மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- விஜய் மல்லையா மீது மேலும் 5 பிடிவாரண்ட்: ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்தது
- ஆந்திர சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மனு
- ஆந்திராவில் தனியார் பஸ் சாலையோர மரத்தில் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
- ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: அமித்ஷாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் புகார்
- ஐக்கிய ஜனதா தளம் கட்சி அசாம் தேர்தலில் போட்டி: நிதீஷ்குமார் பிரசாரம்
- திருப்பதி அருகே வேன்–லாரி மோதி விபத்து: 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி
- தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் துணிகர கொள்ளை: ரூ.3.5 கோடி நகைகளுடன் தலைமறைவு
- கேரள எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்: சபாநாயகர் உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது
- 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தாவூத் இப்ராகிம் கூட்டாளி குஜராத்தில் கைது
- குலாம்நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வற்புறுத்தல்
- உடுமலையில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு
- வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம் சேவை முடங்கும் அபாயம்
- மவுலிவாக்கம் கட்டிட வழக்கு: 2-வது கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
- எம்.பி.க்கள் நோட்டீசு எதிரொலி: விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? டெல்லி மேல்-சபை குழு ஆலோசனை
- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ். அமைப்போடு ஒப்பிட்டு பேசவில்லை: குலாம் நபி ஆசாத் விளக்கம்
- மம்தா கட்சியின் மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீட்டால் பரபரப்பு
- இஷ்ரத் ஜகான் வழக்கில் கோப்புகள் காணவில்லை என்பது ஜி.கே.பிள்ளையின் வீண்பேச்சு: ப.சிதம்பரம் கருத்து
- நகைகள் மீதான உற்பத்தி வரி வாபஸ் கிடையாது: பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி அறிவிப்பு
- கடன் வசூல் நடவடிக்கையால் விவசாயி தற்கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு
- இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு பாராளுமன்றக்குழு நோட்டீசு - காங்கிரஸ் கட்சி கண்டனம்
| விஜய் மல்லையா மீது மேலும் 5 பிடிவாரண்ட்: ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்தது Posted: 14 Mar 2016 10:50 PM PDT பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாத அவர் லண்டனில் பதுங்கி உள்ளார். அங்கிருந்தபடியே டுவிட்டரில் பதில் அளித்து வருகிறார். அவரை நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. |
| ஆந்திர சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மனு Posted: 14 Mar 2016 10:31 PM PDT ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் கட்சிக்கு தாவினார்கள். கட்சி தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் பதவியை பறிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. |
| ஆந்திராவில் தனியார் பஸ் சாலையோர மரத்தில் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பலி Posted: 14 Mar 2016 10:27 PM PDT ஐதராபாத் உஸ்மானியா மருத்துவ கல்லூரி மாணவர்கள் அமலாபுரத்தில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் நேற்று தனியார் டிராவல்ஸ் நிறுவன பஸ்சில் ஐதராபாத் திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ்சில் 48 மாணவர்கள் இருந்தனர். |
| ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: அமித்ஷாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் புகார் Posted: 14 Mar 2016 10:11 PM PDT தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. 5 மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். |
| ஐக்கிய ஜனதா தளம் கட்சி அசாம் தேர்தலில் போட்டி: நிதீஷ்குமார் பிரசாரம் Posted: 14 Mar 2016 10:07 PM PDT அசாம் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதற் கட்டமாக ஏப்ரல் 4–ந் தேதி 65 தொகுதிகளுக்கும், 2–வது கட்ட தேர்தல் ஏப்ரல் 11–ந் தேதி 61 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. |
| திருப்பதி அருகே வேன்–லாரி மோதி விபத்து: 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி Posted: 14 Mar 2016 10:05 PM PDT பெங்களூர் அலங்கா மற்றும் தினஹரல்லி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 12 பேர் திருப்பதி கோவிலுக்கு வேனில் வந்தனர். பெங்களூரில் இருந்து நேற்றிரவு அவர்கள் புறப்பட்டனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பூத்தலப்பட்டு என்ற இடத்தில் வேன் வந்துக் கொண்டிருந்தது. அப்போது சித்தூர் நோக்கி எதிரே |
