Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அனைத்துல பெண்கள் நாளை முன்னிட்டு ரொரன்ரோவில் இன்று பேரணி

Posted: 05 Mar 2016 09:12 PM PST

ohni

ohniகனடாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரும் மகளீர் நாளை முன்னிட்டு ரொரன்ரோவில் இன்று பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.ரொரன்ரோ டவுண்ரவுனில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் பெண்களும், ஆண்களுமாக சுமார் மூவாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தனர். இதில் மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் பங்குபற்றியிருந்ததைக் காண முடிந்தது.

Bloor மற்றும் St. George இல் இருந்து ஆரம்பமான இந்த பேரணியில் கலந்கொண்டிருந்த அனைவரும் தமது தனிப்பட்ட எண்ணங்களை பேரணியி்ல் வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களில் சிலர் வன்முறைகளும், வெறுப்புணர்வுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். இன்னும் சிலர் கறுப்பினத்தவர்களின் வாழ்வியல் குறித்தும் குரல் எழுப்பியிருந்தனர்.ohni

முதலாவது அனைத்துலக மகளீர் நாள் 1911 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஒஸ்ரியா, டென்மார்க், யேர்மனி மற்றும் சுவிசர்லாந்தில் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பெண்களின் உரிமைக்காகவும், அமைதிக்காகவும் நாள் ஒன்றை பிரகடனம் செய்திருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அந்த பிரகடனத்தைப் பின்பற்றி அனைத்துலக பெண்கள் தினமாக கனடா மார்ச் மாதம் 8 ஆம் திகதியை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அனைத்துல பெண்கள் நாளை முன்னிட்டு ரொரன்ரோவில் இன்று பேரணி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர் யோர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சிறப்புக் காவல்த்துறை பிரிவு விசாரணை

Posted: 05 Mar 2016 09:08 PM PST

jkg

jkgநோர்த் யோர்க் பகுதியில் காவல்த்துறையினர் மேற்கொண்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணைகளில் சிறப்புக் காவல்த்துறை பிரிவு முன்னெடுத்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 30 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் Steeles அவனியூவிற்கு அருகில் உள்ள Bayview அவனியூவில் 25 மற்றும் வயதான பெண்களுக்ககா உதவிகளை வழக்கும் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அந்த நிலையத்திற்கு முன்பாக குறித்த 30 வயதான ஆணுடன் காவல்த்துறையின் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டதாகவும், அதன் போது அவர் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.jkg

காயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும், அவருக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான காயங்களினால் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இரண்டு மணித்தியாளங்களின் பின்னரே அது குறித்து காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பு காவல்த்துறை விசாரணைப் பிரிவு கையாண்டு வருகின்றது.

இந்த சம்பவம் தொடாபில் தகவல் வெளியிட்டுள்ள சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர், குறித்த சம்பவத்துடன் 3 காவல்த்தறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், ஒரு அதிகாரியின் துப்பாக்கியே பிரயோகிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post நோர் யோர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சிறப்புக் காவல்த்துறை பிரிவு விசாரணை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இஞ்சி, பூண்டு மருந்து சாப்பிடுங்கள்!

Posted: 05 Mar 2016 06:07 PM PST

2

4உடல் நலப்பிரச்சனைகள் என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லதுதான்.

ஆனால், வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கை மருந்துகளை சாப்பிட்டுவிட்டு முடியவில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

கீழே 3 மருத்துவகுறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன,

இஞ்சி பூண்டு மருந்து

மிதமிஞ்சிய சளியாலும், சளி கெட்டிப்படுவதாலும் ஏற்படும் நோய் இது. கோழை கட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் கட்டி, அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து, அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால், கபம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேக வைத்து கடைந்து, தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும், குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும், இந்நோய் குணமாகிவிடும்.2

சுக்கு மல்லி காபி

டீ, காபி குடிப்பதால் நம் உடலுக்கு கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது.

சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பிரச்னைகள் தீரும்.4

க்ரீன் டீ

கிரீன் டீயில், ஆறு விதமான பாலிபீனால்கள் என்ற சத்துப் பொருள் கலந்துள்ளன. இவை, மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், மனித உயிர்களை காக்கவும் செய்கின்றன.

இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள தியோபிளவின் என்ற நுண் சத்து, ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, குளூக்கோஸ் வினையை ஊக்கப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து, சோம்பலை போக்குகிறது, இதில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது.6

The post இஞ்சி, பூண்டு மருந்து சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

முட்டைகோஸ் ஜூஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Posted: 05 Mar 2016 06:02 PM PST

g

gபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்துள்ளன.

முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள், வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன

முட்டைகோஸை சமைத்து சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக வேக வைக்ககூடாது, அப்படி செய்தால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே முட்டைகோஸை ஜூஸாக செய்து சாப்பிடலாம்.g

இதற்கு முதலில், முட்டைகோஸை எடுத்து சுடு தண்ணீர் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்தால் ஜூஸ் ரெடி, ஒருநாளைக்கு ஒரு டம்ளருக்கு மேல் ஜூஸ் பருகக்கூடாது.

* முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றின் உட்புறம் வலிமை அடையும், மேலும் குடலை சுத்தம் செய்வதால் அல்சர் குணமாகிறது.

* இதில் சல்போரோபேன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

* இதிலுள்ள வைட்டமின் சி சரும பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்கிறது.

* தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் கண்புரை நோயிலிருந்து விடுபடலாம்.

* இதிலுள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின் மூளையை கூர்மையாக்கி மனதை ஒருமுகப்படுத்துகிறது.

* குறிப்பாக தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேற்றப்பட்டு விரைவில் உடல் எடை குறைந்துவிடும்.

The post முட்டைகோஸ் ஜூஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தீ பரவல்

Posted: 05 Mar 2016 12:58 PM PST

yt

ytகனேடிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் தீ பற்றிக்கொண்ட சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் "HMCS Ville de Quebec" எனபப்படும் கனேடிய கடற்படைக் கப்பலில் தீ பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மூன்று பொறியியலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.yt

மின்பிறப்பாக்கிகளில் ஒன்றினை இயக்க ஆரம்பித்த போதே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக கடற்படை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மின் பிறப்பாக்கி அறைக்குள் தீ பரவ ஆரம்பித்ததை அவதானித்த மறுகணமே, தீ பரவலைக் கட்டுப்படுத்த பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீப் பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கையின் போதே குறித்த மூன்று பொறியியலாளர்களும் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post கனேடிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தீ பரவல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கர்கள் குறித்த பிரதமரின் கருத்திற்கு பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி

Posted: 05 Mar 2016 12:52 PM PST

ui

uiகனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்கர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்திற்கு எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் கெனி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

60 நிமிட பேட்டி ஒன்றில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த கனேடியப் பிரதமர், உலக நாடுகளில் என்ன நடக்கின்றது என்பதில் அமெரிக்கர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதையே கனேடியர்கள் விரும்புவார்கள் என தெரிவித்துள்ளார்.

தம்மைச் சுற்றி வெளியே ஏனைய உலக நாடுகளிலும் என்ன நிகழ்கின்றது என்பது தொடர்பிலான சிறு விழிப்புனர்வினை அமெரிக்கர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்த பிரதமர், அமெரிக்கர்கள் தொடர்பில் இதனையே பெரும்பான்மையான கனேடியர்கள் எதிர்பார்ப்பார்கள் என தாம் எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.ui

அதேவேளை கனேடியர்கள் அண்டைநாடான அமெரிக்காவின் விடயங்களையேனும் அறிந்துகொண்டிருக்க வேண்டும் எனவும், அந்த நாட்டின் முக்கியத்துவம் காரணமாக அதனை அவதானிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடியப் பிரதம்ர் ஜஸ்டின் ரூடோவின் இந்த கருத்திற்கே எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் கெனி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கனடா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலுமே குறைகள் நிறைகள் என இரண்டும் உள்ளதாக குறிப்பிட்ட ஜேசன் கெனி, நாம் உலக விடயங்களில் கவனம் செலுத்துறோம் என்று கூறமுடியாது எனவும், அதில் உண்மை இல்லை என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

The post அமெரிக்கர்கள் குறித்த பிரதமரின் கருத்திற்கு பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™