Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 24 Apr 2016 01:25 PM PDT

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் கிராமம் கிராமமாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 24 Apr 2016 01:23 PM PDT

அரசியலுக்கு ஆண்கள்; ஆரத்திக்கு பெண்களா?

Posted: 24 Apr 2016 12:33 PM PDT

அரசியல் கட்சிகள் பெண்களுக்குக் கூடுதல் மரியாதை கொடுக்கக் கூடிய தேர்தல் காலம் இது. தலைவர்களின் பிரசார பொதுக்கூட்டங்களில் முதல் வரிசையில் பெண்களுக்கு

நடத்தை விதிகள் தெரியுமா?அரசு விமானங்களைப் பயன்படுத்தலாமா?

Posted: 24 Apr 2016 12:32 PM PDT

பொதுத் துறை நிறுவனங்கள்-அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்-அரசு விமானங்களை தேர்தல் பயன்பாட்டுக்காக அமைச்சர்கள், முதல்வர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பாதுகாப்பு கருதி பிரதமருக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது.

நினைவலைகள்.. எம்.ஜி.ஆர்க்கு விட்டுக் கொடுத்தேன்!

Posted: 24 Apr 2016 12:32 PM PDT

ஊராட்சி மன்றத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழக அமைச்சர் என நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் திமுகவின் தீர்மானக் குழுத் தலைவரான பொன்.முத்துராமலிங்கம் (77).

பேரவைத் தலைவரான பத்திரிகை அதிபர்

Posted: 24 Apr 2016 12:30 PM PDT

கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் தலைவரும்,

நெத்தியடி...

Posted: 24 Apr 2016 12:30 PM PDT

"செயலி' வீரர்கள்

Posted: 24 Apr 2016 12:28 PM PDT

தலைவர்கள் இன்று பிரச்சாரம்

Posted: 24 Apr 2016 12:27 PM PDT

தேர்தல் சுவர்.

Posted: 24 Apr 2016 12:25 PM PDT

தேவையா இந்த சர்ச்சை?

Posted: 24 Apr 2016 12:24 PM PDT

பிரிட்டீஷ் ராஜகுடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது,

உலகை உலுக்கிய மலேரியா!

Posted: 24 Apr 2016 12:22 PM PDT

உலகை அச்சுறுத்திய, அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று மலேரியா. மலேரியா என்றால் இத்தாலி மொழியில் அசுத்தக் காற்று என்று பொருள். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் பேர் இக்கொடிய நோயின் பாதிப்பினால் பலியாகின்றனர்.

கருத்துக் கணிப்பு சொல்லாத சேதிகள்

Posted: 24 Apr 2016 12:20 PM PDT

தமிழில் இயற்றப்பட்ட முதல் புதினமாகிய பிரதாப முதலியார் சரித்திரம் பல துணுக்குக் கதைகளைக் கொண்டமைந்ததாகும். அக் கதைகளுள் ஒன்றினை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்.

பரமக்குடியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Apr 2016 12:19 PM PDT

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுவினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்: தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை

Posted: 24 Apr 2016 12:18 PM PDT

வாக்குப்பதிவு நாள் நெருங்குவதால் கண்காணிப்புக் குழுவினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

உத்தரகண்ட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ்:விவாதிக்க வாய்ப்பில்லை - மத்திய அரசு

Posted: 24 Apr 2016 12:18 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 24 Apr 2016 12:17 PM PDT

அருப்புக்கோட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேட்பாளர் வைகைச் செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வைகைச்செல்வன் பேசும்போது, அருப்புக்கோட்டைத் தொகுதியில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்ற பெறுவேன் என்றார்.

