Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரயில் மறியல் முயற்சி:விவசாய சங்கத்தினர் 231 பேர் கைது

Posted: 05 Apr 2016 01:31 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர், மக்கள் நலக் கூட்டணியினர் 231 பேர் கைது செய்யப்பட்டனர்.

அங்கன்வாடி மைய சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள்

Posted: 05 Apr 2016 01:31 PM PDT

குழந்தைகளை கவரும் வகையில், அங்கன்வாடி மைய சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட திருவிளக்குறிச்சி மற்றும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏப். 14 கடைசி நாள்

Posted: 05 Apr 2016 01:31 PM PDT

ஏப். 14-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க விரும்புவோர் வாக்காளர் சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்சிமென்ட ஆலை ஊழியர் சாவு

Posted: 05 Apr 2016 01:30 PM PDT

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் சிமென்ட் ஆலை ஊழியர் உயிரிழந்தார்.

கீரனூரில் ரயில் மறியல்: விவசாயிகள் 35 பேர் கைது

Posted: 05 Apr 2016 01:30 PM PDT

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 35 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேர்தல் பிரசார வாகன அனுமதியை வாகனத்தின் முன்புறம் ஒட்ட வேண்டும்

Posted: 05 Apr 2016 01:30 PM PDT

அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசார அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவதுடன் அனுமதி ஆணையினை வாகனத்தின் முன்புறம் தெரியும்படி ஒட்ட வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலர் சு. கணேஷ்.

மரபுசாரா மின் உற்பத்தியால் மட்டுமே எதிர்கால மின்தேவையை ஈடுசெய்யலாம்

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

புதுப்பிக்கவல்ல மரபுசாரா மின்னுற்பத்தியால் மட்டுமே எதிர்கால மின்தேவையை ஈடு செய்யமுடியும் என்றார்

கொள்ளைபோகும் ஆற்று மணல்: விவசாயிகள் வேதனை

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

அறந்தாங்கியில் த.மா.கா. சின்னம் அறிமுகம்

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

அறந்தாங்கியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்ததை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகை மாவட்டத்தில்ஏப்.11-ல் தேர்தல் பிரசாரம்: விவசாயிகள் சங்கம் முடிவு

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

ஏப்.11 முதல் 17ஆம் தேதி வரை தேமுதிக } மக்கள் நலக்கூட்டணிக்கு மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதென விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 05 Apr 2016 01:29 PM PDT

புதுக்கோட்டை,திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 05 Apr 2016 01:28 PM PDT

கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்களிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு

Posted: 05 Apr 2016 01:28 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூட்டியிருந்த வீட்டில் ரூ. 1 லட்சம் திருட்டு

Posted: 05 Apr 2016 01:28 PM PDT

கும்பகோணம் பொற்றாமரை குளம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி சித்ரா (61). துரைராஜுக்கு உடல் நிலை சரியில்லாததால் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

விமரிசையாக நடந்த ஆழ்வார் திருமஞ்சனம்

Posted: 05 Apr 2016 01:27 PM PDT

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ஆம் தேதி உகாதி தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு,

அதிராம்பட்டினம் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம்

Posted: 05 Apr 2016 01:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழிகாட்டி மையம் சார்பில் வேலைவாய்ப்பிற்கான தேர்வு மற்றும் வளாக நேர்காணல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்செவி அஞ்சல் தகவல்:போலீஸார் விசாரணை

Posted: 05 Apr 2016 01:27 PM PDT

தஞ்சாவூரில் குடும்ப அட்டைக்கு அதிமுக விளம்பரம் செய்யப்பட்ட புதிய உறை வழங்கப்படுவதாகக் கட்செவி அஞ்சல் பரவியதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்துகள் சேதம் :திமுகவினர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted: 05 Apr 2016 01:27 PM PDT

கடந்த 2011-ல் திருவாரூருக்கு வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை போலீஸார் திடீரென கைது செய்ததை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட திமு.க. செயலர் கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் உச்சிபிள்ளையார் கோயிலருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

Posted: 05 Apr 2016 01:26 PM PDT

மன்னார்குடி

Posted: 05 Apr 2016 01:25 PM PDT

வேன் டயர் வெடித்து விபத்து: 26 பேர் காயம்

Posted: 05 Apr 2016 01:25 PM PDT

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்தனர்.

