Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


செம்மரம் வெட்டினால் அதிக பணம்: ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் தமிழக தொழிலாளர்கள்

Posted: 04 Mar 2016 10:32 PM PST

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வனத்துறையினர், சிறப்பு பாதுகாப்பு படை துணை சூப்பிரண்டு அரிநாத்பாபு, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி மகேஸ்வ ரராஜு, சப்–இன்ஸ்பெக்டர் அசோக்குமார் உள்ளிட்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அகில இந்திய மகளிர் காங். பொதுச்செயலாளராக விஜயதாரணி நியமனம்: நடிகை நக்மா கடும் அதிருப்தி

Posted: 04 Mar 2016 09:50 PM PST

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த விஜயதாரணிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறி மோதிக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக விஜயதாரணி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பொறுப்பில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி நீக்கப்பட்டார்.

ஆசிரியையை கடத்தி மானபங்கம்; ஆந்திர மந்திரி மகன் மீது வழக்கு

Posted: 04 Mar 2016 09:42 PM PST

ஆந்திராவில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் ரவெலா கிஷோர் பாபு. இவரது மகன் ரெவலா சுசில். இவரது வீடு ஐதராபாத் பஞ்சாரஹில்ஸ் பகுதியில் மந்திரிகள் குடியிருப்பில் உள்ளது. பஞ்சாரஹில்ஸ் பகுதி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் பாத்திமா

காஷ்மீரில் ரகசிய சுரங்கம் வெட்டி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

Posted: 04 Mar 2016 09:15 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா எல்லைப்பகுதியின் அருகே ரகசிய சுரங்கம் வெட்டி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிதிட்டத்தை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.5 கோடியில் குண்டு துளைக்காத பஸ் சண்டிகரில் தயாராகிறது

Posted: 04 Mar 2016 09:10 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். ஆனால் குக்கிராமங்களுக்கு செல்ல காரை பயன்படுத்த வேண்டியது உள்ளது. இது பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை என்று கருதப்பட்டது. மேலும்

5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற காமுகன் கைது

Posted: 04 Mar 2016 07:50 PM PST

ஆந்திர மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை சீரழித்ததுடன் கழுத்தை நெறித்துக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள டமேர்குன்ட்டா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மிருகத்தனமான இந்த

நான் அரசியல்வாதியல்ல: மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் பேச்சு

Posted: 04 Mar 2016 07:41 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி, டெல்லி ஐகோர்ட்டு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.

பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு தாதாசாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 04 Mar 2016 07:10 PM PST

திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் 'தாதாசாகேப் பால்கே' என்ற உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது தங்க தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை அடங்கியது.

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் தனிப்பட்ட முறையில் தாக்குவதா?: மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

Posted: 04 Mar 2016 07:02 PM PST

அசாமில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. கவுகாத்தியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் கட்ட ரூ.51 ஆயிரம் கோடியில் சேது பாரதம் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Posted: 04 Mar 2016 06:47 PM PST

2019-ம் ஆண்டுக்குள் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் ரெயில் பாதை குறுக்கீடு இல்லாத சாலைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு 'சேது பாரதம்' என்னும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

Posted: 04 Mar 2016 06:42 PM PST

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்திலுள்ள பலேரு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்ரெட்டி வெங்கட ரெட்டி (வயது 72). இவருக்கு ஒரு மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக

வெளிநாடுகளில் ஆபத்தான சூழலில் வாழும் அனைத்து இந்தியர்களும் தாயகம் திரும்புங்கள்: சுஷ்மா சுவராஜ் கோரிக்கை

Posted: 04 Mar 2016 04:30 PM PST

ஏமனில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கி தாங்கிய தீவிரவாதிகள் கண்மூடி தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தில் நான்கு இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் வாழும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்பி வருவாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி

தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 04 Mar 2016 04:17 PM PST

யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார். இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க நடவடிக்கை: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted: 04 Mar 2016 03:48 PM PST

வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் விவகாரம்: இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகள் ஆலோசனை

Posted: 04 Mar 2016 03:23 PM PST

ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து தலைநகர் புதுடெல்லியில் இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஐ.நா. விவகாரங்களுக்கான பொது இயக்குநர்கள் மற்றும் இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஐ.நாவிற்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டாவுக்கு தனி சின்னம்

Posted: 04 Mar 2016 02:03 PM PST

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக ('நோட்டா') தனியாக ஒரு பொத்தான் உள்ளது. 'நோட்டா' பொத்தான் கடைசியில் இடம் பெற்று இருக்கும். இந்த 'நோட்டா' பொத்தானுக்கு இதுவரை சின்னம் எதுவும் கிடையாது. யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள் அந்த பொத்தானை அழுத்துவார்கள்.

மார்ச் 7-ம் தேதி வரை போராட்டத்தை தொடர நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு

Posted: 04 Mar 2016 01:32 PM PST

கலால் வரியை ரத்து செய்யக் கோரி நடைபெற்று வரும் தங்களது போராட்டத்தை மார்ச் 7-ம் தேதி வரை தொடர நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகளின் விலை, பவுனுக்கு ரூ.300 உயர வாய்ப்புள்ளது. இதேபோல் ரூ.2 லட்சத்துக்கும்

ரோகித் வெமுலா தான் என்னுடைய அடையாளம், அப்சல் குரு அல்ல: கண்ணையா குமார் பேட்டி

Posted: 04 Mar 2016 11:52 AM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி, டெல்லி ஐகோர்ட்டு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் கண்ணையா குமார் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின்னர்

கடும் வறட்சி: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரால் தண்ணீரை காப்பாற்றும் மத்திய பிரதேசம்

Posted: 04 Mar 2016 08:24 AM PST

மத்திய பிரதேசம் மாநிலத்தின் மிகவும் வறண்ட பண்டல்காந்த் பகுதியில் உள்ள நகரம் திகம்கார். இங்குள்ள மக்களின் குடிநீருக்கா ஜமுனியா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாரி காட் அணையில் நகரசபை குழு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரை காவலுக்கு நியமித்துள்ளனர். பாரி காட் அணையில் 12 ரவுண்டு துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் பஹதுர் சிங் யாதவ் கூறுகையில் ''இரவு நேரத்தில்

மகிளா காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜயதாரணி நியமனம்

Posted: 04 Mar 2016 07:33 AM PST

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளராக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் மகளிர் காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளரான ராகுல் காந்தி, மகிளா காங்கிரஸ் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணியை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™