110 விதி அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன:திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

Posted: 24 Apr 2016 12:17 PM PDT

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், இதுகுறித்து திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகரில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 24 Apr 2016 12:16 PM PDT

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கலாநிதி ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைமுறைகளில் கேரள அரசு தலையிடாது

Posted: 24 Apr 2016 12:16 PM PDT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் கேரள அரசு தலையிடாது என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி

Posted: 24 Apr 2016 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மையத்திலே, தபால் வாக்கு அளிக்க தேர்தல் பணியாளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

மல்லையாவின் கடவுச்சீட்டு ரத்து:வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

Posted: 24 Apr 2016 12:15 PM PDT

வங்கிகளிடம் இருந்து ரூ.9,400 கோடியை கடனாக பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) இந்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

மும்பை: விமானத்தில் கன்னையா குமாரைத் தாக்க முயற்சி:பயணியிடம் போலீஸ் விசாரணை

Posted: 24 Apr 2016 12:15 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாரை, விமானத்தில் தாக்க முயற்சித்த பயணியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்கோ நிறுவன ஸ்தாபகர் 122-ஆவது பிறந்தநாள் விழா

Posted: 24 Apr 2016 12:15 PM PDT

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமிராஜாவின் 122-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்தில் நடைபெற்றது.

வருமான வரித் துறை சோதனைகள் தொடர்கின்றன:நாட்டிலேயே கரூரில் அதிக பணம் சிக்கியது

Posted: 24 Apr 2016 12:14 PM PDT

தேர்தலின்போது பண பலத்தைக் கட்டுப்படுத்த வருமான வரித் துறையின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், நாட்டிலேயே அதிக பணம் கரூரில் பிடிபட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் கேரளத்தில் மோடி, சோனியா அடுத்த மாதம் பிரசாரம்

Posted: 24 Apr 2016 12:13 PM PDT

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் அடுத்த மாதத் தொடக்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளனர்.

புதிய தமிழகம் வேட்பாளர் மீது வழக்கு

Posted: 24 Apr 2016 12:13 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய தமிழகம் வேட்பாளர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக ஊராட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Apr 2016 12:12 PM PDT

சிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

பிரசார வாகனத்துக்கு தடை:போலீஸாருடன் வாசன் வாக்குவாதம்

Posted: 24 Apr 2016 12:12 PM PDT

தென்காசியில் பிரசாரத்தின்போது, தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் வாகனத்துக்கு போலீஸார் தடை விதித்தனர். இதையடுத்து அவர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது:மு.கருணாநிதி

Posted: 24 Apr 2016 12:11 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறாது என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

தேர்தலுக்குள் தமாகா காணாமல் போய்விடும்

Posted: 24 Apr 2016 12:10 PM PDT

தேர்தலுக்குள் தமாகா என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

முதியவர் அடித்துக் கொலை

Posted: 24 Apr 2016 12:09 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடன் பிரச்னையில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Posted: 24 Apr 2016 12:09 PM PDT

நடுநிலை வாக்காளர்களை பாஜக பக்கம் ஈர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு பேசினார்.

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கொலை:உறவினர் கைது

Posted: 24 Apr 2016 12:09 PM PDT

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர்.

வேட்பாளரை மாற்ற சிவகாசி காங்கிரஸார் கோரிக்கை

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் எனகாங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தில்லியில் தீ விபத்து

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

மேற்கு தில்லி, பீதம்புராவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து நேரிட்டது.

வத்தலகுண்டு அருகே சூறைக் காற்று: வாழை மரங்கள் சாய்ந்தன

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கருவேல மரங்களை அகற்றாமல் சீரமைப்பு பணி: விவசாயிகள் அதிருப்தி

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டியில் கருவேல மரங்களை அகற்றாமல் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணியால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாக்குச் சாவடி முகவர்களுக்கு நிபந்தனை

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச் சாவடி முகவர்களை மாற்றம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சு.நாகராஜன் கூறினார்.

தேனி மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

Posted: 24 Apr 2016 12:08 PM PDT

தேனி மாவட்ட புதிய ஆட்சியராக சு. நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

கூழையனூரில் தேர்தல் விதியை மீறியதாக, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் சு. மகாலிங்கம் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீது ஞாயிற்றுக்கிழமை வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்து தகராறில் தாய்மாமன் கொலை

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தாய்மாமனை கொலை செய்துவிட்டு தப்பியோடியவர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி சார்பில் பழனியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

பழனியில் தினமணி நாளிதழ் மற்றும் நண்பர்கள் நற்பணி மையம் ஆகியன இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தின.

