4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மாகாண சபையின் யோசனைகளும், எதிர்வினைகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்
- வடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பாராளுமன்றமே இறுதித் தீர்மானம் எடுக்கும்: அகில விராஜ் ...
- புலிகளின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் கைது!
- தென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளும் சீனா!:ஒபாமா காட்டம்
- உலகை உலுக்கிய செர்னோபில் கதிர்வீச்சு விபத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு!
- மலேசியாவில் இந்துக் கோயில் சிலைகள் தகர்ப்பு!:தீவிரவாதச் செயலா என சந்தேகம்
- விஜய்க்கு நயன்தாரா பாலிஷ்
- சமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!
- மற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல்
- தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான புருஸ்ஸெல்ஸின் இன் மெட்ரோ நிலையம் திறப்பு!
- வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை சோதனை வெற்றி!
- சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை:லக்கானி
- உத்திரகண்ட் பிரச்னையை எழுப்பி மாநிலங்களவை ஒத்திவைப்பு
| வடக்கு மாகாண சபையின் யோசனைகளும், எதிர்வினைகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும், அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. Read more ... |
| தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன் Posted:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
அரசியலமைப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பாராளுமன்றதே இறுதித் தீர்மானத்தினை எடுக்கும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். Read more ... |
| புலிகளின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் கைது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் என்கிற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| தென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளும் சீனா!:ஒபாமா காட்டம் Posted:
தென் சீனக் கடலில் சீனா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு வருகின்றது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென் சீனக் கடற் பிராந்தியத்தில் அத்து மீறி தனது கடற்படை மூலம் வேவு பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. Read more ... |
| உலகை உலுக்கிய செர்னோபில் கதிர்வீச்சு விபத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு! Posted:
உலகில் மிக மோசமான கதிர் வீச்சு விபத்தாகக் கருதப் படும் உக்ரைனின் செர்னோபில் அணு உலை விபத்து இடம்பெற்று செவ்வாய்க்கிழமையுடன் 30 வருடங்கள் ஆகின்றன. ஐரோப்பா முழுவதும் கதிர்வீச்சு பரவி பல ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொண்டு இன்னமும் பலர் கதிர்ப்பின் தாக்கத்தால் இறந்து வரும் நிலையில் உக்ரைனியர்கள் இந்த மோசமான விபத்தில் இறந்த தங்கள் உறவினர்களை நினைவு கூர்ந்துள்ளனர். Read more ... |
| மலேசியாவில் இந்துக் கோயில் சிலைகள் தகர்ப்பு!:தீவிரவாதச் செயலா என சந்தேகம் Posted:
மலேசியாவில் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் கிரீண்டவுன் அருகே உள்ள இந்துக் கோயில் சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் மதக் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோயிலில் இருந்த நவக்கிரக சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. Read more ... |
| Posted: |
| சமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! Posted:
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வின் அவசியம் தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரமுக்கு (Margot Wallstrom) விளக்கமளித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல் Posted:
அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் போசாக்கு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களில் மனித இனத்தின் அதாவது நமது தாய்மாரின் தாய்ப்பால் பூமியில் வசிக்கும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் தாய்ப்பாலை விட 7 மடங்கு அதி சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான புருஸ்ஸெல்ஸின் இன் மெட்ரோ நிலையம் திறப்பு! Posted:
மார்ச் 22 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தையும் உலகையும் உலுக்கிய தீவிரவாதத் தாக்குதலாக புருஸ்ஸெல்ஸின் மெட்ரோ உட்பட சில இடங்களில் இடம்பெற்ற தாக்குதலைக் கூற முடியும். Read more ... |
| வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை சோதனை வெற்றி! Posted:
வடகொரியா அண்மையில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான தனது ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. Read more ... |
| சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை:லக்கானி Posted:
சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| உத்திரகண்ட் பிரச்னையை எழுப்பி மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted:
நாடாளுமன்ற பட்ஜெட் கால கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் உத்திரகண்ட் மாநில பிரச்னையை எழுப்பி Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






வில்லு படத்திற்கு பிறகு நயன்தாராவும் விஜய்யும் ஜோடியாக சேர்ந்து நடிக்கவில்லை.