ஏவிசி கல்லூரி மாணவி சாதனை

Posted: 05 Apr 2016 01:25 PM PDT

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில தடகளப் போட்டியில் பங்கேற்று ஏவிசி கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார். முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டிகள் சென்னையில் அண்மையில் நடைபெற்றன.

முள்புதரிலிருந்து பெண் சிசு மீட்பு

Posted: 05 Apr 2016 01:25 PM PDT

ஆக்கூர் அருகே சின்னங்குடி கிராமத்தில் முள்புதரிலிருந்து பெண் சிசு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோயில் திருவிழா

Posted: 05 Apr 2016 01:24 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன், திருமேனியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் இறுதிநாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சுடுமண் சிலைகளை நேர்த்திக் கடனாகச் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

Posted: 05 Apr 2016 01:24 PM PDT

காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 05 Apr 2016 01:24 PM PDT

சீர்காழியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது

Posted: 05 Apr 2016 01:24 PM PDT

நாகப்பட்டினம் அருகே கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம், நடராஜபிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் செல்லக்கண்ணு (60). இவர்

"தினமணி' சார்பில் மதுராந்தகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 05 Apr 2016 01:23 PM PDT

மதுராந்தகத்தில் "தினமணி' நாளிதழும், ஏரி நகர் லயன்ஸ் சங்கமும் இணைந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை

திருத்துறைப்பூண்டி ஒன்றியப் பணிகளில் முறைகேடு: ஆட்சியர் விசாரணை

Posted: 05 Apr 2016 01:23 PM PDT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதா? என நீதிமன்ற உத்தரவின்படி புகார் அளித்த ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.

வங்கிகள் ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி:திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல்:334 பேர் கைது

Posted: 05 Apr 2016 01:23 PM PDT

விவசாயிகள் வாங்கிய கடனுக்காக ஜப்தி நடவடிக்கைகளை வங்கிகள் கைவிட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற 334 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை:86 நாள்களில் குணமடைந்தார்

Posted: 05 Apr 2016 01:22 PM PDT

அரிய வகை புற்றுநோய்க்கு ஆளான பெண்ணுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 86 நாள்களில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், அப்பெண் குணமடைந்து வீடு திரும்பினார்.

கரூரில் தேர்தல் பறக்கும்படை சோதனை:ரூ. 3.47 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

Posted: 05 Apr 2016 01:22 PM PDT

கரூரில் தேர்தல் பறக்கும்படையினர் திங்கள்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையில் ரூ. 3.47 கோடி மதிப்பலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டிபி. ராஜேஷிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏழுமலையானுக்கு தங்க நகைகள் காணிக்கை

Posted: 05 Apr 2016 01:21 PM PDT

திருமலை ஏழுமலையானுக்கு தெலங்கானா மாநில அரசு சார்பில் தங்க நகைகள் காணிக்கையாக வழங்கப்பட உள்ளன.

மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண மேலும் 2 இடங்களில் முன்பதிவு வசதி

Posted: 05 Apr 2016 01:18 PM PDT

மதுரை சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க அனுமதிச்சீட்டு பெற விரும்புவோர் நேரில்

இயக்குபவர்கள் 35 பேரில் 5 பெண்கள்; மெட்ரோ ரயிலில் பயணித்ததோ 34 லட்சம் பேர்!

Posted: 05 Apr 2016 01:17 PM PDT

மெட்ரோ ரயிலில் இதுவரை 34 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த ரயில்களை இயக்கும் 35 பேரில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாகத்தால் வன விலங்குகள் பரிதவிப்பு: நடவடிக்கை எடுக்குமா வனத் துறை?