உத்தமபாளையத்தில் சூறாவளியுடன் மழை

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறாவளியுடன்  மழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு தாற்காலிக பொறுப்பு வழங்க முடிவு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

நீதிமன்றங்களில் பெருமளவில் குவிந்துள்ள வழக்குகளை விசாரித்து விரைவில் நீதி வழங்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை தாற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் தீர்மானம்

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

போடியில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், போடி தொகுதி தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தார்.

"சமுதாயம் சீரழியும்போது  தனிமனித வாழ்க்கை செம்மையாக இருக்காது'

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

சமுதாயம் சீரழியும்போது, தனிமனித வாழ்க்கை மட்டும் செம்மையாக அமையாது என்ற புரிதல் ஏற்படவேண்டும் என, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. பழனிதுரை வலியுறுத்தினார்.

அ.தி.மு.க.வில் இணைந்த த.மா.கா.வினர்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் தங்க. தமிழ்செல்வன் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை தமாகா கட்சி மாவட்ட நிர்வாகி ஜக்கையன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

தேர்தல் செய்திகள்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

சின்னமனூரில் சுவாமி ஊர்வலத்தில் போலீஸார் தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி ஊர்வலத்தின்போது இளைஞர்களைத் தாக்கி காயப்படுத்தியதாக, போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் பேராசிரியர் கழுத்தறுத்து கொலை

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

5 ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம்: ஆர்.சரத்குமார்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

திமுக ஆட்சிக் காலத்தில் மின்தடையால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என, நடிகர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.

ஐ.பெரியசாமி மீது வழக்கு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணியை கடந்து 5 நிமிடங்கள் கூடுதலாக பிரசாரம் செய்ததாக, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி மீது செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

ரூ.71 கோடியில் புதிய குடிநீர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

போடி நகராட்சிப் பகுதியில் கூடுதல் தண்ணீர் தேவைக்காக ரூ.71 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?: சிவசேனை விளக்கம்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

பாஜகவுடனான தங்களது கூட்டணி, ஹிந்துத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானதே தவிர, அதிகாரத்தை அடைவதற்காக அமைக்கப்பட்டதல்ல என்று சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

அதிமுக நிர்வாகிகள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

உத்தமபாளையம் அடுத்த அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் விதிகளை மீறி, அதிமுக நிர்வாகிகள் பெரிய திரை கட்டிய வாகனம் மூலம் பிரசாரம் செய்ததாக, கம்பம் சட்டப்பேரவைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

உத்தமபாளையம் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பின

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை இரவு கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்து நகைகளை திருட முயற்சித்துள்ளனர்.

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

சிவகாசி, ராஜபாளையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கள் விற்பனையை ஆதரித்து பிகாரில் பாஸ்வான் இன்று தர்னா

Posted: 24 Apr 2016 12:07 PM PDT

பிகார் மாநிலத்தில் கள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான், திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

மேற்கு வங்கம்: இன்று 4-ஆம் கட்டத் தேர்தல்

Posted: 24 Apr 2016 12:04 PM PDT

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்காம் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பிரிட்டன்: கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களில் இந்தியர்கள்

Posted: 24 Apr 2016 12:04 PM PDT

பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில், இந்தியர்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை:அமெரிக்க மாகாண ஆளுநர் ஆதங்கம்

Posted: 24 Apr 2016 12:03 PM PDT

அமெரிக்காவில் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை என்று அமெரிக்காவின் மெயின் மாகாண ஆளுநர் பால் லிப்பேஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதில் அரசியல் வேண்டாம்

Posted: 24 Apr 2016 12:02 PM PDT

கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதில் அரசியல் செய்ய வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கேட்டுக் கொண்டார்.

அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி

Posted: 24 Apr 2016 12:01 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை இரவு இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் முன்னாள் மாணவர் ஒருவரும், மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர்.

பி.எஃப். தொகையை முதிர்வுக்கு முன் எடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்

Posted: 24 Apr 2016 12:01 PM PDT

வருங்கால வைப்பு நிதியை முதிர்வுக் காலத்துக்கு முன்பே தொழிலாளர்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், "ஓர் ஊழியருக்கு ஒரு பி.எஃப். கணக்கு' என்ற திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ), வரும் மே 1-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

அமேதியில் மத்திய அரசுத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

Posted: 24 Apr 2016 12:00 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க,

முதலீட்டாளர்களிடம் சீட்டு நிறுவனங்கள் ரூ.80,000 கோடி மோசடி:சிபிஐ மதிப்பீடு

Posted: 24 Apr 2016 12:00 PM PDT

நாடு முழுவதும் சுமார் 6 கோடி முதலீட்டாளர்களிடம் ரூ.80,000 கோடி வரை சீட்டு நிறுவனங்கள் மோசடி செய்திருக்கலாம் என்று சிபிஐ மதிப்பீடு செய்துள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்:கட்சித் தலைமையிடம் விவாதிக்க மே மாதம் தில்லி செல்கிறார் சித்தராமையா

Posted: 24 Apr 2016 12:00 PM PDT

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் விவாதிக்க, மே முதல் வாரத்தில் முதல்வர் சித்தராமையா தில்லி செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

மத்திய அரசுத் திட்டங்களின் பெயருக்கு முன் "பிரதமர்' என்ற வார்த்தையைச் சேர்க்க பரிந்துரை

Posted: 24 Apr 2016 11:59 AM PDT

மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களின் பெயருக்கு முன்பும் பிரதமர் என்ற வார்த்தையையோ, தேசியத் தலைவர்களின் பெயர்களையோ சேர்க்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி: சீனா பாராட்டு

Posted: 24 Apr 2016 11:59 AM PDT

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதற்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவை அதிகரிக்கப் போவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 24 Apr 2016 11:59 AM PDT

"பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

கொல்லம் கோயில் விபத்து:பலி எண்ணிக்கை 109ஆக உயர்வு

Posted: 24 Apr 2016 11:59 AM PDT

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புற்றிங்கல் தேவி கோயிலில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றபோது நேரிட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

கிராம வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுங்கள்:ஊராட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Posted: 24 Apr 2016 11:57 AM PDT

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஊராட்சித் தலைவர்கள், கிராமங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

ரிசர்வ் வங்கி கவர்னரைவிட அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள்!

Posted: 24 Apr 2016 11:57 AM PDT

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனைவிட, அந்த வங்கியின் முதன்மை சட்ட ஆலோசகராக இருந்த கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே உள்ளிட்ட அதிகாரிகள் அதிக சம்பளம் வாங்குவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"என்னைக் கண்டு அஞ்சுகிறது சமாஜவாதி'

Posted: 24 Apr 2016 11:57 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸம்கர் நகரில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம், ஆளும் சமாஜவாதி கட்சி என்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிகிறது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.

குஜராத்: கைது செய்யப்பட்ட படேல் சமூகத்தினர் 39 பேருக்கு ஜாமீன்

Posted: 24 Apr 2016 11:56 AM PDT

குஜராத் மாநிலத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட படேல் சமூகத்தினர் 39 பேருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.

பிரகாஷ் காரத்தின் உருமாற்றப் படம்: திரிணமூல் எம்.பி. மீது புகார்

Posted: 24 Apr 2016 11:56 AM PDT

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனக்கு இனிப்பு ஊட்டுவது போன்ற உருமாற்றம் (மார்ஃபிங்) செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் மீது, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் காரத் காவல் துறையில் புகார் அளித்தார்.

ராம்தேவின் உணவுப் பூங்காவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

Posted: 24 Apr 2016 11:56 AM PDT

யோகக் கலை குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமாக ஹரித்வாரில் உள்ள உணவுப் பூங்காவுக்கு முழுநேரப் பாதுகாப்பு வழங்கும் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர்.

