரையே துவங்கியுள்ளன, உத்தர பிரதேச மாவட்டநிர்வாகங்கள். இங்கு, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு, சிறை தண்டனை, அபராதத்துடன், அவர்களுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் களமிறங்கியுள்ளன.

'நாட்டின் மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களில், 55 கோடி பேர், திறந்தவெளிகளிலேயே மலம் கழிக்கின்றனர்' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தான் இப்படி என்று இல்லாமல், ...

மைதானத்துக்கு தண்ணீர்: அதிகாரிகள் குழப்பம்

Posted: 10 Apr 2016 11:33 AM PDT

மும்பை:மும்பை வான்கெடே மைதானத்தை பராமரிக்க பயன்படுத்தும் தண்ணீர், குடிநீரா என்று எப்படி சோதிப்பது என்பது புரியாமல், மாநராட்சி அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறைமஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு தண்ணீர் வீணடிக்கப் படுவதை தடுக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
'குடிநீரை,மைதானத்தின் பராமரிப்புக்கு ...

தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமதிப்பா? நடவடிக்கையில் இறங்க மாநிலங்களுக்கு உத்தரவு

Posted: 10 Apr 2016 11:58 AM PDT

புதுடில்லி:தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிகின்றன. இதையடுத்து, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களை அமல்படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு வின் நினைவு நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுசம்பந்தமாக, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச துரோக ...

'ஸ்டாலினுக்கு எதிரி அவரே தான்!'விஜயகாந்த் விளாசல்

Posted: 10 Apr 2016 12:24 PM PDT

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில், நேற்று நடந்த தே.மு.தி.க., - மக்கள் நல கூட்டணியின் மாநாட்டில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

மணி, 9:35 ஆகிவிட்டது. எல்லா இடத்திலும், 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும். இல்லை என்றால், ஏதேனும் வழக்கு போட்டு விடுவர். ஏற்கனவே, 32 மாவட்டங்களை சுற்றி வந்து விட்டேன். இனி நான் சுற்ற வேண்டியது, தேர்தல் பிரசாரத்திற்காகத்தான். ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி; அவருக்கு எதிரி ஜெயலலிதா; இவர்கள், இருவருக்கும் எதிரி நான். ஸ்டாலினுக்கு எதிரி அவரே தான்; அவரது எண்ணங்கள் ...

'2ஜி' பணத்தில் பலன் அடைந்தவர் ஸ்டாலின்:வைகோ ஆவேசம்

Posted: 10 Apr 2016 12:26 PM PDT

சென்னை;''2ஜி ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, சாதிக் பல்வா மூலம் பெற்றவர் ஸ்டாலின். இதற்கான ஆதாரத்தை நான் வைத்திருக்கிறேன்,'' என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேசினார்.

மாமண்டூர் மாநாட்டில், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேசியதாவது:
முதலில், நான்கு பேர் சேர்ந்து கூட்டணி அமைத்த போது, வெற்றி குறித்து அதிகம் யோசித்து பார்த்ததில்லை. ஆனால், விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் இணைந்ததும், 75 சதவீதம் வெற்றி உறுதியானது. பின், த.மா.கா., கூட்டணியில் இணைந்ததும், 100 சதவீத வெற்றி உறுதியானது.
நாங்கள், 20 சதவீத ஓட்டுக்களைப் பெறுவோம் என, சிலர் பெரிய மனதுடன் கூறுகின்றனர். ஆனால், ...

தே.மு.தி.க., - த.மா.கா., உடைய வைகோ காரணம்: ஸ்டாலின்

Posted: 10 Apr 2016 12:45 PM PDT

சென்னை:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:'மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வருவோம்' என, ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி? செய்கிறார்களோ இல்லையோ, இந்த அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருந் தால், சசிபெருமாள் என்கிற ஒரு காந்திய வாதியை இழந்திருக்க வேண்டிய
அவசியம் வந்திருக்காது. தேர்தலில் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,இந்த அறிவிப்புகளை எல்லாம் அவர் வெளியிடுகிறார். எப்படி, 2011-ல் வாக்குறுதிகளை தந்து, ஆட்சிக்கு வந்து அதையெல்லாம் நிறைவேற்ற ...

அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் 'டாட்டா':வேகமாக வெளியேறும் தலைவர்கள்

Posted: 10 Apr 2016 12:50 PM PDT

சென்னை;அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு எனக்கூறி, வேகமாக போயஸ் தோட்டத்துக்கு சென்ற, சிறிய கட்சித் தலைவர்கள் பலர், கூட்டணியில் இருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர்.

வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைய சிறிய கட்சிகள் பலவும் ஆர்வம் காட்டின. நேரடியாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததுடன், தங்களுக்கு, 'சீட்' ஒதுக்கவும் வேண்டினர். தொடர்ந்து, அ.தி.மு.க., அமைத்திருந்த தேர்தல் பணிக் குழுவினரிடமும் பேச்சு நடத்தினர். ஆனாலும், கடைசி நேரத்தில், இச்சிறிய கட்சிகளுக்கு, அ.தி.மு.க., சீட் கொடுக்காமல், 'டாட்டா' ...

பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் இந்தியா வருகை

Posted: 10 Apr 2016 02:03 PM PDT

மும்பை : இந்தியாவுக்கு முதல்முறையாக சுற்றுப் பயணம் வந்துள்ள, பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவர் மனைவி, இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர், மும்பை தாக்குதல் சம்பவத்தில் பலியானோருக்கு, நேற்று(10-04-16) அஞ்சலி செலுத்தினர். இருவரும் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று பிற்பகல், மும்பை வந்துசேர்ந்த, இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டனும், தாஜ் பேலஸ் ஓட்டலுக்கு சென்றனர். கடந்த, 2008, நவம்பரில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியானோருக்காக, தாஜ் ஓட்டலில், நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, இளவரசரும், இளவரசியும் அஞ்சலி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™