Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சாலையில் கவிழ்ந்த வேன் :பணக்கட்டுகளால் பரபரப்பு!

Posted: 26 Apr 2016 12:45 PM PDT

திருச்சி;திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து, அரியலுாரில் உள்ள வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் இருந்து, நேற்று மாலை, 30 கோடி ரூபாயுடன் வேன் ஒன்று புறப்பட்டது.அரியலுாரில் உள்ள வங்கி கிளைக்கு செல்லவிருந்த அந்த வேன், மாலை, 6:00 மணிக்கு, முசிறி -- திருச்சி சாலையில் அய்யம்பாளையம் அருகே பைக் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனுக்குள் இருந்த பெட்டிகளில் பணம் இருப்பதை பார்த்த பொதுமக்கள், ...

இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !

Posted: 26 Apr 2016 12:44 PM PDT

வெறிச்சோடி காணப்படுகிறது இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! புவனேஸ்வர்: தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறதா என கேட்க வைக்கிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. இன்று 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நி லவியது. ஒடிசாவின் தித்லாகர்க் நகரில் தான் இந்த நிலைமை. பிற்பகல் 11மணிக்கு கூட ஒரு உயிரினத்தை கூட பார்க்க முடியவில்லை. ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள ...

லவ் மேரேஜ் – ஒரு பக்க கதை

Posted: 26 Apr 2016 12:19 PM PDT

- நேர்மையான வக்கீலைத் தேடி இந்தக் காலத்தில் யார் வருவார்கள். ஆனால், சேகரைத் தேடி அந்த ஆள் வந்தான். ''உனக்கு என்னப்பா பிரச்னை?'' ''சார்! எனக்கு பூர்வீகம் புதுக்கோட்டை. அங்க பத்து ஏக்கர் நிலம் இருக்கு. லவ் மேரேஜாகிப் போனதால ஊர் பக்கம் போக முடியல! அப்படியும் ஒரு தடவை துணிஞ்சு போய் எனக்கு வரவேண்டிய சொத்தைக் கேட்டேன். - கல்யாணத்துக்கு மணமேடையில தயாரா இருந்த பொண்ணை கடைசி நேரத்துல கூட்டிட்டு வந்து, 'லவ் மேரேஜ்' பண்ணதால ஒரே பொண்ணா இருந்தும் சொத்தைத் தரமாட்டேன்னு அடம் புடிக்கறாங்க. ...

படங்கள் தெரிவதில்லை

Posted: 26 Apr 2016 12:03 PM PDT

படங்கள் தெரிவதில்லை .

பதிவிட்ட படங்கள் தெரிவதில்லை .
படங்களும் பதிவிட முடியவில்லை .

ரமணியன்



’பத்து’வம் அது தத்துவம்...!!

Posted: 26 Apr 2016 12:01 PM PDT

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

Posted: 26 Apr 2016 11:57 AM PDT

சென்னை : - தடையை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 டன், 'ஹான்ஸ்' என்ற, மெல்லும் புகையிலை பாக்கெட்களை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை, பூக்கடை கந்தப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெருவில், உணவு பாதுகாப்பு சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு, பார்சல் நிறுவனங்களில், பண்டல் பண்டலாக இருந்த, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1 டன், 'ஹான்ஸ்' ...

வேண்டுதல் – ஒரு பக்க கதை

Posted: 26 Apr 2016 11:52 AM PDT

- வருணை கொஞ்ச நேரமாகக் காணவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம் முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்து விட்டான். - வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர். இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று தேடுவது? - பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்து விட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு வேண்டிக்கொண்டனர். - வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே கம்பெனியில் வேலை ...

விஜயகாந்த்

Posted: 26 Apr 2016 11:52 AM PDT

விஜயகாந்த் சேலம்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சேலம் சென்ற விஜயகாந்த், தனது பாதுகாவலரை திடிரென அடிக்க கை ஓங்கியதோடு கோபத்தோடு தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.     நன்றி ABP live news ...20/4/16 ரமணியன்

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Posted: 26 Apr 2016 11:50 AM PDT

நேத்திக்கு ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன். ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் . - என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன ஆட்டோவ காணோம் . போன் பண்ணா " சார் , இங்க ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் . - ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா 35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் . - மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் . விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க ஏரியா வுக்கு போற வண்டி . வண்டி மிக மிக ...

பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Posted: 26 Apr 2016 11:50 AM PDT

ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் நிலவாயு தொடர்பானவற்றை அழைக்க முடியாது பணமும் வர்த்தகமும் என் ரத்தத்தில் ஊறியவை - 2014-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படப் பேசியது இது. அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர் தன்னைப் பற்றி மிகையாகவோ ஜோடனையாகவோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்த அரிய குணத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நடந்த இயற்கை நிலவாயுக் கண்டுபிடிப்பு மோசடி. எந்த வாயுவாக ...