| Posted: 14 Mar 2016 08:49 PM PDT அரியானா மாநிலத்தில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் தனியார் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| கேரள எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்: சபாநாயகர் உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது Posted: 14 Mar 2016 08:36 PM PDT கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை முன்னாள் தலைமை கொறடாவாகவும் இருந்தவர் ஜார்ஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இடைத்தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. |
| 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தாவூத் இப்ராகிம் கூட்டாளி குஜராத்தில் கைது Posted: 14 Mar 2016 08:07 PM PDT நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இருந்தவர் பில்லு கான். 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு சோட்டா ராஜன், தாவூத் இப்ராகிமிடம் இருந்து பிரிந்து சென்றார். அதன் பிறகு தாவூத் இப்ராகிமின் போதைப்பொருள் கடத்தல் தொழிலை தனி ஆளாக கவனித்தவர் பில்லுகான். |
| குலாம்நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வற்புறுத்தல் Posted: 14 Mar 2016 07:55 PM PDT அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹர்விந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- டெல்லி மேல்-சபையில், அதன் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் பேசிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பொறுப்பற்ற, அடிப்படையற்ற கருத்துக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு |
| உடுமலையில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு Posted: 14 Mar 2016 07:51 PM PDT திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் சாவடி தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சங்கர் (வயது 22). பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த இவர், அதே கல்லூரியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவை (19) காதலித்து, கடந்த 8 மாதங்களுக்கு |
| வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம் சேவை முடங்கும் அபாயம் Posted: 14 Mar 2016 07:32 PM PDT வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 14 Mar 2016 07:15 PM PDT சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி மழையின் போது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். |
| Posted: 14 Mar 2016 07:09 PM PDT டெல்லி மேல்-சபை எம்.பி.யும், தொழில் அதிபருமான விஜய் மல்லையா, ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கியை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு சென்ற விவகாரம், டெல்லி மேல்-சபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. விஜய் மல்லையாவுக்கு எதிராக மேல்-சபை |
| ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ். அமைப்போடு ஒப்பிட்டு பேசவில்லை: குலாம் நபி ஆசாத் விளக்கம் Posted: 14 Mar 2016 07:09 PM PDT காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் முஸ்லிம் அமைப்பு சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டு அவர் பேசியதாக நேற்று முன்தினம் சர்ச்சை எழுந்தது. |
| மம்தா கட்சியின் மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீட்டால் பரபரப்பு Posted: 14 Mar 2016 06:56 PM PDT தமிழ்நாட்டுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மேற்கு வங்காளமும் அடங்கும். அங்கு அடுத்த மாதமே முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 |
| இஷ்ரத் ஜகான் வழக்கில் கோப்புகள் காணவில்லை என்பது ஜி.கே.பிள்ளையின் வீண்பேச்சு: ப.சிதம்பரம் கருத்து Posted: 14 Mar 2016 06:44 PM PDT குஜராத்தில் 2004-ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பெண் தீவிரவாதி இஷ்ரத் ஜகான் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். எனினும் இது போலி என்கவுண்ட்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பராமரிப்பில் இருந்த 2 முக்கிய கோப்புகள் மாயமாகிவிட்டது. |
| நகைகள் மீதான உற்பத்தி வரி வாபஸ் கிடையாது: பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி அறிவிப்பு Posted: 14 Mar 2016 06:37 PM PDT பாராளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:– தங்க, வைர நகைகள் மீது ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. |
| கடன் வசூல் நடவடிக்கையால் விவசாயி தற்கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு Posted: 14 Mar 2016 06:17 PM PDT அரியலூர் மாவட்டம் ஒரத்தூரை சேர்ந்த விவசாயி அழகர் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் கடனை வசூலிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று போலீசாரைக் கொண்டு நடவடிக்கை எடுத்தது. கடனை வசூலிக்கும் பிரச்சினையில் போலீசாரின் துணையுடன் நிதிநிறுவனம் அவரை சிறுமைப்படுத்தியும், சித்ரவதை செய்ததையும் |
| Posted: 14 Mar 2016 05:51 PM PDT இங்கிலாந்தின் பேகோப்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ராகுல் காந்திக்கு, அந்த நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் அங்கே தங்கியிருந்த போது, தன்னை ஒரு இங்கிலாந்து குடிமகன் என கூறியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |