Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனேடியப் பிரதமர் பழங்குடியின மக்கள் அமைப்பின் தலைவரைச் சந்திக்கின்றார்

Posted: 04 Mar 2016 08:58 AM PST

Justin_Trudeau_-_111162015

Justin_Trudeau_-_111162015கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ பழங்குடியின மக்கள் அமைப்பின் தலைவர் பெறி பெலிகாட்டை (Perry Bellegarde) சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கனடாவின் பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியாசிசு டீனா(Tsuu T'ina) எனப்படும் கல்கரியின் பழங்குடியின மக்களின் பிரதேசத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இவர்கள் இருவருக்கும் மதிப்பளிக்கப்பட்டு, சாதனை, மரியாதை, துணிச்சல் மற்றும் சமாதானம் ஆகியவற்றை குறிக்கும் வகையிலான நினைவுப் பரிசு ஒன்றும் பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது.Justin_Trudeau_-_111162015

பிரதமர் ஜஸ்டின் ரூடோ கல்காரியில் உள்ள பழங்குடியின தலைவருடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ள அதேவேளை, அங்குள்ள பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லிபரல் அரசாங்கத்தின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தங்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளமை குறித்தும், தமது பிரச்சினைகளை கேட்டறியவுள்ளமை குறித்தும் அந்த பிரதேச பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் பழங்குடியின மக்கள் நீண்ட காலமாகவே சமூக பொருளாதார வளர்ச்சிகள் இன்றி, போதிய குடிநீர் வசதியீனம் போன்றவற்றை எதிர்நோக்கி வருவதுடன், பெருமளவு பழங்குடியின பெண்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமல் போனமை தொடர்பில் போதிய நீதி வழங்கப்படாத பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post கனேடியப் பிரதமர் பழங்குடியின மக்கள் அமைப்பின் தலைவரைச் சந்திக்கின்றார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாடுகடத்தப்படுவது தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted: 04 Mar 2016 08:45 AM PST

Alexandre_Trudeau_-_03042016

Alexandre_Trudeau_-_03042016அல் கைதா அமைப்பின் இரகசிய முகவர் என குற்றஞ் சாட்டுப்பட்டுள்ள நபர் ஒருவர் நாடுகடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி அலெச்சான்டர் ரூடோ கனேடிய அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த அந்த நபரால் தற்போது கனடாவுக்கோ, கனேடியர்களுக்கோ ஆபத்து இல்லை என தன்னால் கூறமுடியும் எனவும், அவரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் முறையானது அடிப்படையில் நியாயமற்றது எனவும் அலெச்சான்டர் ரூடோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அலெச்சான்டர் ரூடோ தற்போதை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.Alexandre_Trudeau_-_03042016

குறித்த இந்த நபருக்கு, பிரதமரின் சகோதரரும் ஆவணப் படத் தயாரிப்பளாருமான அலெச்சான்டர் ரூடோ நீண்ட நாட்களாக ஆதரவு வெளியிட்டு வருவதுடன், கடந்த 2005ஆம் ஆண்டில் அவரின் பிணை விண்ணப்பத்திற்கு உத்தரவாதம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

குறி்த்த நபர் நாடு கடத்தப்படும் விடயத்தில் கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்புகொண்டு அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அலெச்சான்டர் ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அல் கைதா அமைப்பின் இரகசிய முகவர் என குற்றஞ் சாட்டுப்பட்டுள்ள 47 வயது மொஹமட் ஹார்கட் என்பவர் முன்னாள் பீட்சா வினியோகத்தராக இருந்துள்ளார்.

பின்னர் அல் கைதா அமைப்பின் இரகசிய முகவர் என குற்றஞ் சாட்டுப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அவர், நாடுகடத்தப்படும் அபாயத்தினை எதிர்நோக்கி வருகின்றார்.

The post நாடுகடத்தப்படுவது தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™