Posted: 05 Apr 2016 01:15 PM PDT

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் போதிய குடிநீர் இல்லாததால் வன விலங்குகள் தவிக்கின்றன. எனவே வனத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க

வெப்பத்தை தணிக்கும் கிருணிப் பழங்கள்

Posted: 05 Apr 2016 01:14 PM PDT

கோடைக்கால வெப்பத்தைத் தணிக்கும் கிருணிப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலையும் குறைந்துள்ளது.

4 நகரங்களில் 103 டிகிரி வெயில்

Posted: 05 Apr 2016 01:13 PM PDT

தமிழகத்தில் திருச்சி உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 56.46 அடியாகச் சரிவு

Posted: 05 Apr 2016 01:12 PM PDT

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாகச் சரிந்துள்ளது.

யாருக்கு ஓட்டு?

Posted: 05 Apr 2016 01:05 PM PDT

மக்களுக்கு யார் நல்லது செய்வார் என்று மனதுக்குத் தோன்றுகிறதோ அவருக்கே என் வாக்கு.

இன்னும் தீரல...காஞ்சிபுரம் தொகுதி

Posted: 05 Apr 2016 01:04 PM PDT

பட்டுச் சேலைகளுக்கு உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் ஓரிக்கை பகுதியில் அரசு ஜரிகை உற்பத்தி ஆலை இன்னும் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது

யாருக்கும் சொல்லாதீங்க...

Posted: 05 Apr 2016 01:01 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை ஓராண்டுக்கு முன்னரே அறிவித்து தேர்தல் களத்தில் முந்திக்கொண்டு பிரசாரம் செய்து

உள்ளது உள்ளபடி... சி.எச். சேகர் (தேமுதிக) சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி

Posted: 05 Apr 2016 01:00 PM PDT

பொறியியல் பட்டதாரியான நான், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு 29,256 ஓட்டுகள்

தொகுதி ஓர் அறிமுகம்: திருவள்ளூர்

Posted: 05 Apr 2016 12:57 PM PDT

திருவள்ளூர் தொகுதி 1962-இல் உருவான தொகுதியாகும். மாவட்டத்தின் தலைநகராக உள்ள தொகுதியான திருவள்ளூரைச் சுற்றி,

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நூறு சதவீத வாக்குப் பதிவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் தேர்தல் அதிகாரிகளா, அரசியல் கட்சியினரா, வாக்காளர்களா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 05 Apr 2016 12:38 PM PDT

நூறு சதவீத வாக்குப் பதிவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் வாக்காளர்களே. தேர்தல் நாளில் வாக்காளர்கள் தங்கள்

தேர்தல் கூட்டணி: கொள்கையா, குழப்பமா?

Posted: 05 Apr 2016 12:33 PM PDT

இந்தியா ஏழை நாடு என்னும் முத்திரை ஒரு பக்கம். வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் இந்தியா என்னும் பெருமை மறுபக்கம்.

எதிர்ப்பதில் அர்த்தமில்லை!

Posted: 05 Apr 2016 12:32 PM PDT

சேமநல நிதியில், பல்வேறு தொழிலாளர்கள் பி.எஃப். சந்தாவாக செலுத்தி, 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.27,000 கோடி! இதைத்தான் முதியோர் நல நிதியத்துக்கு வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் அறிவிக்கை அளித்துள்ளது. இந்த அறிவிக்கையில், கோரப்படாத சிறுசேமிப்புத் திட்டங்களில் கிடக்கும் நிதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"செல்ஃபி' பிரியர்களைக் கவரும் புதிய செல்லிடப்பேசி

Posted: 05 Apr 2016 12:27 PM PDT

"செல்ஃபி' (கைப்படம்) பிரியர்களைக் கவரும் வகையில், ஓப்போ நிறுவனம் புதிய "எஃப்1 பிளஸ்' மாடல் செல்லிடப்பேசியை அறிமுகப்படுத்தியது.

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

Posted: 05 Apr 2016 12:25 PM PDT

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சியைக் சந்தித்தது. சென்செக்ஸ் 25,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்தது.

வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்

Posted: 05 Apr 2016 12:25 PM PDT

இதையடுத்து, வீட்டு வசதிக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அல்ஜீரியா: 4 பயங்கரவாதிகள் ராணுவத்தால் சுட்டுக் கொலை

Posted: 05 Apr 2016 12:23 PM PDT

அல்ஜீரியாவில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு 9 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா அறிவிப்பு

Posted: 05 Apr 2016 12:22 PM PDT

பாகிஸ்தானுக்கு 9 ஏ.ஹெச்-1 இஸட் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஈரான் பயணிகள் விமானங்கள் பறக்க சவூதி அரேபியா தடை

Posted: 05 Apr 2016 12:22 PM PDT

ஈரான் நாட்டைச் சேர்ந்த மாஹான் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் சவூதி அரேபிய விமான நிலையங்களில் தரையிறங்கவும்,

தமிழக அரச குடும்பத்து நகைகள் லண்டனில் ஏலம்

Posted: 05 Apr 2016 12:21 PM PDT

பிரிட்டனில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான நகைகள் லண்டனின் பான்ஹம்ஸ் ஏல மையத்தில் ஏலத்துக்கு வருகின்றன.

ரயில் மீது குண்டு வீச்சு: பாகிஸ்தானில் ஒருவர் பலி

Posted: 05 Apr 2016 12:20 PM PDT

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயில் மீது குண்டு வீசித் தாக்கியதில் ஒருவர் பலியானார்.

இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம்: தொடங்கியது வரைவு நாடாளுமன்றம்

Posted: 05 Apr 2016 12:20 PM PDT

இலங்கையில் அதிபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க, அந்த நாட்டு நாடாளுமன்றம் அரசியல்

ரகசிய ஆவணங்கள் வெளியீடு: குற்றவியல் விசாரணை தொடங்க பனாமா அரசு முடிவு

Posted: 05 Apr 2016 12:19 PM PDT

பனாமா நாட்டு சட்ட சேவை நிறுவனம் மொசாக் ஃபொன்சேகா, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்காக வெளிநாடுகளில்

"தினமணி' சார்பில் மதுராந்தகத்தில் :வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 05 Apr 2016 12:16 PM PDT

மதுராந்தகத்தில் "தினமணி' நாளிதழும், ஏரி நகர் லயன்ஸ் சங்கமும் இணைந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடத்தின.

நெதர்லாந்து குடியிருப்பில் 45 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்

Posted: 05 Apr 2016 12:16 PM PDT

நெதர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 45 கிலோ வெடி பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Posted: 05 Apr 2016 12:16 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், செவ்வாய்க்கிழமை (ஏப்.5) பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

காமன்வெல்த் அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலர் பொறுப்பேற்பு

Posted: 05 Apr 2016 12:15 PM PDT

இந்தியா உள்ளிட்ட 53 உறுப்பு நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலராக, பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் பொறுப்பேற்றார்.

தாகத்தால் வன விலங்குகள் பரிதவிப்பு: நடவடிக்கை எடுக்குமா வனத் துறை?

Posted: 05 Apr 2016 12:14 PM PDT

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் போதிய குடிநீர் இல்லாததால் வன விலங்குகள் தவிக்கின்றன. எனவே வனத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வனப் பகுதி எல்லையோர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோடைகால கிரிக்கெட் பயிற்சி

Posted: 05 Apr 2016 12:13 PM PDT

இந்தியா பிஸ்டன்ஸ் கிரிக்கெட் அகாதெமி சார்பில் சென்னையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

கொள்ளை போகும் ஆற்று மணல்: விவசாயிகள் வேதனை

Posted: 05 Apr 2016 12:13 PM PDT

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பாகிஸ்தான் டி20 கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது

Posted: 05 Apr 2016 12:13 PM PDT

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சர்ஃப்ராஸ் அகமது, அந்நாட்டு டி20 அணியின் புதிய கேப்டனாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.

