Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஒரு தொகுதி... ஓராயிரம் கேள்விகள்

Posted: 26 Apr 2016 08:46 AM PDT

போராளி, புரட்சிக்காரர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வைகோ; ஸ்டெர்லைட், கோகோ கோலா போன்ற பிரம்மாண்ட பன்னாட்டு கார்ப்பரேட்களை எதிர்க்க தயங்காத வைகோ, ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் எழுப்பிய கூச்சலுக்கு அஞ்சி, தேர்தல் போட்டியில் இருந்தே விலகி விட்டார் என்பதை, தமிழகத்தில் யாராலும் நம்ப முடியவில்லை.

இதனால், பற்பல வடிவங்களில் கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன. அவற்றை பார்க்கும் முன், வைகோவுக்கு உச்சகட்ட கிலி ஏற்படுத்திய அந்த சம்பவத்தை பற்றி...துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் கிராமத்தில், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வைகோ ...

ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருதம் : மத்திய அரசு அதிரடி உத்தரவு

Posted: 26 Apr 2016 08:58 AM PDT

நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பண்டைய புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்களை, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது தொடர்பாகவும், சமஸ்கிருத மொழியை பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது. இக்குழு, ஆய்வு நடத்தி, அளித்த அறிக்கை விவரம்:வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண ...

சவுதி அரேபியாவில் மாபெரும் சீர்திருத்தங்கள் புதிய தொழில்களுக்கு முக்கியத்துவம் தர திட்டம்

Posted: 26 Apr 2016 09:44 AM PDT

ரியாத்: எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில்,மாபெரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு, சவுதி அரேபியா நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியா, எண்ணெய் வளத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளது. உலகின் பெரும்பாலான வாகனங்கள், பெட்ரோல் அல்லது டீசலில் ஓடுவதால், எண்ணெய் வர்த்தகத்தின் மூலம், சவுதி அரேபியா செல்வச்செழிப்பில் கொழித்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், சவுதி அரேபியாவின் வருவாயும் ...

விஸ்வரூபமெடுக்கும் ஹெலிகாப்டர் ஊழல்: காங்., தலைவர் சோனியா சிக்குவாரா?

Posted: 26 Apr 2016 09:47 AM PDT

புதுடில்லி:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக, பார்லிமென்டில், காங்., தலைவர் சோனியாவின் பெயரை குறிப்பிடப் போவதாக, பா.ஜ., கூறியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரதமர் உட்பட, 12 முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, இத்தாலியை சேர்ந்த, ராணுவத்தளவாட உற்பத்தி நிறுவனமான, 'பின்மெகானிகா 'விடமிருந்து, 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டது. அதன் துணை நிறுவனமான, அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன், 2010ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹெலிகாப்டர்களை வாங்க, லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்ததால், இந்த ...

பயங்கரவாத பிரச்னையை எழுப்பியது இந்தியா காஷ்மீர் விவகாரத்தை கிளப்பியது பாக்.,

Posted: 26 Apr 2016 09:51 AM PDT

புதுடில்லி,: வெளியறவுத் துறைச் செயலர்கள் இடையேயான கூட்டத்தில், பயங்கரவாத பிரச்னையை, இந்தியா எழுப்பியது. அதே நேரத்தில், காஷ்மீர் பிரச்னையை, பாக்., எழுப்பியது.

'ஆசியாவின் இதயம்' என்ற பெயரில், ஆப்கானிஸ்தான் குறித்த பிராந்திய மாநாடு, டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, டில்லி வந்துள்ள பாக்., வெளியுறவுச் செயலர் அய்சாஸ் அகமது சவுத்ரியும், இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கரும்,நேற்று சந்தித்து, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது, இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாவது:பஞ்சாப் மாநிலம், பதன்கோட் ...

மின் அமைச்சர் மீது புகார் அறிக்கை தர உத்தரவு

Posted: 26 Apr 2016 09:59 AM PDT

சென்னை: மிழக மின் வாரியத்துக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான புகாரை பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலவர அறிக்கை தாக்கல் செய்யும் படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, சீனிவாஸ் என்பவர், தாக்கல் செய்த மனு:சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 1 யூனிட்டுக்கு, 7.01 ரூபாய் கட்டண வீதத்தில் கொள்முதல் செய்ய, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டம் வகுத்தது. ஆந்திரா, உத்தர ...

சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் கருணாநிதி

Posted: 26 Apr 2016 10:08 AM PDT

திருவாரூர்: 'கரூரில் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கப்பட்டது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:இந்த தேர்தலில், மக்களை விலைக்கு வாங்கபார்க்கின்றனர். பட்டதெல்லாம் போதாது என்று, மேலும் பல வழக்குகளை சந்திக்க தயார் ஆகிறார். சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ளவே தேர்தலில் நிற்கிறார். பாவிகள், சோம்பேறிகளிடம்இருந்து, நாட்டை காப்பாற்ற வேண்டும். கரூரில் பல கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கப்பட்டது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, ...

ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள்...கிடைக்குமா?:தடுக்க இளைஞர் படையை தயார் செய்கிறது தேர்தல் கமிஷன்

Posted: 26 Apr 2016 10:31 AM PDT

தேர்தலில் ஓட்டுப்போட, கட்சிகள், பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, 21 ஆயிரத்து, 300 இளைஞர் குழுக்களை, தேர்தல் கமிஷன் தயார் செய்துள்ளது. இதனால், இம்முறை வாக்காளர் களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் ஓட்டுப்போட, வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருள் கொடுப்பது, தமிழகத் தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசியலில் லஞ்ச ஊழல் பெருகுவதுடன், பண பலமிக்கவர்களே வெற்றி பெற முடியும் என்ற நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த தேர்தலில், பண பட்டுவாடாவை எப்படியும் ...

110 வது விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: பட்டியலிட்டு ஜெ., அறிக்கை

Posted: 26 Apr 2016 11:51 AM PDT

சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டசபை விதி 110ன் கீழ், நான் வெளியிட்ட சில அறிவிப்புகளை பட்டியலிட்டு உள்ளேன்.வருவாய் துறையில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம், மார்ச் 31ம் தேதி வரை, 3,040 கோடி ரூபாய் அளவுக்கு, 37.68 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில், மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கருத்துரு ஆய்வில் உள்ளது. தற்போது ...

மொபைலில் அவசர உதவிக்கான 'பட்டன்' கட்டாயமாகிறது

Posted: 26 Apr 2016 01:07 PM PDT

புதுடில்லி :அவசர காலத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: வரும், 2017, ஜனவரி, 1 முதல், அவசர உதவி தேவைப்படும்போது, எச்சரிக்கை விடுக்கும், 'பட்டன்' வசதியுடன் மொபைல்போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது, மொபைலில் உள்ள எண், 5 அல்லது, 9ஐ, தொடர்ந்து அழுத்தும்போது, அந்த மொபைல் எண் உள்ளவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, மனித வாழ்க்கையை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™