Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாகனம் மோதியதில் பாதசாரி பலி (ஸ்காபரோ)

Posted: 31 Mar 2016 10:10 PM PDT

police_line_-_12012015

police_line_-_12012015ஸ்காபரோ பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் பாதசாரி ஒருவர் பலியானதாக அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து McNicoll அவனியூவிற்கு அருகில் மார்க்கம் வீதி இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தை அடுத்து McNicoll மற்றும் Finch அவனியூவிற்கு இடைப்பட்ட மார்க்கம் வீதிப் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இன்னமும் வெளிவரவில்லை.

இதேவேளை Don Valley Village பகுதியில் இந்த வாரத்தின் ஆரம்பித்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூதாட்டி ஒரவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.police_line_-_12012015

வீதியைக் கடக்க முற்பட்ட போது குறித்த 76 வயது மூதாட்டி வாகனம் ஒன்றினால் மோதப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு Finch அவனியூப் பகுதியில் இரவு ஒன்பது மணியளவில் இந்த விபத்து சம்பவி்த்திருந்தது.

The post வாகனம் மோதியதில் பாதசாரி பலி (ஸ்காபரோ) appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணங்கள் நிறுத்தியது பீல் பிராந்திய பாடசாலைகள் சபை

Posted: 31 Mar 2016 10:02 PM PDT

trip_to_European_countries_-_03312016

trip_to_European_countries_-_03312016பீல் பிராந்திய அரசாங்க பாடசாலைகளின் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கான பயண எச்சரிககையினை அமெரிக்க வெளியிட்டுள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.trip_to_European_countries_-_03312016

இது தொடர்பிலான அறிவிப்பினை பீல் பிராந்திய பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான வழக்கமான ஐரோப்பிய சுற்றுலா பயணங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக ஐரோப்பிய பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது விளக்கமளித்துள்ளது.

குறிப்பாக நான்கு உயர்நிலைப் பாடசாலைகள் இந்த ஐரோப்பிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், மூன்று சுற்றுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுப் பயணத்திற்காக செலுத்தப்பட்ட பணங்கள் மீளளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரிலும், கடந்த 22ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சிலும் மோசமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதல்களில் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பலர் உயிரிழந்ததுடன் மேலும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

The post ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணங்கள் நிறுத்தியது பீல் பிராந்திய பாடசாலைகள் சபை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களின் அபராதத் தொகை அதிகரிப்பு

Posted: 31 Mar 2016 07:07 AM PDT

hj

hjரொரன்ரோ நகரில் விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்கள் கட்ட வேண்டிய அபராதத் தொகை இன்றில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அந்த அபராதத் தொகை மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்வரும் விதி மீறல் குற்றங்களுக்கான அபராதம் 150 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோர நடைபாதைகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல்.

TTCக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல்.

அதிக வாகன போக்குவரத்து நிறைந்த வழித்தடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துதல்.hj

மேற்படி விதிமுறை மீறல்களுக்கான அபராதம் நேற்று வரையில் 40 டெலரிற்கும் 60 டொலர்களுக்கும் இடைப்பட்ட தொகையிலேயே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொரன்ரோ வீதிகளில் வாகன நெரிசல்களை குறைத்து, வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய அபராத அதிகரிப்பினை அறிமுகப்படுத்துவதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

The post விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களின் அபராதத் தொகை அதிகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியப் பிரதமர் வோசிங்டனுக்கு பயணம்

Posted: 31 Mar 2016 07:03 AM PDT

k

kஅணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வோசிங்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவி்ன் வோஷிங்டன் நகரில் இன்றும் நாளையும் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் நடைபெறுகின்றது.

அதில் கலந்துகொள்வதற்கு இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள கனேடியப் பிரதமர், முதற்கட்டமாக இன்று காலையில் அமெரிக்க வர்த்தகர் சங்கத்தில் உரையாற்றவுள்ளதுடன், அங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.

இன்று மதியம் யப்பானிய பிரதமர் ஷின்ஷோ அபேயுடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அதன் பின்னர் ஆஜன்டீன அதிபரையும் சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தலைமையில் நடைபெறும் நான்காவதும் இறுதியுமான அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் இணைந்த கனேடியப் பிரதமரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதிகரித்துவரும் பயங்கரவாத நெருக்கடிகள் , பயங்கரவாதிகளிடமிருந்தான அணு ஆயுதங்களின் பாதுகாப்வு என்பன தொடர்பில் இந்த மாநாட்டின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனேடியப் பிரதமர் வோசிங்டனுக்கு பயணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™