விஐடியில் சர்வதேச கல்வி பரிமாற்றத் திட்டம் தொடக்கம்

Posted: 05 Apr 2016 12:12 PM PDT

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி பரிமாற்றத் திட்டத்தை அமெரிக்க நாட்டின் மிச்சிகன் டியர்பார்ன் பல்கலைக்கழக வேந்தர் டேனியல் லிட்டில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

வியாபாரியை தாக்கிய இருவர் கைது

Posted: 05 Apr 2016 12:12 PM PDT

காவேரிப்பாக்கம் அருகே காய்கறி வியாபாரியைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சர்வதேச ஹாக்கி போட்டி: இந்தியாவுக்கு 2ஆவது தோல்வி

Posted: 05 Apr 2016 12:12 PM PDT

ஹாவ்கே பே கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி, 2ஆவதாக சீனாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியது.

"சிம்லா சைக்ளிங்': 14-ல் தொடக்கம்

Posted: 05 Apr 2016 12:12 PM PDT

ஹீரோ எம்டிபி சிம்லா சைக்கிள் பந்தயம் சிம்லாவில் வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

Posted: 05 Apr 2016 12:11 PM PDT

ஆற்காடு அருகே ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

பழகிய வீட்டிலிருந்து வெளியேறியது போல உணர்கிறேன்: ரெய்னா

Posted: 05 Apr 2016 12:11 PM PDT

ஐபிஎல் போட்டியில் ஏற்கெனவே அங்கம் வகித்த அணியில் (சென்னை சூப்பர் கிங்ஸ்) இருந்து வெளியேறியதை, பழகிய வீட்டில் இருந்து வெளியேறி

7 பேரை கடித்துக் குதறிய குரங்கு

Posted: 05 Apr 2016 12:11 PM PDT

நாட்டறம்பள்ளியில் முதியவர்கள் உள்பட 7 பேரை குரங்கு கடித்துக் குதறியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்: 25 பேர் கைது

Posted: 05 Apr 2016 12:11 PM PDT

குடியாத்தம் ரயில் நிலையத்தில், மறியல் போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விழிப்புணர்வு விளம்பரப் பலகை திறந்து வைப்பு

Posted: 05 Apr 2016 12:10 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வண்ண பலூன்களால் வடிவமைக்கப்பட்ட விளம்பரப் பலகை வேலூரில் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தொழில் முனைவோர் கருத்தரங்கு

Posted: 05 Apr 2016 12:10 PM PDT

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பெண்கள் தொழில் முனைவோர் வளர்ச்சிக் குழு சார்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

நிலத்தகராறில் மூதாட்டி கொலை

Posted: 05 Apr 2016 12:10 PM PDT

சோளிங்கர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இரு சக்கர வாகனம் மீது கார் மோதல்: முதியவர் சாவு

Posted: 05 Apr 2016 12:10 PM PDT

திருப்பத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

பாமக 200 தொகுதிகளில் வெற்றிபெறும்:ராமதாஸ்

Posted: 05 Apr 2016 12:09 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் வணிகர்களுக்கு அதிக பாதிப்பு: வெள்ளையன்

Posted: 05 Apr 2016 12:09 PM PDT

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தண்ணீர் தட்டுப்பாடு: ஐபிஎல் போட்டி இடமாற்றம் இல்லை

Posted: 05 Apr 2016 12:09 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி போன்ற காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படாது என்று

புழல் சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

Posted: 05 Apr 2016 12:09 PM PDT

புழல் மத்தியச் சிறையிலிருந்து கைதி தப்பிச் சென்றார். இதையடுத்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பையில் தோல்வி: இலங்கை தேர்வுக் குழு பொறுப்பேற்பு

Posted: 05 Apr 2016 12:08 PM PDT

உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணியின் மோசமான செயல்பாட்டுக்கு பொறுப்பேற்பதாக இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழு கூறியுள்ளது.

சந்திரகுமாரின் உருவ பொம்மை எரிப்பு

Posted: 05 Apr 2016 12:08 PM PDT

தேமுதிகவுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி ஈரோடு சந்திரகுமாரின் உருவ பொம்மையை வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் தேமுதிகவினர் செவ்வாய்க்கிழமை எரித்தனர்.

