Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஏமன் நாட்டில் இந்திய பாதிரியார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்: சுஷ்மா சுவராஜ் தகவல்

Posted: 05 Mar 2016 11:24 PM PST

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரின் பல பகுதிகளை அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளை சேர்ந்தவர்களை கடத்திவரும் தீவிரவாதிகள் உரிய பிணைத்தொகையை பெற்றுகொண்டு பின்னர் விடுதலை செய்கின்றனர். இந்நிலையில், இந்திய பாதிரியாரான டாம் உழுநலில் என்பவர் அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகவும், அவரது இருப்பிடத்தை

குஜராத்துக்குள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டம்

Posted: 05 Mar 2016 10:49 PM PST

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த உளவுத்தகவல்களை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லையோரமுள்ள கட்ச் மாவட்டத்தின் வழியாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுமார் பத்துபேர் குஜராத்துக்குள் நுழைந்திருப்பதாக மத்திய உளவு நிறுவனங்களுக்கு நம்பத்தக்க

கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பெயர் சொல்லி அழைத்து ஏழை மாணவனுக்கு உதவி கேட்ட சிறுமி

Posted: 05 Mar 2016 10:44 PM PST

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நடக்காவு என்ற இடத்தில் ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளியில்

சாதாரண ஓட்டலுக்கு சகஜமாக சென்று டீ குடித்த மத்திய மந்திரி

Posted: 05 Mar 2016 10:38 PM PST

கோவா மாநில உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை வாக்களிக்கவந்த பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் தலைநகர் பனாஜியில் உள்ள சாதாரண ஓட்டலுக்குள் சகஜமாக சென்று டீ குடித்த காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். மக்களோடு மக்களாய் காலையில் வரிசையில் நின்று பனாஜி மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்த மனோகர் பரிக்கர், அங்கிருந்து

இன்னும் 24 மணி நேரத்தில் தூள்தூளாகும்: கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 05 Mar 2016 10:20 PM PST

மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலைவந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேலாளருக்கு 'இமெயில்' மூலம் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் 'அடுத்த 24 மணிநேரத்தில் விமான

ஆந்திராவில் கட்சி தாவிய 8 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகுமா? சபாநாயகரிடம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மனு

Posted: 05 Mar 2016 09:44 PM PST

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கு தாவினர். பூமா நாகிரெட்டி, ஜலீல்கான், டேவிட்ராஜு, மணிகாந்தி உள்பட 8

காதலிக்க மறுத்த மாணவி உயிரோடு எரித்துக் கொலை

Posted: 05 Mar 2016 09:39 PM PST

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சாத்தப்பரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இருவரும் கூலி தொழில் செய்கிறார்கள். இவர்களது மகள் இந்துமதி பிளஸ்–2 படித்து வருகிறார். இதே பகுதியில்

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச வைபை சேவை

Posted: 05 Mar 2016 09:30 PM PST

கேரளாவில் அரசு துறையில் பெரும்பாலான சேவைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு சேவைகளை அவர்கள் மிக எளிதாக பெற முடிகிறது.

ஆசிரியை மானபங்கம்: ஆந்திர மந்திரி மகன் கைது

Posted: 05 Mar 2016 09:12 PM PST

ஆந்திராவில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் ரவேலா கிஷோர்பாபு. இவரது மகன் சுஷீல். ஐதராபாத் பஞ்சாரஹில்ஸ் மந்திரிகள் குடியிருப்பில் வசிக்கிறார். இதே பகுதியில் உள்ள அம்பேத்கர்நகரில் பாத்திமா பேகம் என்பவர் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மாலை

அப்சல் குருவை அவசரகதியில் தூக்கிலிட்டது ஏன்?: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கேள்வி

Posted: 05 Mar 2016 08:19 PM PST

பாராளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு தனது மரண தண்டனையை எதிர்த்து முறையீடு செய்ய அவகாசம் அளிக்காமல் அவனை அவசரகதியில் தூக்கிலிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அசோக் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய அசோக் கங்குலி கூறியதாவது:-

மதத்தின் அடிப்படையில் உங்கள் இறக்கைகளை வெட்டுவதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்: அம்பேத்கர் பேரன் கடும் தாக்கு

Posted: 05 Mar 2016 07:58 PM PST

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று உரையாற்றினார். பரிப்பா பகுஜன் மகாசங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அவர் கூறியதாவது:-

தங்கள் கட்சியினர் வைக்கும் சட்டவிரோத பேனர் குறித்து புகார் அளிக்க இலவச அழைப்பு மையம்: ஐகோர்ட்டில் சிவசேனா தகவல்

Posted: 05 Mar 2016 07:35 PM PST

தங்கள் கட்சியினர் வைக்கும் சட்டவிரோத பேனர் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இலவச அழைப்பு மையத்தை தொடங்கி உள்ளதாக மும்பை ஐகோர்ட்டில் சிவசேனா கூறியுள்ளது. மும்பை ஐகோர்ட்டில் சட்டவிரோத பேனர், விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மராட்டியத்தில் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் பரவியதால் பரபரப்பு - மாணவர் பிடிபட்டார்

Posted: 05 Mar 2016 07:00 PM PST

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப்பதிவியல் வினாத்தாள் 'வாட்ஸ்அப்'பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மிராரோட்டில் வினாத்தாளுடன் வந்த ஒரு மாணவர் பிடிபட்டு உள்ளார். மராட்டியத்தில் தற்போது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம்

வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

Posted: 05 Mar 2016 06:23 PM PST

வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மரத்வாடா மண்டலத்தில் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பீட், லாத்தூர் மற்றும் உஸ்மனாபாத் மாவட்டங்களில் மந்திரிகள் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, வறட்சி நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

தானேயில் 14 பேரை கொன்ற வழக்கு: சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபர்

Posted: 05 Mar 2016 04:18 PM PST

மும்பையை அடுத்த தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த 35 வயது பட்டதாரி வாலிபர் அஸ்னேன், தன்னுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என 14 பேரை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆட்டை அறுக்கும் கத்தியால் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னையா குமார் பாதுகாப்பில் போலீஸ் அதிரடி: எங்கு சென்றாலும் தகவல் தெரிவிக்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு

Posted: 05 Mar 2016 03:49 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், நாட்டுக்கு எதிராகவும் கோஷம் போட்ட விவகாரத்தில், மாணவர் தலைவர் கன்னையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். இருப்பினும் அவர் பாட்டியாலா கோர்ட்டு வளாகத்தில் இருமுறை

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை விடமாட்டோம்: அருண் ஜெட்லி

Posted: 05 Mar 2016 03:00 PM PST

அரியானா மாநிலம் குர்கானில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வங்கிகளில் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அருண் ஜெட்லி மேலும் கூறுகையில் "வாராக் கடன்களால்

இ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா? பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியாகிறது

Posted: 05 Mar 2016 02:42 PM PST

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்றும், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின்போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பெண் பிரதிநிதிகள் மாநாடு: உடல்நல குறைவால் சோனியா காந்தி பங்கேற்க முடியவில்லை

Posted: 05 Mar 2016 01:43 PM PST

டெல்லியில் நேற்று முதன்முதலாக மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பெண்களின் மாநாட்டுக்கு பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் இந்த மாநாட்டில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கார் விபத்துகுள்ளானது - சிறிய காயத்துடன் தப்பினார்

Posted: 05 Mar 2016 01:08 PM PST

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சென்ற கார் விபத்துகுள்ளானதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. விந்தாவனில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுவிட்டு நேற்று இரவு யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார் மந்திரி ஸ்மிருதி இரானி. அப்போது இரானி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™