Tamil Star |
- கிழக்கு ஒன்ராறியோவில் 26வயது ஆண் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு
- எக்லிங்டன் வீதி மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது
- பிலிப்பீன்ஸில் கனேடியர் படுகொலை
- தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்!
| கிழக்கு ஒன்ராறியோவில் 26வயது ஆண் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு Posted: 26 Apr 2016 08:01 PM PDT
ஒன்ராறியோவின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் இது தொடாபில் கருத்து தெரிவிக்கையில் ஒன்ராறியோ மாநிலக் காவல்த்துறையினருக்கு கடந்த திங்கட்சிகழமை ஒன்ராறியோவின் Bancroft குடியிருப்புப்பாளர் பகுதியில் அச்சுறுத்தல் நடத்தை தொடர்பிலான முறைப்பாடு கிடைத்திருந்தாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு அதிகாரிகள் மாலை 7.30 மணியவில் சென்றிருந்தனர் என்ற போதிலும், அவர்கள் குறித்த வீட்டினுள் உள்நுளையவில்லை என கூறப்பட்டுள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் ஒன்ராரியோ மாநிலக் காவல்த்துறையினரின் சிறப்பு அதிகாரிகள் உள்நுளைந்திருந்தனர் என்றும் அதன்போது, ஒருவர் உயிரிழந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post கிழக்கு ஒன்ராறியோவில் 26வயது ஆண் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எக்லிங்டன் வீதி மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது Posted: 26 Apr 2016 08:14 AM PDT
Scarborough Villageஇன் எக்ளிங்டன் அவனியூ மற்றும் மார்க்கம் வீதிப் பகுதியில் நேற்று இரவு பத்து மணியளவில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் பாதசாரி ஒருவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். குறித்த நபர் வாகனம் ஒன்றினால் மோதுண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். சாரதி மீது மரணம் விளைவிக்கும் வகையில் அபாயகரமாக வாகனத்தினைச் செலுத்திச் சென்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. The post எக்லிங்டன் வீதி மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிப்பீன்ஸில் கனேடியர் படுகொலை Posted: 26 Apr 2016 06:43 AM PDT
ஜான் ரிட்சலும் என்ற அந்த கனேடியர் உள்ளிட்ட மேலும் மூவர் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் பிலிப்பீன்சில் வைத்து அந்த நாடடில் செயற்படும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிப்பதற்காக அபு சயாஃப் எனப்படும் குறித்த அந்த அமைப்பு 80 மில்லியன் டொலர்களை கப்பமாக கோரியிருந்தது. அந்த தொகையை கையளிப்பதற்கு அபு சயாஃப் அமைப்பு விதித்திருந்த காலக்கெடு நேற்று முடிவடைந்த சில மணி நேரம் கழித்து, ரிட்சலின் துண்டிக்கப்பட்ட தலை பிலிப்பீன்ஸின் தீவு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. சுரங்கத்தொழில் நிர்வாகியாக இருந்த ரிட்சல் என்ற கனேடியர் ஃபிலிப்பீன்ஸின் அபு சயாஃப் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை கனடிய அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. கனேடியரின் இந்த படுகொலைச் சம்பவத்தைக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த படுகொலைக்குக் காரணமானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் சூழுரைத்துள்ளார். The post பிலிப்பீன்ஸில் கனேடியர் படுகொலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்! Posted: 26 Apr 2016 06:38 AM PDT தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 100 கிராம் சப்போட்டாவில்அடங்கியுள்ள சத்துக்கள் புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம், கரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின்0.02 மில்லி கிராம் மற்றும் விட்டமின் சி 6.1 மில்லிகிராம் […] The post தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கிழக்கு ஒன்ராறியோவின் வீடு ஒன்றில் 26 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவத்தை அடுத்து, அது தொடர்பான விசாரணைகளில் ஒன்ராறியோ காவல்த்துறையினரின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக் காரணமாக மூடப்பட்ட எக்லிங்டன் வீதி மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் நாட்டில் அபு சயாஃப் கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட கனடியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டள்ளார்.