தனித்துப் போட்டியிடவும் தயார்: வேல்முருகன்

Posted: 05 Apr 2016 12:08 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

மூன்றாவது நடுவராக "பார்வையாளர்கள்'

Posted: 05 Apr 2016 12:08 PM PDT

எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஆட்டத்தின்போது மூன்றாவது நடுவருக்கு பரிந்துரைக்கப்படும் விவகாரங்கள் தொடர்பாக பார்வையாளர்களும்

காஷ்யப்பின் ஒலிம்பிக் கனவைக் கலைத்த காயம்

Posted: 05 Apr 2016 12:08 PM PDT

இந்திய பாட்மிண்டன் வீரர் பி.காஷ்யப், காயத்தால் அவதிப்பட்டு வருவதன் காரணமாக ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

தில்லியில் இருந்து ஆக்ராவுக்கு 100 நிமிடங்களில் பயணம்!:இந்தியாவின் அதிவிரைவு ரயில் ‘கதிமான்’ தொடக்கம்

Posted: 05 Apr 2016 12:07 PM PDT

தில்லியில் இருந்து ஆக்ராவுக்கு 100 நிமிடங்களில் சென்றடையும், நாட்டின் முதல் அதிவிரைவு ரயில், கதிமான் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இது ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

பதான்கோட்டில் பாக். குழு விசாரணை:பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted: 05 Apr 2016 12:07 PM PDT

பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தானின் கூட்டு விசாரணைக் குழுவுக்கு அனுமதியளித்த பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சங்க மாநாடு:தில்லியில் சரத் யாதவ் தொடங்கிவைத்தார்

Posted: 05 Apr 2016 12:07 PM PDT

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (ஏஐடிஇஎஃப்) 25ஆவது தேசிய மாநாடு புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இ-ரிக்ஷா சேவையை தொடங்கியது "ஓலா'

Posted: 05 Apr 2016 12:06 PM PDT

தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில், இ-ரிக்ஷா சேவையை ஓலா நிறுவனம் தொடங்கியது.

கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு பிசிசிஐ எதையும் செய்யவில்லை: உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 05 Apr 2016 12:05 PM PDT

கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதையும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

அஜ்மீரில் வெளிநாட்டுப் பயணிகள் மீது தாக்குதல்

Posted: 05 Apr 2016 12:04 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், அடையாளம் தெரியாத கும்பலால் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டனர்.

பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கவலைகளை உணர்ந்துள்ளோம்: அமெரிக்கா

Posted: 05 Apr 2016 12:04 PM PDT

இந்தியா போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைப் புரிந்துகொண்டுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: மாநில அரசுகளை சீர்குலைக்க சதி எனப் புகார்

Posted: 05 Apr 2016 12:03 PM PDT

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டி, ஜம்முவில் காங்கிரஸ் கட்சியினர்

சோனியா மீது அமித் ஷா தாக்கு

Posted: 05 Apr 2016 12:02 PM PDT

அஸ்ஸாமில் தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார்.

பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை

Posted: 05 Apr 2016 12:02 PM PDT

பொதுத் துறை வங்கிகளின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் நிதி கட்டமைப்பை வலுப்படுத்திய பின்னர்,

ராமர் கோயில் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Posted: 05 Apr 2016 12:01 PM PDT

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிடக்

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு: வருவாய் புலனாய்வுத் துறை தகவல்

Posted: 05 Apr 2016 11:59 AM PDT

வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் சில அரசு நிறுவனங்கள் உள்பட பல மின் உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவில் முறைகேடு செய்திருப்பதாக

சொத்துகளை அதிகமாக மதிப்பிட்டு வழக்கை ஜோடித்தது திமுக அரசு: உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வாதம்

Posted: 05 Apr 2016 11:59 AM PDT

தமிழகத்தில் 1996-இல் ஆட்சியில் இருந்த திமுக அரசு, தனது சொத்துகளை அதிகமாக மதிப்பீடு செய்து வழக்கை ஜோடித்ததாக உச்ச நீதிமன்றத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™