பதான்கோட் தாக்குதல்:என்எஸ்ஜி அதிகாரி உள்ளிட்ட 4 பேர் வீரதீரச் செயல் விருதுக்கு பரிந்துரை

Posted: 24 Apr 2016 11:55 AM PDT

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிரிழந்த தேசியப் பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள், வீர தீரச் செயல் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

நீர்மூழ்கியிலிருந்து செலுத்திய ஏவுகணை சோதனை வெற்றி:வட கொரிய அதிபர் அறிவிப்புவட கொரிய அதிபர் அறிவிப்பு

Posted: 24 Apr 2016 11:54 AM PDT

நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணை செலுத்தும் சோதனை முழுமையான வெற்றி அடைந்ததாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வரப்பெற்றோம்

Posted: 24 Apr 2016 11:53 AM PDT

திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 24 Apr 2016 11:53 AM PDT

தூத்துக்குடியில் திருநங்கை ஒருவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நியமனம்

Posted: 24 Apr 2016 11:53 AM PDT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நூல் அரங்கம்

Posted: 24 Apr 2016 11:53 AM PDT

குரும்பூர் பகுதிகளில் சரத்குமார், ராதிகா வாக்கு சேகரிப்பு

Posted: 24 Apr 2016 11:51 AM PDT

குரும்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார், ராதிகா ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இலக்கியச் சங்கமம்

Posted: 24 Apr 2016 11:51 AM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா

Posted: 24 Apr 2016 11:51 AM PDT

ஆறுமுகனேரி நாராயணசுவாமி கோயில் தெரு அய்யா நாராயண வைகுண்ட சுவாமி திருத்தாங்கலில் சித்திரை திருவிழா இரு தினங்கள் நடைபெற்றது.

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா எம்.பி. பிரசாரம்

Posted: 24 Apr 2016 11:50 AM PDT

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

ஓட்டப்பிடாரத்தில் வியாபாரியிடம் ரூ. 2.21 லட்சம் பறிமுதல்

Posted: 24 Apr 2016 11:50 AM PDT

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே காரில் சென்ற கருவாடு வியாபாரியிடம் இருந்து ரூ. 2.21 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

நாசரேத் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 24 Apr 2016 11:49 AM PDT

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் நாசரேத் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 24 Apr 2016 11:48 AM PDT

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கதேசப் பேராசிரியர் கொலை வழக்கில் மாணவர் கைது

Posted: 24 Apr 2016 11:48 AM PDT

வங்கதேசத்தில் ராஜ்ஷாஹி பல்கலைக்கழப் பேராசிரியர் ரஸல் கரீம் கொலை வழக்கில் தொடர்புடைய மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி 2ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

Posted: 24 Apr 2016 11:48 AM PDT

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராணி வெங்கடேஷனை மாற்ற வலியுறுத்தி, அக்கட்சியினர் 2ஆவது நாளாக ஆழ்வார்திருநகரியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்கட்டி மழைக்கு மியான்மரில் 8 பேர் சாவு

Posted: 24 Apr 2016 11:48 AM PDT

மியான்மரில் பலத்த புயல் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழைக்கு 8 பேர் பலியாகினர். இதுகுறித்து, அந்நாட்டின் சமூக நலத்துறை அமைச்சக இயக்குநர் பியூ லிலி துன் கூறியதாவது:

இராக்கில் ஐ.எஸ். தாக்குதல்: 14 பேர் பலி

Posted: 24 Apr 2016 11:48 AM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன்

Posted: 24 Apr 2016 11:47 AM PDT

தமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும் என தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

முதியோரை பாதுகாக்காத சமூகம் அனுபவ அறிவை இழந்துவிடும்: எழுத்தாளர் குமரி ஆதவன்

Posted: 24 Apr 2016 11:47 AM PDT

முதியோரை பேணி பாதுகாக்காத சமூகம் அனுபவ அறிவை இழந்து விடும் என்றார் எழுத்தாளர் குமரி ஆதவன்.

குமரியைச் சேர்ந்த தொழிலதிபரை கொல்ல முயற்சி: 7 பேர் கைது: ஆயுதங்கள், வாகனங்கள் பறிமுதல்

Posted: 24 Apr 2016 11:47 AM PDT

ராமநாதபுரத்தில் தொழிலதிபரைக் கொல்ல முயன்றதாக 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாகனங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 24 Apr 2016 11:47 AM PDT

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வடசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™