Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


என்றென்றும் இளமையுடன் வாழ வேர்க்கடலை!

Posted: 14 Mar 2016 06:51 PM PDT

kjl

kjlபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.

வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன.

வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம்.

இதில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

குறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

இதில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். இதில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.kjl

இதனை கொண்டு வேர்க்கடலை குழம்பு செய்து சாப்பிடலாம்.

செய்முறை

முதலில் வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் புளிக் கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும், இதனுடன் தேவையான அளவு சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு கொதித்தவுடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து இறக்கினால் சுவையான குழம்பு ரெடி.po

The post என்றென்றும் இளமையுடன் வாழ வேர்க்கடலை! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீக்கியர்களுக்கு கூடுதல் இடம் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ

Posted: 14 Mar 2016 06:42 PM PDT

jhfg

jhfgகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். வோஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தார். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், "உங்கள் அமைச்சர் அவையில் பஞ்சாப்பை சேர்ந்த பலருக்கு வாய்ப்பு அளித்திருப்பது நன்றாக இருக்கிறது" என அவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ரூடோ, "இந்தியாவில் மோடியின் அமைச்சர் அவையில் இடம் பெற்றிருக்கிறவர்களை விட நான் கூடுதல் சீக்கியர்களுக்கு எனது அமைச்சர் அவையில் இடம் அளித்திருக்கிறேன்" என்றார்.

கடந்த நவம்பர் மாதம் பிரதமர் பதவி ஏற்ற ஜஸ்டின் ரூடோ, தனது அமைச்சர் அவையில் 4 சீக்கியர்களுக்கு இடம் அளித்திருக்கிறார். இராணுவ அமைச்சர் ஹர்ஜித் சாஜனும் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிரதமர் மோடியின் அமைச்சர் அவையில் இடம் பெற்றுள்ள மேனகா காந்தி பிறப்பால் சீக்கியர் ஆவார். உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலும் சீக்கியர் ஆவார்.

The post சீக்கியர்களுக்கு கூடுதல் இடம் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்கில் 21 வயது இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு: சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணை

Posted: 14 Mar 2016 01:42 PM PDT

jg

jgநோர்த் யோர்க் பகுதியில் நேற்று இரவு 21 வயது இளைஞன் ஒருவர் காவல்த்துறையினரால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.

லெஸ்லி வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில் வைத்தே குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்தி இன்று திங்கட்கிழமை காலை வெளியிட்ட போது, லெஸ்லி வீதிப் பகுதியில் இரண்டு நபர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறி காவல்த்துறையினர் நேற்று இரவு 11 மணியளவில் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த 21 வயது நபர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.jg

சம்பவ இடத்துக்கு விரைந்த ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த 21 வயது ஆண் பின்னர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் Alex Wettlaufer என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த நபரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் நாளை செவ்வாய்கிழமை காலை கிடைக்கப்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நோர்த் யோர்கில் 21 வயது இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு: சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனானதை ஒத்த உறவுகளை விரும்பும் மக்கள்

Posted: 14 Mar 2016 10:04 AM PDT

Royal_Commonwealth_-_03142016

Royal_Commonwealth_-_03142016ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே தற்போது உள்ளது போல, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களும், குறித்த அந்த நாடுகளுக்கிடையே எந்தவித தடைகளும் இன்றி பயணிப்பதற்கும், வாழ்வதற்கும், தொழில் புரிவதற்குமா ஏற்பாடுளை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.

குறித்த இந்த நடைமுறை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு ஒன்றில், பெரும்பான்மையான மக்கள் இந்த மாதிரியான நடைமுறையினை விரும்புகின்றமை தெரிய வந்துள்ளது.

"Royal Commonwealth Society"யினால் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், இவ்வாறான திட்டத்திற்கு 70 சதவீதமான அவுஸ்திரேலியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.Royal_Commonwealth_-_03142016

அவ்வேளை இந்த திட்டத்திற்கு 75 சதவீதமான கனேடியர்களும், 82 சதவீதமான நியூசிலாந்து வாசிகளும் வரவேற்பு வெளியிட்டுள்ளதனையும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

இவ்வாறு பெருமளவான மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், இந்த திட்டம் நடைமுறைச் சாத்தியமாகும் என்று Royal Commonwealth Societyயின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

The post ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனானதை ஒத்த உறவுகளை விரும்பும் மக்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் அடிப்படை வருமான ஆராய்வு: நிதி அமைச்சர் விளக்கம்

Posted: 14 Mar 2016 09:55 AM PDT

Kathleen_Wynne_-_03142016

Kathleen_Wynne_-_03142016வறுமையை இல்லாது செய்யும் வகையில் அடிப்படை வருமானம் ஈட்டுவதற்கான திட்டங்களை ஏற்படுத்துவது குறித்து ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் ஆராய்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மாநில நிதி அமைச்சர் சார்ள்ஸ் சூசா, ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் ஒரு சிறு திட்டம், மாநிலத்தின் வருமானம் குறைந்த மக்களுக்கான அடிப்படை வருமானத்தினை ஈடுசெய்யும் செயல்த்தி்ட்டத்தில் பாரிய மாற்றத்தினை கொண்டுவரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அனைவருக்குமான குறைந்த அளவு வருமானத்தனை உறுதிப்படுத்தவும், குழந்தைகளுக்கான ஆதாயங்களை அதிகரிக்கவும் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கான அடிப்படை ஏற்பாடுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Kathleen_Wynne_-_03142016

குறைந்த அளவு வருமானத்தினை உறுதி செய்யும் பரீட்சார்த்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், எந்த பிரதேசத்தில் அதனை பரீட்சித்துப் பார்ப்பது என்பதனை அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்த திட்டத்தின் செயலாகத்தினை மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள நிலையில், விரைவில் அந்த பரீட்சார்த்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்காக மேற்கொள்ளப்படும் சமூக உதவித் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, குடும்பங்களின் அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்தும் இந்த மாதிரியான திட்டங்கள் வினைத்திறன் அதிகமானதாக காணப்படும் எனவும் நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

The post ஒன்ராறியோவின் அடிப்படை வருமான ஆராய்வு: நிதி அமைச்சர் விளக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™