Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பீஹாரில் பூரண மதுவிலக்கு அமல்

Posted: 05 Apr 2016 10:46 AM PDT

பாட்னா;மதுவிலக்குக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதால், பீஹாரில், பூரண மதுவிலக்கு உடனடியாக அமலுக்கு வருவதாக, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்று அறிவித்தார்.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசின் முதல்வராக, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.
நகரங்களில் மட்டும்...
அதன்படி, மாநிலத்தில், ஏப்., 1ம் தேதி முதல்,
சாராய விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நகரங்களில் ...

பாக்., பத்திரிகை விஷமத்தால் சர்ச்சை: பதன்கோட் தாக்குதல் வழக்கில் பரபரப்பு

Posted: 05 Apr 2016 11:47 AM PDT

புதுடில்லி: பதன்கோட் விமானப்படை தளத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்தியா நடத்திய, 'டிராமா' என, பாக்., தரப்பில் கூறப்பட்டு உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரியில், பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளம் மீது, பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய, ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட, ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த விமானப்படை தளத்தில், ஜே.ஐ.டி., எனப்படும், பாக்., கூட்டு விசாரணைக்குழு,
சமீபத்தில் நேரில் வந்து விசாரணை ...

நாட்டின் முதல் அதிவேக ரயில் துவக்கம்: விரைவில் சென்னையிலும் அறிமுகம்

Posted: 05 Apr 2016 11:50 AM PDT

புதுடில்லி: நாட்டின், முதல் அதிவேக ரயிலான, 'கதிமான்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று துவக்கி வைத்தார். டில்லியில் இருந்து, 200 கி.மீ., துாரமுடைய ஆக்ராவை, இந்த ரயில், 100 நிமிடங்களில் சென்றடையும். இதன்மூலம், ரயில்வே துறையில் புது சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், 'அதிவேக ரயில்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் அதிவேக ரயிலான, 'கதிமான்' எக்ஸ்பிரஸ் ரயில், டில்லி - ஆக்ரா வழித்தடத்தில் நேற்று, துவக்கி வைக்கப்பட்டது. மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயிலை, ...

ஜெ., வருமானம் சட்டப்பூர்வமானது: சொத்து வழக்கில் வக்கீல் வாதம்

Posted: 05 Apr 2016 11:53 AM PDT

புதுடில்லி: ''கடந்த, 1991 - 96ம் ஆண்டுகளில், தமிழக முதல்வர், ஜெயலலிதா சம்பாதித்த வருமானம் அனைத்தும், சட்டப்பூர்வமானது; அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை,'' என, அவர் தரப்பு வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த அப்பீல் மனுக்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ், அமிதவ்ராய் அடங்கிய அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ...

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 18: நடிகர் நாடாளும் போது

Posted: 05 Apr 2016 11:54 AM PDT

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் பிற மாநிலத்தவருக்கு ஒருவகையான புரிதல் இருக்கிறது. அது பெரும்பாலும் தவறான புரிதல் என்பதில் சந்தேகமில்லை. தங்களை ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பிறரை குனிந்து பார்க்கும் பார்வைதான் அது. ஒருமுறை கேரளத்தில், ஒரு பல்கலைக்கழக விவாதத்தில், அரசியல் துறை பேராசிரியர் எழுந்து,

"தமிழகத்தின் அரசியல் களத்தில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்குக்கு என்ன காரணம்?" என்று கேட்டார். நான், "தமிழகத்தின் அரசியல் களத்தில் மிதமிஞ்சிய செல்வாக்கில் இருக்கும் நடிகர்களின் பெயர்களை வரிசையாக சொல்லுங்கள்," ...

கிழிந்தது தே.மு.தி.க.: 3 எம்.எல்.ஏ., - 7 மா.செ.,க்கள் பகிரங்க எதிர்ப்பு

Posted: 05 Apr 2016 11:58 AM PDT

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, மக்கள் நலக் கூட்டணியுடன் அவர் இணைந்தது, தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி, நேற்று அவர்கள் தம் உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தினர்.கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் சந்திரகுமார் தலைமையில், 10 பேர் நேற்று, விஜயகாந்தின் முடிவை மாற்றக் கோரி, 24 மணிநேர கெடு விதித்தனர்; இதை சரியான முறையில் கையாள முடியாமல் வழக்கம் போல் தன் ...

மத்திய அரசுக்கு மறுப்பு தெரிவித்தாரா? அமைச்சருக்கு கருணாநிதி கேள்வி

Posted: 05 Apr 2016 11:59 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: தவளை தன் வாயால் கெடும் என, ஒரு பழமொழி சொல்வர். அதைப்போல அமைச்சர் தங்கமணி, எனக்குப் பதில் கூறி ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார்.

கற்பனை இல்லை :
அதில், ஏதோ உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறுகிறார். நான் விடுத்த அறிக்கையில், எந்தப் புள்ளி விவரங்களையும் நானாகக் கற்பனை செய்தோ, இட்டுக்கட்டியோ கூறி விடவில்லை. மத்திய அரசின் அறிக்கையில், இந்தியாவில் உள்ள, 10 பெரிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளில் மிக, மிக மோசமான நிலை தமிழகம் நிலவுகிறது என, ...

மற்ற கட்சிகள் அணிவகுத்து வருவதால் தி.மு.க., உற்சாகம்: அ.தி.மு.க.,விற்கு எதிராக மெகா கூட்டணிக்கு வியூகம்

Posted: 05 Apr 2016 12:01 PM PDT

த.மா.கா., - த.வா.க., பார்வர்டு பிளாக் உள்ளிட்ட, மற்ற கட்சிகள் தி.மு.க.,வை நோக்கி அணிவகுத்து வருவதால், தி.மு.க., உற்சாகம் அடைந்துள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க.,வுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்க, தி.மு.க.,வில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, பார்வர்டு பிளாக் ஆகியவை கட்டாயம் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் அ.தி.மு.க., சார்பில், 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு வெறும், ஏழு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அவையும் கூட, அ.தி.மு.க.,வின் ...

அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி

Posted: 05 Apr 2016 01:18 PM PDT

நேற்றுமுன்தினம், தேய்பிறை அன்று வெளியிடப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலுக்கு, அதற்குள், கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பின் ஒதுக்கப்பட்டு அவமானப்பட்டதை போல், இந்த முறையும் நடக்குமா என்ற கிலியில் வேட்பாளர்கள் உள்ளனர். இதே போல், விழுப்புரம் மாவட்டத்தில், மொத்தமாக அதிருப்தி கிளம்பி உள்ளது. இங்குள்ள 11 தொகுதிகளில், மூன்று தனி தொகுதிகள் போக, மீதமுள்ள எட்டு தொகுதி களில், தற்போது, நான்கு வன்னியர் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் நான்கு மற்ற சமூகங்களை ...

'இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி'

Posted: 05 Apr 2016 01:38 PM PDT

வாஷிங்டன்: 'இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது' என, அமெரிக்கா கூறியுள்ளது.இந்தியா, அணு ஆயுதங்களை குறைக்க வேண்டுமென, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்; இதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் இல்லமான, வெள்ளை மாளிகை செய்திப்பிரிவு செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட், வாஷிங்டனில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இந்தியா போன்ற, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு நிலவும் பாதுகாப்பு பிரச்னைகளை, அமெரிக்கா நன்றாகவே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™