இன்னிசையால் எழுப்பும் பறவைகள்

Posted: 26 Apr 2016 11:39 AM PDT

- * எத்தனை கேவலமானவனாயிருப்பேன் என்னைக் கண்டதும் பயந்தோடும் காகத்தின் மனதில்! - * ஒவ்வொரு முறை கோயிலுக்கு வரும்போதும் அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்ததுமே அத்தனை பேரின் பெயர், ராசி, நட்சத்திரத்தையும் மனப்பாடமாக ஒப்பிக்கிறாள்; கடவுளுக்குத்தான் இன்னமும் மனப்பாடமாகவில்லை! - * அம்மாவைப் போல அரவணைத்து, குளிப்பாட்டி, சிங்காரித்துவிட்டும், தம்பியைப் போல வம்பிழுத்து, வீட்டுப் பாடங்கள் செய்தும், தாத்தாவைப் போல அஞ்சுதலைப் பாம்புக்கதை சொல்லியும் பொம்மைகளைத் தூங்க வைத்து விளையாடும் மகள், சிலநேரங்களில் ...

5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு

Posted: 26 Apr 2016 11:20 AM PDT

புதுடில்லி : - - லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: நாடு முழுவதும் செயல்படும் 16,600 மத்திய பல்கலைக்கழகங்களில், 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதால் இப்பணியிடங்களை பல்கலைகளே நிரப்பிக் கொள்ளும் பொறுப்பும் பல்கலைகளுக்கே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். – ——————————-

80 வயதிலும் இணையற்ற சாதனை!

Posted: 26 Apr 2016 11:14 AM PDT

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலைஅமைப்பின் சார்பில் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற மாபெரும் உலக கலாசாரத் திருவிழாவில், 1700 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பரத நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார் பிரபல பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன். பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி, தில்லி சாஹித்ய கலா பரிஷித், காளிதாஸ் சம்மேளன், போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டியமணி, சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை ...

சாகசம் – ஒரு பக்க கதை

Posted: 26 Apr 2016 11:10 AM PDT

- யாரும் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்பதை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்… - '' டி.வியில் அந்த சாகச மனிதர் சொல்லிக் கொண்டிருந்தார். சாகசப் பிரியனான அவன் தானும் ஒரு காட்டுப் பயணத்துக்குத் தயாராகிவிட்டான். நெருப்பால் கரடியை விரட்டுவது எப்படி, யானைகளை சாந்தப்படுத்துவது எப்படி, புலி மற்றும் ஓநாய்களிடம் சிக்காமல் மரக்கிளை மேலே குடில் அமைப்பது எப்படி என எல்லாவற்றையும் அந்த நிகழ்ச்சி வழியே அவன் கற்றிருந்தான். - தகவல்தொடர்பு ஏதும் இல்லாமல் ...

சித்தர்கள் அடக்கமான திருத்தலங்கள்

Posted: 26 Apr 2016 11:06 AM PDT

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

Posted: 26 Apr 2016 10:34 AM PDT

இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து ' என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் . தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ...

போகர் 12000 மின் நூல்

Posted: 26 Apr 2016 07:01 AM PDT

ஐயா யாரிடமாவது போகர் 12000 புத்தகம் கிடைக்குமா ?

என்றும் அன்புடன்
ஜெ.செந்தில்குமார்

என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”

Posted: 26 Apr 2016 05:34 AM PDT

- "டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!" ""டாக்டர் :ஏன் என்னாச்சு?" "அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது! டாக்டர் ! அம்மா! நீங்கள் தலை குளித்து எத்தனை நாளாட்சு ! 30 நாள் தான் ஆவுது சார் ! அதான் ! – ————————————–

தொப்பை

Posted: 26 Apr 2016 05:16 AM PDT

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 26 Apr 2016 01:38 AM PDT


-

-
-

எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் தேவை

Posted: 26 Apr 2016 12:00 AM PDT

- தங்களுக்கு ரத்தம் தொடர்பான நோய் இருப்பது குறித்து ஒவ் வொரு நாளும் ஆறு சிங்கப்பூரர்களுக்குத் தெரிய வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர்களில் பலர் இறப்பது உறுதி. இவர்களுக்கு உதவும் வகையில் எலும்பு மஜ்ஜை தானத்தை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. 2018ஆம் ஆண்டிற்குள் மேலும் 50,000 எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர்களைத் தேடும் முயற்சியில் எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பு இறங்கியுள்ளது. இதன் தொடர்பில், 'புரொ ஜெக்ட் டுமோரோ' (Project Tomorrow) ...

சூரிய ஒளியில் இயங்கும் விமானம்: பசிபிக் கடலை கடந்து சாதனை

Posted: 25 Apr 2016 08:43 PM PDT

- மவுன்டெய்ன்வியூ : - சூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி இயங்கும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம், பசிபிக் கடல் பகுதியை கடந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், 'எஸ்.ஐ – 2' எனப்படும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம் தயாரிக்கப் பட்டுள்ளது; இந்த விமானம், 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ., துாரம் சுற்றிவரும் சாதனை முயற்சி, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது. இந்த ...

மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி

Posted: 25 Apr 2016 07:33 PM PDT

- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது லீக் ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது மும்பை. அதேநேரத்தில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் 5-ஆவது தோல்வியை சந்தித்து உள்ளது. – ராயுடு 3,000 பஞ்சாபுக்கு எதிராக 47 ரன்கள் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய 15-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அம்பட்டி ராயுடு. அவர் தனது 151-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். – ————— சுருக்கமான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™